• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
162
படலம் - 2௦. 2

கதிர் ஒரு கனம் அவளைப் உற்று பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு மெதுவாக, “சரி. நீ புதுசா யாரையும் தேட வேண்டாம்.”என்று சொல்ல, முல்லை புரியாமல் அவனை பார்த்தாள்.

"என்ன பாக்குற? நானே உன்னோட ஆடுறேன்,” என்று கதிர் சொல்ல,
அதை கேட்டவுடன் முல்லையின் முகத்தில் ஒரு ஒளி பரவியது.

"ஐ... அப்போ ஜாலி" என்று முல்லை துள்ளி குதிக்க,மருத்துவமனையின் வாசலை கடந்து வெளியே இவர்கள் வந்தபோது மதிய நேர அனல் காற்றும் கூட முல்லைக்கு குளிர்ந்து தான் இருந்தது.

முல்லை இன்னும் நெற்றியில் band aid உடனே இருந்தாலும், அவள் முகத்தில் இருந்த சோர்வு மெதுவாக மறைந்து, வழக்கமான குறும்பு திரும்பி வந்திருந்தது.

முல்லை காரில் ஏறி கதிரின் அருகே அமர்ந்துக் கொள்ள,. மீனா, வெங்கட் இருவரும் பின்னால் அமர,கதிர் காரை ஸ்டார்ட் செய்தான்.

சில நிமிடங்கள் அமைதியாகப் பயணம் நடந்தது. திடீரென்று முல்லை முன்னால் பார்த்துக்கொண்டே,
“கதிர். ஒரு dress shop போகலாமா?”என்று கேட்க,
கதிர் அவளை பார்த்து
“இப்போவா?”என்றான்

அதற்கு முன்னாலேயே வெங்கட்,
“எதுக்கு?”அங்கெல்லாம் என்று கேட்க,
“கதிர்க்கு dress வேணும்,” என்று முல்லை தயக்கமாக சொன்னாள்.

வெங்கட் உடனே சிரித்தவன்,
“இப்போ என்ன. அவன் அவுத்து போட்டு இருக்கானா?”என்று கேட்க,
அடுத்த நொடி முல்லை கோபமாக திரும்பி,
“அங்கிள்.நீங்க ஷுட் அப் பண்ணுங்க!”என்றாள்

முல்லையின் கோவத்தில் வெங்கட் சட்டென்று வாயை மூடிக்கொள்ள, மீனாவோ வெங்கட்டை பார்த்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

முல்லை சொன்னதை கேட்டு,கதிர் பெரு மூச்சை எடுத்தவன்,ஒரு
துணிக்கடை முன் காரை நிறுத்தினான்.

கடையை பார்த்ததும்,முல்லை உற்சாகமாக இறங்கி உள்ளே செல்ல...கதிர் அவளைப் பின்தொடர்ந்தவனை தொடர்ந்து மீனா, வெங்கட் இருவரும் மெதுவாக பின்னே வந்தனர்.

அங்கிருந்த பல நிறங்களான சட்டைகள், டி-ஷர்ட்கள் எல்லாம் முல்லையின் கவனத்தை கவர,அவள் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தவள்,
“உங்களுக்கு இது நல்லா இருக்கும்.”
“இல்ல. இது இன்னும் நல்லா இருக்கும்.”என்று கதிரை ரசித்து ரசித்து அணைத்து துணிகளையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

அவள் எடுத்த ஒவ்வொரு சட்டையையும் கதிரின் மேல் வைத்துப் பார்த்தவள். சில சமயம் அவன் தோளில் வைத்துப் பார்க்க,அங்குள்ள அனைவருமே இவர்களை தான் பார்த்து இருந்தார்கள்.

“இது போட்டா சூப்பரா இருக்கும் கதிர்" என்று அவள் சொல்ல,
கதிர் சிரித்துக்கொண்டே
“நான் டான்ஸ் ஆட போறேனா இல்ல fashion show பண்ண போறேனா?”என்று கேட்டான்.

அவன் கேள்வியில் முல்லை உதட்டை சுளித்தவள்,"ரெண்டும்.”என்றாள்.

மீனா இவர்களை தொலைவில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தவள் முல்லையின் ஒவ்வொரு அசைவிலும் கதிர் மீது அவள் கொண்ட பிரியத்தை கண்டுகொண்டாள்.

இறுதியாக முல்லை தேர்வு செய்த ஆடையை கதிர் அணிந்து வந்தவன், "இது ok வா என்று கேட்க"... முல்லை கதிரின் சட்டை காலரை சரி செய்தவள்,"ம்... ஹீரோ மாதிரி இருக்கீங்க" என்று கண்கள் மிளிர அவனை ரசித்து பாராட்டினாள்.

அவளின் விழிகள் இவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருந்ததை அவனும் உணர்ந்தான்.

நிறைய ஆடைகளை கலைத்து போட்ட பின்பு, ஒரு வெள்ளை மினு மினுப்பு சட்டையை முல்லை எடுத்துகொடுக்க,
“இதுவா?” என்று கதிர் கேட்டான்.

“ஆமா.இது உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கும்,” என்று முல்லை சொல்ல...

அந்த நேரத்தில் கதிர் அவள் முகத்தில் இருந்த அந்த earnest பார்வையை பார்த்து,“சரி” என்று சொல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

ஒரு வழியாக ஆடையை வாங்கி முடித்தவர்கள் நேராக கல்லூரிக்கு செல்ல,
அங்கிருந்த ஹாலில் ஏற்கனவே சிலர் கூடியிருக்க, அங்கே டான்ஸ் practice நடந்து கொண்டிருந்தது.

“ஆமா...என்ன பாட்டுக்கு நீ ஆடுற?” என்று கதிர் கேட்க,
முல்லை உடனே ஓடி சென்று அங்கிருந்த சவுண்ட் சிஸ்டத்தை On செய்ய, அதில் ஒரு பாடல் ஒலித்தது.

கதிர் இரண்டு நிமிடம் அந்த பாடலை கேட்டவன்.
“இல்ல இல்ல. இது சரியா இருக்காது. நம்ம வேற பாடலுக்கு ஆடலாம்,” என்றான்.

“ஏன்?” என்று முல்லை கேட்க,
“இதுல Step set ஆகாது,” என்றான்.

அந்த நேரத்தில் மீனா, "டேய்...நேரம் கொஞ்சமா தான் இருக்கு. அதனால நீங்க
பேசாம ‘வெண்ணிலவே பாட்டுக்கு ஆடுங்க!”என்று சொல்ல,
“வெண்ணிலவேவா?”என்று முல்லை விழித்தாள்.

"ஆமாடா கதிர், முல்லைக்கும் அதுல தான் ரொம்ப ஸ்டெப்ஸ் இருக்காது" என்று வெங்கட் சொல்ல..."பட் அதுல... " என்று கதிர் வார்த்தையை முடிக்கும் முன்னே,

"முல்ல அவளோட முகபாவனையிலயே அந்த பாட்டை வேற லெவெலுக்கு க்கொண்டு போயிடுவா!!" என்றாள் மீனா.

முதல் சில நொடிகள் இருவருக்கும் சற்று தயக்கம் இருக்க...பிறகு கதிர் மெதுவாக கையை நீட்டி, "சரி... ஆரம்பிக்கலாம்" என்றான்.

முல்லை தயக்கத்துடன் அவன் கையை பிடிக்க,அங்கே பாடல் மெதுவாக ஒலித்தது.

கதிர் முதல் சில ஸ்டெப்ஸ் சிம்பிளாக ஆரம்பித்தவன், பிறகு மெதுவாக ரிதமில் கலந்து,கதிர் அவளை அழகாக ஆட வைத்தான்.

இதெல்லாம் கனவா நினைவா என்று முல்லைக்கு உளுக்குள் எண்ணம் தோன்ற,
அவன் கையை பிடித்து,
அவன் கண்களை பார்த்து,
அவன் அருகில் நின்று, அந்த பாடலுக்கு தேவையான நடனத்தை சில மணி நேரத்திற்குள் பயின்றும் இருந்தாள்.

மாலை நேரத்தில் அங்கு வந்துருந்த பல கல்லுரி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட நிகழ்வில், கதிரும் முல்லையும் ஆடிய நடனதுக்கு முதல் பரிசும் அவர்களுக்கு கிடைக்க,
முல்லையின் உள்ளம் முழுதும் மகிழ்ச்சி மட்டுமே நிறைந்து இருந்தது.

இவர்கள் ஆடிய நடனத்துக்கு முதல் பரிசு கிடைத்த பிறகும், அங்கே ஹாலில் கைத்தட்டல் ஒலி ஒலித்துக் கொண்டே இருந்தது.

முல்லை அந்த மகிழ்வில் தன் மூச்சை சீராக்கிக் கொண்டு நின்றவள் நெற்றியில் சிறு காயம் இருந்தாலும், முகத்தில் ஒரு வெற்றியின் ஒளி தெரிந்தது.

அவள் மகிழ்ச்சியை பார்த்த கதிருக்கும் உள்ளுக்குள் சந்தோஷம் இருக்க தான் செய்தது.

ஒரு வழியாக பரிசை பெற்றுக்கொண்டு இருவரும் ஆளுக்கொரு புகைப்படத்துடன் மேடையில் இருந்து இவர்கள் கீழே இறங்க,

அந்த புகைப்படம்.
பின்னாளில் இவர்களை துரத்தப் போகும் நினைவாக மாறும் என்று
அப்போது அவனுக்கே தெரியாது.

"ஆமா...நீ வீட்டுக்கு எப்படி போவ? நான் உன்ன வீட்ல ட்ரோப் பண்ணவா?”
என்று கேட்டான் கதிர்.

“மறந்துட்டீங்களா...நான் தான் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்னு சொன்னேனே”
என்று முல்லை சொல்ல...
“ஹாஸ்டலா?” என்ற கதிருக்கு முல்லை முன்பு சொன்னதே நினைவில் இல்லாமல் தான் போனது.

“ஆமா. அப்பா மலேசியால வேலை செய்றாங்க. நான் இங்க ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறேன்,” என்று மீண்டும் முல்லை சொல்ல,அந்த வார்த்தைகளில் ஒரு தனிமை ஒளிந்திருக்க தான் செய்தது.

“ஓ. சரி,” என்ற கதிர்
“அப்போ நீ பார்த்து ஹாஸ்டலுக்கு போ. நாங்க கிளம்புறோம்.”என்று சொல்ல..
மீனா, வெங்கட் இருவரும் அவளிடம் புன்னகையுடன் தலை அசைத்தனர்.

"சரி...நாங்க கிளம்புறோம்" என்ற மீனா வெங்கட் கதிருடன் காரை நோக்கி நடக்க....கதிர் வேகமாக முல்லையை நோக்கி திரும்பி வந்தான்.

தன்னிடம் மீண்டும் பேச வருகிறான் என்று முல்லை கண்கள் மிளிர காத்து இருக்க,“எதுக்கும். வலி இருந்தா pain killer மாத்திரை போடு. உன் கிட்ட மாத்திரை இருக்கா? இல்ல நான் வாங்கி தரவா?” என்று கதிர் கேட்க,
முல்லையின் முகத்தில் அழகாய் ஒரு சிரிப்பு மலர்ந்தது.

“இல்ல. என்கிட்ட ஹாஸ்டல் ரூம்ல டேப்லெட் இருக்கு.”என்று முல்லை சொல்ல...
“சரி. பார்த்து ரூமுக்கு போ,” என்றான் கதிர்.

அவன் வார்த்தையை கேட்டு, "ம்..." என்று தலைசைத்த முல்லை
“மறுபடியும் எப்போ பார்க்கலாம்?” என்று கேட்டாள்.

அவள் கேள்விக்கு பதில் தராமல் கதிர் அவளை பார்த்து இருக்க... "விட்டா இவங்க நாளைக்கு வர பேசிகிட்டு இருப்பாங்க. வா நம்ம கதிரை அழைச்சிட்டு சீக்கிரமா இங்க இருந்து கிளம்பலாம்" என்ற வெங்கட் மீண்டும் முல்லையிடம் சென்றான்.

"சொல்லுங்க கதிர், மறுபடியும் நம்ம எப்ப பார்க்கலாம்' என்று முல்லை கேட்க,
“நீ எதுக்காக கதிரை பாக்கணும்?” என்று உடனே வெங்கட் கேட்டான்.

முல்லை சற்றுக் கோபமாக அவனை பார்த்தவள்.
“அங்கிள். நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.”
என்று சொல்ல...
அந்த வார்த்தையை கேட்ட கதிர் தன்னை மீறி சிரித்துவிட்டான்.

அவன் சிரிப்பை பார்த்த முல்லை,
“நீங்க சிரிச்சா. ரொம்ப அழகா இருக்கீங்க,” என்றாள் அவள் நேராக.

“எம்மா. எம்மா. போதும்!” என்று மீனா சிரித்தவள்.
“நீ என்ன என் மாமாவை என் எதிரிலேயே ரசிக்கிறே?”என்று கேட்டாள்.

“என் மாமாவா?” என்று முல்லை திடுக்கிட்டவள்.
“அப்போ. நீங்க தான் இவரை கல்யாணம் பண்ணிக்க போறீங்களா?”என்றவள்
குரலில் தெரியாமல் ஒரு கவலை கலந்தது.

“இல்ல இல்ல,” என்று உடனே வெங்கட் சொன்னவன்.
“மீனாவ நான் தான் கல்யாணம் பண்ணிக்க போறேன்!”என்றான்.

அடுத்த நொடி
மீனா அவன் காலில் ஓங்கி மிதிக்க...
“அய்யோ!” என்று வெங்கட் கத்தினான்.

“ஏன். நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ என்ன பண்ணுவ?” என்று மீனா முல்லையிடம் கேட்க,
முல்லை சிரித்துக்கொண்டே
“நீங்க எல்லாம் கதிரை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க.”என்றாள்

“ஏன்?” என்று மீனா கேட்க,
முல்லை நேராக கதிரைப் பார்த்தவள்.
“ஏன்னா. கதிர் என்னை தான் காதலிக்கிறார்.”என்றாள்.

அந்த வார்த்தை கேட்டவுடன் கதிர் திட்டுகிட்டவனுக்கு ஒரு நொடி மூச்சே அடைந்தது போல இருந்தது.

“என்ன...
நான் உன்னை காதலிக்கிறேனா?”என்று கதிர் பதறிப்போக,
“ஆமா. நீங்க என்னை காதலிக்கிறீங்க,” என்றாள் முல்லை இயல்பாக.

அவள் வார்த்தையை கேட்டு,“ஏய்.. நீ உளறுறியா? இல்ல என்கிட்ட விளையாடுறியா?” என்று கதிர்
கேட்க,

“விளையாடலாம் இல்ல... உண்மையாவே சொல்றேன். நீங்க என்னை காதலிக்கிறீங்க,” என்றாள் அவள் உறுதியாக.

“என்ன நீ. பாக்க சின்ன புள்ள மாதிரி இருந்துகிட்டு தேவையில்லாதது எல்லாம் பேசுற,” என்று வெங்கட் சொல்ல,
முல்லை உடனே,
“ஆமா அங்கிள் . உங்களைவிட நான் சின்ன புள்ள தான்.”என்றாள்.

முல்லையின் பதிலை கேட்டு சிரித்த கதிரோ “டேய்.இவ ஏதோ சின்ன பிள்ளைத்தனமா தான் பேசிக்கிட்டு இருக்கா. சரி வாங்க. நேரமாவது கிளம்பலாம்.”என்று சொன்னவன் முல்லையுடன் பரிசு வாங்கும் போது எடுத்த இரண்டு புகைப்படத்தில் ஒரு படத்தை தன்னுடன் பத்திரப்படுத்தியும் கொண்டான்.

அவன் முல்லையிடம் இருந்து விடைபெற்று சென்றவன்,மீண்டும் ஒரு நொடி நின்று அவளை திரும்பிப் பார்த்து, "உடம்ப பாத்துக்கோ. நல்லா படி. திவாகர் மாதிரி ஆளுங்க கூட இனிமேல் பழகாத,” என்றான்.

முல்லை மெதுவாகத் தலை அசைத்தவள், "அதெல்லாம் இருக்கட்டும். அப்ப நம்ம மறுபடியும் எப்ப பார்க்கலாம்?” என்று அவள் மீண்டும் கேட்க..
கதிர் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தான்.

“பாக்கலாம். மறுபடியும் நம்ம பாக்கணும்னு விதி இருந்தா பார்க்கலாம்,” என்று கதிர் சொல்ல..சட்டென்று முல்லை சிரித்தவள்.
“நம்ம கண்டிப்பா பார்ப்போம்.” என்றாள்.

அவள் வார்த்தையை கேட்டு கதிர் புருவம் உயர்த்த,
“ஏன்னா. நம்ம எதிர்காலத்துல காதலர்களாக தான் இருப்போமுன்னு எனக்கு தோணுது.”என்று முல்லை சொல்ல...

“காதலா?” என்று சிரித்தவண்ணம் கதிர் தலையசைத்தவன்... சின்ன சிரிப்போடு

அன்று அவன் அவளை விட்டு பிரிந்து இருந்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top