Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 164
- Thread Author
- #1
தீமையே
வெ (கொ)ல்லும்.
படலம் - 21
கதிரின் குடும்பப் பெயரில் செழித்து நிற்கும் அந்தப் பெரிய மருத்துவமனை, இன்று மட்டும் ஏதோ அந்நியமாகத் தோன்றியது.
வழக்கமாக இருக்கும் வெண்மையான சுவர்கள் கூட இன்று ஒரு பயத்தை ஒளித்து வைத்திருந்தது போல இருந்தது.
நெஞ்சு வலியால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கதிரின் பெரியப்பாவை நினைத்து , குடும்பம் முழுவதும் பதட்டமாகக் காத்திருந்தது.
மருத்துவமனையின் நீண்ட வராண்டாவில் நின்றபடி, ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டே பதில்களைத் தேடிக் கொண்டிருந்தனர்.
“நான் அப்போவே நினைச்சேன் மீனா. அந்தப் பொண்ணு பார்க்க அப்படியே வினிதா அக்கா மாதிரி தான் இருந்தா” என்று மீனாவின் அம்மா சொன்னவுடன், அந்த வார்த்தைகள் காற்றில் பிளந்த சத்தமாக மாறின.
“ஏய். யாரு உனக்கு அக்கா?” என்று கதிரின் அப்பா தன் தங்கை வள்ளியிடம் சினந்த குரலில் கத்தினார்.
வள்ளி உடனே எதிர்த்து. “என்கிட்ட ஏன் கத்துற? நான் இப்போ என்ன தப்பா சொல்லிட்டேன்?”என்று கேட்க,
அந்த வாக்குவாதம் இன்னும் தீவிரமடையும் முன், கதிர் நடுவே வந்தான்.
அவன் கண்களில் குழப்பமும் கோபமும் கலந்து இருந்தது.
“அப்பா. யார் அந்தப் பொண்ணு? அவ பேசுனத கேட்டு ஏன் பெரியப்பாவுக்கு நெஞ்சு வலி வரணும்?”என்று
அவன் கேள்வி ஒரு அம்பு போல அனைவரின் மனதையும் குத்தியது.
பதில் சொல்லத் தயங்கிய தந்தை, தாய், பெரியம்மா என்று அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
அந்த மௌனம், சொல்லப்படாத ஒரு உண்மையை எங்கே உடைத்து விட போகிறது என்று அஞ்சிய நிலையில்,
“ஐயோ. என் புருஷன்.” என்று சாமுண்டி கண்ணீரோடு கதறினார்.
அப்போது வெங்கட் ஏதும் புரியாத மனநிலையில்,
“டேய் கதிர். இங்க என்னடா நடக்குது? அப்போ அந்தப் பொண்ணு தான் நம்ம விநாயகம் மாமா புலம்புற சித்ராவா?”என்று கேட்டான்.
சித்ரா என்ற பெயர் அது கதிரின் மனதில் புதைந்து கிடந்த சிறுவயது நினைவுகளை எழுப்பியது.
சித்ராங்கியை அவன் முதல் முறை பார்த்த போது குடும்ப சண்டைகள் சச்சரவுகள் என்று இந்த குடும்பம் சந்தித்த சில மேலோட்டமான பிரச்சனை எல்லாம் அவன் நினைவில் தோன்றியது.
ஆனால் உண்மையின் முழுப் படத்தை இப்போது கதிர் மீனா வெங்கட் என்று மூவரும் அறியவில்லை.
விநாயகம்,வனிதா,சித்ராங்கி மீது எவ்வளவு பெரிய துரோகம் நடந்திருக்கிறது என்பது இன்னும் இவர்களுக்கு எல்லாம் தெரியாத ரகசியமாகவே இருந்தது.
உண்மை தெரியாத கதிருக்கு சித்ராங்கி மீது அதிகமான கோவம் இருந்த நிலையில்,“அவ எவளா வேணாலும் இருக்கட்டும்,” என்று கதிர் பற்களை கடித்தவன்,
"இன்னைக்கு நம்ம பெரியப்பாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமைக்கு அவள்தான் காரணம்.”என்றான்.
அவன் குரலில் இருந்த கோபம், அவன் உள்ளத்தில் கொழுந்து விட்ட நெருப்பை வெளிப்படுத்தியது.

மாலை நேரத்தின் மெதுவான சாயலில் விசிஆர் பங்களாவின் முன்றில் ஒரு அமைதியான உஷ்ணம் பரவியிருந்தது.
சூரியன் மறையும் நேரம் வெளியில் மஞ்சள் செம்மஞ்சள் கலந்த ஒளி பரவி, உள்ளே தேநீரின் வாசனை நெஞ்சை நனைத்துக் கொண்டிருந்தது.
கந்தன் மாறன் ஈஷா என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், மாடிப்படியில் காலடி சத்தம் கேட்டது.
சித்ராங்கி.
அவள் படிகளில் இறங்கி வந்தாள்.
முகத்தில் சோர்வு இருந்தாலும், அதன் கீழே ஒளிந்து கிடந்த ஒரு சிறிய நிம்மதி தெளிவாக தெரிந்தது.
அந்த நிம்மதி, நீண்ட வருடங்களுக்குப் பிறகு மனதில் கிடைத்த ஓர் அமைதியின் சுவாசம் போல இருந்தது.
சித்ராங்கி வந்து இருக்கையில் அமர,“மேடம். டீ.” என்று ஈஷா மரியாதையுடன் கேட்டாள்.
“ம்.” என்று மெதுவாகத் தலை அசைத்த சித்ராங்கி, தனக்கான லெமன் டீயை அவளே தயாரித்து கொண்டு மேசையின் முன் அமர்ந்தாள்.
கந்தனும் மாறனும் அவளை அன்பும் வியப்பும் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அப்பா எப்போ வராரு?” என்று கந்தன் ஆவலுடன் கேட்டான்.
“இன்னும் மூணு நாலு நாள்ல வருவாரு,” என்று ஈஷா பதிலளித்தாள்.
சிறிது தயக்கத்துடன் கந்தன் சித்ராங்கியை நோக்கி, “அப்பா வந்த பிறகும் கூட. நான் உங்களை மீட் பண்ண இங்க வரலாமா?” என்று கேட்டான்.
அந்த கேள்வியில் குழந்தைத்தனமான நேர்மை இருந்தது.
“நீ ஏன் மேடமையை மீட் பண்ணணும்?” என்று ஈஷா சிரித்தபடி கேட்டாள்.
“ஏன்னா. எனக்கு இவங்களை ரொம்ப பிடிக்கும். இவங்க தான் என்னோட ரோல் மாடல்,” என்று கந்தன் நெஞ்சாரச் சொன்னான்.
அந்த வார்த்தைகள் சித்ராங்கியின் உள்ளத்தை ஆழமாகத் தொட்டன. அவள் மெதுவாக சிரித்தாள். அந்த சிரிப்பில் சின்ன பாசமும் கலந்து இருந்தது.
அந்த நேரத்தில் அவளது கைப்பேசி ஒலிக்க. ஒரு கணத்தில் அவளது முகபாவனை மாறியது. போனை ON செய்தவள்,
“யெஸ். ஓகே. உடனே அதுக்கான வேலையை பாருங்க. நான் நாளை மறுநாள் உங்களை நேர்ல மீட் பண்றேன்,” என்று தெளிவாகச் சொல்லி போனை நிறுத்தினாள்.
சிறிது யோசித்தபின் ஈஷாவை நோக்கி,
“கம்மிங் ட்யூஸ்டே நான் டெல்லி போகணும். அதுக்கான எல்லா ஏற்பாடும் பண்ணிடு,” என்றாள்.
“மேடம். நீங்க மட்டும் தானா? அப்போ நானும்.?” என்று ஈஷா தயக்கத்துடன் கேட்டாள்.
“நீ இங்க இருந்து இவங்கள பார்த்துக்கோ,” என்று சித்ராங்கி அழுத்தமாக சொல்ல, ஈஷா அமைதியாகத் தலையசைத்தாள்.
அந்த நேரத்தில் சித்ராங்கி மாறனை நோக்கி,
“உன் சிஸ்டர் சாப்பிட்டாங்களா?” என்று கேட்டாள்.
மாறன் முகம் சற்றுக் கவலையுடன்,
“இல்ல. காலையில இருந்து பாப்பா ஒன்னுமே சாப்பிடல,” என்றான்.
சித்ராங்கி ஒரு கணம் அமைதியாக இருந்தவள்.பிறகு சிறு கசப்பான சிரிப்புடன்,
“இப்போ எல்லாம் இந்த மாதிரி தருக்குறீங்களுக்கு தான் உன் சிஸ்டர் மாதிரி பொண்ணுங்க காத்து இருக்காங்க போல.” என்று கேலியாக சொன்னாள்.
அந்த வார்த்தைகளில் வாழ்க்கை கற்றுக் கொடுத்த கசப்பான உண்மை ஒளிந்திருக்க...அவள் டீ கப்பை கழுவி வைத்துவிட்டு மீண்டும் மாடிக்குச் சென்றாள்.
சித்திராங்கி சென்றதும் ஈஷா தன் மடிக்கணினியுடன் அவள் அறைக்குச் சென்று வேலையில் மூழ்க...மாறனும் கந்தனும் முல்லையின் அறைக்கு சென்று அவளை சமாதானம் செய்யும் வேலையில் முழுகி போனார்கள்.

அந்த இரவு, மருத்துவமனையில்
அவசர சிகிச்சைப் பிரிவு கதவு மெதுவாகத் திறந்தது.
அந்த ஒலி மட்டும் கூட அங்கே காத்திருந்தவர்களின் இதயத் துடிப்பை நிறுத்தியதுபோல் இருந்தது.
வெள்ளை கோட் அணிந்த மருத்துவர் வெளியில் வந்தார். முகத்தில் இருந்த அமைதி, செய்தியின் தீவிரத்தை மறைக்கவில்லை.
"சார்...அவருக்கு" என்று மருத்துவர் தயங்க....கதிர் உடனே முன்னேறியவன் “என்னாச்சு டாக்டர்.”என்று பதறினான்.
மருத்துவர் சற்று நிதானமாக பேசத் தொடங்கியவர்...
“அவருக்கு கடுமையான நெஞ்சு வலி. இதயத்தில் ஒரு முக்கியமான தடுப்பு இருக்கிறது. உடனடி ஆபரேஷன் செய்யணும். டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது. உடனே ஒப்புதல் கையெழுத்து வேணும்.”என்றார்.
'ஆபரேஷன்' என்ற அந்த ஒரு சொல் கதிரின் குடும்பத்தையே பதற வைத்தது.
“டாக்டர். ரிஸ்க் ஏதாவது.” என்று சாமுண்டி நடுங்கிய குரலில் தன் கணவனின் நிலையை கேட்டாள்.
“எந்த ஆபரேஷனும் ரிஸ்க் இல்லாம இருக்காது!. ஆனா இப்போ செய்யாம இருந்தா ரிஸ்க் அதிகம்,” என்று மருத்துவர் தெளிவாகச் சொல்லிவிட்டு அவசரமாக உள்ளே திரும்பினார்.
அந்த நொடி கதிரின் அப்பாவின் மொபைல் சத்தமாக ஒலித்து. அங்கே இருந்த அனைவரின் கவனமும் அவ்வழியே திரும்பியது.
அவர் கைபேசியை எடுத்து,
“ஹலோ. சொல்லு.”
என்றார்.
அவர் முகத்தில் இருந்த வண்ணம் மெதுவாக மாறத் தொடங்கியது. கண்கள் விரிந்தன. மூச்சு சீர்குலைந்தது.
“என்ன சொல்ற. யாரு?. எப்படி.?” என்று கேட்டார்.
மறுமுனையில் கேட்ட வார்த்தைகள் அவரை உள்ளுக்குள் உலுக்கியது. நெற்றியில் வியர்வைத் துளிகள் பொங்கின. கையில் இருந்த போன் கீழே வழுந்தது.
“என்னாச்சுங்க !”என்று அவர் மனைவி கேட்கும் முன்பே, கதிரின் அப்பா திடீரென தடுமாறி கீழே மயங்கி விழுந்தார்.
“அப்பா!” என்று கதிர் ஓடிவந்து அவரைத் தூக்கிக்கொண்டான்.
வெங்கட் உடனே தண்ணீர் கொண்டு வந்தான்.
மீனா நர்ஸை அழைக்க ஓடினாள். சில நொடிகளில் மருத்துவர் மீண்டும் வந்து ரத்த அழுத்தத்தைச் சோதித்தார்.
“ப்ளட் பிரஷர் ரொம்ப அதிகமா இருக்கு. டென்ஷன் ஆகாம பார்த்துக்கோங்க” என்று கூறி மருந்து போட்டார்.
சில நிமிடங்கள் கழித்து, கதிரின் அப்பா மெதுவாகக் கண் திறந்தார்.
“அப்பா. என்னாச்சு? யார் போன்ல ?” என்று கதிர் பதட்டமாகக் கேட்டான்.
அவர் மேலும் மூச்சைச் சரிசெய்துக் கொண்டே,
“நம்ம. நம்ம வீட்டுல யாரோ நாலு பேர் புகுந்து. விநாயகம் மச்சானை. கடத்திட்டு போயிட்டாங்களாம்.”என்றார்.
அந்த செய்தி மின்னல் போல அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.
சாமுண்டியின் முகம் கருமையாகி,கண்களில் பயமும் கோபமும் கலந்து எரிந்தது.
“இதெல்லாம் அந்த சித்ராங்கியோட வேலையா தான் இருக்கும்!” என்று அவள் பற்களை கடித்தாள்.
“நம்மள பழி வாங்குறதுக்காகத்தான் இதெல்லாம் பண்ணறா!”என்று கதிரின் அம்மா அச்சதுடனே சொன்னார்.
ஒரு பக்கம் அறுவை சிகிச்சைக்காக உள்ளே கொண்டு செல்லப்பட்ட பெரியப்பா. இன்னொரு பக்கம் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விநாயகம். அதற்குள் மயங்கி விழுந்த தனது அப்பா என்று கதிருக்கு அடி மேல் அடி விழுந்தது.
அந்த பரபரப்பின் நடுவே, சுவரைத் தாங்கிக் கொண்டு நின்ற கதிரின் பாட்டி "ஐயோ... அப்போ என் மகன்" என்று கதறினாள்.
“டேய். என்னடா நடக்குது இங்க? என் பெரிய புள்ள எங்க? எனக்கு என்னமோ பயமா இருக்கு. என் மனசு பதறுது டா.” என்று வயதின் நடுக்கத்தோடு தேவி பாட்டி அழுதாள்.
அவளின் குரல் அந்த இடத்தையே உருக்கியது.
அப்போது வள்ளி, இதுவரை உள்ளுக்குள் கொதித்துக் கொண்டிருந்ததை வெளிப்படுத்தும் விதமாக,
“அழுங்க. நல்லா அழுங்க! அந்த குடும்பத்துக்கு பண்ண பாவம் தான் நீங்க இப்படி கஷ்டப்படுறீங்க! எல்லாம் உங்க விதி.!”என்றாள்.
அவள் வார்த்தைகள் குத்திய கத்தியாய் இருந்தது.
“வள்ளி! என்ன பேசுற?” என்று சாமுண்டி சினந்தாள்.
“நான் பொய் சொல்லல. நீங்க மூடி வைச்ச உண்மை எல்லாம் இப்போ வெடிக்குது" என்று வள்ளி கண்களில் தீப்பொறி மின்னச் சொன்னாள்.
“போதும் அத்த!” என்ற கதிர், “இப்போ நமக்குள்ள சண்டை வேண்டாம்" என்றான்.
அந்த நேரத்தில், மருத்துவமனை நிர்வாக அலுவலகம் பக்கம் இருந்து ஒருவன் அவசரமாக ஓடி வந்தான்.