• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
168
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.
படலம் 23.2

மருத்துவமனையின் நீண்ட வழித்தடம் அந்த நேரத்தில் ஒரு அச்சத்தின் நெடுஞ்சாலையாக இருந்தது.

சுவர்களில் ஒட்டியிருந்த கிருமிநாசினியின் மணம், வெண்மையான விளக்குகளின் குளிர்ந்த ஒளி, தொலைவில் ஒலித்துக் கொண்டிருந்த ‘பீப். பீப்.’ என்ற உயிர்மானியின் ஒலி என்று அந்த இடம் முழுவதும் உயிரும் மரணமும் பேசிக் கொண்டிருந்தது.

அந்த அமைதியை இரண்டாக வெட்டி, வேகமான காலடிச் சப்த்தத்துடன் அங்கே வந்தாள் சித்ராங்கி.

அவள் நடையை விட அவளின் பார்வை வேகமாக ஓடியது. கதவைத் தள்ளி உள்ளே சென்றவளை பார்த்தவுடன் கந்தன் தன்னைத்தானே அறியாமல்,
“அதோ. சிஆர்.” என்று மெல்ல உரைத்தான்.

அந்த ஒரு பெயர் கதிரின் குடும்பத்தின் நரம்புகளைச் சுருட்டி பிடித்தது.
கதிரின் அம்மா பரமேஸ்வரி நடுங்கும் குரலில்,
“ஏய். என் அண்ணன் எங்க டி ?” என்று கேட்டாள்.

சித்ராங்கி சிரிக்கவில்லை. கோபப்படவும் இல்லை.
அவள் முகத்தில் இருந்ததோ ஒரு மர்மமான அமைதி.
“இனி அவரைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். வேண்டும்னு நினைச்சாலும். கவலைப்பட இனி உங்களுக்கு நேரமே இருக்காது.”

என்ற வார்த்தைகள் காற்றில் மட்டும் இல்லாமல், உள்ளங்களிலும் வெடித்தன.

சித்ராங்கியின் பேச்சை கேட்டு முதலில் குழம்பியது ஈஷா தான்.
ஏனெனில் சித்ராங்கியின் கடந்த காலம், அவளுக்கு தெரியாத ஒரு இருள்.

அந்த இருள் இப்போது வெளிச்சத்திற்கு வரப் போகிறதா என்ற கேள்வி அவளைத் தழுவியது.

“ஏய்! என்ன திமிரா பேசுற?” என்று கதிரின் பெரியம்மா அங்கே முன்னே வர,
சித்ராங்கி கையை உயர்த்தவில்லை.

ஆனால் அவள் குரல் உயர்த்தி,
“நான் சொல்ல வருவதை முழுசா கேளு சாமு... மத்தவங்கள பற்றி இனி நீங்க எல்லாம் கவலைப்படாதீங்க. ஏன்னா இனி உங்க வாழ்க்கையை நினைத்து கவலைப்பட வேண்டிய அத்தியாயம் இப்ப தான் ஆரம்பம்.” என்றாள்.

அவள் பார்வை மாறன்,கந்தன்,ஈஷாவை தொடர்ந்து
அப்படியே திரும்பி முல்லையைத் துளைத்தது.

சிகிச்சை அறையின் வெளியே நின்று கொண்டிருந்த முல்லை, “கதிர். கதிர்.” என்று அழுதுக் கொண்டிருந்தாள்.

அவளின் குரலில் குற்ற உணர்ச்சி கரைந்திருந்தது.

ஈஷாவோ சித்ராங்கியின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துகொண்டாள்.

“சரி. வாங்க. நாம எல்லாரும் வீட்டுக்கு போகலாம்,” என்று கந்தன், மாறன், முல்லையை அழைத்தாள்.

“இல்ல! நான் வரமாட்டேன்! கதிருக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம நான் வரமாட்டேன். என்னால தான் அவருக்கு இப்படி ஆச்சு.” என்று முல்லை கதறினாள்.

“Don't say rubbish" என்று சித்ராங்கி கோவப்பட,முல்லையின் மூளை அதை ஏற்கவில்லை.

"ஐயோ கதிர் பாவம்... நான் தான் இதுக்கெல்லாம் காரணம்" என்று மேலும் முல்லை கதறி அழ,
ஒரு கட்டத்தில் சித்ராங்கியின் பொறுமை உடைந்தது.

“இப்ப நீ வரியா. இல்ல இப்போ அவன் மூச்சை நான் நிறுத்தட்டா?” என்ற சித்ராங்கியின் வாக்கியம் காற்றையே உறைய வைத்தது.

அவள் வார்த்தையை கேட்டு
முல்லையின் விழிகள் பெரிதாயின.

“என்ன மனுஷி நீ? சரியான கொலைகாரி நீ... எதுக்காக உனக்கு என் கதிர் மேல இவ்ளோ வன்மம்?”என்று முல்லை கோவப்பட்டதும், சத்தமாக சித்ராங்கி சிரித்தாள்.

அது வெறும் சிரிப்பு மட்டும் அல்லாமல் ..அதில் கிண்டலான தோரணை தான் இருந்தது.

“ஏய் poor girl... நான் ஆயிரம் முறை சொல்லிட்டேன். எனக்கு சமமான எதிரி கதிரும் இல்ல. அவன் குடும்பமும் இல்ல. சரி சரி... நேரமாகுது ஒழுங்கா வீட்டுக்கு வா.” என்று மீண்டும் பொறுமையாக சித்திராங்கி பொறுமையாக பேசினாள்.

“நீங்க என்னவேனாலும் சொல்லுங்க, என்னால தான் அவரு விஷம் குடிச்சாரு.” என்று மீண்டும் முல்லை சோகத்துடன் சொன்னாள்.

“ஏய்...உன் எதிரில அவன் வேற ஒரு பொண்ண நிச்சயம் பண்ண துணிஞ்சிட்டான்னு. நீ அவன் முகத்துல காரி துப்ப போறேன்னு நினைச்சு இப்படி ஒரு டிராமா பண்ணுறான்” என்ற சித்ராங்கியை கடுங்கோபத்துடன் முறைத்தாள் முல்லை.

அவள் வார்த்தைகள் முல்லையின் இதயத்தில் ஊசியாகப் பதிந்தன.

இங்கே நடப்பதை எல்லாம் பார்த்து,
“போதும்! நிறுத்துங்க” என்று பரமேஸ்வரி கத்தியவள்,
“யார் இந்த பொண்ணு? எதுக்காக என் பையனை நினைச்சு அழனும்?”என்று கேட்டாள்.

மீனா மெதுவாக, “சின்ன அத்த...கதிரும் முல்லையும்.” என்று அவள் சொல்ல வரும்போதே
“செட்டப்!” என்று சித்ராங்கி கத்த, அங்குள்ள
அனைவரும் ஒரு நொடி அலண்டு தான் போனார்கள்.

“இவ என் விசுவாசி முருகன் " என்று பேச்சை ஆரம்பித்த சித்திராங்கி, "விசுவாசம்னா என்னன்னு உங்களுக்கு தெரியாதுல்ல... சரி... அத விடுங்க,இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும் என்ற அவசியம் எனக்கு இல்ல. ஈஷா, இவங்களை இங்கிருந்து அழைச்சிட்டு போ.”என்று சித்ராங்கி மீண்டும் கோவமாக கத்தி இருந்தாள்.

“நான் வரமாட்டேன்!” என்று முல்லை மீண்டும் அடம் பிடித்த அடுத்த நொடி
பளார்! என்று
சித்ராங்கியின் ஐந்து விரல்கள் முல்லையின் கன்னத்தில் பதிந்தன.

அந்த அறையில் அனைவரும் ஆடி போக,
“மேடம்! என்ன நீங்க என் பாப்பாவை.” என்று மாறன் மேலும் பேசும் முன்னே,
“நீ அவளுக்கு அண்ணனா? இல்ல மாமாவா?” என்ற சித்ராங்கியின் கேள்வி மாறனை வாயடைக்கச் செய்தது.

“அண்ணா சும்மா இரு,” என்ற கந்தன்..."ஒரு ரவுடி பயலையும், பொறுக்கி பயலையும் நம்பி அக்கா இங்க வந்து நிக்குது. அப்பாக்கு இதெல்லாம் தெரிஞ்சா அவரோட நிலைமை என்ன ஆகுறது. சிஆர் செய்றது தான் சரி. வா. நம்ம அக்காவை அழைச்சிட்டு போலாம்.” என்றான் கந்தன்.

சித்ராங்கியின் அறையில் முல்லை உறைந்து போய் நின்றாள்.

அவள் கன்னத்தில் இருந்த கைரேகை சிவந்த தழும்பாக மாறிக் கொண்டிருந்தது.

இறுதியில்
ஈஷா,கந்தன், மாறன், முல்லை.
அவர்களை முன்னால் நடத்தி சித்ராங்கி வெளியே வந்தாள்.

வெளியேறுவதற்கு முன் அவள் திரும்பிப் பார்த்தவளின் பார்வையில் ஒரு எச்சரிக்கை தெரிய, "This is ஜஸ்ட் the beginning"
என்ற சித்ராங்கியின் கார் விசிஆர் பங்களாவை நோக்கி மின்னல் வேகத்தில் சீறி பாய்ந்தது.

ஈஷாவின் காரில் வந்துகொண்டு இருந்த முல்லைக்கோ தன் மொத்த கோவமும் சித்திராங்கி மீது தான் திரும்பியது.

மருதத்துவ மனையின் முன் இரவின் நிழல் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

அந்த இடத்தில் காற்று கூட வீச அஞ்சும் நிலையில் ஒரு பதட்டம் அனல் வீசிக் கொண்டிருந்தது.

சித்ராங்கி முகத்தில் அதீத கோபத்துடன், யாரையும் பார்க்காமல் நேராக தனது காரை நோக்கி நடந்தாள்.

அவள் அடிகள் ஒவ்வொன்றும் உறுதியாய் இருந்தாலும், உள்ளுக்குள் கொந்தளித்துக் கொண்டிருக்கும் தீயை வெளிக்காட்டியது.

தன் காரில் அமர்ந்து கதவை பலமாக அடைத்தவள், இன்ஜின் ஸ்டார்ட் செய்தவள் கார் இருளை கிழித்துக் கொண்டு விசிஆர் பங்களாவை நோக்கி பாய்ந்தது.

அவள் பின்னால், இன்னொரு காரில் ஏற தயாராக நின்றிருந்தார்கள் கந்தன் மாறன் முல்லை மற்றும் ஈஷா.

காரில் அமர்ந்த ஈஷா
ஸ்டீரிங்கில் கை வைத்திருந்தாள். அவளது விரல்கள் லேசாக நடுங்கின. “என்னவோ நடக்கப் போகிறது.” என்ற எண்ணம் அவளது மனதை பிடித்துக் கொண்டது.

சித்ராங்கியின் இப்படிப்பட்ட கோபத்துக்கு காரணம் தெரியவில்லை. ஆனால் விசிஆர் பங்களா இன்று அமைதியாக இருக்காது என்ற அச்சம் அவளை விடவில்லை.

பின்சீட்டில் அமைதியாக அமர்ந்திருந்தான் மாறன். அவன் கண்களில் கவலை. சித்ராங்கி முல்லையை அடித்த காட்சி தான் அவன் மனதில் மீண்டும் மீண்டும் ஓடியது.

என்னதான் தன் முருகனுக்கு சித்ராங்கி முதலாளியாக இருந்தாலும் அவள் முல்லையை அடித்தது மாறனுக்கு பிடிக்கவில்லை.

தன் தங்கை காயமடைந்ததை விட, அத்தனை பேர் எதிரில் முல்லைக்கு நேர்ந்த அவமானமாக தான் அவன் அதை எண்ணிகொண்டான்.

அவனருகில் அமர்ந்திருந்தான் கந்தன். அவன் முகத்தில் குழப்பம் இல்லை. மாறாக ஒரு திருப்தி இருந்தது “சித்ராங்கி செய்தது சரிதான்.” என்ற எண்ணம் அவன் உள்ளத்தில் உறைந்திருந்தது.

கொஞ்சி கெஞ்சி பேசினால் முல்லை வழிக்கு வர மாட்டாள். அடி தான் அவளை திருத்தும் என்று கந்தன் எண்ணினான்.

அவர்களுடன் இருந்தாள் முல்லை. கன்னத்தில் அடியின் சின்னம் இருந்தது. ஆனால் அவள் கண்களில் கண்ணீர் ஒரு துளி கூட வழியவில்லை.

மாறாக, அவள் பார்வையில் தீப்பொறி. சித்ராங்கி மீது அடங்காத ஆத்திரம். “இதற்குப் பதில் சொல்லாமல் உன்னை நான் விட மாட்டேன்.” என்று அவள் உள்ளுக்குள் உறுதி எடுத்திருந்தாள்.

கார் மருத்துவமனையை விட்டு புறப்பட்டு இருளை வெட்டி சென்றது.

காருக்குள் நான்கு மனங்கள்,நான்கு விதமான உணர்ச்சிகள்.என்று
விசிஆர் பங்களாவை நோக்கி பயணித்தது.

இவர்களுக்கு முன்னே பெரிய வாயில் திறந்து, சித்ராங்கியின் கார் உள்ளே நுழைந்தது.

சித்ராங்கி இறங்கி ஒருமுறை கூட திரும்பிப் பார்க்காமல் நேராக உள்ளே சென்றாள்.

படிக்கட்டுகளை வேகமாக ஏறி, தன் அறைக்குள் புகுந்து கதவை மூடி இருக்க,
அந்த இடம் முழுக்க அமைதி நிலவினாலும், அறைக்குள் இருக்கும் அவளது உள்ளம் புயலாக மாறி இருந்தது.

தன் படுக்கையின் ஓரத்தில் அமர்ந்தவள், கையை முறுக்கிக் கொண்டு கோபத்தில் மூச்சை இழுத்தாள்.

கதிரின் குடும்பம் இவளுக்கு செய்த துரோகம் எல்லாம் கண்ணுக்கு முன்னே வந்து சென்றது.

"என்னை இறக்கிய அதே குழியில் உன்னையும் உயிரோடு புதைப்பேன் டா" என்ற சபதம் இன்னும் அவள் மனதை விட்டு மறையவில்லை.

இவள் இப்படியாக கோவத்தில் இருக்க...
சில நிமிடங்களில், இரண்டாவது கார் பங்களாவை அடைந்தது.

ஈஷா காரை நிறுத்த, மாறன், கந்தன், முல்லை மூவரும் இறங்கினார்கள்.

பங்களாவின் முன் இருந்த விளக்குகள் மங்கலாக எரிந்தன. அந்த வெளிச்சத்தில் எல்லோரின் முகங்களும் சற்று சோர்வாகத் தோன்றின.

ஒரு வார்த்தையும் பேசாமல், முல்லை உள்ளே சென்றாள். நேராக தன் அறைக்குள் சென்று கதவை பலமாக சாத்திக் கொண்டாள்.

“முல்லை.” என்று அழைத்தபடி மாறன் அவள் பின்னால் செல்ல முயன்றான்.

அவன் தோளில் கை வைத்தான் கந்தன்.
“நீ வா அண்ணா. அக்காக்கு இது தேவை தான். உடனே நீ போய் அவங்களை கொஞ்சிடாத. அவங்க தனியா யோசிக்கட்டும்,” என்றான்.

மாறன் சற்று தயங்கினான். அவன் மனம் தங்கையின் அருகே போகச் சொன்னது. ஆனால் கந்தனின் வார்த்தைகள் உண்மையாகத் தோன்றின.

“சரி.” என்று ஒப்பாமல் சொல்லி, இருவரும் தங்களது அறைக்குள் சென்றார்கள்.

இவர்களை பார்த்தப்படி ஹாலில் நின்று இருந்த ஈஷாவின் இதயம் வேகமாகத் துடித்தது.

மேல்மாடியில் இருந்த சித்ராங்கியின் அறையை நோக்கி அவள் பார்வை திரும்பியது.

அந்த கதவு பின்னால் இவளுக்கு ஆப்பு காத்திருக்கிறது என்று அவள் உணர்ந்து இருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top