Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 164
- Thread Author
- #1
படலம் 21.2
அவன் முகத்தில் பதட்டம் தெளிவாகத் தெரிந்தது.
“ஐயா. ஐயா.” என்று மூச்சுத்திணறிக் கொண்டே கதிரின் அப்பா அருகே வந்தான்.
“என்ன?” என்று வெங்கட் கேட்க,
“இந்த ஹாஸ்பிடல் இடம் . விசிஆர் கம்பெனிக்கு தான் சொந்தம்னு FAX ல நோட்டீஸ் வந்து இருக்கு ஐயா" என்றான் பதற்றதுடனே.
“என்னடா சொல்ற?” என்று கதிர் அதிர்ச்சியடைய...
அவன் தலையில் இன்னொரு மின்னல் பட்டது போல இருந்தது.
கதிரின் குடும்பம் பல ஆண்டுகளாக நடத்தி வந்த அந்த மருத்துவமனை,அவர்களின் மரியாதை, செல்வாக்கு, அடையாளம் இவை எல்லாம் ஒரு கணத்தில் கேள்விக்குறியாக மாறின.
“விசிஆர் கம்பெனியா.?” என்ற மீனா . “அது. சிஆர் சம்பந்தப்பட்ட கம்பெனி தானே ?”
என கேட்டாள்.
அந்த பெயர் மீண்டும் கதிருக்கு கோவத்தை ஏற்படுத்த.
“கதிர் இதெல்லாம் அந்த ராங்கியோட வேலைதான்! என்று சாமுண்டி புலம்பியதும்,கதிருக்கு கட்டுப்படுத்த முடியாத அளவில் கோவம் எழுந்தது.

கதிரின் பெரியப்பாவுக்கு ஆபரேஷன் செய்ய குடும்பத்தின் முழு அனுமதியுடனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும்,
சித்ராங்கி அனுப்பிய நோட்டீஸ் எல்லோரின் மனதிலும் ஒரு கனமான கல்லைப் போல் அமர்ந்திருந்தது.
அவள் கொடுக்கும் கெடுபிடியில் இருந்து எப்படி விடுபடுவது என்று குடும்பமே குழப்பத்தில் மூழ்கியது.
அந்த அமைதியற்ற சூழ்நிலையில், கதிர் தாமதிக்காமல் குடும்ப வக்கீலை தொடர்புகொண்டான்.
“சார், அந்த ஹாஸ்பிடல் இடம் உங்க பெரியப்பா பேர்ல தான் இருக்கு. உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது,” என்று வக்கீல் நிதானமாகச் சொன்னார்.
“என் பெரியப்பா பேர்ல இடம் இருந்தா, ஏன் சித்ராங்கி நோட்டீஸ் அனுப்பணும்?” என்று கதிரின் குரலில் பதட்டம் தெரிந்தது.
“தெரியல சார். ஒருவேளை உங்களை கோர்ட்டுக்கு அலைய வைத்து பார்க்கலாம்னு கூட இருக்கலாம்,” என்று வக்கீல் சிந்தனையுடன் பதிலளித்தார்.
“அப்போ வீடு யாரு பேர்ல இருக்கு?”என்று கதிர் கேட்க...
“அது உங்க அப்பா பேர்ல இருக்கு. நீங்க கவலைப்படாதீங்க. நாளைக்கு நான் கோர்ட்டுக்கு போய் என்ன விஷயம் என்று பார்த்துட்டு சொல்லுறேன்,” என்றார் அவர்.
அந்த வார்த்தைகளுடன் கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.
அலைமோதும் சிந்தனைகளுடன் கதிர் நின்றான். “இந்த சித்ராங்கியை இப்படியே விட்டா நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டா.” என்று கோபத்தில் முணுமுணுத்தான்.
அவள் ஒருவேளை ஏதோ பெரிய குற்றத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறான்னு ? முல்லை சொன்ன அந்த சந்தேகம் அவன் மனதில் மீண்டும் எழுந்தது.
“அது யாருன்னு கண்டுபிடிச்சு, அவளை உள்ள தள்ளனும்.” என்று தீர்மானமாக எண்ணினான்.
ஆனால் உடனே மற்றொரு எண்ணம் அவனைத் தட்டியது. “முல்லை வேற நம்ம மேல கோவமா இருப்பா.”
என்று சிறிது தயக்கத்துடன் அவளுக்கு போன் செய்ய முடிவு செய்தான்.
கைபேசியை எடுத்துப் முல்லையின் எண்ணை அழைத்தான். சில நொடிகள் அமைதியாக ஓடியது.
பிறகு “இந்த நம்பர் தற்போது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது.” என்ற இயந்திர குரல் கேட்டது.
அந்த ஒரு வரி கதிரின் உள்ளத்தை உலுக்கியது. அவன் கண்கள் மெதுவாக சிவந்து கொண்டன. கோபமா? கவலையா? ஏமாற்றமா? அவனுக்கே புரியவில்லை.
அவன் குடும்பம் முழுதும் கவலையில் இருக்க...கதிரின் மனதுக்குள் புயல் வீசியது.
“ஏய், மீனா.” என்று அவன் மெதுவாக அழைத்தவன்,
சித்ராங்கி கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கை விசாரிக்கப் போகும் அதிகாரி யார் என்பதை கேட்டு தெரிந்துக்கொண்டான்.
அந்த தகவல் அவன் மனதில் ஒரு தீப்பொறியைப் போலப் பட்டது.
அவன் உடனே கைபேசியை எடுத்தவன். மீனா கொடுத்த எண்ணை டயல் செய்தவுடன், சில வினாடிகள் ring போக,பின்னர் மறுமுனையில் இருந்து ஒரு ஆழமான, "ஹலோ?" என்ற குரல் கேட்டது.
“Hello. Can I speak to மிஸ்டர். விக்ராந்த், please?” என்று கதிர் கேட்க..
“எஸ், it’s me,Who are you,?” என்ற கேள்வி திடமாக வந்தது.
“சார். Last week... " என்று கதிர் சொல்லும் முன்னே.
"நீங்க யாருன்னு கேட்டேன்" என்ற கேள்வியில்...
"சார்... நான் யாருன்னு சொல்லுறேன்... ஆனா நீங்க இன்வெரஸ்டிகேஷன் பண்ற கேஸ்ல இறந்ததா சொல்லப்படுற கலா, சுனில் இவங்க ரெண்டு பேரையும் கொலை பண்ணது யாருன்னு எனக்கு தெரியும், சார்,” என்ற கதிரின் குரலில் உறுதி தெரிந்தது.
அந்த வார்த்தைகளில் ஒரு தைரியம் இருந்தாலும், அதற்கு அடியில் ஒரு பயமும் பதட்டமும் மறைந்திருந்தது.
மறுமுனையில் சில நொடிகள் அமைதி. பிறகு விக்ராந்தின் குரல் சற்றுக் கடினமாயிற்று.
“What do you mean?எவன் அந்த culprit?”என்று கேட்டான்.
கதிர் ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்தான்.
“இந்தக் கொலையை பண்ணது ஆம்பள இல்ல சார். அவ ஒரு பொம்பள. அவ பேரு சித்ராங்கி.”என்றான்.
அந்த பெயர் உச்சரிக்கப்பட்ட அந்த நொடியே, கதிரின் உள்ளத்தில் இருந்த கோபம் வெளிப்பட்டது. சித்ராங்கி மீது அவன் வைத்திருந்த வெறுப்பு எல்லை கடந்தது.
“What do you mean?சித்ராங்கியா" என்று விக்ராந்த் கேட்க...
"ஆமா சார்... அவளை சிஆர் ன்னு அழைப்பாங்க. விசிஆர் கம்பெனியோட ப்ரொபரைடேர்" என்றான்.
"ம்...உங்ககிட்ட evidence இருக்கா?” என்று விக்ராந்த் கூர்மையாய் கேட்டான்.
“Evidence இல்ல சார். ஆனா ஐ witness இருக்கு,” என்று கதிர் பதிலளித்தான்.
அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தன் நம்பிக்கையை வலுப்படுத்தும் முயற்சியாக இருந்தது.
"ஹாங்... உங்க name and நீங்க எந்த ஊர்?" என்று விக்ராந்த் கேட்க.
கதிர் தன்னை பற்றிய விவரத்தை சொன்னான்.
“Cool. நான் நாளைக்கு ஈவினிங் flightல உங்க ஊருக்கு தான் வரேன். and உங்க அட்ரஸ் and details எல்லாம் என் mobileக்கு send பண்ணுங்க. நம்ம நேர்ல meet பண்ணி பேசலாம். நீங்க என்னை மீட் பண்ண வேண்டிய address ஐ நான் send பண்றேன்" என்று விக்ராந்த் தன் வழக்கமான அதிகாரத் தொனியில் சொன்னான்.
" Sure சார்... நம்ம மீட் பண்ணலாம்" என்று கதிர் சொல்ல...
"You Don't worry. உங்க name வெளிய வராம நான் பார்த்துக்குறேன்" என்றான் விக்ராந்த்.
'ஹாங் இல்ல சார்... என் பேர் வரணும். இந்த கொலையை பண்ண அந்த ராங்கியை போலீஸ்ல மாட்டிவிட்டு அவள கம்பி என்ன வச்சதே இந்த கதிர் தான்னு அவளுக்கு தெரியணும் சார்" என்ற
கதிர் இணைப்பை துண்த்தவன் கண்களில் ஒரு விசித்திரமான பழி உணர்வு தெரிந்தது.
இது சாதாரண தகவல் கொடுப்பதல்ல. இது பழி தீர்க்கும் பாதையின் முதல் படி என்று அவன் எண்ணினான்.
சித்ராங்கி மீது அவன் மனதில் கசந்திருந்த குரோதம் இப்போது வடிவம் பெற்றிருந்தது.

இரவெல்லாம் சரியாகத் தூங்காத நிலையில் காலையிலேயே எழுந்த முல்லையின் மனதில் சிறு அமைதியும் இல்லை.
முகத்தை கழுவி கண்ணாடி முன் நின்றபோது கூட, அவளின் கண்களில் கலக்கம் மட்டுமே தெரிந்தது.
இருந்தாலும் எதுவும் ஆகாதது போலத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு, காலை கடன்களை முடித்தப்பின் உணவு கூட அருந்தாமல் புத்தகப்பையை தோளில் போட்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள்.
அவளே சில நாட்களில் சரியாகி விடுவாள் என்று மாறனும் கந்தனும் அவளை எந்த தொல்லையும் செய்யாமல் இருந்தார்கள்.
இவள் பயணித்த கார் கல்லூரி வாசலில் நின்றவுடன் அவள் கால்கள் ஒரு நொடி நின்றுபோனது.
ஏன் எனில் அங்கே, வாசல் அருகே சுவரில் சாய்ந்து கொண்டு காத்திருந்தான் கதிர்.
அவனைப் பார்த்தவுடன் முல்லையின் முகம் கடினமாயிற்று. அவள் கண்களில் ஒரு திடீர் கோபம் மின்னியது.
அவனைப் பார்த்ததே இல்லாதது போல,காரில் இருந்து இறங்கி நேராக உள்ளே செல்ல முயன்றாள்.
“முல்ல. முல்ல, நான் சொல்லுறத கேளு. உன்கிட்ட நான் பேசணும். கொஞ்சம் நில்லு.” என்று கதிர் கெஞ்சும் குரலில் அழைத்தான்.
ஆனால் அவள் ஒரு நொடியும் திரும்பிப் பார்க்கவில்லை.
அவளின் அடிகள் வேகமாயின. அவன் குரல் பின்னால் மங்கிப் போனது.
மதிய நேரம் வகுப்புகள் முடிந்து மாணவர்கள் குழுக்களாக வெளியே வந்துக் கொண்டிருந்தனர்.
சாப்பிட மனமில்லாமல் முல்லை கவலையாக அங்குள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.
அப்போது திடீரென்று முல்லையின் முன் வந்து நின்றான் கதிர்.
அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்து
“ஏன் இங்க வந்திங்க?” என்றவள் குரல் அடக்கமின்றி உயர்ந்தது.
“நான் சொல்லுறத கேளு, முல்ல.” என்றவன் குரலில் இப்போது சற்றே பதட்டம் தெரிந்தது.
“உங்ககூட பேச எனக்கு எதுவும் இல்ல.” என்று அவள் கடுமையாகச் சொன்னாள்.
அவன் பேசத் தொடங்கினாலும், அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அந்த நேரத்தில் கதிரின் முகம் மாறியது.
“இங்க பாரு,” என்று அவன் சற்றே தணிந்த குரலில் தொடங்கி, பின் திடீரென உறுதியுடன், “இன்னைக்கு சாயங்காலம் வரைக்கும் தான் உனக்கு டைம். நான் ஈவினிங் வருவேன். நீ என்னோட பேசணும். இல்லேன்னா" என்று நிறுத்தியவன்.. "என்னை நானே என்ன வேணா பணிப்பேன்.”என்றான்.
அவன் வார்த்தைகளில் இருந்த மிரட்டல் முல்லையின் இதயத்தை ஒரு நொடி தடுக்கச் செய்தது.
ஆனால் அவள் வெளியில் அதை காட்டவில்லை. அமைதியாக அவனை நேராக பார்த்தாள்.
“அது உங்க முடிவு,” என்றவள்...“அதுக்கு நான் பொறுப்பில்ல.”என்று சொல்லிவிட்டு அவள் திரும்பி நடந்துச் சென்றாள்.
கதிர் அங்கேயே நின்றவன்,அவள் மறைந்து போகும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.