Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 111
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்
படலம் - 2(2)
கதிர் வேலன் கோவமாக தன் வீட்டில் இருந்து வெளியேறியதும்,' இந்த கோவக்கார பயலுக்கு முதல்ல ஓரு கால் கட்டு போடணும்' என்றார் சித்ரா தேவி @ தேவி பாட்டி.
'மூத்தவன் வெங்கட் இருக்கும் போது இளையவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணுறது' என்று கதிரின் சின்ன மாமா ஆறுமுகம் கேட்க...தன் மூத்த மகன் விநாயகத்தை பாவமாக பார்த்தார் தேவி பாட்டி.
'என் பையனுக்கு மட்டும் எல்லாம் நல்லதா நடந்து இருந்தா... அவனும் இந்நேரம் பிள்ளை குட்டியோட சந்தோசமா வாழ்ந்து இருப்பான்' என்று தேவி பாட்டி கண்கள் கலங்க,
'சித்து...சித்து சாப்பிட்டியா' என்று அவர் சுவற்றில் வரைந்து வைத்து இருக்கும் சிறுமியின் ஓவியத்தை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார் கதிரின் பெரிய மாமா விநாயகம்.
'ஏன் டா ஆறுமுகம்... பேசாம உன் அண்ணனை நாட்டு மருந்து சாப்பிட அழைச்சிட்டு போகலாமா' என்று தேவி பாட்டி தன் இளைய மகனை கேட்க,
'அம்மா... நாங்களே கைக்கு வர வேண்டிய இடம் வேற யாருக்கோ போயிடுது என்ற கோவத்துல உக்காந்து இருக்கோம்..நீ அது புரியாம பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற கதையை பேசிக்கிட்டு இருக்க' என்று கதிரின் அம்மா பரமேஸ்வரி தன் அன்னையை கடிந்துகொண்டாள்.
'ஏம்மா கோவப்படுற... கிட்டத்தட்ட 20 வருஷமா அந்த வீனா போன டாக்டர் கொடுத்த மருந்தை தானே விநாயகத்துக்கு கொடுத்துகிட்டு இருக்கோம்.ஆனா பாரு இவனுக்கு ஒரு சதவீதம் கூட குணமாகவே இல்லையே' என்று தேவி பாட்டி கவலைக்கொண்டார்.
தன் தாயின் தவிப்பை ஆறுமுகம் உணர்ந்து இருக்க...'ஆமா... இப்போ இவரு குணமாகி மட்டும் நாளைக்கு படம் நடிச்சி நாளைய மறுநாள் தலைவராக போறாரு பாரு... போ மா... போய் வேற எதாவது வேலை இருந்தா பாரு' என்று கதிரின் பெரியம்மா சாமுண்டிஸ்வரி ஏளனமாக பேசினாள்.
'ஏதோ மா... பெத்த வயிறு பத்தி எரியுது. அந்த ஆதங்கத்துல தான் கேட்டேன். சரி சரி நீங்க கோவபடாதீங்க' என்ற தேவி பாட்டி விநாயகம் இருக்கும் அறையை எட்டி பார்த்து கண்கள் கலங்கியவாரு அங்கிருந்து சென்று இருந்தார்.
தன் அண்ணனின் அவல நிலையை பார்த்தும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் ஆறுமுகம் தன் அறைக்கு செல்ல... அங்கே அவரின் மனைவி வள்ளி கோவிலுக்கு தயாராகிக்கொண்டு இருந்தார்.
தன் கணவனின் வாடிய முகத்தை பார்த்த வள்ளி,' என்னாச்சுங்க... மறுபடியும் உங்க தங்கச்சிங்க உங்கள எதாவது சொன்னாங்களா' என்று கேட்டாள்.
'அவங்க பேசுறது எல்லாம் பெரிய விஷயமா... அதெல்லாம் இல்ல வள்ளி. ஆனா அண்ணன் பாவம் வள்ளி' என்று ஆறுமுகம் கண்கள் கலங்க.'ஆமா...உங்க அண்ணன் பாவம் உங்க தங்கச்சிங்களை மட்டும் இல்ல... என் அண்ணன்களை கூட சும்மா விடாது' என்றாள் வள்ளி.
'என் அண்ணனை குணப்படுத்த நான் எதாவது பண்ணனும்னு தோணுது. ஆனா என்ன பண்றதுனே தெரியல' என்று ஆறுமுகம் புலம்ப...'20வருஷம் கடந்து இப்போவாது உங்களுக்கு ஒரு நல்லது தோன்றி இருக்கே.. ம் சந்தோசம் தான்' என்றாள் வள்ளி.
'ஆனா எப்படி அண்ணனுக்கு உதவ முடியும்' என்ற ஆறுமுகம் யோசனையில் முழுகி இருக்க...'அது தெரியாம தானே நானும் 20 வருஷமா இந்த கொடுமையை எல்லாம் பார்த்துகிட்டு இருக்கேன்' என்றாள் வள்ளி.
'இல்ல வள்ளி... இனி அப்படி இருக்க கூடாது. நம்ம பக்கத்துல இருந்து அண்ணனை குணப்டுத்த என்ன பண்ணுமோ அதை பண்ணியே ஆகணும்' என்ற ஆறுமுகம் தீர்க்கமான முடிவுடன் தன் அறையில் இருந்து வெளியேறியவனை ஆச்சிராயமாக பார்த்தாள் வள்ளி.

மறுபக்கம் இதே நேரம்.
சென்னை தாம்பரம் பகுதியில் வாழ்ந்து வரும் முருகனின் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வை பற்றி பார்ப்போம்.
வெளிநாட்டு நிறுவனமான VCR கம்பெனியில் வேலை பார்க்கும் முருகனின் மனைவி பார்வதி இன்று மருத்துவமனை வளாகத்தில் தன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு கண்ணீருடன் அமர்ந்து இருந்தாள்.
“அம்மா… அழாதீங்க. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது,” என்று மெதுவாக பார்வதியின் தோளைத் தழுவி ஆறுதலிட்டான் கந்தன். பதினைந்து வயதுதான், ஆனாலும் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் பெரியவர்களின் தைரியம் இருக்கும் அவனுக்கு.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு டா கந்தா… உன் அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது தானே?”
என்ற பார்வதியின் குரல் அதிர்ந்து, கண்கள் ஈரமாயின.
“அப்பாவுக்கு எதுவுமே ஆகாது. அதான் அண்ணனும் அக்காவும் டாக்டரைப் பார்க்கப் போயிருக்காங்களே…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, மருத்துவரின் அறை கதவு திறந்தது.
தூரத்தில் இருந்து கந்தனின் அண்ணன் வெற்றி மாறன் வெளியே வருவதைக் கண்டதும்,
“அம்மா… அதோ அண்ணன் வரார்!” எனக் கந்தன் வேகமாக ஓடி சென்றான்.
“அண்ணா! டாக்டர் என்ன சொன்னாங்க?” எனக் கேட்டவுடன்,
“அப்பாவை இன்னைக்கே வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு போகலாம்னு சொன்னார்,” என்ற மாறன் சிரிப்பதைப் போல முயற்சித்தான்.
ஆனால் அந்த சிரிப்பில் மகிழ்ச்சி இல்லை,லேசான கவலையின் நிழல் மட்டும் தான் இருந்தது.
'உண்மையா அண்ணா... அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா' என்று கந்தன் கேட்க, மாறனின் பின்னால் மெதுவாக வெளியே வந்தாள் ரத்தின முல்லை.
முல்லையின் கண்களில் கலக்கம் தெளிவாய் தெரிந்த நிலையில்...
பார்வதி உடனே ஓடி வந்து
“முல்லை … என்னம்மா? டாக்டர் என்ன சொன்னார்?” என்றாள்.
ரத்தின முல்லை ஒரு நொடிக்கு சொற்களைத் தேடியவள்.
“அப்பாவுக்கு பெரிய பிரச்சனை எதுவும் இல்ல அம்மா … ஆனா…” என்று சொல்லி நிறுத்தினாள்.
“ஆனா என்ன? சொல்லு மா என்னாச்சு … என் இதயம் நிக்கற மாதிரி இருக்கு…” என்று பார்வதி அவள் கையைப் பற்றினாள்.
ஆழ்ந்த மூச்சை விட்டபடி முல்லை தொடர்ந்தவள்,
“அப்பாவுக்கு வாதப்பிடிப்பு அதிகமா இருக்கு. வேலைக்குப் போகக்கூடாதாம். இரண்டு மூணு வாரம் நல்லா ஓய்வு எடுத்தா சரியாகிடும். இப்போ இதற்கு மேல எதுவும் கவலைப்பட வேண்டாம்.”என்றாள் முல்லை.
அந்தச் சொல்லைக் கேட்டு பார்வதியின் கண்களில் இருந்த பயம் மெதுவாக கரைய,
கந்தன் நிம்மதியாக சிரிக்க..
“அதான் சொன்னேனே அம்மா! அப்பாவுக்கு ஒன்றுமே ஆகாது.” என்றாள் முல்லை.
“அம்மா, நீங்கதான் ரொம்ப பயப்படுறீங்க…” என்ற மாறனின் கையை பிடித்து..
“உன் அப்பாவுக்கு காலையில சட்டுன்னு நெஞ்சு வலி வந்ததும் நீயும் உன் தங்கச்சியும் கூட தான் பயந்து போயிட்டிங்க. நான் என் பயத்தை வெளிப்படுத்திட்டேன்,நீங்க உளுக்குள்ள வச்சிக்கிட்டீங்க” என்று அழுகையும் சிரிப்பும் கலந்த குரலில் சொன்னாள் பார்வதி.
பார்வதியின் வார்த்தையைக் கேட்டு மூவரும் சிரிக்க...
அந்த சிரிப்பில் நிம்மதி இருந்தாலும், ரத்தின முல்லையின் நெஞ்சுக்குள் அமைதியான ஒரு கசப்பு இருக்க தான் செய்தது.
“நாம அப்பாவை அழைச்சிட்டு வீட்டுக்கு போகலாமா அம்மா?” என கந்தன் கேட்க,
“போகலாம்டா … நம்ம முதல்ல வீட்டுக்கு போய் அப்பாவை கவனிக்க வீட்டில எல்லாத்தையும் சரி பணணும்,” என்ற பார்வதி கண்ணீரை துடைத்துக்கொண்டாள்
இப்போதைக்கு தன் அம்மாவுக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டாம் என்று எண்ணிய மாறன்...'அம்மா... நீங்க கந்தனை அழைச்சிட்டு ஷேர் ஆட்டோல போயிடுங்க. நானும் பாப்பாவும் அப்பாவை ஆட்டோல அழைச்சிட்டு வரோம்' என்றான்.
'சரி பா... நாங்க முன்னாடி கிளம்புறோம்... நீங்க ஜாக்கிரதையா வாங்க' என்ற பார்வதி கந்தனை அழைத்துக்கொண்டு மருத்துவ மனையில் இருந்து வெளியேறினார்.
பார்வதியும் கந்தனும் செல்லும் வரை தன் கண்ணீரை இழுத்து பிடித்து இருந்த முல்லை, அவர்கள் சென்றதும் வெடித்து அழுதவள்,'அண்ணா... அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது தானே' என்று அழ ஆரம்பித்து இருந்தாள்.
தன் தங்கையின் கண்ணீரை பார்த்து மாறனின் விழிகளும் ஈரமாகி போக..
'அதான் டாக்டர் ஆப்ரேஷன் பண்ண time கொடுத்து இருக்காரே மா... நம்ம அதுக்குள்ள அப்பாவை காப்பாத்திடலாம்' என்றான் .
'ஆனா... அவ்ளோ பணத்துக்கு நம்ம எங்க போவோம்' என்று முல்லை கேட்க...
'அதெல்லாம் இப்போ பேச வேண்டாம் பாப்பா... முதல்ல அப்பாவை வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.' என்ற மாறனுக்கும் பணத்துக்கு என்ன செய்ய போகிறோம் என்ற கவலை இருக்க தான் செய்தது.
'அது இல்ல அண்ணா... சாதாரண ஆப்பரேஷனா கூட பரவாயில்ல... இது என்னமோ வெளிநாட்டுக்கு எல்லாம் போய் அப்பாவுக்கு ஆப்ரேஷன் பண்ணனும்னு சொல்லறாங்க. எனக்கு ஒண்ணுமே புரியல... எனக்கு ரொம்ப பயமா இருக்கு' என்ற முல்லை மேலும் கண்கள் கலங்கினாள்.
'நீ அழாத பாப்பா.. அம்மாவுக்கு தெரிஞ்சா அப்புறம் நம்ம அவங்களையும் சேர்த்து சமாளிக்கணும். நீ முதல்ல கண்ணை தொட... சரி வா அப்பாவை போய் பார்க்கலாம்' என்ற வெற்றி மாறன் சிகிச்சை அறைக்குள் இருக்கும் முருகனை பார்க்க முல்லையை அழைத்து சென்றான்.
முருகன் கட்டிலில் படுத்து இருக்க.. அவரின் நிலையை பார்த்து கண்கள் கலங்கிய முல்லை...' அப்பா...' என்று அழைத்தபடி ஓடிப்போய் முருகனை கட்டி அணைத்துக் கொண்டாள்.
'முல்ல... என்னமா!! என்னாச்சு... ஏன் இப்படி அழற... அப்பாவுக்கு ஒன்னுமில்ல டா' என்று முருகன் முல்லைக்கு தைரியம் கொடுக்க...
'பாப்பா... சொல்றேன் தானே... அழாத மா' என்றான் மாறன்.

Last edited: