• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
160
படலம் 19.2

“என்ன உண்மை? என்ன உண்மை உனக்கு தெரியணும்?” என்று சம்பத் கோபமாகக் கேட்டார்.
“அரசியலில் கொஞ்சம் செல்வாக்கு இருக்குற நீங்க எப்படி இந்த ஒண்ணுமில்லாத குடும்பத்துல மாப்பிள்ளை எடுக்கப் போறீங்க?” என்று சித்ராங்கி கேட்டாள்.
அவள் கேள்வியில் கதிரின் பெரியப்பா கோபமடைந்து,
“ஏய்! யாரு ஒண்ணுமில்லாத குடும்பம்? நாங்க இந்த ஊர்ல எவ்வளவு பெரிய பணக்காரங்க தெரியுமா?” என்று கேட்டார் சாரங்கம்.
அவனைத் திமிருடன் பார்த்த சித்ராங்கி,
“அது உங்களோட கடந்த காலம். இனி உங்க எதிர்காலத்துல நீங்க எல்லாம் பிச்சைக்காரங்க தானே,” என்றாள்.
“ஏய்! என்னடி,விட்டா திமிரா பேசிக்கிட்டே போற?” என்று எகிறிய கதிரை, அவன் கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாக மீனா தடுத்து நின்றாள்.
அவள் கை அவன் மார்பில் சற்றே அழுத்தியபடி, “கதிர், ப்ளீஸ்,” என்று மெதுவாக சொன்னாள்.
அந்த ஒரு நொடியில், கதிரின் பார்வை மீனாவின் தோளுக்கு அப்பால் நின்றிருந்த சித்ராங்கியை துளைத்தது.
அவனை நேராகக் கண்ட சித்ராங்கி சிரிப்பை ஒதுக்காமல், நாற்காலியின் முனையில் சாய்ந்து கொண்டு,
“என்ன ஹீரோ சார், ஓவரா துள்ளுறீங்க?” என்று கிண்டலுடன் கேட்டாள்.
அவளது குரலில் சவால் இருந்தது.
“பின்ன, துள்ளாம என்ன? உன்கிட்ட பம்ப சொல்றியா?” என்று கதிர் குரலை உயர்த்தினான்.
அதற்கு சித்ராங்கி கண்களை நெருக்கி,
“இனி நீங்க எல்லோரும் என்கிட்ட பம்பி தான் ஆகணும்,” என்றாள்.
அவ்வாறு சொல்லி, மீண்டும் அமைதியாக அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.
அவளது தைரியம் கதிரின் கோபத்தை இன்னும் தூண்டியது.
“என்ன, நாங்க உன்கிட்ட பம்பணுமா? ஏய், நீ என்ன பைத்தியமா? நாங்க எல்லாம் யாருன்னு உனக்கு தெரியுமா? இப்போ நினைச்சா கூட நாங்க உன்ன என்ன வேணும்னாலும் பண்ணுவோம்,” என்று கதிர் சினந்தான்.
அந்த வார்த்தைகள் சித்ராங்கியின் முகத்தில் இருந்த சிரிப்பை மெதுவாக களைந்தன.
அவள் எழுந்து நின்றாள்.
அங்கிருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக பார்த்தாள்.
“உங்கனால என்னை ஒன்னும் பண்ண முடியாது..
“ஏன்னா, நான் ஆல்ரெடி எமனை பார்த்துட்டு தான் வந்து இருக்கேன்.” என்றாள்.
அவள் சொன்ன அந்த வரிகளில் ஒரு மர்மம் இருந்தது.
ஒரு வலி இருந்தது.
“இங்க பாருங்க,” என்று மீனா அவளை நோக்கி முன்னேறினாள்.
“நீங்க எமனை பாருங்க இல்ல சிவனை பாருங்க. எங்களுக்கு அந்த கதையெல்லாம் தேவையில்ல. இப்போ ஏன் இங்க வந்து பிரச்சனை பண்ணுறீங்க?”என்று கேட்டதும்
சித்ராங்கி மெதுவாக சிரித்தாள்.
“ஹே, நீ லோகேஷினி, ஐ மீன், மீன லோகேஷினி, யெஸ், I know you. I have a present for you.” என்று
சித்ராங்கி தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு பேனாவை எடுத்து நீட்டினாள்.
அந்த பேனாவை பார்த்து மீனா கண்களை விரித்தாள்.
“இது, இது என்னடா பேனா?” என்று
மீனா அதை எடுக்க முனைந்தவுடன், சித்ராங்கி அதைப் பின்வாங்கினாள்.
“அக்கார்டிங் to தி லா, ஒருவர் அனுமதி இல்லாம அவங்கள போட்டோ and வீடியோ எடுக்கிறது தப்புன்னு உனக்கு தெரியுமா? தெரியாதா?” என்று நேராகக் கேட்டாள்.
அந்த கேள்வி மீனாவின் நெஞ்சைத் துளைத்தது.
நேற்றைய தினம் ரெஜிஸ்டர் ஆபீஸ் சம்பவம் அவள் நினைவில் மின்னியது.
சித்ராங்கி செய்த அதிரடி நடவடிக்கையை, தன் கேமரா பேனாவில் மீனா படம் எடுத்து இருக்க, அந்த பேனா இப்போது சித்ராங்கியின் கையில் இருந்தது.
ஆம். சித்ராங்கி ஏற்கனவே உண்மையை அறிந்திருந்தாள்.
அதனால் தான் , யாரோ ஒருவரை வைத்து அந்த பேனாவை மீனாவிடமிருந்து எடுத்து வைத்திருந்தாள்.
“இல்ல, நான் வந்து,” என்று மீனா
வார்த்தையை மென்னு விழுங்க,
“பத்திரிக்கை துறை புனிதமானது. அதுல இந்த மாதிரி விஷயங்கள் நடக்கிறது சகஜம் தான். ஆனா உண்மை எது, பொய் எது தெரியாம, என்கிட்ட உன்னுடைய சின்னப்பிள்ளைத்தனமான விளையாட்டை விளையாடுவது இதுவே கடைசி ஆகட்டும்." என்று அவள் பேனாவை மீனாவின் கையில் திருப்பிக் கொடுத்தாள்.
அதை பார்த்துக் கொண்டிருந்த கதிரின் கை முடிச்சாகச் சுருண்டது.
அவனது கோபம் இன்னும் கொழுந்து விட்டது.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨
அங்கே ஒரு கனமான அமைதி நிலவியது.
யாரும் பேசவில்லை.
"அக்கா.. என்ன அக்கா இது. யார் இந்த பொண்ணு, இவள சீக்கிரமா இங்க இருந்து அனுப்புனா தானே, இந்த நிச்சியத்தை முடிச்சு நம்ம பசங்க கோடிஸ்வரன் வீட்டுக்கு மாப்பிளையாக முடியும்" என்று பரமேஸ்வரி கேட்க, அதே கேள்வி தான் சாமுண்டி மூளையிலும் முட்டிக்கொண்டு இருந்தது.
பல ஆண்டுகளாக அரசியலில் அமைதியாகக் காத்திருந்து, சரியான தருணத்தை நோக்கிக் காய்களை நகர்த்த பழகியவன் சம்பத்.
சித்ராங்கியின் பேச்சிலும் செயல்களிலும் ஒரு சொல்லப்படாத பகை தெளிவாக ஒளிந்து கிடப்பதை அவன் உணர்ந்தான். ‘இவள் மனதில் ஏதோ பெரிய கணக்கு ஓடிக்கொண்டிருக்கிறது, இங்கே நான் எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும்,’ என்று உள்ளுக்குள் முடிவு செய்தான்.
அமைதியை தக்க வைத்துக் கொண்டு நேராகவே கேட்டான்.
“இங்க பாரு, உன்னை ஆள் வைத்து கடத்த நினைத்தது தப்புன்னு நான் ஒத்துக்கிட்டேனே. இன்னும் ஏன் இங்கே இருந்து பிரச்சனை பண்ணுற? உனக்கு இன்னும் என்ன தான் வேண்டும்?”
அவன் குரலில் சமரசத்தின் நிழலும், எச்சரிக்கையின் எடையும் இருந்தது.
அந்த நேரத்தில் கதிர் முன் வந்து நின்றான். அவன் முகத்தில் வெறுப்பும் வெம்மையும் கலந்திருந்தது.
“என்ன அங்கிள், இவகிட்ட சமாதானம் பேசிக்கிட்டு இருக்கீங்க? இவ கொஞ்ச நாளாவே சரியில்லை. எப்ப இந்த ஊருக்கு வந்தாலோ, அப்போதுல இருந்து நம்ம குடும்பத்தையே தேடி வந்து பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கா! இந்தாடி, உனக்கு என்ன வேணும்? உன் கைல துப்பாக்கி இருந்தா எல்லாரும் உனக்கு பயப்படணுமா? நீ யாரை வேணும்னாலும் பயமுறுத்தலாம், ஆனா இந்த கதிரை உன்னால ஒன்னும் பண்ண முடியாது!”
என்று வீரத்துடன் சொன்ன அவனை, சித்ராங்கி மேலிருந்து கீழ்வரை ஒரு குளிர்ந்த நகைப்புடன் பார்த்தாள்.
“ஏன்!? இதான் கதிர், இப்படித்தான் கதிர், இவன்தான் கதிர், என்று ஒரு மொக்க வசனம் பேசுவியே. அதையும் பேசு. எனக்கு இன்னைக்கு நிறைய ‘ப்ரீ டைம்’ இருக்கு. ஏன்னா, இந்த நாள் முழுக்க உங்களுக்காகத்தான் நான் ஒதுக்கி வைத்திருக்கேன்.”என்று
அவள் குரலில் இகழ்ச்சியும் தன்னம்பிக்கையும் கலந்து ஒலித்தது.
யார் என்ன பேசினாலும், இப்போது இங்கே எந்த நல்லா காரியம் எதுவும் நடக்கப்போவதில்லை என்ற நிச்சயத்தில் வெங்கட் மகிழ்ச்சி கலந்த அமைதியுடன் இருந்தான்.
அவனுக்கு இந்த மோதல் வெறும் வார்த்தைகளில் முடியாது என்ற நம்பிக்கை இருந்தது.
ஆனால் மீனாவின் உள்ளம் மட்டும் அப்படியில்லை.
இந்த நொடி வரை தன் கேமரா பேனாவை தானே எங்கோ தொலைத்து விட்டதாகவே நினைத்திருந்தாள்.
ஆனால் இப்போது உண்மை அவள் முன் திறந்தது.சித்ரா திட்டமிட்டு அதை அவளிடமிருந்து எடுத்திருக்கிறாள்!
அதிர்ச்சி அவளது கண்களில் விரிந்தது. அதே சமயம் ஒரு வியப்பும் எழுந்தது.
‘இது எப்படி சாத்தியம்? இவளுக்கு தான் இவ்வளவு சாமர்த்தியம்.
அச்சமும் ஆச்சரியமும் கலந்த பார்வையுடன் சித்ராங்கியை நோக்கிக் கொண்டிருந்தாள் மீனா.
அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதிலும் ஒரே கேள்வி,
“இவள் யார்?”
சித்ராங்கி அமைதியாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தில் பதட்டம் இல்லை.
அவசரம் இல்லை.
அவளுக்கு எல்லாம் முன்கூட்டியே தெரியும் என்ற நிச்சயம் மட்டும் இருந்தது.
அந்த அமைதியையே கிழித்தபடி அவள் கைப்பேசி ஒலித்தது.
அங்கிருந்த அனைவரின் பார்வையும் ஒரே நேரத்தில் அவளிடம் திரும்பியது.
அவள் மெதுவாக திரையை பார்த்தாள்.
ஒரு சின்ன புன்னகை உதட்டில் தோன்றியது.
அழைப்பை ஏற்றாள்.
“ஹும், Yes,”
அவள் குரல் இயல்பாக இருந்தது.
அடுத்த சில விநாடிகள் அவள் எதையும் பேசவில்லை. கேட்டு கொண்டிருந்தாள்.
பின்னர்,
“Bravo, இத்தனை வருஷம் காத்துக்கிட்டு இருந்தது இப்ப தான் நடந்துருக்கு ? கூல்.”
என்று அமைதியாகச் சொல்லி,
“அப்போ நான் சொன்ன மாதிரி எல்லா ப்ராசஸ்ஸையும் கிளியரா முடிச்சுவிடுங்க,”
என்று கூறி, போனை கட் செய்தாள்.
அவள் எழுந்து நிற்கவில்லை.
ஆனால் அவளின் கண்களில் ஏதோ ஒரு வெற்றி ஒளிந்தது.
அங்கிருந்தவர்களை சுற்றி பார்த்து சிரித்தாள்.
“சரி, சரி, இப்ப கிளம்பினா சரியா இருக்கும்.”என்று அவளின் கைகடிகாரத்தை பார்த்து சொன்னாள்.
“எங்க கிளம்ப சொல்ற?” என்று உடனே கதிர் சீறினான்.
சித்ராங்கி ஏளனமாக அவனைப் பார்த்து,
“இப்ப நீங்க கிளம்புனா தான் நல்லது. ஏன்னா, உங்க வீட்டுக்கு ஒரு நோட்டீஸ் வந்து இருக்கும். அதை பார்த்துட்டு, உங்க மூட்ட முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு இந்த ஊரை விட்டு காலி பண்ண ரெடியா இருக்கும் .”என்றாள்.
“என்ன? நாங்க எங்க வீட்டை காலி பண்ணணுமா? என்ன உளர்ற?” என்று கதிர் வெடித்தான்.
“என்னதாம்மா உனக்கு பிரச்சனை?” என்று பாட்டி தேவி பதற்றத்துடன் கேட்டார்.
சித்ராங்கி திரும்பி அவரை பார்த்தாள்.
“எனக்கு இனிமே எந்த பிரச்சனையும் இல்ல பாட்டி. பிரச்சனை இனி தான் உங்களுக்கு ஸ்டார்ட் ஆகப் போகுது.”
அவள் குரல் மென்மையாக இருந்தாலும் அதில் அதிகாரம் இருந்தது.
“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. அப்படி இருந்தும் உங்க வீட்டுக்கு ஒரு நோட்டீஸ் வந்து இருக்கும். நீங்க போய் அதை பார்த்துட்டு, சட்டுபுட்டுன்னு என் வீட்டை காலி பண்ணிடுங்க" என்றாள்.
“நாங்க எதுக்காக எங்க வீட்டை காலி பண்ணணும்? என்ன பேசுற?” என்று பலரும் ஒரே நேரத்தில் கேள்வி எழுப்பினர்.
சித்ராங்கி சிரித்தாள்.
“ஏன்னா, நீங்க தங்கி இருக்குற வீடும், உங்க மொத்த சொத்தும், சட்டப்படி எனக்கு சேர வேண்டியது.”என்று அவள் சொல்ல,
அந்த வார்த்தை அங்கே வெடித்த குண்டைப் போல இருந்தது.
“உனக்கு சேரணுமா ? என்னடி பைத்தியம் மாதிரி பேசுற?” என்று கதிர் முன் வந்து கையை உயர்த்தினான்,
அவன் கையை சட்டென்று தடுத்த சித்ராங்கி,"அடங்குடா" என்றவளின் குரல் திடீரென்று கடினமானது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top