• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
166
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.
படலம் 22.1

இதே தருணம்....
டெல்லியின் குளிர் இன்னும் சட்டையின் காலரில் ஒட்டியபடியே, விமானம் மெதுவாக தரையிறங்கியது.

ரன்-வேயில் சக்கரங்கள் உரசிய சத்தம் முடிந்தவுடன் கதவு திறக்க,அந்த வழியே கம்பிரமாக நடந்துவந்தான் சிபிஐ ஆஃபீஸர் விக்ராந்த்.

ஆறு அடியைத் தாண்டிய உயரம். செம்மையாக செதுக்கப்பட்ட முகம். கண்களில் எப்போதும் எரியும் போல ஒரு கூர்மையான விழிப்பு. மிதமான தாடி, ஒழுங்காக வெட்டப்பட்ட முடி, கறுப்பு நிற ஜாக்கெட்டுக்குள் சீரான உடல் கட்டு என்று அவன் நடக்கும்போது கூட சுற்றம் அவனை கவனிக்காமல் இருக்க முடியாத அளவுக்கு ஒரு கட்டுப்படுத்தப்பட்ட கம்பீரம் இருந்தது.

அவன் பேசாமல் இருந்தாலும், “நான் கேள்வி கேட்பவன். பதில் சொல்ல வைப்பவன்.” என்று சொல்லும் பார்வை.

விமான நிலையத்தின் வெளியே வந்தவுடன், மிஸ்டர்.விக்ராந்த் என்ற பெயர் பலகையுடன் மணி என்கிற ஆள் நின்று இருக்க,அவனை பார்த்து கை அசைத்தான் விக்ராந்த்.

"Gud ஈவினிங் சார்" என்ற மணியை பார்த்து தலையசைத்த விக்ராந்த் முன்னே நடந்து செல்ல... "சார் கார் அந்த பக்கம் இருக்கு" என்ற மணி வேகமாக ஓடி சென்று காரை எடுத்து வர...நகரத்தின் சாலைகள் வழியே கார் சீறிப் பாய்ந்தது.

அவன் கண்ணோட்டம் ஜன்னல் வழியே நகரத்தை ஆராய்ந்தது.

அவன் மனதில் ஓடியது ஒரே ஒரு விஷயம்...கலா, சுனில் இரட்டைக் கொலை வழக்கு.

வழக்கின் ஒவ்வொரு குறிப்பும் , ஒவ்வொரு சாட்சியும் அவன் நினைவில் சீராக அடுக்கப்பட்டிருந்தது.

அதில் புதிதாக எழுந்த பெயர் சிஆர் @ சித்ராங்கி.

போலீஸ் குவாட்டர்ஸில் இறங்கியவன்,"உள்ள things எல்லாம் இருக்கா" என்று கேட்க...
"எல்லாம் இருக்கு சார்... நான் இதோ இப்போ உங்களுக்கு டின்னர் ரெடி பண்றேன்" என்றான் மணி.

"வேணா... நான் போன் பண்ணும் நீங்க வந்தா போதும்" என்ற விக்ராந்த் தனக்கு தரப்பட்ட வீட்டுக்குள் நுழைந்தான்.

வீட்டை நோட்டமிட்டப்படி ஒரு அறைக்குள் சென்று முகம் கழுவி கழுவ...குளிர்ந்த நீர் முகத்தில் பட்டதும், அவன் கண்களில் இருந்த சோர்வு முழுவதும் கரைந்தது.

மாற்று சட்டை அணிந்து, நேரே சமையலறை சென்று அவனுக்கு தேவையான தேநீரை தயாரித்தான்.

தேநீர் கோப்பையுடன் வந்தவன்...
மேசையின் மீது இருந்த கோப்பை(file) திறந்து ஒரு முறை பார்வையிட்டான்.

பின்னர் தன் மொபைலை எடுத்தவன்.
விசிஆர் அலுவலக எண் என்ற பெயரில் டயல் செய்தான்.

அந்த முனையில் சில விநாடிகள் ரிங்க போன பிறகு மென்மையான ஆனால் தொழில்முறை குரலில் ஈஷா
“குட் evening" என்றாள்.

அவள் வார்த்தையை கேட்டு...
“நான் சிபிஐ ஆஃபீஸர் விக்ராந்த் பேசுறேன்,” என்றான்.

"சிபிஐ ஆஃபீஸ்ரா!?" என்று அவள் மேலும் பேசும் முன்னே “கலா சுனில் இரட்டைக் கொலை வழக்கை பற்றி நான் தான் இன்வெரஸ்டிகேஷன் பண்றேன் . அந்த வழக்குல உங்க மேடம் சிஆர்... I mean சித்ராங்கி பேர் அடிப்படுது. So நான் அவங்களை meet பண்ணணும். அவங்க என்னை பார்க்க வருவாங்களா? இல்ல நான் நேர்ல வரணுமா?”என்று விக்ராந்த் கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் தராமல் அந்த முனையில் ஒரு சிறிய இடைவெளி.
“Hello... Line ல இருக்கீங்களா" என்று விக்ராந்த் கேட்க...

ஈஷா கையில் இருந்த போன் சட்டென்று சித்ராங்கி வசம் மாறி இருக்க....அடுத்த கணம்,
“This is Chitrangi speaking.”என்றாள்.
ஒரு நொடிக்கு இருவருக்கும் இடையே மௌனம்.

“Officer Vikranth, நானே உங்கள நேர்ல வந்து மீட் பண்றேன்" என்றவள். போனை கட் செய்ய...

"ம்...என்னை தேடி நீ வந்து தானே ஆகணும்" என்ற விக்ராந்த் மேசை மேல் இருக்கும் Fileலில் இருந்து சித்ராங்கி 18 வயதில் சிறை கைதியாக இருந்த படத்தை எடுத்து அதை ஆராயும் விதமாக உற்று பார்த்து இருந்தான்.

போலீஸ் குடியிருப்புக்குள் இருந்த அந்தச் வீட்டில் விக்ராந்த் மட்டும் தனியாக அமர்ந்திருக்க...அறை முழுக்க அமைதி நிலைவியது .

அவன் முன் இருந்த மரமேசையின் மேல் ஒரு புகைப்படம் முகம் மேலாக இருப்பதை பார்த்து, ஏதோ ஒரு எண்ணத்தில் மூழ்கியவன் போல, மீசையை மெதுவாகத் தடவி, அந்தப் படத்தை எடுத்தான்.

படத்தில் பதினெட்டு வயது சித்ராங்கி ஜெயில் உடையில் தெரிய...
அந்த முகத்தை பார்த்த நொடியே அவன் கண்கள் சற்றே கூர்மையடைந்தது.

ஒரு கணத்தில் பழைய ஜெயில் வாசல், இரும்புக் கதவு சத்தம், அவளை முதன்முதலாக சந்தித்த அந்த தருணம் எல்லாம் அவன் நினைவில் பளிச்சென்று ஒளிந்தது.

அவன் அசையாமல் அமர்ந்திருந்தான்.
கையில் இருந்தது என்னவோ ஒரு புகைப்படம். ஆனால் மனதில் மீண்டும் திறக்கப்பட்டிருந்தது பதினெட்டு வயது சித்ராங்கியை சந்தித்த அந்த நாள்.

மேலும் அந்த படத்தை உற்று பார்த்தவனுக்கு சித்ராங்கி தன்னை நேரில் பார்க்க வர சம்மதித்துவிட்டாள் என்ற தகவல் விக்ராந்தின் மனதில் ஒரு தீப்பொறி போல எரிந்துகொண்டே இருந்தது.

பெருமூச்சு எடுத்து தனக்கு தானே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

எதிலும் காத்திருப்பது அவனுக்கு இயல்பல்ல. விஷயங்கள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணுவதே அவன் பழக்கம்.

அந்த அவசரத்திலேயே அவன் உடனடியாக கதிரின் கைபேசி எண்ணை அழைத்தான்.

அந்த நேரத்தில் கதிர்....முல்லை படிக்கும் கல்லூரி வாசலின் அருகே நின்று கொண்டிருந்தான்.

மாலை நேர சூரியன் மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் சலசலப்புடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் அவன் கண்கள் மட்டும் முல்லை முகத்தைக் தேடிக் கொண்டிருந்தன.

அவள் தன்னிடம் வருவாளா? வராமல் போய்விட்டால்? என்ற எண்ணங்களுடன் நின்றுக் கொண்டிருந்தபோது,அவன் கைபேசி அதிர்ந்தது.

திரையில் தெரிந்த பெயரை பார்த்ததும் அவன் முகத்தில் ஒரு சிறிய பதட்டம் தோன்ற
“ஹலோ சார்.” என்று அவன் மரியாதையுடன் அழைத்தான்.

“மிஸ்டர். கதிர். நம்ம மீட் பண்ண முடியுமா?” என்ற விக்ராந்தின் குரலில் ஒரு அழுத்தம் இருந்தது.

“Why not, சார்?” என்று உடனே பதிலளித்தான் கதிர்.

அவன் மனதில் ஒரே எண்ணம் தான்.எப்படியாவது சித்ராங்கிக்கு தண்டனை கிடைக்க வேண்டும்.

அவள் தனக்கும் தன் குடும்பத்துக்கும் செய்ததற்கான விளைவை அவள் அனுபவிக்க வேண்டும்.

அதற்காக தான் மருத்துவமனையில் தனது பெரியப்பாவும் தனது அப்பாவும் இருந்தால் கூட முல்லையை வைத்து சித்ராங்கியை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்று கல்லூரி முன்னே வந்து நின்று கொண்டிருக்கிறான்.

இதற்கான முதல் கட்டமாக தான் விக்ராந்த்தே,
“நான் உங்களுக்கு என்னோட அட்ரஸ் செண்ட் பண்ணுறேன். நீங்க யாரோ ஐ witness இருக்குறதா சொன்னிங்களே. அவங்களையும் அழைச்சிட்டு வந்து என்னை மீட் பண்ணுங்க,” என்று சொல்ல...
கதிர் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை பிறந்தது.

விக்ராந்த் கதிரின் பதிலுக்கு காத்திருக்காமல் இணைப்பை துண்டிக்க...
சில நொடிகளில் விக்ராந்திடம் இருந்து முகவரி வந்தது.

அதை பார்த்த கதிரின் நெற்றியில் சுருக்கம் பிறக்க..
“ஐ witness. முல்லை தான். ஆனா நம்ம கூப்பிட்டா அவ வர மாட்டாளே.”என்று
அவன் மனதில் குழப்பம் சூழ்ந்தது.

முல்லை இப்போது கதிர் மேல் கோவமாக இருக்கும் சமயத்தில், அவள் சித்ராங்கிக்கு எதிராக சாட்சியம் அளிப்பது என்பது சாத்தியம் இல்லை என்று கதிர் அறிந்து இருந்தான்.

கல்லூரி வாசலில் நின்றபடியே அவன் தொலைவில் வருகிற ஒவ்வொரு பெண்ணையும் கவனிக்க“அவளிடம் எப்படி சொல்வது? உண்மையை சொல்லலாமா? இல்லையெனில் வேறு காரணம் கூறி விக்ராந்திடம் அழைத்துச் செல்லலாமா?” என்ற எண்ணங்கள் அவனை சுற்றிக்கொண்டன.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம் விசிஆர் aபங்களாவின் மேல்தள அறையில்
வெளியில் மரக்கிளைகள் காற்றில் அசைந்த ஒலியும், தொலைவில் குயில்கள் கூவும் மெல்லிய சத்தமும் மட்டும் கேட்க, அறைக்குள் ஒரு சுமூகமில்லாத சுமை பரவி இருந்தது.

அந்த அறையின் நடுவே உள்ள நீண்ட ஜன்னலருகில் சித்திராங்கி அமர்ந்திருந்தாள்.

கையில் மடிக்கணினி இருந்தும், அவள் கண்கள் அதன் திரையை தொட்டதே இல்லை.

எண்ணங்கள் மட்டும் நெஞ்சை நிரப்பியிருந்தன.

முகத்தில் வெளிப்படாத அமைதி இருந்தாலும், உள்ளே ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது.

அவளை கதவின் அருகில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த ஈஷாவுக்கு, இப்போது தன் மேடமின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதே புரியவில்லை...

முன்பு எப்போதும் சித்ராங்கியின் ஒரு பார்வை போதும்...அதன் அர்த்தத்தை அவள் வாசித்து விடுவாள்.

ஆனால் இன்று அந்த பார்வை. புதிதாய் இருந்தது. மர்மமாய் இருந்தது.
“மேடம்.” என்று மெதுவாக அழைத்தாள் ஈஷா.

சித்திராங்கி திரும்பிப் பார்த்தாள். அவளது கண்களில் இருந்த அந்த மங்கலான பளபளப்பு, ஈஷாவுக்கு இன்னும் குழப்பம் கொடுத்தது.

“சிபிஐ ஆபிசர் விக்ராந்தை பார்க்க நம்ம எத்தனை மணிக்கு போறோம்?” என்று அவள் கேட்டாள்.

"விக்ராந்த்......" அந்த பெயர் அறையில் ஒலித்ததும் சித்ராங்கியின் உதட்டின் ஓரத்தில் ஒரு சிறிய புன்னகை தோன்றியது.

அது சாதாரண புன்னகையல்ல. ஏதோ அறிந்தவள் போல. ஏதோ தீர்மானித்தவள் போல இருந்தது.

“இல்ல மேடம். திடீரென்று அவர் இந்த கொலை வழக்குல கரெக்டா உங்களை சம்பந்தப்படுத்தி பேசுறாரே. எனக்கு என்னமோ இதுல வேற எதாவது பிரச்சனை வருமுன்னு தோணுது.” என்று ஈஷா தன் பயத்தை வெளிப்படுத்த முயன்றாள்.

அவள் சொல்வதற்கு முன்பே சித்திராங்கியின் புன்னகை கொஞ்சம் ஆழமாயிற்று.

“பிரச்சனை?” என்று கிண்டலாக சொன்ன சித்திராங்கி. " I am the one who gives trouble to everyone.”என்றாள்.

அந்த வார்த்தைகள் ஆங்கிலத்தில் சற்றே குளிர்ச்சியாக உச்சரிக்கப்பட்டது.

அவளது குரலில் ஒரு உறுதி இருந்தது. ஆனால் பயமில்லை,தயக்கமில்லை.

அவள் மெதுவாக எழுந்து அலமாரிக்குச் சென்றவள் அங்கிருந்து கருப்பு சட்டையும் கருப்பு பேண்ட்டும் எடுத்தாள்.

அந்த நிறம் போலவே அவளது முடிவும் தெளிவாக இருந்தது..இன்று ஏதோ முடிவு செய்யப் போகிறாள் என்று அறிந்து,
“மேடம். அப்போ நம்ம எத்தனை மணிக்கு கிளம்பறோம்?” என்று மீண்டும் கேட்டாள் ஈஷா.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top