Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 54
- Thread Author
- #1
முல்லை – 25.2
'இப்போ நான் இருக்குற மனநிலைக்கு எனக்கு யாரையும் கல்யாணம் பண்ண விருப்பம் இல்ல' என்று முல்லை சிறு தயக்கத்துடன் சொல்ல,
'யாரையுமா. இல்ல கேசவனை கல்யாணம் பண்ண சம்மதம் இல்லையா' என்று கேட்டார் முருகன்.
'இல்லப்பா. யாரையும் கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல. இந்த கொஞ்ச நாளா தான் நீங்க நான் சித்தின்னு மூணு பேரும் ஓரளவுக்கு முகம் கொடுத்து பேசி பழகிக்கிறோம். இப்போ எல்லாம் எனக்கு சித்திகிட்ட பேசும் போது என் அம்மாக்கிட்ட பேசுற மாதிரி தான் இருக்கு. அதனால..' என்ற முல்லை ஒரு கணம் தன் வார்த்தைக்கு இடைவெளி கொடுத்தவள்,
'அதனால் குறைந்தபட்சம் ஒரு வருஷமாவது நான் உங்க கூட, உங்க வீட்லயே இருக்கனும்னு ஆசையா இருக்கு' என்ற முல்லையின் வார்த்தையில் முருகனின் இதயம் ரணமாய் மாறியது.
ஆம்!! ரணமாகும் தானே.
உங்க வீடு என்று முல்லை அழுத்தி சொன்ன வார்த்தையில் இருந்த அர்த்தத்தை முருகன் அறிந்து தான் இருந்தார்.
இதுநாள் வரை முல்லைக்கு இது அவள் பிறந்த வீடு. அவளுடைய வீடு.
அவள் இந்த வீட்டின் மகா ராணி என்ற நம்பிக்கையே வராத அளவுக்கு நடந்துக்கொண்ட தன் செயலை நினைத்து முருகன் தன்னை தானே நொந்துகொண்டார்.
முல்லை பேசிய வார்த்தைக்கு எந்த பதிலும் சொல்லிடாத முருகனின் முகத்தை தலைத்துக்கி பார்த்து,'அப்பா. இது என்னோட சின்ன ஆசை தான். ஆனா நீங்க உங்க விருப்பப்படி யாரை சொன்னாலும் நான் அவங்கள கல்யாணம் பண்ணிப்பேன்' என்ற முல்லையின் முகத்தை பார்த்து சிறு புன்னகையை பூத்த முருகன்.
'சரி ம்மாடி. எல்லாம் நல்லதாவே நடக்கும். நீ படுத்துக்கோ' என முருகன் சொல்ல.
தன் தந்தையின் அரவணைப்பில் நீண்ட வருடங்கள் கடந்து நிம்மதியாக கண்கள் மூடினாள் முல்லை.
உறங்கும் குழந்தையை ரசிக்கும் அன்னையென அங்கே முருகன் தன் புதல்வியை ரசித்து இருந்தவரின் மனதில்,'இனியாவது நான் என் பெண் பிள்ளைக்கு நல்லா அப்பாவா இருக்கனும்' என்று எண்ணிகொண்ட முருகன் தன் மகளின் கூந்தலை அன்பாக வருடிக்கொடுக்க.முல்லை ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று இருந்தாள்.
தன் மகள் உறங்கியதும்.
தூரம் இருந்த தலையனையை எடுத்து, அவள் தலைக்கு கீழ்க்கொடுத்து முல்லையை அழகாக படுத்த வைத்த முருகனின் கண்ணில் கட்டில் மெத்தையின் கீழே மறைத்து வைக்கப்பட்டு இருந்த கைக்குறிப்பு புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது.
தன் மகள் படிப்பு சம்மந்தப்பட்ட புத்தகம் என்று எண்ணிய முருகன் அதை எடுத்து மேசை மேல் வைக்க முயன்றப்போது அதில் இருந்து மஞ்சள் கயிறு ஒன்று கீழே விழ.
'என்ன இது தாலி மாதிரி இருக்கு'என்று எண்ணியவாரு முருகன் அந்த மஞ்சள் கயிறை கையில் எடுத்தவர். கைக்குறிப்பு புத்தகத்தை திறந்து பார்க்க.
அதில் முருகன் பார்த்த புகைப்படங்களும். முல்லையின் உள்ளத்தை எடுத்து சொல்லும் தமிழ் எழுத்துகளையும் வாசித்த முருகனின் முகத்தில் இறுக்கம் குடிகொண்டது.
பத்து நிமிடங்களுக்கு மேலாக முல்லையின் கைக்குறிப்பு புத்தகத்தை வாசித்து பார்த்த முருகனை,'ஏங்க.' என்று அழைத்தப்படி அறையினுள் நுழைந்தார் பார்வதி.
எங்கே! பார்வதியின் குரலை கேட்டு முல்லை எழுந்து விடப் போகிறாள் என்று எண்ணிய முருகன், தன் உதட்டின் மேல் கை வைத்து சத்தம் போடாதே என்று சைகை செய்தவர்..முல்லையின் கைகுறிப்பு புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்த பிறகு. அவர் கையில் இருந்த மாங்கல்யத்தை அதனுடனே வைத்தவர்.தன் மகளின் நெற்றியை மேலும் அன்போடு வருடி கொடுத்தபடி முல்லையின் அரை கதவை சாற்றிக் கொண்டு வெளியே வந்து ஹாலில் உள்ள சோபாவில் சோர்வாக அமர்ந்தவரின் அருகில் பார்வதியும் கேள்வியுடன் அமர்ந்தார்.
'என்னாச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க' என்று பார்வதி கேட்க.
'பார்வதி. என் பொண்ணு விஷயத்துல நான் எவ்ளோ கெட்டவனா இருந்து இருக்கேன்' என்று முருகன் சொல்ல.
'நானும் தான்' என்று உண்மையான அன்போடு பேசினார் பார்வதி.
'இனி நம்ம பொண்ணு வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் தான் இருக்கனும்' என்ற முருகன்.
ஒரு முடிவோடு அவர் அறைக்குள் எழுந்து சென்றவரை பார்வதி குழப்பத்துடன் பார்த்து இருந்தார்.
******************************
நாட்கள் வேகமாக நகர்ந்தது. அன்றைய தினம் வியாழக்கிழமை.
மறுநாள் தனக்கும் கேசவனுக்கும் நிச்சயம் என்று எண்ணி பார்த்த முல்லைக்கு வாழ்க்கையே வெறுத்து போனது.
இதே தருணம் பாண்டியனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் வரும் நாட்களில் ரோஜா ரவி மற்றும் தனா கதிர்வேலனுக்கு நடக்க இருக்கும் நிச்சியத்துக்காக புது துணி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்று இருந்தார்கள்.
சரஸ்வதியின் குடும்பத்தில் இருந்து அனைவரும் குன்னக்குடியில் இருக்கும் புகழ் பெற்ற பட்டு மாளிகையில் காத்து இருக்க,
'என்ன அண்ணா. இந்த பொண்ணையா கதிர் கல்யாணம் பணிக்க போறான்' என்று கஸ்தூரி இழுவையாக கேட்க,
'ஆமா. நீ போய் வந்த வேலையை பாரு'என்றார் பாண்டியன்.
'ரோஜா.எங்க உன் கதிர் அண்ணன்' என்று மீனா கேட்க,'இனி நீங்க ஜீவா அண்ணனை பற்றி மட்டும் கவலைப்படுங்க, அதான் உங்களுக்கு நல்லது' என்ற ரோஜா. தன் கைபேசியுடன் ஜவுளிக்கடையில் இருந்து வெளியே செல்ல,'ரோஜா.'என்ற ரவியின் குரலில் அவள் அங்கேயே நின்றாள்.
'சொல்லுங்க.' என்று தன் தந்தை அவளுக்காக பார்த்த மாப்பிளையுடன் ரோஜா பேசிக்கொண்டு இருக்க,
'ரோஜா. கதிர் எங்கே' என்று கேட்டுக்கொண்டே இவர்களை நோக்கி நடந்து வந்தாள் தனா.
'வாத்தி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு. நீங்க போய் புடவையை பாருங்க தனா ' என்று ரோஜா சொல்ல,
'அது என்ன வாத்தி!?. இனி நீ கதிரை வாத்தி பார்த்தினு எல்லாம் கூப்பிடக்கூடாது' என்ற தனாவை அழுத்தமாக பார்த்தாள் ரோஜா.
'என்ன முறைக்கிற.இனி என்னை கூட நீ அண்ணின்னு தான் கூப்பிடணும். அப்படியே கதிரை அண்ணன்னு கூப்பிட பழகிக்கோ' என்ற தனத்தின் அதிகார குரலைக் கேட்டு ரோஜா சட்டென்று சிரித்தவளை தனா கோவமாக முறைக்க,
'வாத்தி நான் பிறந்ததில் இருந்தே எனக்கு அண்ணன் தான். ஆனா நீ எனக்கு அண்ணியான்னு முடிவு பண்ண வேண்டியது நீயோ, நானோ, உன் அம்மாவோ, ஏன்! என் அப்பாவோ கூட இல்ல. எனக்கு அண்ணியா வர போற பொண்ணு'என்று ரோஜா தன் வார்த்தையை முடிக்கும் முன்னே.
'முல்ல. அந்த பக்கம் படிக்கட்டு இருக்கு அங்க ஓடாத மா' என முல்லையின் பெயருடைய ஐந்து வயது குழந்தை ஒன்றை அவளின் தாய் அள்ளி அணைத்து முத்தம் கொஞ்ச.
அதே சமயம்,'சின்னமா சின்னமா.நம்ம முருகன் ஐயா மச்சான் கேசவனை!
லாரி அடிச்சு தூக்கி வீசிரிச்சாம், அவனை GH ல அட்மிட் பண்ணிருக்காங்கன்னு தகவல் வந்து இருக்கு'
என்று நாகராஜன் தலைத்தெரிக்க ஓடிவந்தவன். ஜவுளிக்கடை வாசலில் நின்றிருந்த ரோஜாவிடம் சொல்லிக்கொண்டு இருந்த சமயம்,
'கூல்.அப்போ ஒரு விக்கெட் காலியாகிருச்சு.' என்றபடி கதிர்வேலன் இவர்களை நோக்கி நடந்து வர.
இதே தருணம் முல்லையின் தந்தை முருகனிடம் இருந்து ஜவுளிக்கடைக்குள் நின்று இருந்த பாண்டியனுக்கு கைபேசி மூலம் அழைப்பு வர.'சொல்லு மச்சான், எப்படி இருக்க' என்று பாண்டியன் கேட்க.
'நல்லா இருக்கேன் மாமா.நான் உங்கள நேர்ல சந்தித்து ஒரு நல்ல விஷயம் பேசணும்' என்று சொன்னார் முருகன்.
'என்ன விஷயம் மச்சான்.' என்று பாண்டியன் கேட்டதும்,
'என் பொண்ணு முல்லைக்கு உங்க பையன் கதிர்வேலனை கல்யாணம் பண்ணிக்கொடுங்க மாமா' என்ற முருகனின் உரிமையான சொற்களை கேட்டு பாண்டியனின் நாவில் வார்த்தை வர மறந்த நிலையில்,
கேசவனை லாரி மூலம் தட்டி தூக்கியது யார்?
'என்ன மச்சான் சொல்லுற!
ஆனா நாளைக்கு கேசவனுக்கும் முல்லைக்கும் நிச்சியம் நடக்க போறதா உன் மச்சான் சொன்னானே' என்று பாண்டியன் கேட்க,
'என் பொண்ணு வாழ்கை நல்லா இருக்கணும்னா! அவ உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா மட்டும் தான் அது முடியும்' என்றார் முருகன்.
'இல்ல மச்சான். அது. அது வந்து' என்று பாண்டியன் தன் நிலைமையை சொல்ல முடியாமல் தவித்து இருக்க.
'அண்ணா. அண்ணா இங்க வந்து இந்த புடவையை பாருங்க.' என்று தூரத்தில் இருந்து சரஸ்வதி பாண்டியனை அழைத்தார்.
'மச்சான். நாங்க அன்பு துணி கடையில இருக்கோம். நான் வீட்டுக்கு போனதும் உனக்கு போன் பண்ணுறேன்' என்ற பாண்டியன் சட்டென்று கைபேசி இணைப்பை துண்டித்ததும், முருகனின் இதயம் லேசாக வலிக்க தொடங்கியது.
இது நாள் வரை தன் மகளுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என அறிந்துக் கொள்ள தவறிய முருகனுக்கு.இன்று தன் மகளின் விருப்பத்தை தெரிந்துக்கொண்ட பின்னரும் அதை நிறைவேற்ற முடியாத நிலைமையில் இருப்பதை எண்ணி அவரை அவரே நொந்துகொண்டார்.
இனி எதற்காகவும் தன் மகளின் மகிழ்ச்சி சிதைந்து விடக்கூடாது என்று நினைத்த முருகன், சற்றும் தாமதிக்காமல் குன்னக்குடியில் இருக்கும் பட்டு மாளிகைக்கு கிளம்பி செல்ல..
இதே சமயம். பட்டு மாளிகையின் கடை வாசலில் நின்று இருந்த ரோஜாவை நோக்கி நடந்து வந்துகொண்டு இருந்தார் கதிர்வேலன்.
'நண்பா. அப்போ கேசவனுக்கு acident ஆன விஷயம் உனக்கு தெரியுமா! 'என நாகராஜன் ஆச்சிரியமாக கேட்க,
'ம். இப்போ தான் கேள்விப்பட்டேன்' என்றார் கதிர்வேலன்.
'வாத்தி. என்ன சொல்றிங்க. ஐயோ கேசவனுக்கு என்னாச்சு' என்று ரோஜா கேட்க. 'I don't know ம்மா' என்ற கதிர்வேலன். ரோஜா அருகே நின்று இருந்த ரவியை பார்த்து மரியாதை நியமித்தமாக சிரித்தவன். தனாவை கடுகளவு கூட கண்டுகொள்ளாமல் சேலை கடைக்குள் நுழைந்து இருந்தான்.
'சின்னமா. உள்ள போங்க. சின்னயா நீங்களும் உள்ள போங்க' என்று ரோஜாவையும் ரவியையும் பார்த்து நாகராஜன் சொன்னதும்,
'என்னது சின்னமா சின்னயாவா!!. சுத்த பட்டிக்காடு போல நீ' என்ற ரவியின் வார்த்தையைக் கேட்டு நாகராஜனின் முகம் வாடிப்போனது.
'சின்னய்யா சின்னமான்னு சொல்றது எல்லாம் மரியாதையான வார்த்தை தான். உங்களுக்கு பிடிக்கலைனா அத Friendlyயா சொல்லணும். அதை விட்டுட்டு இப்படி கிண்டலா இழிச்சு பேசக்கூடாது' என்ற ரோஜாவின் முகம் கோவமாக மாறி இருக்க,
'இப்போ நான் என்ன சொன்னேன்னு நீ என்கிட்ட இப்படி கோவப்படுற' என்று கேட்டான் ரவி.
'இன்னும் என்ன சொல்லணும். பட்டிக்காடுனா என்ன அர்த்தம்' என்று ரோஜா அதே கோவத்துடன் கேட்டதும்,
'என்ன நீ. என் தம்பி என்ன சொல்லிட்டான்னு நீ அவன்கிட்ட சண்டைக்கு வேற.
ஆமா! யாரு இந்த ஆளு!?
நான் வாழ போற வீட்டோடா வேலைக்காரன் தானே!
அவனை சொன்னா உனக்கு ஏன் இவ்ளோ கோவம் வருது' என்று ரோஜாவை விட தனா அதிக கோவத்தில் கேட்டாள்.
தனாவின் அதிகாரத்தை பார்த்து கடுப்பான ரோஜா.'போதும் நிறுத்து தனா..' என்று சத்தமாக கத்தியவளின் குரலைக் கேட்டு சரஸ்வதியும் கதிர்வேலனும் ரோஜாவை நோக்கி வந்தார்கள்.

Last edited: