• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
162
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.

படலம் - 20

சித்ராங்கியின் வார்த்தைகள் அனைவரின் நிசப்தத்தை உடைத்து விட்டன.

அந்த நொடி விநாயகம் வினிதா சித்ராங்கி என்று இவர்கள் மூவருக்கும் கதிரின் குடும்பம் செய்த துரோகம் அனைத்து குடும்பத்தினரின் சிந்தனைகளையும் உறைத்தது.

சித்ராங்கி பற்றி முழுதாக அறிந்திடாத வெங்கட், மீனா, கதிர், மற்றும் சம்பத்தின் குடும்பம் என்ன விஷயம் என்று அறியாமல் நின்று இருந்தவர்களுக்கு பதற்றம்,குழப்பம், என்று அனைத்தும் ஒரே சமயத்தில் மனதை நெருக்கி வந்தது.

சித்ராங்கியை நேரில் பார்த்த அதிர்ச்சியில் “நீ. நீ.” என்ற கதிரின் பெரியப்பா எதையோ சொல்ல முயன்றார்.

ஆனால் சட்டென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அவர் முகத்தில் திடீரென வலி பரவி, கண்கள் விரிந்து, உடல் தடுமாறி அடுத்த நொடி அவர் தரையில் சரிந்து விழுந்தார்.

“அய்யோ!” என்ற அலறல் பல இடங்களில் ஒரே நேரத்தில் எழுந்தது. கதிரின் பெரியம்மா பதறி ஓடி வந்து, “யாராவது. டாக்டரை கூப்பிடுங்க!” என்று கதறினார்.

குழப்பத்தில் அனைவரும் அவரைச் சுற்றி நின்றனர். ஒருவர் தண்ணீர் கொண்டு வர,மற்றொருவர் அவரை எழுப்ப முயன்றார். “உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகணும்!” என்று கதிரின் அப்பா அவசரமாக கூறினார்.

அந்த இடத்தில் நடக்கும் கலவரங்களுக்கு காரணமான சித்ராங்கி, சிறிது தூரத்தில் நின்றபடியே இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தில் பதற்றம், பயம், அவசரம் எதுவும் இல்லை. ஆனால் பார்வை மட்டும் கூர்மையானது.

“ஹ்ம்...இவன சீக்கிரமா காப்பாத்துங்க,” என்றவளின் குரல், அலறல்களுக்கு நடுவிலும் தெளிவாகக் கேட்டது.

“ஏன்னா...இவன் அனுபவிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு.” என்றவள் தன் பார்வையால் ஒவ்வொருவரையும் சுற்றி பார்த்து . “Because it's just a beginning,” என்று சொல்ல, அவள் உதட்டில் ஒரு மெல்லிய, சிரிப்பு தோன்றியது.

அவள் வார்த்தையை கேட்டு அங்குள்ள அனைவரும் அவளை முறைத்து பார்க்க, தோள்களை உளுக்கிக்கொண்டு யாருக்கும் பதில் தராமல் அவள் கம்பிரமாக வெளியேறினாள்.

கதிரின் அப்பா சித்ராங்கியின் பார்வை பார்த்தார். அதில் பெண்ணை பார்க்கும் உணர்வு அல்ல, தங்களுக்கு அவள் உயிரோடு வைத்தே தண்டனை கொடுக்க வந்த ஒரு காலனையை பார்த்த உணர்வு தான் அவருக்கு .

அந்த எண்ணம் அவரது முதுகெலும்பில் குளிர் ஊட்டியது. சம்பவம் இதோடு முடிவடையப்போவதில்லை என்பதை இன்றைய நிகழ்வு உணர்த்தியது.

அதே நேரத்தில், ஈஷா காரை VCR பங்களாவின் வாசலில் நிறுத்தினாள். முல்லை, மாறன், கந்தன் மூவரும் எதுவும் பேசாமல் இறங்கினார்கள்.

முல்லையின் முகத்தில் சோர்வும் , குழப்பமும் குடி இருக்க,“உள்ள போங்க. நான் சீக்கிரமா வரேன்,” என்று கூறி, ஈஷா காரை திருப்பினாள்.

அவளின் எண்ணம் முழுதும் சித்ராங்கி மீது இருக்க, அவளை அழைக்க சம்பத்தின் பங்களாவை நோக்கி கார் வேகமெடுத்தது.

அந்த நேரத்தில் சரியாக வாசலைத் தாண்டி வெளியே வந்த சித்ராங்கி அருகே ஈஷா காரை நிறுத்தினாள்.

சித்ராங்கி காரில் ஏறியதும், ஈஷா எதுவும் கேட்கவில்லை. பல வருடங்களாக சித்ராங்கி எதற்காகக் காத்திருந்தாளோ இன்று அது நடந்துவிட்டது என்று ஈஷாவுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சித்ராங்கியின் கண்களில் நிம்மதியும் . வெற்றியின் மகிழ்ச்சியும் தெரிந்தது.

அவளுள்...இனி தான் இன்னும் தீவிரமாக கதிரின் குடும்பத்துக்கு சம்பவம் செய்ய வேண்டும் என்ற உறுதி இன்னும் ஆழமாக தோன்றியது.

சித்ராங்கியின் கண்களில் தெரிந்த புத்துணர்ச்சிக்கு அர்த்தம் என்னவென்று ஈஷாவுக்கு காரணம் புரியவில்லை.

ஏன் எனில் சித்ராங்கியின் குடும்பம், அவள் சுமந்த வலி இது எதுவும் ஈஷாவுக்கு தெரியாது.

ஆனால் இந்த கணம் சித்ராங்கி நிம்மதியாக இருக்கிறாள் என்று ஈஷா உணர்ந்து இருந்தாள்.

கார் மீண்டும் VCR பங்களாவை அடைந்தபோது, மாறனும் கந்தனும் ஹாலில் அவளுக்காக காத்திருந்தார்கள்.

சித்ராங்கி காரிலிருந்து இறங்கியதும் யாருடனோ போனில் தீவிரமாக பேசிக் கொண்டிருந்தாள்.

"ஓகே...நான் அப்புறம் call பண்றேன்,” என்றவள். “டிரீட்மென்ட் எல்லாம் பாக்கவா நடக்கணும். be careful,” என்ற வார்த்தைக்குள் கவலை மற்றும் கட்டுப்பாடு கலந்திருந்தது.

போனை அணைத்து பையில் வைத்தவள் ஒற்றை புருவம் உயர்த்தி,"என்ன!?" என்று கேட்க, "தூள் பண்ணிட்டீங்க CR" என்றான் கந்தன்.

அவன் துடுக்கான பேச்சில் முகம் மலர்ந்த சித்ராங்கி, "உன் சிஸ்டரை பார்த்துக்கோ" என்று மாறனை பார்த்து கண்டிப்புடன் சொன்னாள்.

"இனி அந்த ரவுடி பையனால முல்லைக்கு எந்த பிரச்சனையும் வராது தானே!?" என்று மாறன் கேட்க, "இனி தான் எல்லாமே ஆரம்பம் ஆகும்"...என்ற சித்ராங்கி வேகமாக மாடியில் இருக்கும் தன் அறைக்குள் சென்று இருந்தாள்.

அவள் சென்ற பாதையை புரியாமல் மாறன் பார்த்து இருக்க,"என்ன சொல்லிட்டு போறாங்க" என்று கேட்டான் கந்தன்.

"எனக்கே இவங்க நடவடிக்கை புதுசா தான் இருக்கு" என்ற ஈஷா சித்ராங்கியை புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் அவள் அறைக்குள் செல்ல, மாறன் மேலும் குழப்பம் அடைந்தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம், முல்லை தன் அறையின் கதவை மூடிக் கட்டிலில் படுத்திருந்தாள்.

ஜன்னல் வழியே நுழைந்த மங்கலான வெளிச்சம் மட்டும் அவள் முகத்தை தொட்டது.

இதயத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்ட நிலையில்,
“ஓ.” என்று திணறி அழ ஆரம்பித்தாள்.

தலையணையை இறுக்கமாக அணைத்துக்கொண்டு அழுதவள் தன் கண்ணீரை துடைக்கவும் முயற்சிக்கவில்லை.

“என்னை. ஏமாத்திட்டிங்களா, கதிர்?” என்று வாய்விட்டு புலம்பினாள்.
ஆனால் அங்கே அவள் கேள்விக்கு பதில் சொல்ல தான் யாரும் இல்லாமல் போனார்கள்.

பல கேள்விகள் அவளின் மனதை நொறுக்கிக் கொண்டே இருந்தது.

அதே மனநிலையில் இருந்தவளுக்கு சில வருடங்களுக்கு முன்பு, முதன் முறையாக கதிரை சந்தித்த நாள் நினைவில் வந்தது.

✨Flash back.

முல்லையிடம் தவறாக நடந்துகொண்ட நடன ஆசிரியர் திவாக்கரை கல்லூரி நாட்களில் கதிர் அடித்து துவைத்து எடுத்து இருக்க... முல்லையுடன் இனி யார் போட்டியில் கலந்து கொள்வார்கள் என்ற கவலை அவளுள் இருந்தது.

அப்போது வெங்கட் வேண்டுமென்றே கதிருக்கு நடனமாட தெரியும் என்று உரைத்து இருக்க, முல்லையும் கதிரை தன்னுடன் நடனமாடும்ப் படி அழைத்தாள்.

ஆனால் கதிரோ முல்லையின் அழைப்பை நிராகரித்தவன் அதோடு நில்லாமல் அவளை கடினமான வரத்தையில் திட்டியும் இருந்தான்.

"உன்னை ஏன்டா காப்பாத்தினோமுன்னு நினைக்க வைக்காத. சரியான இம்சை போல நீ" என்று கதிர் முல்லையிடம் அருவருப்பாக பேசியதை எண்ணி முல்லை அழுதுக்கொண்டே அங்கிருந்து சென்று இருந்தாள்.

முல்லையின் கண்களில் நீர் ததும்பிக் கொண்டிருக்க..அவள் முகத்தை கீழே குனிந்து இருந்ததும் அருகில் நின்ற வெங்கட் அவளை பார்த்து சிரித்தான்.

“நல்லா வாங்கிக்கிட்டியா? என்னையா ‘அங்கிள்’ன்னு சொன்ன? இப்போ பாரு. அந்த சூடு மூஞ்சி கிட்ட நன்றாக திட்டு வாங்கிட்டியே!” என்று அவன் கேலி செய்தான்.

அவனுடைய வார்த்தைகள் முல்லையின் மனதை இன்னும் காயப்படுத்த. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக அழுதுக் கொண்டே இருந்தாள்.

“ஏய் மாமா வாயை மூடு!” என்று திடீரென மீனா வெங்கட்டைக் கடிந்தவள்,
“முல்லை. நீ அழாத. வா. நான் கதிர் கிட்ட பேசுறேன்.”என்றாள்

மீனா அவளது கையை பிடித்து வேகமாக இழுத்துச் செல்ல, முல்லை இன்னும் அழுகையை அடக்க முயன்றபடியே அவளுடன் நடந்தாள்.

அவர்கள் இருவரும் கதிர் நின்றிருந்த இடத்துக்கு செல்ல,
“இதுக்கெல்லாம் காரணம் வெங்கட் தான்,” என்று மீனா கோபமாக சொன்னாள்.

வெங்கட்டை முறைத்த வண்ணம் கதிர் ஏதோ பேசப் போகும் நேரத்தில், திடீரென்று பின்னால் இருந்து இரண்டு பேர் வேகமாக வந்து கதிரை தாக்க முயன்றனர்.

“ஏய்!” என்று கதிர் திரும்பிப் பார்த்தவுடன், ஒருவன் அவனை தள்ள முயல,கதிர் உடனே சண்டைக்கு இறங்கினான்.

அவன் ஒருவனை தள்ளி விட்டு இன்னொருவனின் கையை பிடித்து திருப்ப,அங்கே சில நிமிடங்கள் குழப்பமாகிப் போனது.

அந்த நேரத்தில், திவாகரின் ஆள்களில் ஒருவன் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு கதிரை நோக்கி பாய,
“கதிர்."என்று முல்லை கத்தினாள்.

ஒருவன் குத்த வரும்போது, யோசிக்காமல் முல்லை கதிரின் முன் வந்து நிற்க,
அடுத்த நொடி, கதிர் கத்தியை தட்டி விட்ட வேகத்தில்
கத்தி முல்லையின் நெற்றியில் பட்டது.

"ஆ..." என்று வலியால் முல்லை கத்த...“முல்ல!” என்று கதிரும் அதிர்ச்சியுடன் கத்தினான்.

வலியால் முல்லை தடுமாறி கீழே விழ முயல,கதிர் அவளை உடனே தாங்கிக் கொண்டவன்,அவளது நெற்றியில் இருந்து இரத்தம் சொட்டத் தொடங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

இந்த காட்சியை பார்த்து மீனாவும் அதிர்ச்சியுடன் நிற்க, வெங்கட்டுக்கும் பயமாகிப் போனது.

“மீனா வா உடனே முல்லையை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம்!” என்று கதிர் சொல்லியவுடன், வெங்கட் காரை ஸ்டார்ட் செய்ய...முல்லையை தாங்கிக் கொண்டு அவசரமாக காரில் ஏற்றினான் கதிர்.

சில நிமிடங்களில் இவர்கள் மருத்துவமனையை அடைந்து இருக்க, அங்கே டாக்டர்கள் உடனே முல்லைக்கு சிகிச்சை அளித்தனர்.

கதிர் வெளியே பதட்டமாக நடந்துக் கொண்டிருக்க, அவன் முகத்தில் கவலை தெளிவாக தெரிந்தது.

சில நேரம் கழித்து டாக்டர் வெளியே வந்தவர், “பெரிசா எதுவும் இல்லை. சின்ன காயம் தான். band aid போட்டிருக்கோம். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரி ஆயிடும்,” என்றார்.

அதைக் கேட்டவுடன் கதிர் சற்று நிம்மதி அடைய, அவன் உள்ளே சென்று பார்க்கும் பொழுது முல்லை படுக்கையில் அமைதியாக படுத்திருந்தாள்.

கதிர் அவளை நோக்கி வேகமாக சென்றவன், “வலி இருக்கா?” என்று கேட்டதும், முல்லை மெதுவாக சிரித்துக்கொண்டே
“இல்ல.” என்றாள்

"I am சாரி" என்ற கதிர் அவளுக்காக இவ்வளவு கவலைப்படுவது முல்லைக்கு பிடித்து இருந்தது.

அவன் கண்களில் தெரிந்த அந்த அக்கறையை அவள் அமைதியாக ரசித்தாள்.

அந்த நேரத்தில் உள்ளே வந்த வெங்கட் கதிரை பார்த்து சிரித்துக் கொண்டே, “என்னடா. அவளுக்காக இவ்வளவு உருகுற? காதலா?”என்று பொறுமையாக கேட்க, அவனை தொடர்ந்து மீனாவும் அங்கே வந்தாள்.

“ச்சி! சின்ன பொண்ணுடா அவ" என்று கதிர் வெங்கட்டை கடிந்துகொள்ள, இவர்கள் பேசுவதை காதில் வாங்கிய முல்லை உள்ளுக்குள் சிரித்துக்கொண்டாள்.

நொடிகள் நிமிடங்களாக கடந்து இருக்க, “என்னை காப்பாத்துனதுக்கு. நன்றி கதிர்” என்ற முல்லை அவனைப் பார்த்தவள் கண்களில் மீண்டும் அந்த மென்மையான சிரிப்பு தோன்றியது.

"எத்தனை தடவ thanks சொல்லுவ" என்று கதிர் கேட்க,“சரி. இனி சொல்லல. இப்போ நான் கிளம்பணும்,” என்றாள் அவள்.

“இப்பவா. ஏன்... இன்னும் கொஞ்சம் ரெஸ்ட் எடு ?” என்று கதிர் சொல்ல.

“இல்ல. இப்போ போனா தான் யாரையாவது என்கூட ஆட அழைக்க முடியும்,” என்று அவள் கவலையாக சொன்னாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top