• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
166
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.
படலம் 22.2

சித்திராங்கி திரும்பி பார்த்தவள்.
“நம்ம இல்லை. நான் மட்டும் போயிட்டு வரேன்.”என்றதும்
ஒரு கணம் ஈஷா உறைந்து நின்றாள்.

“உன் போன்ல இருந்து மிஸ்டர் விக்ராந்துக்கு மெசேஜ் பண்ணி, அவருடைய அட்ரஸ்ஸை கேட்டு வாங்கி எனக்கு சென்ட் பண்ணி விடு.”என்று சொன்னாள் சித்ராங்கி .

“மேடம்! நீங்க மட்டும் தனியா போக வேண்டாமே. நானும் கூட வரேன்.” என்று அவசரமாகக் ஈஷா கூற.
சித்திராங்கி சற்றே நிதானமாக அவளருகில் வந்தாள்.

“என்கூட நீ இருக்கிறத விட இப்போ மாறன், முல்லை, கந்தன் கூட இருக்கிறது தான் முக்கியம். நீ அவங்கள பாத்துக்கோ. நான் போயிட்டு வரேன்.”என்றவள் யாரையும் ஆபத்தில் இழுக்க விரும்பாத ஒருத்தியின் தீர்மானமாக இருந்தது.

சித்ராங்கியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஈஷா சம்மதிக்க...
சித்ராங்கி குளியலறைக்குள் நுழைந்தாள்.

கதவு மூடிய சத்தம் அந்த அறையின் அமைதியை மீண்டும் நிரப்ப,
சித்திராங்கி தனியாகச் சென்று சந்திக்கப் போகும் அந்த சந்திப்பில் என்னவெல்லாம் பிரச்சனை தலை தூக்கப் போகிறது என்ற அச்சம் ஈஷாவின் அமைதியை கெடுத்து இருக்கும் நிலையில், ஈஷா காரை எடுத்துக்கொண்டு மாறனின் சட்டக் கல்லூரியை நோக்கி விரைந்தாள்

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே தருணம் கல்லூரி வளாகம் மெதுவாக வெறிச்சோடி கொண்டிருந்தது. அந்த கூட்டத்தின் நடுவே முல்லை மட்டும் தன் உலகத்திலேயே மூழ்கியபடி வேகமாக வெளியே நடந்தாள்.

“முல்லை. ஒரு நிமிஷம் நில்லு..நான் சொல்றத கேளு.”என
பின்புறம் இருந்து கதிரின் குரல் காற்றை கிழித்தது.

அவன் குரலில் இருந்த அவசரம், வேதனை அவள் காதுகளுக்கு வந்ததே தவிர மனசுக்குள் நுழையவில்லை.

அவன் தரப்பு கதையை கேட்க அவள் தயாராக இல்லை. அவன் மீது இருந்த கோபம் இன்னும் அணையவில்லை.

அந்த நேரத்தில், கல்லூரி வாசலுக்கு முன் முல்லையை அழைத்து செல்ல கார் சத்தமாக வந்து நின்றது.

டிரைவரின் இருக்கையிலிருந்து ஈஷா தலையை வெளியே நுழைத்து,
“முல்லை, சீக்கிரம் வா!” என்றாள்.

ஒரு நொடியும் தயங்காமல் முல்லை காரில் ஏறி அமர்ந்தாள்.
“முல்லை! தயவு செஞ்சு நான் சொல்றத கேள்.!” என்று கதிர் கத்தினான்.

ஆனால் கார் ஏற்கனவே வேகமாக புறப்பட்டு, விசிஆர் பங்களாவை நோக்கி பறந்தது.

கதிரின் கோபம் தலைக்கு ஏறியது. அவன் கண்களில் சிவப்பு படர்ந்தது. “இவள் என்னை விட்டு இவ்வளவு தூரம் போயிட்டாளா.” என்ற ஏமாற்றம், பயம், காதல் அனைத்தும் சேர்ந்து அவனை ஒரே தள்ளுதலாக மாற்றின.

உடனே அவன் தனது பைக்கில் ஏறி, முழு வேகத்தில் முன்னே செல்லும் காரை விரட்டினான்.

சாலையில் காற்றை வெட்டியபடி பயணித்தவன்,இறுதியில் விசிஆர் பங்களா வாயிலை அடைந்தபோது,
முல்லை காரில் இருந்து இறங்கினாள்.

அவளுடன் கந்தன், மாறன், ஈஷா என மூவரும் இருந்தனர்.

அவள் பங்களா வாசலை நோக்கி சில அடிகள் நடந்தவுடன், பைக்கின் சத்தம் கேட்டு திரும்பினாள்.

கதிர் முகத்தில் ஒரு தீர்மானம் தெரிந்தது. கண்களில் ஒரு கோவம் இருந்தது.
“முல்லை. நீ இப்போ என்கிட்ட பேசலைனா.” என அவன் குரல் நடுங்கியது.

அவன் என்ன சொல்ல போகிறான் என்று இவர்கள் யோசிக்கும் முன்னே,
“இங்க பாரு. உன் கண் முன்னாடியே நான் என்ன பண்ணிக்கப் போறேன்னு நல்லா பாரு!” என்றவன் ஏற்கனவே திட்டமிட்டபடி தன் பையில் இருந்த பாட்டிலை எடுத்தான்.

யாரும் எதிர்பார்க்கும் முன், அதிலிருந்த மருந்தை மடமடவென குடிக்க...
“கதிர்!” என்று முல்லை அதிர்ச்சியில் கத்தினாள்.

“இப்போவாவது என்னை நம்பு முல்லை... நான் உன்ன தான் டி காதலிக்கிறேன் .” என்றவன் மூச்சு தடுமாறியது.

“எனக்கு உன்ன தான் பிடிக்கும். நீ வேணும் டி எனக்கு.”
என்றவன் அவள் முன்னே மண்டியிட்டு கதறி அழுதான்.

அவன் கண்ணீர் மண்ணில் சொட்டியது.
அந்த காட்சி முல்லையின் இதயத்தை கிழித்தது. அவள் முகத்தில் பதற்றம் படர்ந்தது.

அந்த நேரத்தில் கந்தன் கோபமாக,
“அக்கா! அவன் நடிச்சு ஊர ஏமாத்துறான். அந்த அழுகையெல்லாம் உண்மை இல்ல. இது ஆக்ட்டிங்!” என்றான்.

ஆனால் அவன் வார்த்தைகள் முடியும் முன்பே, கதிரின் உடல் திடீரென்று நடுங்கியது.

அவன் வாயில் நுரை தள்ளியது. கண்கள் சுழன்றன.
அடுத்த நொடியில், அவன் தரையில் சாய்ந்தான்.“கதிர்!”என
முல்லையும் ஈஷாவும் ஒரே நேரத்தில் அவன் பக்கம் ஓடினர்.

முல்லையின் கைகள் நடுங்கின. “ஏய் . கண்ண திற. என்ன பண்ணிட்ட?”என
ஈஷா பதற, “மாறன் ஆம்புலன்ஸ கூப்பிடுங்க!” என்று கத்தினாள்.

கந்தனின் முகத்தில் இருந்த சந்தேகம் பயமாக மாறியது. மாறன் அதிர்ச்சியில் அசையாமல் நின்றான்.

அந்த மாலை காற்று திடீரென கனத்தது. காதல், கோபம், தவறு, பிடிவாதம் அனைத்தும் சேர்ந்த அந்த நொடியில், முல்லையின் உள்ளம் சிதறியது.

கதிர் அசைவின்றி கிடந்தான்.
அவளது இதயம் ஒரு கேள்வியோடு துடித்தது.
இது அவன் நடிப்பா? இல்லை உண்மையா?என்று ஈஷா யோசிக்கும் முன்னே..
"கதிர்... என்னை பாருங்க கதிர்" என்று முல்லை கதறி அழுதாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

மறுபக்கம் இதே தருணம் மாலையின் மந்தமான வெளிச்சம் விக்ராந்தின் போலீஸ் குவாட்டர் ஹாலில் மெல்லச் சுருண்டு பரவிக் கிடந்தது.

சுவற்றில் தொங்கியிருந்த கடிகாரத்தின் ‘டிக். டிக்.’ என்ற ஒலி மட்டும் அந்த அமைதியை நுனிக்கூரிய கத்தி போல கிழித்தது.

அந்தச் சத்தத்தைக் களைந்து, “May I come in?” என்ற தெளிவான குரலுடன் கதவு மெதுவாகத் திறந்தது.

கருப்பு நிற ஆடையில் கண்களில் அச்சமற்ற அகம்பாவம் மிளிர, சித்ராங்கி உள்ளே நுழைந்தாள்.

அவள் நடையில், “I own the place” என்று சொல்வதைப் போலத் தன்னம்பிக்கை ஒலித்தது.

அது ஒரு சாதாரண வருகை அல்ல தன் இருப்பை பதிவு செய்யும் வருகை.

சோபாவில் சாய்ந்து அவளை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ராந்த், சட்டென எழுந்தான்.

அவன் கண்கள் நேராக அவளைப் பிளந்து ஆராய்ந்தன.
“தேங்க்s for coming, சிஆர்,” என்றான் அவன்.

அவன் குரலில் குளிர்ச்சியும்,கணக்கிடப்பட்ட அமைதியும் கலந்திருந்தது.

அந்தச் சொற்களில் ஒலித்த நுணுக்கத்தை உணர்ந்த சித்ராங்கி புருவத்தை மெதுவாக உயர்த்தினாள்.

“Don’t mistake this as respect. இது ஒரு enquiry,” என்று அவன் தெளிவாகச் சொன்னான்.

சித்ராங்கியின் உதடுகளில் நக்கல் சிரிப்பு மெல்ல விரிந்தது.
“Enquiry ஆ? இல்ல personal invitation ஆ?” என்று கேலி கலந்த குரலில் கேட்டாள்.

“சிபிஐ officer Vikranth வீட்டுக்கு தனியா வரச் சொல்லுறது official procedure-ல வருமா?” என்று அவள் மேலும் தன் கேள்வியை கூர்மையாக்கினாள்.

அவள் கேள்வி முடியும் முன்பே, விக்ராந்த் அவளுக்கு அருகில் நின்றிருந்தான்.

“உன் மேல.....” என்று தொடங்கிய அவனை,
“எக்ஸ்கியூஸ்மி,” என்று அவள் முறுக்கலுடன் நிறுத்தினாள்.

“ம். உங்க மேல complaint வந்திருக்கு, மிஸ்டர்s. No... No...Miss சிஆர்" என்றவன்... "அதுவும் ஐ witness-ஓட,” என்றான் அவன்.

“ஐ witness?” அவள் புருவம் சற்றே உயர்ந்து,
“Or imagination?” என்றாள் சலனமின்றி.

அவள் வார்த்தையை கேட்டு...“Don’t play smart,” என்றவன் குரல் இப்போது கடினமாயிற்று.

“You may act like a don. but law is above you.”என்றனை நேருக்கு நேர் பார்த்து சிரித்தாள்.

“இந்த சிஆர்-க்கே law சொல்லித் தரீங்களா?” என்றாள் நக்கலாக.

விக்ராந்த் ஆழ்ந்த மூச்சை இழுத்து,
“சரி. straight to the point. இன்று ஒரு நாள். நான் கேட்கிறதை நீ கொடுத்துட்டா. இந்த case-ல இருந்து உன்னை விடுவிக்கிறேன். No records. No arrest. Clean exit,” என்றான்.

அந்த நொடியே அவள் முகத்தில் இருந்த நக்கல் சிரிப்பு மெதுவாக மறைந்தது. கண்களில் தீப்பொறி பற்றியது.

“Is that a deal?” என்று குளிர்ந்த குரலில் கேட்டாள்.
“Take it or leave it,” என்றான் அவன் திமிராக .

“ஹா. I don’t bend. And I don’t deal under pressure,” என்று சொல்லிவிட்டு அவள் திரும்பிச் செல்ல முயன்றாள்.

அந்த நொடியில் விக்ராந்த் அவளது கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தான்.

அவன் இழுத்த வேகத்தில் சித்ராங்கி அந்த மேசையில் இருந்த விக்ராத்தின் துப்பாக்கியை மின்னல் வேகத்தில் எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைத்தாள்.

“Don’t you dare touch me without பெர்மிசன்,” என்று கடும் குரலில் எச்சரித்தாள்.

“You’re an officer. Behave like one.”என்றவள்
அடுத்த கணமே, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

விக்ராந்த் மெதுவாக தனது கன்னத்தைத் தடவிக் கொண்டவனின் கண்களில் கோபம் இல்லை,மாறாக அவனது விழிகள் சித்ராங்கியின் அழகுக்கு அடிமையாகி போனது.

அவளை ரசித்தபடியே
“Interesting.” என்று சிரித்தவன்..
“Game ஜஸ்ட் started, சிஆர்.”என்றான்.

அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காதவளாய் சித்ராங்கி அவள் கையில் இருந்த துப்பாக்கியை மேசை மேல் வீசியபடி கதவைத் திறந்து வெளியே சென்று இருந்தாள்.

அவள் வெளியேறிய பின்பும், அந்த வீடு முழுவதும் அவளது ஆளுமையின் அதிர்வு நிலைத்திருந்தது.

அவள் சென்ற பாதையை பார்த்து இருந்த
விக்ராந்தின் இதழ்களில் மெல்லிய, பொருள் மிக்க புன்னகை விரிய,

"நீ சிங்க பெண்ணா இருக்கலாம், ஆனா இந்த வேங்கையின் இரை நீ தான்" என்றவன் மேசை மேல் சித்ராங்கி வைத்து சென்ற துப்பாக்கியை கைக்குட்டையில் எடுத்து பத்திர படுத்தி இருந்தான்.

- தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top