• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
172
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.
படலம் – 25.1

“டேய் கதிர், என்னடா செய்ற?” என்று வெங்கட் திடுக்கிட்டு கேட்டான்.

“நான் என்ன செய்றேன்னு எனக்கு தெரியும். தயவுசெய்து கொஞ்ச நேரம் நீங்க எல்லாம் வெளியே இருங்க. முல்லை கூட நான் தனியா பேசணும்.” என்று அவன் சொல்ல,
அந்த ‘தனியா’ என்ற சொல் கதிரின் அப்பாவை மேலும் சினமடையச் செய்தது.

“உன்னைத் தேடி ஒரு பெண் மருத்துவமனைக்கு வருது. நீ அவளோட தனியா பேசணும்னு சொல்ற? என்னடா... கொழுப்பு ஏறி போச்சா...என்னைப் பற்றி உனக்கு தெரியாது. இதே மாதிரி சண்டி தனம் பண்ணன்னு வையென்,ஆறடி குழி தோண்டி புதைச்சிடுவேன்!” என்று கடுமையாக எச்சரிதார் கதிரின் தந்தை.

அந்த மிரட்டளுக்கு கதிர் சற்றும் அஞ்சவில்லை.
“அப்பா, நீங்க புதைச்ச வரைக்கும் போதும்,ஆனா இப்ப எல்லாரும் வெளியே போங்க.”என்றவன்
குரலில் இருந்த மாற்றம் அங்கே இருந்த அனைவரையும் குழப்பியது.

வெளியுலகில் புலி போல நடமாடினாலும், வீட்டில் எப்போதும் அமைதியாக இருப்பவன் கதிர் தான்.

இன்று அவன் வேறொரு மனிதன் போலத் தோன்ற,யாரும் அசையாமல் நின்றதைப் பார்த்து,"பெரிய அத்த...கதிர் இவ்வளவு சொல்லுறாரே. வாங்க, கொஞ்ச நேரம் வெளியே இருக்கலாம்,” என்று
மீனாவும் இணங்கினாள்.

கதிரையும் முல்லையையும் மாறிமாறி முறைத்தபடி குடும்பத்தினர் அறையை விட்டு வெளியேறினர்.

அறையில் சில நொடிகள் அமைதி நிலவியது.

“என்ன ஆச்சு கதிர்? ஏதாவது பெரிய பிரச்சனையா?” என்று முல்லை கவலையுடன் கேட்டாள்.

கதிர் அவளை காதலுடன் பார்த்தான்.
“எல்லாமே பிரச்சனை தான். ஆனா இதையெல்லாம் தாண்டி நீ என்னை சந்தேகப்பட்ட தருணத்தை தான் என்னால தாங்கிக்க முடியல" என்றான் கதிர்.

முல்லை அதிர்ந்து, “நான் சந்தேகப்பட்டேனா? உங்க கண்ணுக்கு முன்னாடி யாராவது எனக்கு மோதிரம் போட்டா நீங்க சும்மா இருப்பீங்களா?” என்று கேட்டாள்.

“அவனோட தலையை சீவி எடுத்திருப்பேன்,” என்று கதிர் சட்டென்று சிரித்தான்.

“அப்போ. நீங்க மோதிரம் போட்ட அந்தப் பெண்ணை நான் சீவட்டா?”
என்றவளின் கேள்வியில் சிறு பொறாமை ஒளிந்திருந்தது.

“அவளுக்கு எதுவும் நீ சீவ வேண்டிய அவசியமே இல்ல. நீ இப்ப நான் சொல்றதை தெளிவா கேள். அப்பதான் நம்ம இருவரோட கல்யாணம் எந்த தடையுமில்லாம நடக்கும்.”என்றான் கதிர்.

“கல்யாணமா?” என்று முல்லையின் குரல் நடுங்கியது.
“ஆமா...நான் நம்ம நல்லதுக்காகத்தான் பேசுறேன்.” என்ற கதிர்,

அதன் பின் அவன் உருவாக்கிய கதையை சில மெய் பல பொய்யை சேர்த்து பின்னத் தொடங்கினான்.

சூழ்நிலை, சொத்து, சதி, என்று ஒன்றுக்கு இரண்டாக சேர்த்து கூறினான்.

உண்மையோடு கலந்து நயமாக பின்னிய பொய்கள் அவை,
முல்லை கண்மூடித்தனமாக அவனை நம்பினாள்.

அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குப் பாறைபோல் உறுதியான உண்மையாகவே தோன்றியது.

ஆனால் இதில் என்ன வேடிக்கை என்றால் கதிரும் அவன் குடும்பத்தை பற்றிய சுயருபத்தை அறிந்துடாமல் தான் இருந்தான்.

ஆனால் இந்த நொடி கதிரின் மனதில் இரண்டு எரிமலை மட்டும் தான் வெடித்து கொண்டிருந்தன.

ஒன்று முல்லையை காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை.
இன்னோன்று சித்ராங்கியை பழிவாங்க வேண்டும் என்ற வெறுப்பு.

“சித்ராங்கி அவ்வளவு கெட்டவளா?” என்று முல்லை நம்பாமல் கேட்டாள்.

“ஆமாம். எங்க சொத்தெல்லாம் இப்போ அவளோட கட்டுப்பாட்டில்தான் இருக்கு. இந்த ஹாஸ்பிடலையும் . நாங்க இருந்த வீட்டையும் கூட கேஸ் போட்டு அவ பேர்ல மாத்திக்க பாக்குறா.” என்றவனின் குரல் வருத்தம் கலந்தது போல இருந்தது.

“ஆமா...நாங்க இருக்குற பங்களாவுக்கு எதிர்ல ஒரு பனைமரத் தோப்பு இருக்கு. அங்க ஒரு ஆறு வயசு குழந்தை அடிக்கடி அவள்கிட்ட எங்க இடத்தை ஒன்னும் பண்ணாதீங்கன்னு சொல்லும். ஆனா அவ பதில் பேசாமல் அந்த குழந்தையை அங்கிருந்து அனுப்பிடுவா.
ச்சி... எதற்காக இப்படி அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படணும்?” என்று
முல்லை பார்த்ததை மட்டும் நம்பி,
கேட்டதை விசாரிக்காமல் , சித்ராங்கி மீது வெறுப்பை வளர்ந்துக்
கொண்டாள்.

அதற்கு இணையாக கதிர் மீது அவள் கொண்ட காதலும் அவளது நம்பிக்கையை ஆட்கொண்டிருந்தது.

அந்த நம்பிக்கையே. கதிரின் திட்டத்திற்கு முல்லை வலுவான அடித்தளமாக மாறி இருந்தாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே தருணம் போலீஸ் குவாட்டர்ஸில் தங்கி இருந்த விக்ராந்தின் அறையில் ஒரு விசித்திரமான சூழ்நிலை நிலவியது.

மடி கணினித் திரையின் வெளிச்சம் மட்டும் விக்ராந்தின் முகத்தில் விழுந்து, அவன் கண்களில் இருந்த சோர்வையும் சிந்தனையையும் வெளிச்சமிட்டுக் காட்டியது.

கலா மற்றும் சுனில் கொலை வழக்கின் விசாரணையின் முன்னேற்றத்தைத் தொகுத்து, மேலிடத்திற்கு விரிவான அறிக்கையாக மின்னஞ்சல் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தான்.

அவனின் விரல்கள் விசைப்பலகையில் தட்டிக்கொண்டே இருந்தபோது,அவனது அலைபேசி அதிர்ந்தது.

அது மேலதிகாரியின் அழைப்பு.
“ஹலோ, சார்.” என்று மரியாதை கலந்த குரலில் பேசத் தொடங்கினான் விக்ராந்த்.

“என்ன விக்ராந்த்? நீங்க கையில் எடுக்கும் கேஸ் இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் முடிந்து விடுமே. இந்த வழக்கில் ஏன் இவ்வளவு இழுவை?” என்று மறுமுனையில் இருந்த குரல் கூர்மையுடன் கேள்வி எழுப்பியது.

“சார், இந்த வழக்கில் நிறைய சந்தேகங்கள் இருக்கு . ஊரார் இது நகைக்காக நடந்த கொலை என்றும், சுனிலை காட்டு மிருகம் தாக்கி கொன்றதாகவும் பேசுறாங்க.

ஆனா அது உண்மை இல்ல. இருவரையும் யாரோ திட்டமிட்டு சுட்டுக் கொலை பண்ணி, அதை மறைக்க இந்த நாடகம் எல்லாம் அமைத்திருக்காங்க.” என்ற விக்ராந்தின் குரலில் உறுதி தெரிந்தது.

“அது எனக்கும் தெரியும்,” என்ற மேலதிகாரி, “ஆனா நம்ம தான் அதை மீடியாவுக்கு சொல்லல. சொன்னா அது ஆதிசேஷன் காதில் விழும். அவர் இன்னும் நம்ம மேல அழுத்தம் கொடுப்பார்.” என்று மேல் அதிகாரி சொல்ல,
விக்ராந்த் சிறிது நேரம் யோசித்தான்.

“சார், ஆதிசேஷனுக்கு இந்த விஷயம் தெரியாம இருக்கும்னு நினைக்கிறீங்களா?”என்று விக்ராந்த் கேட்க,
“என்ன சொல்றிங்க ? அவருக்குத் தெரிந்திருக்குமா ?”என்று அதிர்ந்தார் மேல் அதிகாரி.

“என் யூகப்படி, அவருக்கெல்லாம் தெரியும். சீக்கிரமே என்னை அவர் நேரடியாக தொடர்பு கொள்வார்.”என்று
அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ‘பிரைவேட் நம்பர்’ என்ற எழுத்து திரையில் மின்னியது.

“சார், ஏதோ கால் வருது. நான் உங்கள அப்புறம் கூப்பிடுறேன்,” என்றவன் மேலதிகாரியின் அழைப்பை துண்டித்து
புதிய எண்ணை எடுத்து, “ஹலோ.” என்றான்.

“நான் ஆதிசேஷன் பேசுறேன்.”என்று மறுமுனையில் இருந்து ஒலித்த குரல் ஆணித்தரமாகவும் கம்பீரமாகவும் இருந்தது.

விக்ராந்தின் முகம் மாறிய நிலையில்
“How are you சார் ?” என்று கடமைக்கென மரியாதையுடன் கேட்டான்.

“நான் இன்னும் உயிரோடு தான் இருக்கேன், நான் சாகணும்னா, என் குடும்பத்தைக் கொன்ற கொலைகாரனின் மூச்சை நிறுத்திய பிறகுதான் அது நடக்கும்,” என்றார் ஆதிசேஷன்.

அந்த வார்த்தைகளில் பழிவாங்கும் நெருப்பு எரிந்தது.
ஒரு கணம் விக்ராந்த் மௌனமாக இருந்தான்.

“இந்த வழக்கை நீ சார்ஜ் எடுத்து இரண்டு நாள் ஆகுது. இன்னும் கொலைகாரன் யாருன்னு உனக்கு தெரியலையா?” என்ற குரல் இப்போது கடுமையடைந்தது.

“விசாரணை நடந்து கொண்டுதான் இருக்கு, சார்,” என்றான் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு.

“என் குடும்பத்தைக் சுட்டுக் கொலை பண்ணிருக்காங்க. ஆனா மீடியால என்ன நியூஸ் வந்திருக்கு தெரியுமா? நகைக்காக கொலை, காட்டு மிருகம் தாக்கி சுனில் இறந்தான்னு தான் சொல்றாங்க. அது ஏன் தெரியுமா?”என்று அதிஷேஷன் கேட்க,
“அதுக்கு காரணம் நீங்க தான்,” என்றான் விக்ராந்த்.

“ஆமா...நான் தான்.இந்த திரையுலகத்தையே ஆட்டிப் படைக்கிற ஆதிசேஷன் குடும்பத்தை யாரோ கொலை பண்ணிருக்காங்கன்னு வெளியே தெரிஞ்சா, அது எனக்கு அவமானம். அதனால தான் என் குடும்பத்தை ஒருவன் சுட்டு கொலை பண்ணதை கூட mediaல லீக் பண்ணாம வச்சிருக்கேன்" என்று அதிஷேஷன் சொல்ல. விக்ராந்த் அமைதியாகவே கேட்டுக்கொண்டு இருந்தான்.

“சார்...அப்படின்னா,நான் குற்றவாளியை கண்டுபிடிச்சா கூட, அதை மீடியாவிடம் சொல்லக்கூடாதா, சார்?” என்று விக்ராந்த் கேட்க,“சரியா புரிஞ்சுக்கிட்ட,” என்றார் ஆதிசேஷன்.

“இன்னும் இரண்டு நாளைக்கு பிறகு, ‘இது நகைக்காக நடந்த கொலை தான். சுனில் காட்டு மிருகம் தாக்கி தான் மரணம் அடைந்தன்னு mediaல அறிவிச்சுட்டு, உண்மையான குற்றவாளி யாருன்னு எனக்கு மட்டும் சொல்லணும். அதுக்கப்புறம் அந்த கொலையாளிக்கு இந்த ஆதிசேஷன் யாருன்னு நான் புரியவைக்கிறேன்.”
என்று சொல்ல...
"ஓகே சார்" என்றான் விக்ராந்த்.

“சரி. கேஸ் எப்படி போகுது?” என்று மீண்டும் ஆதிசேஷன் கேட்க,“சார்... ரெண்டு பேர் உடம்புல இருந்த புல்லட்டும் காணாம போயிருக்கு" என்றான் விக்ராந்த்.

"என்ன... கொலையாளி சுட்டுட்டு, அங்கேயே உட்கார்ந்து ஆபரேஷன் பண்ணி எடுத்துட்டு போயிருப்பானா?” என்ற ஆதிஷேஷனின்
அவரது குரலில் நையாண்டியும் கோபமும் கலந்திருந்தது.

“சார், இந்த வழக்கு எங்களுக்கும் புதுசு தான். வெளிப்படையா விசாரிக்க முடியாத சூழ்நிலை. அதனால தான் நாங்க எக்ஸ்ட்ரா டைம் எடுத்து மிக கவனமாக விசாரிச்சிட்டு இருக்கோம்,” என்றான் விக்ராந்த்.

“உங்களுக்கு இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரம் தான் கெடு,” என்ற ஆதிசேஷன் உறுதியுடன். “அதுக்குள்ள என் குடும்பத்தைக் கொன்றவன் யாருன்னு கண்டுபிடிச்சு தீரணும்.”
என்றவனின் வார்த்தைகளுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே தருணம் மாலை நேர சூரியன் சிகப்பு நிறத் தழும்புகளாய் வானத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தான

மருத்துவ கல்லூரி வாசலில் காரை நிறுத்தி வைத்து மாறன், கந்தனுடன் முல்லைக்காக காத்திருந்தாள் ஈஷா.

கல்லூரி வளாகம் வெறிச்சோடி காட்சி அளிக்க,மாணவர்கள் கூட்டமாக வெளியேறிக் கொண்டே இருந்தனர்.

“என்ன மாறா... எல்லாரும் வெளியே வந்துட்டாங்க. ஏன் இன்னும் உங்க சிஸ்டரை காணோம்?” என்று ஈஷா கலகத்துடன் கேட்டாள்.

“தெரியல. நீங்க இருங்க. நான் போய் பார்த்துட்டு வரேன்,” என்ற மாறன் அவசரமாக உள்ளே ஓடினான்.

சில நிமிடங்களில் அவன் முகம் வெண்மையாக மாறி வெளியே வந்தவன்.
“பாப்பா உள்ள இல்ல.”என்ற

அந்த ஒரு சொல்லே ஈஷாவின் இதயத்தைக் கிழித்தது போல இருந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top