Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 160
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்.
படலம் - 19
சம்பத்தின் நெற்றியில் பதிந்திருந்த துப்பாக்கி முனையை பார்த்த அந்த நொடி, அங்கிருந்த அனைவரின் கண்களும் பயத்தில் உறைந்து போனது.
சுவாசிக்க கூட யாருக்கும் துணிவில்லை. அந்த ஒரு கணம், காலமே நின்றுவிட்டதுபோல் தோன்றியது.
அதே தருணத்தில், கதிரை ஏமாற்றம் கலந்த பார்வையால் பார்த்த முல்லை, கலங்கிய விழிகளுடன் ரம்யாவின் பங்களாவை விட்டு வெளியேறி இருந்தாள்.
அவளை அழைத்து சமாதானப்படுத்த வேண்டும் என்ற நிலைமையில் இருந்த கதிர், அந்த நொடியை இழந்துவிட்டான்.
சித்ராங்கி, ஈஷாவை ஒரு கண சைகையால் அழைக்க,அவள் பார்வையின் அர்த்தத்தை நொடியில் புரிந்துகொண்ட ஈஷா, முல்லையை பின்தொடர்ந்து வெளியேறினாள்.
அவர்களை தொடர்ந்து மாறனும் கந்தனும் அமைதியாக அங்கிருந்து நகர,
துப்பாக்கி முனையில் நின்ற சம்பத்தை பார்த்து பதறிய ரம்யா,
“ஏய்! என் அப்பாவை ஒன்னும் பண்ணிடாத!” என்று குரல் குலைந்து அலறினாள்.
“என் அப்பாவுக்கு எதாவது ஆச்சுன்னா, உன்னை நான் சும்மா விட மாட்டேன்!” என்று உதயா கர்ஜித்த நொடியில், சம்பத்தின் நெற்றியில் இருந்த துப்பாக்கி முனை கண் இமைக்கும் நேரத்தில் உதயாவின் நெற்றி பொட்டைக் குறிவைத்தது.
சித்ராங்கியின் அந்த வேகமான ஆட்டத்தை ஆவேன்று பார்த்து நின்றாள் மீனா.
“ஏய் மீனா, யாருடி இந்த பொண்ணு? இவளை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே,” என்று வள்ளி யோசனையில் ஆழ்ந்தாள்.
“இந்த மாதிரி விசேஷம் நடக்க வேண்டிய இடத்துல வந்து துப்பாக்கி காட்டுறே, யாருமா நீ?” என்று கதிரின் பெரியம்மா கேள்வி எழுப்ப,
சிறு புன்னகையுடன் சித்ராங்கி,
“ம், உங்களுக்கு எல்லாம் எமன்,” என்றாள்.
அவளின் வார்த்தையின் உள் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை. ஆனால் அந்த குரலில் இருந்த நிச்சயத்தன்மை, சிலரின் முதுகில் சில்லென்று நடுக்கத்தை ஏற்படுத்தியது.
“ஏய், உனக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி வந்து பிரச்சனை பண்ற? முதல்ல என் பையன் மேல இருந்து துப்பாக்கியை எடு!” என்ற சம்பத்தின் குரல் நடுங்கி தான் போனது.
“ஹாங், நானா இங்க வரல. நீயாதான் நேத்து நைட் என் வீட்டுக்கு ஆள அனுப்பி என்னை இங்க வரவச்சிருக்க. சரி, சொல்லு, என்ன பிரச்சனை உனக்கு?” என்று சித்ராங்கி அமைதியாக கேட்டாள்.
பேசிக்கொண்டே உதயாவின் நெற்றி பொட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து, தன் சட்டை பையில் பத்திரப்படுத்தினாள்.
“அது நான், உன் மேல இருந்த கோவத்துல தான் ஆள அனுப்பினேன்,” என்று சம்பத் தளர்ந்து சொன்னான்.
“என் மேல உனக்கு என்ன கோவம்?” என்று அவள் கண்ணை கூர்மையாக்கி கேட்டாள்.
“எனக்கு சேர வேண்டிய இடத்தை நீ எனக்கு கிடைக்க விடாம ஆக்கிட்ட. அதான் உன் மேல என் அப்பாவுக்கு அவ்வளவு கோவம்,” என்று ரம்யா கடுப்புடன் சொல்ல,
“ஓ,” என்று மட்டும் சொன்ன சித்ராங்கி, அருகிலிருந்த இருக்கையில் அமைதியாக அமர்ந்தாள்.
கண்களை மூடி, ஒருகணம் ஆழ்ந்த சுவாசம் எடுத்தவளின் அந்த அமைதி, அங்கிருந்த பரபரப்பை விட அதிகமாக பயமுறுத்தியது.
அவளின் செய்கையை அனைவரும் வினோதமாக பார்த்தனர். ஆனால் கதிர் மட்டும், கழுவுற மீனில் நழுவுற மீனைப் போல, அந்த சூழ்நிலையிலிருந்து தப்பித்து முல்லையை தேடி வேகமாக வெளியேறி இருந்தான்.
கதிர் வாசல் வரை விரைந்த போது, வெளியில் காற்று சற்றே குளிர்ந்திருந்தது.
ஆனால் அவன் உள்ளுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருந்தான்.
“முல்லை,!” என்று அவன் அழைத்த குரல் வெறுமையான தெருவில் ஒலித்தது.
சிறிது தூரத்தில், சாலையின் ஓரமாக வேகமாக நடந்து கொண்டிருந்தாள் முல்லை.
அவள் நடையின் வேகம் கோபத்தாலா, வலியாலா, அவளுக்கே புரியவில்லை.
கண்ணீர் வழியாமல் இருக்க அவள் முயன்றாள்.
ஆனால் அது அவளை கேட்கவில்லை.
“அக்கா, கொஞ்சம் நில்லு ,” என பின்னால் ஓடிவந்த கந்தன் மூச்சுத்திணறிக் கூவினான்.
முல்லை நிறக்கவே இல்லை.
மாறன் அவளுக்கு முன்னால் சென்று நின்றான்.
“பாப்பா... இப்போ ஏன் அழற. விடு... இப்போவது அவனை பற்றி உனக்கு தெரிஞ்சதே ?”
அந்த வார்த்தைக்கு முல்லை திடீரென நின்றாள்.
அவள் முகம் முழுக்க கண்ணீரால் நனைந்திருந்தது.
“நான் ஏமாந்துட்டேனா? கதிர் என்னை ஏமாத்திட்டாரா ?” என்று அவள் குரல் உடைந்து கேட்டாள்.
மாறன் அவளை சமாதானமாக கட்டி அனைத்தவன்.
“உன் மனநிலை எனக்கு புரியுது . ஆனா இப்பவாது உனக்கு அவரைப் பற்றி தெரிந்தது என்று நினைத்து சந்தோஷப்படு" என்றான்.
“சந்தோஷமா ?” என்று அவள் வெறுமையாக சிரித்தாள்.
அந்த சிரிப்பு கசப்பாக இருந்தது.
“கதிர் இப்படி பண்ணுவாருனு நான் நினைத்து கூட பார்க்கல" என்றவளின் வார்த்தை முடியும் முன் குரல் தகர்ந்தது.
கந்தன் அவள் தோளில் கை வைத்தான்.
“அக்கா,அழாத. நீ அழுதா எனக்கும் அழ வரும்" என்றவனின் கண்கள் கலங்கியது.
முல்லை கண்களை மூடி ஆழ்ந்த மூச்சு விட்டாள்.
“எனக்கு இங்க ஒரு நிமிஷம் கூட நிக்க மனசு இல்ல.”என்று முல்லை மேலும் கண்கள் கலங்க,
அந்த நேரத்தில் சற்றே தூரத்தில் ஒரு கார் சத்தம் கேட்க,
ஈஷா வேகமாக கார் ஓட்டி வந்து அவர்களருகே நிறுத்தினாள்.
கண்ணாடியை கீழே இறக்கி,
“முல்லை, இப்ப எதுவும் பேசறதுக்கு நேரமில்லை. கார்ல உட்காருங்க,” என்றாள் அவசரமாக.
முல்லை ஈஷாவை பார்த்து வெட்கி தலை குனிந்தாள்,
“நான் உங்கள வீட்டுல விட்டுட்டு வந்து மேடமை அழிச்சிட்டு போறேன். இப்போ தயவு செஞ்சு டைம் வேஸ்ட் பண்ணாம காருல ஏறுங்க" என்று
அவள் குரலில் மரியாதையும், கட்டாயமும் கலந்திருந்தது.
முல்லை ஒரு நொடி தயங்கினாள்,
மாறன் கதவை திறந்து,
“வா பாப்பா ,” என்று மெதுவாக சொன்னான்.
கந்தன் பின்பக்கம் உட்கார்ந்தான்.
முல்லை மெதுவாக காரில் அமர்ந்தாள்.
கார் வேகமாக பறந்தது.
அந்த நேரத்தில் தான் தெருவின் மூலையில் இருந்து ஓடிவந்த கதிர்
கார் நகரும் சத்தத்தை மட்டும் கேட்டு நின்றான்.
அவன் கண்களுக்கு, தொலைவில் செல்லும் காரின் பின்பக்கம் மட்டும் தெரிந்தது.
“முல்லை,” என்று சத்தமாக கத்தினான்.
அவன் கை விரல்கள் ரம்யாவிற்கு மோதிரம் போட எண்ணியதை நினைத்து அருகில் இருந்த சுவற்றில் ஓங்கி குத்திக் கொண்டான்.
இந்த முறை கோபம் சித்ராங்கி மேல் மட்டும் இல்லாமல்.
அவனை தவறாக புரிந்துகொள்ள வைத்த சூழ்நிலை மேலும் அவனுக்கு எழுந்தது.
காரில் பயணித்த முல்லை ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்.
கண்ணீர் துடைக்க அவள் முயற்சிக்கவில்லை.
ஈஷா ரியர் வியூ மிர்ரரில் அவளை ஒரு நொடி பார்த்தாள்.
“கொஞ்சம் strongா இரு முல்லை. எல்லாம் சரியாகிடும்,” என்றாள் மெதுவாக.
ஆனால் அந்த வார்த்தை
இப்போதைக்கு
முல்லையின் மனசுக்கு எட்டவில்லை.
கார் இருளில் கரைந்து சென்றது.

இதே நேரம் சித்ராங்கியோ,
“சோ, உங்க பாயிண்ட் ஆஃப் வியூல நான் உங்களுக்கு சேர வேண்டிய சொத்தை ஏமாத்தி நான் எடுத்துக்கிட்டேன், அப்படித்தானே?” என்று சம்பத்திடம் கேட்க,
“நீ எங்களையும் அப்படித்தானே பண்ண?” என்று கேட்டார் கதிரின் அப்பா பரந்தாமன்.
இதுவரை அவர்கள் இருந்த திசை பக்கம் கூட தலையை திருப்பாத சித்ராங்கி, “Come again,” என்றாள்.
அவளின் கண்களில் கட்டுக்கடங்காத கோபம் தெளிவாக தெரிந்தது.
அவள் சொன்ன ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாமல் பரந்தாமன் புருவங்களை சுருக்க,
“மாமா, உங்களை மறுபடியும் சொல்லச் சொல்றாங்க,” என்று மீனா விளக்கினாள்.
“ஏய், சும்மா இருடி! இந்தா பொண்ணு...யாரு நீ? எங்க பசங்களுக்கு ஒரு நல்லது நடக்குற இடத்துல நீ வந்து என்ன பிரச்சனை பண்ணுற?” என்று கதிரின் அம்மா கேட்டார்.
“நல்லதா? நான் இருக்குற வரைக்கும் இனி அது உங்க வீட்டுக்கு எட்டாக்கனி தான்,” என்ற சித்ராங்கியின் வார்த்தையில் அனைவரும் குழம்பிப் போனார்கள்.
“ஏய், யாரு நீ? ஏன் இங்க வந்து பிரச்சனை பண்ணுற மாதிரி பேசுற?” என்று அதே கேள்வியை சமுடிஸ்வரி கோபத்துடன் கேட்டாள்.
“நான் இன்னும் பிரச்சனை பண்ணவே ஆரம்பிக்கல, சாமு,” என்றாள் சித்ராங்கி.
“ஏய்! என்ன நீ என் அக்காவைப் பேர் சொல்லி கூப்பிடுற?” என்று பரமேஸ்வரி கடுப்பாகக் கேட்டாள்.
“பேர் வைக்கிறதெதுக்கு!? சொல்லி கூப்பிடுறதுக்குத்தானே, பரமு?” என்றவளின் பதிலில்,
‘இவளுக்கு நம்ம பெயர்கள் எல்லாம் எப்படி தெரியும்?’ என்ற குழப்பம் அனைவரின் உள்ளத்திலும் எழுந்தது.
“இங்க பாரு, சரி, நான் உன்ன அடியாள் வைச்சு மிரட்ட நினைத்தது தப்புதான். அந்த விஷயத்தை அப்புறமா பேசிக்கலாம். இப்போ இங்க என் பொண்ணுக்கு நிச்சயம் நடக்கப் போகுது. இப்போ வந்து இங்க நீ பிரச்சனை பண்ணுறது சரியில்ல,” என்ற சம்பத்தைப் பார்த்து சித்ராங்கி சத்தமாகச் சிரித்தாள்.
அவள் சிரிப்பு அந்த இடத்தையே ஆட்டம் காண வைத்தது.
“‘நிச்சயம்’ன்னா நிச்சயதார்த்தமா? ஓ, But அது நிச்சயமா இனி நடக்காது,” என்று சித்ராங்கி சொல்ல,
அதே நேரம் வாசல் வரை சென்ற கதிர், அங்கே முல்லையை பாராமல் கனத்த இதயத்துடன் திரும்பி வந்திருந்தான்.
‘முல்லை தன்னை தவறாக எண்ணியிருப்பாள்’ என்று அறிந்த கதிருக்கு, இதற்கெல்லாம் காரணமான சித்ராங்கி மீது கொலைவெறி ஏற்பட்டது.
அதே கோபத்தோடு உள்ளே வந்தவன்,
“ஏய்! யாருடி உன்னை உள்ளே விட்டது? முதல்ல இந்த வீட்டுல இருந்து வெளியே போ!” என்று உருமினான்.
அவனைப் பார்த்து சித்ராங்கி கிண்டலாகச் சிரித்தாள்.
அவள் சிரிப்பு அங்கிருந்த அனைவரையும் மேலும் கோபப்படுத்த,
“பாப்பா, என்னம்மா நீ? உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், நல்லது நடக்குற இடத்துல இப்படி வந்து ரகளை பண்ணக் கூடாது மா,” என்றார் கதிரின் பாட்டி தேவி.
வயதில் மூத்தவரை அழுத்தமாக பார்த்த சித்ராங்கி,
“ஊருக்குத்தான் உபதேசம் போல,” என்று சொன்னாள்.
“என்னம்மா சொல்ற நீ?” என்று மீனாவின் அம்மா வள்ளி கேட்க,
“ம், சொல்லுறேன். இனி மறைத்து என்ன ஆகப் போகுது?” என்றவள் நேரே ரம்யா, உதயா, சம்பத் எதிரே சென்று நின்றாள்.
“மிஸ்டர் சம்பத், நீங்க இந்த நிச்சயத்தை நடத்துங்க நடத்தாம போங்க, இந்த குடும்பத்துக்கு நீங்க சம்மந்தி ஆகுங்க ஆகாம போங்க. ஆனா எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சே ஆகணும். ஹாங்” என்றாள்.
இதுவரை கோபத்துடனும் திமிருடனும் பேசிய சித்ராங்கியின் குரலில் இப்போது சிறு நகைப்பு கலந்திருந்தது.