Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 170
- Thread Author
- #1
தீமையே
வெ (கொ)ல்லும்.
படலம் – 24.1
சிறு தயக்கத்துடன் படிக்கட்டில் காலை வைக்க...
ஒவ்வொரு படியும் அவளுக்கு பாரமாக இருந்தது.
"மேடம் கோவத்துக்கு நம்மளே காரணம் ஆகிட்டோமே" என்ற எண்ணம் அவள் தைரியத்தை குழி தோண்டி புதைத்து இருந்தது.
இதே எண்ணத்தோடு
மாடியை அடைந்த ஈஷா,
சித்ராங்கியின் அறை கதவின் முன் நின்று,தயக்கதோடு கதவை தட்டினாள்.

இதே இரவு நேரம்.
மூடுபனியால் மறைந்து இருந்த காட்டில் இருந்து தனது விசாரணையை தொடங்கியிருந்தான் விக்ராந்த்.
அவன் அருகில் அந்த இருளிலும் நிழலாய் நடந்தான் மணி.
இருவரும் முதலில் சென்றது கலா என்ற பெண்மணியின் மரணம் நிகழ்ந்த அந்த காட்டுப் பகுதியிக்கு தான்.
காட்டின் நடுவே, எரிந்து கருகிய செங்கல் சூளை.
மனிதன் வசிக்காத இடமாக தான் தெரிந்தது.
விக்ராந்த் சுற்றி நின்ற மரங்களைக் கவனமாக பார்த்தான்.
“நடு காட்டுல இவ்வளவு பெரிய ஏற்பாடு யாரு பண்ணிருப்பாங்க?” என்று
அவன் போலீஸ் மூளை வேலை செய்யத் தொடங்கியது.
மணி சந்தேகமாக,
“சார். இது நிச்சயமா கொலை தான் சார். ஆனா நகைக்காக நடந்தது தான்.” என்று சொல்ல, விக்ராந்த் இல்லை என்று தலை அசைத்தான்.
“உடற்கூறு ஆய்வு அறிக்கை படி,” என்றவன் குரல் குளிர்ந்து,
“கலா நெருப்புல கருகுறதுக்கு முன்னாடி. யாரோ அவங்கள ஷூட் பண்ணி இருக்காங்க.”என்றான்.
அந்த ஒரு வார்த்தை மணியின் முதுகெலும்பை உறைய வைத்தது.
“என்ன சார் சொல்றிங்க .?”என்று
அவன் குரல் நடுங்கியது.
"ஆமா...." என்று மட்டும் உரைத்த விக்ராந்த் மீண்டும் கவனமாக அந்த இடத்தை ஆராய்ந்தான்.
ஆனால் கலா எரிந்த சடலம் கிடைத்த அந்த காட்டில் ஒரு தடயமும் இல்லை.
ஒரு காலடிச்சுவடு கூட தெளிவாக இல்லை.
குற்றவாளி மிக கவனமாக செயல்ப்பட்டு இருக்கின்றான் என்று அவனுக்கு புரிந்து இருந்தது.
இங்கே எந்த தடயமும் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் அங்கிருந்து நேராகச் சென்றது சுனிலின் சடலம் கிடைத்த மற்றொரு காட்டு பகுதிக்கு.
அங்கு ஊர் மக்கள் சொன்ன கதை,
“காட்டு மிருகம் அடிச்சு போட்டுடுச்சு சார்.” என்று தான் எல்லாரின் பதிலாக இருந்தது.
ஆனால் உண்மை வேறு.
விக்ராந்த் மண்டியிட்டு மண்ணை கைப்பிடி எடுத்து பார்த்தான்.
“சுனிலோட உடற்கூறு ஆய்வு படி. இவன் உடம்புலயும் தொட்டா பாய்ந்திருக்குது.”என்று விக்ராந்த் சொல்ல,
மணியின் கண்கள் பெரிதானது.
"என்ன சார் சொல்றிங்க...
அப்போ bodyல கிடைத்த தொட்டா வைத்து ஏதாவது தடயம் கண்டுபிடிக்கலாமே?”என்று
மணி கேட்க, விக்ராந்த் கீழ் இருந்து எழுந்தவனின் முகத்தில் ஓர் அர்த்தமுள்ள சிரிப்பு தெண்பட்டது.
“இங்க தான் குற்றவாளி ரொம்ப ஸ்மார்ட்டா மூவ் பண்ணி இருக்கான்.”என்று அவன் சொல்ல...மணி குழப்பத்துடன்,
“அப்படி என்ன சார்?” என்று கேட்டான்.
அங்கே காற்று வலுத்தது. மரங்கள் சலசலத்தது.
விக்ராந்த் அர்த்தமாக அவனை நோக்கிப் பார்த்தவன்.
“கலா. சுனில். இருவருடைய உயிரையும் குடிச்ச அந்த தொட்டா. போஸ்ட் மார்ட்டம் பண்ணும்போது அவங்க உடம்புல இல்ல.”என்று விக்ராந்த் சொல்ல,
ஒரு நொடி மணியின் கண்கள் அதிர்ச்சியிலும் கேள்வியிலும் பெரிதாக விரிந்தது.
“அப்படின்னா. யாரோ bodyயிலிருந்த bullet-ஐ எடுத்துட்டு போயிட்டாங்களா.அது சாத்தியமா ?” என்று மணி கேட்க, அதற்கு
விக்ராந்த் உடனே பதில் சொல்லவில்லை.
ஆனால் அவன் கண்களில் ஒரு உறுதி இருந்தது,
"இது சாதாரண நகைக்காக நடந்த கொலை அல்ல.
இது திட்டமிட்டு , கணக்கிட்டு செய்த இரட்டை கொலை"
என்று அவன் சொல்ல,
காட்டின் இருள் இன்னும் ஆழமானது.
ஆனால் அதைவிட ஆழமானது இந்த வழக்கின் இருள் என்று அவன் அறிந்து இருக்க,
“வாங்க போகலாம்.” என்றவனின் மனதில், கதிர் ஏன் இன்று தன்னை பார்க்க வர வில்லை என்ற கேள்வி அவன் சிந்தையில் ஓடிக்கொண்டு இருந்தது.

மருத்துவமனையின் அந்த வெண்மையான சுவர்கள், மருந்தின் வாசனையும், மெதுவாக ஒலிக்கும் மானிட்டர் சத்தமும் சேர்ந்து அறைக்குள் ஒரு அழுத்தத்தை பரப்பி இருந்தது.
அவர்கள் அனைவரின் அமைதியையும் பார்த்தும் பார்க்காத போலும் படுக்கையில் கண்களை மூடி படுத்திருந்தான் கதிர்.
அவன் சிகிச்சை அறைக்குள், அவன் குடும்பமே சுற்றி நின்று கொண்டிருந்தது.
“டேய் பாவி.” என்று தன் கோபத்தையும் பயத்தையும் கலந்து கத்த தொடங்கினாள் கதிரின் அம்மா பரமேஸ்வரி.
“உன் பெரியப்பா அங்க நெஞ்சு வலி வந்து படுத்து இருக்காரு. உன் அப்பா அந்த சித்ராங்கி எப்படி திரும்பி வந்தான்னு நினைச்சு குழம்பி இருக்காரு. என் அண்ணனை வேற காணோம். இங்க இத்தனை பிரச்சனை இருக்கும் போது நீ என்னடா விஷம் குடிச்சிட்டு இப்படி ஹாஸ்பிடல்ல படுத்து இருக்கே?”என்று
அவள் குரல் கோபமாக இருந்தாலும், கண்களில் அச்சம் தெளிந்தது.
“என்ன கதிர் இதெல்லாம்?” என்று கதிரின் பெரியம்மா சாமுண்டி கோவத்தில் கண்கள் சிவந்து நின்றாள்.
“யார் அந்த பொண்ணு? இங்க என்ன நடக்குது? எதுக்கு இப்படி ஒரு நாடகம்?”என்று
பரமேஸ்வரி மீண்டும் கத்தினாள்.
“உனக்கு திமிர் ஏறிப் போச்சு போல. நமக்கு இருக்குற பிரச்சனையில நம்ம வீட்டுக்குள்ள கூட இனி நுழைய முடியாது. ஆனா அந்த கவலை எல்லாம் இல்லாம நீ என்ன காரியம் பண்ணி இருக்க" என்று பல்லை கடித்துக்கொண்டு சீறினாள் சாமுண்டி.
அந்த நேரம், சற்றே அமைதியாக இருந்தாலும் முகத்தில் கவலை தெளிவாகத் தெரிந்த மீனாவின் அம்மா வள்ளி, “சும்மா இருங்க அண்ணி.” என்றவள்
“கதிர். இந்தா மருந்த சாப்பிடு.”என்று
வள்ளி மாத்திரையை நீட்ட, கதிர் அந்த மருந்தை உட்கொண்டான்.
அவன் கண்கள் யாரையும் நேராக பார்க்கவில்லை. மீனா மற்றும் வெங்கட் அந்த அறையின் ஒரு மூலையில் அமைதியாக நின்றிருந்தார்கள்.
அவர்கள் வெளியில் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. ஆனால் கதிர் விஷம் குடித்தது அவர்களுக்கும் கோபம்தான்.
“சொல்லுடா!”
“என்ன ஆச்சு?”
“யாருக்காக இந்த டிராமா?”என்று
எல்லோரும் மாறி மாறி கதிரை திட்டத் தொடங்கினர்.
திடீரென கதிர் படுக்கையிலிருந்து எழ முயன்றான். அவன் குரல் தளர்ந்திருந்தாலும், அதில் ஒரு துடிப்பு இருந்தது.
“கொஞ்சம் அமைதியா இருக்கிங்களா”
என்றவனின் குரல் அறை முழுக்க ஒலித்தது.
அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.
கதிரின் கண்கள் அவசரமாக அறை முழுவதும் முல்லையை தேடியது.
கதவு அருகே. ஜன்னல் பக்கம். மூலை இருக்கைகள்.
“முல்லை.?” என்று அவன் உதடுகள் கிசுகிசுத்தன.
அவள் எங்கும் இல்லை.
அந்த உண்மை அவனுக்கு புரிந்த அடுத்த நொடி, அவன் முகத்தில் இருந்த சிறு நிம்மதி கூட மறைந்தது.
மார்புக்குள் ஒரு வெற்றிடம் விரிந்தது.
“என்னை. இங்க அட்மிட் பண்ணது யார்?” என்று அவன் கேட்டான்.
அறையில் மீண்டும் அமைதி நிலவியது.
பரமேஸ்வரி குழம்பி அவனை பார்த்தவள்.
“அதென்ன கேள்வி?”என்று கேட்க,
கதிரின் பார்வை இன்னும் கதவையே பார்த்துக் கொண்டிருந்தது.
“கேக்குறேனே . என்னை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணது யார்?”
என்ற கேள்விக்குள் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பு முல்லையை தேடும் ஏக்கம் என்று வெங்கட் மற்றும் மீனாவை தவிர அங்கு வேறு யாரும் அறிந்திட வாய்ப்பு இல்லாமல் போனது.

மறுப்பக்கம் இதே தருணம் விசிஆர் பங்களாவில் ஈஷா மெதுவாக கதவைத் தட்டிக் கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அறைக்குள் மங்கலான மஞ்சள் விளக்கின் ஒளியில், கட்டிலின் ஓரத்தில் நேராக அமர்ந்து கொண்டிருந்தாள் சித்ராங்கி.
அவள் முகத்தில் எப்போதும் காணப்படும் ஒரு ஆளுமை இன்றோ சற்று வேறு மாதிரி தோன்றியது.
“மேடம்.” என்ற மெலிந்த அழைப்பில் சித்ராங்கியின் புருவம் சற்று சுருங்கியது.
“சாரி மேடம். அந்த கதிர் விஷம் குடிச்சதும் நான் ரொம்ப பயந்துட்டேன்.” என்ற ஈஷாவின் குரலில் இன்னும் அதிர்ச்சி தங்கியிருந்தது.
சித்ராங்கி அவளை ஒருமுறை ஆழமாக பார்த்தாள். அந்த பார்வையில் கண்டிப்பு இருந்தது, ஆனால் அது வெறும் கோபமல்ல எச்சரிக்கை.
“சரி,” என்று ஒரே ஒரு வார்த்தை சொன்ன சித்ராங்கி அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.
சட்டென்று எழுந்து, மறுநாள் பயணத்திற்கு தேவையான ஆடைகள், கோப்புகள், சில முக்கிய பொருட்கள் என அனைத்தையும் ஒழுங்காக சுட்கேஸில் அடுக்கத் தொடங்கினாள்.
ஒவ்வொரு பொருளும் அவளது கையில் ஒழுங்காக இடம் பெற்றது. உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஈஷாவுக்குள் எழுந்தாலும், சித்ராங்கி எப்போதும் தன் வேலையைத் தானே செய்வாள் என்பது தெரிந்ததால், அவள் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
தன்னை ஈஷா கவனித்து கொண்டிருப்பதை உணர்ந்த சித்ராங்கி திடீரென திரும்பி,
“Anything else?” என்று கேட்டாள்.
“சாரி மேடம்.” என்று மீண்டும் சொன்னாள் ஈஷா, கண்களை கீழிறக்கி.
சித்ராங்கி சுட்கேஸை மூடி, பூட்டினாள்.
“நாளைக்கு 5am மணிக்கே நான் இங்கிருந்து கிளம்பிடுவேன். அடுத்த 48 மணி நேரம் என்னால உன்ன contact பண்ண முடியாது. அந்த 48 மணி நேரத்துல ஏதாவது பிரச்சனை வந்தா யோசிக்காம யாரா இருந்தாலும் தட்டிடு. மிச்சத்தை நான் வந்துப் பார்த்துக்கறேன்.” என்றவள் குரல் தெளிவாகவும் திட்டமாகவும் இருந்தது.
“இங்க என்ன மேடம் பிரச்சனை வரப் போகுது? அதான் அந்த ஆதிஷேஷன் இப்போ ஹாஸ்பிடல்ல இருக்காரே.” என்று தயக்கத்துடன் கேட்டாள் ஈஷா.
சித்ராங்கியின் கண்கள் கூர்மையடைந்தன.
“நீ அடிபட்ட பாம்பை பத்தி பேசுற. நான் நன்றி இல்லாத ஒரு பரம்பரையை பத்தி பேசுறேன்.”
என்ற வார்த்தைகள் ஈஷாவின் மனதில் சிக்கிக் கொண்டன.
“நன்றி இல்லாத பரம்பரையா!?.” என்று ஈஷா புரியாமல் நின்றாள்.
சித்ராங்கி மனதில் கடந்த காலத்தில் சொல்ல முடியாத பல விஷயங்கள் இருக்கின்றன என்று அவளுக்கு அந்த நொடி தெளிவாயிற்று.
அவள் முழுவதும் குழப்பத்தில் ஆழ்வதற்கு முன்பே சித்ராங்கி மீண்டும் பேசினாள்.
“நான் போய்ட்டு திரும்பி வர அதே நாள் தானே முருகன் அங்கிளும் பார்வதி ஆன்ட்டியும் வராங்க?” என்று சித்ராங்கி கேட்க,
“ஆமா மேடம்.” என்று தலையாட்டினாள் ஈஷா.
“ஓகே. அவர் வந்ததும் முதல் வேலையா அந்த Girl-ஐ studiesக்கு pack பண்ணனும்.”என்ற சித்ராங்கி
‘அந்த Girl’ என்று முல்லையை தான் குறிப்பிட்டு இருந்தாள்.
சில முக்கிய ஆவணங்களை எடுத்து ஈஷாவிடம் நீட்டிய சித்ராங்கி,
“இதன்படி அடுத்த 48 மணி நேரம் நம்ம staff-களுக்கு வேலை assign பண்ணி inform பண்ணிடு. இந்த 48 மணி நேரம் என்னை disturb பண்ணாத.”என்றவள்,
சற்று இடைவெளிக்குப் பிறகு,
“உன்னால முடியாத பட்சத்துல என்னோட ஆப்பிளுக்கு message பண்ணு,” என்றாள்.
அதுவே அவளது இறுதி உத்தரவாக இருக்க,இதே சமயம் தன் அறையில் முல்லை அழுது அழுது சோர்ந்து போனவள் அதே சோர்வில் உறங்கியும் இருந்தாள்.