Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 170
- Thread Author
- #1
தீமையே
வெ (கொ)ல்லும்.
படலம் – 24.2
மறுநாள் விடியலிலும் முல்லையின் மனம் மட்டும் கலக்கமாய் இருந்தது. இரவு முழுக்க
அவள் கண்கள் மூடாததால் கண்கள் வீங்கியிருந்தது.
படுக்கையிலிருந்து எழுந்தவள் முதல் வேலையாக கைபேசியை எடுத்து,கதிரின் எண்ணை அழுத்த மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லை.
மீண்டும் மீண்டும் முயற்சி செய்து பார்க்க,அந்த அமைதியே அவளை அதிகமாக பயமுறுத்தியது.
கவலையோடு குளித்து முடித்தவள், “கடமைக்கு” என்று மனசை கட்டுப்படுத்திக்கொண்டு காலேஜ் செல்ல தயாரானாள்.
அறையில் இருந்து வெளியே வந்தவளை மாறன் பார்த்ததும் புருவம் சுருக்கினான்.
“பாப்பா...சாப்பிடாம போக கூடாது,” என்று மிரட்டும் சாயலில் சொன்னான்.
அவள் தலையசைத்தாலும் சாப்பிட மனம் இல்லை.
“இரண்டு இட்லியாவது சாப்பிடு மா"என்று வற்புறுத்தினான்.
அவன் குரலில் கடினம் இருந்தாலும், உள்ளே அக்கறை இருந்தது.
முல்லையின் சோக முகத்தை பார்த்த மாறன் அவளை அரவணைத்தவன்,
“பாப்பா , கவலைப்படாத, நம்ம சீக்கிரமா இங்க இருந்து கிளம்பிடலாம்,
சிஆர்மேடம் ஊருல இருந்து வர அதே நாள் தான், நம்ம அப்பாவும் அம்மாவும் வராங்க” என்று சமாதானப்படுத்தினான்.
மாறன் சொல்லைக்கேட்டு,
“ஓ... சித்ராங்கி ஊர்ல இல்லையா?” என்று திடுக்கிட்டு மாடியை பார்த்தாள் முல்லை.
அந்த ஒரு தகவல் அவளது மனதில் புதிதாக ஏதோ யோசனையை கிளப்பியது.
சிறிது நேரத்தில் ஈஷா காரை எடுக்க..கந்தன், மாறன், முல்லை என்று மூவரும் கிளம்பினார்கள்.
முதலில் கந்தனை பள்ளியில் இறக்கி விட,
அடுத்து மாறனை அவன் சட்டக்கல்லூரி முன் இறக்கி விட,
கடைசியாக முல்லையை காலேஜ் வாயிலில் இறங்கினாள் ஈஷா .
முல்லை படிக்கும்
காலேஜ் வளாகம் வழக்கம்போல் சலசலப்பாக இருந்தது.
பேராசிரியர்களின் நடைகள், வகுப்பறை மணி எல்லாம் இயல்பாக நகர்ந்துகொண்டிருந்தது.
ஆனால் முல்லையின் உள்ளம் மட்டும் இயல்பாக இல்லை.
வகுப்பில் அமர்ந்திருந்தாலும் கவனம் எதிலும் இல்லை. கண்கள் மட்டும் அடிக்கடி கைபேசியைத் தேடியது.
கதிரிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. எந்த செய்தியும் இல்லை.
சாப்பாட்டு நேரம் நெருங்கியது.
அவள் சுற்றி பார்த்தாள். யாருக்கும் சந்தேகம் வராத நிலையில் பையை எடுத்துக் கொண்டு,
“மதியம் நான் வீட்டுக்கு போய் சாப்பிட்டு வரேன்,” என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியே வந்தாள்.
காலேஜ் வாசலை கடந்தவுடன் அவள் நடை அதி வேகம் பிடித்து,
ஆட்டோ ஒன்றை நிறுத்தி ஏறினாள்.
“எங்க மா போணும்?” என்று டிரைவர் கேட்க,
முல்லை ஒரு நொடி தயங்கியவள்,
"நான் சொல்ற ஹாஸ்பிடல்க்கு போங்க" என்று சொல்ல,
அந்த நாள் அவளது பாதையும், வாழ்க்கையும் புதிய திருப்பம் எடுக்கத் தயாராக....
இது புதிய பாதையா இல்லை படு குழியா என்று வரும் படலத்தில் பார்ப்போம்.
முல்லை பயணித்த ஆட்டோ நேராகச் சென்று நின்றது கதிர் தங்கி இருக்கும் மருத்துவமனை வாசலில் தான் .
கைகளில் வியர்வை. மனதில் ஆயிரம் கேள்விகள் என்று
ஆட்டோ கட்டணத்தை கூட சரியாக எண்ணிப் பார்க்காமல் அவள் உள்ளே விரைந்தாள்.
வாசலில் வெங்கட் நின்றிருந்தவன்,
முல்லையை பார்த்தவுடன் அவன் திடுக்கிட்டு அவள் பக்கம் ஓடி வந்தான்.
“அங்கிள். கதிர் எப்படி இருக்காரு?” என்று அவள் மூச்சுத் திணறியபடி கேட்டாள்.
“நீ ஏன் இங்க வந்த? ஐயோ. உள்ள கதிரோட அம்மா, அப்பா, பெரியம்மா. எல்லாரும் இருக்காங்க,” என்று அவன் பதறினான்.
“யார் இருந்தா என்ன? நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கதிர் எப்படி இருக்காரு?” என்று முல்லையின் குரல் நடுங்கியது.
அப்போது பின்னால் இருந்து மீனா வந்தவள்,
“முல்ல. கதிர் இப்போ நல்லா இருக்கான்,” என்றதும்,
முல்லையின் கண்கள் ஒளிந்தன.
“நான் கதிரை பார்க்கலாமா?”என்று முல்லை கேட்டதும்,
மீனா பதறினாள்.
“ஐயோ.வேணா முல்ல, நீ வீட்டுக்கு போ. ஏற்கனவே உங்க முதலாளி அம்மாவால எங்க குடும்பத்துல பிரச்சனை. இப்போ நீ இங்க வந்தாது மட்டும் அவங்களுக்கு தெரிஞ்சா இன்னும் பெரிய ப்ரோப்லேம் ஆகிடும்,” என்று வெங்கட் சொல்லி முடிப்பதற்குள்
“கதிர்!” என்று அழைத்தபடி முல்லை சிகிச்சை அறைக்குள் பாய்ந்தாள்.
அறைக்குள் கட்டிலில் சோர்வாக அமர்ந்திருந்தான் கதிர். அவனைச் சுற்றி அவன் குடும்பத்தினர் நின்றிருந்தனர்.
“கதிர்.” என மீண்டும் அழைத்த முல்லை,
வில்லிலிருந்து பாயும் அம்பைப் போல அவள் அவன் பக்கம் சென்றாள்.
இதுவரை சோர்வாக இருந்த கதிரின் முகம் அவளை பார்த்தவுடன் மிளிர்ந்தது.
“முல்ல.”என்று கதிர் அழைக்க,
“ஏய்! நீ ஏன் இங்க வந்த?” என்று கதிரின் பெரியம்மா பல்லைக் கடித்தாள்.
ஆனால் யாருடைய குரலும் முல்லையின் காதில் விழவில்லை.
அவள் கதிர் அருகே சென்று அவனை அரவணைத்தாள்.
“கதிர். எப்படி இருக்கீங்க? ஏன் இப்படி அவசரப்பட்டு தப்பான முடிவெடுக்குறீங்க? எதுவா இருந்தாலும் நம்ம பேசித் தீர்த்துக்கணும். இனி இந்த மாதிரி பண்ணக்கூடாது. நீங்க நல்லா இருக்கீங்களா? எனக்கு எவ்வளவு பயமாயிடுச்சு தெரியுமா?” என்று மூச்சு விடாமல் அவனை விசாரித்தாள்.
கதிர் காதல் தாங்கிய விழிகளோடு அவளைப் பார்த்தான்.
“நான் இப்போ நல்லா இருக்கேன். ஆனா நீ. நீ எங்கிட்ட பேசாம, அங்க நடந்த நாடகத்தை நம்பி என்னை சந்தேகப் பட்டதால் தான் நான் இப்படி பண்ணேன்" என்றான் கதிர்.
“என்ன நாடகமா?” — சாமுண்டி கண்கள் சிவக்க,
கதிருக்கும் முல்லைக்கும் அப்போதெல்லாம் யாருடைய எதிர்ப்பும் முக்கியமில்லை என்ற எண்ணத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“நீங்க ஒரு பொண்ணு விரல்ல மோதிரம் மாற்றறத நான் பார்த்தேன். அத எப்படி நாடகம்னு சொல்றீங்க?” என்ற முல்லையின் குரலில் வேதனை இருந்தது.
“அதுக்கு எல்லாம் காரணம் இருக்கு. நான் உனக்கு எல்லாமே விவரமா சொல்றேன். முதல்ல நீ எப்படி இருக்க? உன்னை எப்படி அந்த வீட்டிலிருந்து அனுப்புனாங்க?” என்று கதிர் அவசரமாகக் கேட்டான்.
“அவங்க எங்க அனுப்புறது? நானே தான் வந்தேன். காலேஜ்ல இருந்து உங்களைப் பார்க்க ஓடி வந்தேன். நேத்துக்கூட வந்தேன் தெரியுமா? ஆனா உங்களைப் பார்க்கறதுக்குள்ள அந்த ராங்கி என்னைய இங்கிருந்து இழுத்துட்டு போயிட்டா,” என்றாள் முல்லை.
“இழுத்துட்டு போயிட்டாளா? ஏய்...அவ உன்னை காது மேல வச்சி இங்க இருந்து துரத்தி விட்டா!” என்று கதிரின் அம்மா கடுமையாகச் சொன்னாள்.
அப்போதுதான் முல்லைக்கு அறை முழுவதும் கதிரின் குடும்பம் நின்றிருப்பது தெளிவாக உணர்ந்தது.
அவள் சட்டென்று கதிரிடம் இருந்து விலகினாள்.
அனைவரின் பார்வையும் அவள் மேல் விழுந்தது.
அந்த நேரத்தில் கதிர் அவளது கரங்களைப் பாதுகாப்பாகப் பற்றிக் கொண்டான்.
“நீங்க எல்லாரும் கொஞ்சம் வெளியே போங்க. நான் முல்லை கிட்ட பேசணும்,” என்றான்.
“ஏய்! என்ன விளையாடுறியா?” என்று சாமுண்டி கடுகடுப்பாகக் கேட்டாள்.
கதிர் தெளிவான குரலில்,
முல்லையின் விரல்களை இன்னும் வலுவாக பிடித்துக்கொண்டவன்,
"நான் உங்கள எல்லாம் வெளிய போக சொன்னேன்" என்று அழுத்தமாக சொன்னான்.
கதிரின் வார்த்தைகள் அந்த மருத்துவமனை அறையையே அதிரச் செய்தது.
“ஏய், என்ன விளையாடுற? முதல்ல யார் இந்தப் பெண்? இவளுக்காக எங்களை ஏன் வெளியே போக சொல்ற? ஏய்...நீ யாரு?”என்று
பரமேஸ்வரி கோபமாக முல்லையை நோக்கி கேட்டாள்.
“அம்மா. நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க. இப்போ நீங்க எல்லாரும் வெளியே போறீங்களா? இல்லன்னா. நான் முல்லையைக் கூட்டிக்கிட்டு வேற எங்காவது போயிடணுமா?” என்று
இதுவரை தன்னை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாத மகன் இப்படி உறுதியோடு பேச, பரமேஸ்வரிக்கு மூச்சே அடைபட்டது போல ஆனது.