• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
158
படலம் - 18.2

இப்படியாக அன்றைய இரவு கடந்து இருக்க. மறுநாள் காலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரை முல்லை கதிரின் கைபேசிக்கு அழைத்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்தே போய்விட்டாள்.

"அக்கா... என்னாச்சு...ஏன் சோகமா இருக்க"என்று கந்தன் கேட்க,"அதெல்லாம் ஒன்னும் இல்ல. நான் நல்லா தான் இருக்கேன்" என்ற முல்லை மீண்டும் செல் போன் மூலம் கதிரை அழைத்தாள்.

தன் சகோதரியின் கையில் புதிய கைபேசியை பார்த்து கந்தன், " என்ன அக்கா இது புது ஃபோனா!? ஏது உனக்கு இந்த போன்!?' என்று கேள்வி கேட்க, என்னது புது ஃபோனா!?" என்று அதே கேள்வியுடன் அங்கே வந்தான் மாறன்.

மாறன் கேட்கும் கேள்வியை பொருட்படுத்தாத முல்லை மீண்டும் கதிரை கை பேசி வாயிலாக அழைக்க, அவனோ இவள் அழைப்புக்கு பதில் தரவே இல்லை.

"முல்ல... ஏது இந்த போன்!?" என்று மாறன் கேட்க, "கதிர் கொடுத்தாரு" என்றவள் கண்களில் எந்த வித தயக்கமும் இல்லை.

"கண்டவன் தரத எல்லாம் கை நீட்டி வாங்க கூடாதுனு உனக்கு தெரியாதா" என்ற மாறனை, "கதிர் ஒன்னும் கணடவன் இல்லை" என்று கண்டிக்கும் குரலில் பதில் கொடுத்தாள் முல்லை.

"ஆமா அண்ணா... அவன் கண்டவன் இல்ல. கேவலமானவன்" என்று கந்தன் சொல்ல... "டேய்... இன்னோரு முறை கதிரை பார்த்து இப்படி தப்பா பேசினீனா உன் வாயை உடைச்சிடுவேன்" என்று கந்தனின் தலையில் ஒரு குட்டு வைத்தாள் முல்லை.

"ஏய்... இப்போ ஏன் அவன அடிக்கிற... அவன் அப்படி என்ன தப்பா சொல்லிட்டான்" என்று மாறன் இயல்புக்கு மாறாக கத்தியதும்,"அவன் என் கதிரை தப்பா பேசினான் அதான் அடிச்சேன்" என்றாள் முல்லை.

"என்ன உன் கதிரா... ஓ... என்னை விட உனக்கு அவன் தான் முக்கியமா" என்று கலங்கிய விழிகளுடன் கந்தன் கேட்க, "நான் அப்படி சொல்லவே இல்ல. எனக்கு நீ எந்த அளவுக்கு முக்கியமோ. என் கதிரும் எனக்கு அந்த அளவுக்கு முக்கியம்" என்றாள் முல்லை.

இவர்கள் மூவரும் மாறி மாறி பேசும் வார்த்தைகள் எல்லாம் dinning டேபிளில் அமர்ந்து இருக்கும் சித்ராங்கி காதில் விழுந்த வேகத்தில்,"கந்தா... " என்ற அவளின் குரலில் முல்லையின் அறையில் இருந்து வேகமாக ஓடி வந்தான் கந்தன்.

தேவையற்று அதிர்ந்து பேசாத சித்ராங்கியின் குரல் அந்த கட்டிடத்தை ஒரு கனம் அசைத்து பார்க்க, "என்ன CR!?" என்று கண்களை துடைத்தப்படி கேட்டான் கந்தன்.

அவன் வார்த்தையில் மேடம் என்ற சொல் காணாமல் போக,இதை கேட்ட ஈஷாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

ஆனால் சித்ராங்கி அதை பெரிதாக கருத்தில் கொள்ளாதவள்,"சாப்பிட்டியா!?" என்று கந்தனை கேட்க, "இன்னும் இல்ல, இனிமே தான்" என்றவன் முல்லை அடித்தத்தால் ஏற்பட்ட வலியில் தலையை தடவிக் கொடுத்துக்கொண்டான்.

அவன் முக சுணங்களை வைத்தே அவன் வலியை உணர்ந்து க்கொண்டவள், "மாறா..." என்று சத்தமாக அழைக்க, தலைத்தெரிக்க ஓடிவந்தான் மாறன்.

"உன் சிஸ்டர்க்கு என்ன தான் பிரச்சனை. நான் அன்னைக்கே கந்தன் மேல அவ கை வைக்கக்கூடாதுனு வார்ன் பண்ணேன் தானே" என்று சித்ராங்கி உரும்பினாள்.

அவள் கோவத்தில் மாறன் பயந்து நடுங்க, "இங்க பாருங்க... என் தம்பி அவன். அவனை நான் அடிப்பேன் கொஞ்சுவேன் மிதிப்பேன்.. அது என் இஷ்டம். இதெல்லாம் கேட்க நீங்க யாரு" என்று முல்லை பதில் கொடுக்க, "எதுக்காக கந்தனை அடிச்ச " என்று கேட்டாள் ஈஷா.

"அவன் என் கதிரை பற்றி தப்பா பேசினான். அதான் அடிச்சேன்" என்று முல்லை திமிராக பதில் கொடுக்க, "உன் கதிரா!?" என்று கேட்ட சித்ராங்கியின் இதழ்களில் ஏளனமான புன்னகை மலர்ந்தது.

"ஆமா... அவரு என் கதிர் தான்" என்று முல்லை சொல்ல... அவளை அழுத்தமாக பார்த்த சித்ராங்கி, "That's fine. மாறா... Sharp 10am நீ உன் சிஸ்டர் and கந்தன் மூணு பேரும் ரெடியா இருங்க. நம்ம வெளிய போகணும்" என்று சித்ராங்கி சொல்ல... அவர்களுடன் சேர்ந்து ஈஷாவும் திருத்திருவென முழித்தாள்.

"மேடம்... ஆனா இன்னைக்கு பத்து மணிக்கு நமக்கு ஆன்லைன் மீட்டிங் இருக்கு மேடம்" என்று ஈஷா சொல்ல, "டெலீட் all that" என்றவள் தன் தட்டில் இருக்கும் சாப்பாட்டில் பாதியை கந்தனுக்கு கொடுத்து அவனை சாப்பிட வைத்தாள்.

"ஹலோ... நான் ஏன் உங்க கூட வரணும். என்னால எல்லாம் எங்கேயும் வர முடியாத" என்ற முல்லை கோவமாக அறைக்குள் செல்லஞ முயன்றவளை, "நீ வரலைனா நீட்டி நீட்டி பேசுற உன் கை உன் உடம்புல இருக்காது" என்ற சித்ராங்கி, வேகமாக எழுந்து மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றாள்.

"அண்ணா.. இங்க என்ன நடக்குது. உன் எதிர்ல ஒருத்தவுங்க என் கையை வெட்டிடுவேன்னு சொல்லிட்டு போறாங்க நீ என்ன அவங்கள எதிர்த்து கேள்வி கேட்காம இப்படி லூசு மாதிரி நின்னுகிட்டு இருக்க" என்று முல்லை கேட்க, மாறன் பதில் ஏதும் பேசாமல் அவன் அறைக்கு சென்று இருந்தான்.

கதிரை தவிர்த்து தன்னை சுற்றி இருக்கும் அனைவரும் முல்லைக்கு எதிரியாக தோன்றி இருக்க,"முல்ல... விஷேஷத்துக்கு போற மாதிரி ட்ரெஸ் பண்ணிட்டு வான்னு மேடம் மெசேஜ் அனுப்பி இருக்காங்க" என்று தன் கைபேசியை பார்த்தப்படி சொன்னாள் ஈஷா.

ஏற்கனவே கோவமாக இருந்த முல்லை, "ஓ... ஒரு டிரஸ் கூட உங்க மேடம் சொல்லுற மாதிரி தான் நான் போட்டுட்டு வரணுமா. ச்சி.. எல்லாம் என் தலையெழுத்து" என்றவள் தன் பார்வையை கந்தன் பதிக்க, அவனோ சித்ராங்கி கொடுத்த உணவை ரசித்து ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.

யாருக்கும் இவள் வேண்டாதவளாக இவளே எண்ணிகொண்டவள் மேலும் கடுப்புடன் அவள் அறைக்கு சென்று தலையெழுத்தே என்று தன் ஆடைகளை களைந்து வேறொரு ஆடையை அணிந்துகொண்டாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இடம் – ரம்யாவின் இல்லம்.

அந்த இடமே இன்று ஒரு சிறிய கல்யாண மண்டபம் போலவே காட்சியளித்தது.

மாடிப்படியில் இருந்து ஹாலின் நடுப்பகுதி வரை மல்லிகைப்பூ வாசனை பரவி இருந்தது.

சோபாவின் முனையில், திமிர் கலந்த அமைதியுடன் Xmla சம்பத் அமர்ந்திருந்தார்.

அவரின் முகத்தில் பெருமையும், எதையும் முடிக்க முடியும் என்ற உறுதியும் தெரிந்தது.

அவருக்கு எதிரே, வாய் நிறைய சிரிப்புடன் கதிரின் குடும்பம் அமர்ந்து இருந்தது.

அந்த சிரிப்பின் பின்னால் ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு கணக்குகள் ஓடிக் கொண்டிருந்தன.

கதிரின் அம்மா பரமேஸ்வரி மென்மையான புன்னகையுடன் இருந்தார். அப்பா பரந்தாமன் சமாதானமாக தலை ஆட்டிக் கொண்டிருந்தார்.

பெரியம்மா சாமுண்டி, பெரியப்பா சாரங்கம் என்று அவர்கள் முகத்தில் உற்சாகம் தெளிவாக தெரிந்தது.

அவர்களது மகன் வெங்கட் சற்றே சலிப்புடன் இருந்தாலும் வெளியில் காட்டவில்லை.

கதிரின் மாமா ஆறுமுகம், அவரது மனைவி வள்ளி, அவர்களின் மகள் மீனா, மற்றும் வீட்டின் பெரியவர் சித்ரா தேவி பாட்டி என்று அனைவரும் அங்கே இருந்தனர்.

இன்று சாதாரண சந்திப்பு அல்ல. இது ஒரு பெண் பார்க்கும் நிகழ்வை போல தான் இருந்தது.

கதிருக்கு, சம்பத்தின் மகள் ரம்யாவை பெண் பார்க்க வந்திருந்தார்கள். அதே நேரத்தில், வெங்கட்டுக்கு சம்பத்தின் அண்ணன் மகள் அகல்யாவை பெண் கேட்கும் பேச்சும் நடக்க இருந்தது.

வெளியில் பார்த்தால் எல்லாம் சிரிப்பும் சம்மதமும். ஆனால் உள்ளுக்குள் வெவ்வேறு புயல்கள் வீசிக்கொண்டு தான் இருந்தது .

கதிரின் மனம் இங்கே இல்லை. அவன் நினைவு முழுதும் முல்லை தான் ஆக்கரமித்து இருந்தாள்.

இந்த கல்யாணம் அவனுக்கு இஷ்டம் இல்லை. ஆனால் ரம்யா ஒரு பெரிய கோடீஸ்வரி. அந்த ஒரு காரணத்துக்காகவே கதிரின் குடும்பம் விரைவாக சம்மதம் சொல்லத் தயாரானது.

வெங்கட்டின் நிலையும் வேறல்ல. நினைவு தெரிந்ததில் இருந்தே அவன் மனதில் மீனா மட்டும் தான் இருந்தாள்.

அவள்மீது இருந்த காதல் அவனை அமைதியாக இருக்க விடவில்லை. இருந்தாலும் குடும்பத்திற்காக அவனும் அங்கே வாயடைத்து அமர்ந்திருந்தான்.

அந்த நேரத்தில் சம்பத் தனது குரலை உயர்த்தி,
“சரி... சூட்டோட சூடாக என் மனசுல இருக்கறதை சொல்லிடுறேன்.கதிர் மட்டும் வீட்டோட மாப்பிள்ளையா இருந்தா உங்கள என் சம்மந்தியாக ஏற்றுக்கொள்ள நான் ரெடி தான்" என்றார்.

அவரின் பேச்சை கேட்டு அங்கே ஒரு நிமிடம் அமைதி நிலவ...
கதிர் முகம் மாறி உடனே மறுக்கப் போனான்.

ஆனால் அவன் பேசுவதற்கு முன்னரே பரமேஸ்வரி, பரந்தாமன் இருவரும், “அதுக்கு என்ன சார்? எங்களுக்கு பிரச்சனை இல்ல” என்று உடனே ஒப்புக் கொண்டனர்.

கதிரின் உள்ளம் கொதித்தது.
அந்த நேரத்தில், மூலையில் அமைதியாக அமர்ந்திருந்த கதிரின் பாட்டி தேவி குரல் எழுப்பினார்.

“இது சரி இல்ல. எங்க குடும்பத்துக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை. அதுவும் இல்லாமல் பிள்ளையோட மனசையும் கேட்கணும்,”என்றார்.

ஆனால் யாரும் அவரை கவனிக்கவில்லை. அவருடைய வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட்டன.

சம்பத் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்து,“சரி, இப்போ ரம்யாவுக்கும் அகல்யாவுக்கும் பூ மட்டும் வைச்சுடலாம்,” என்று சாமுண்டி உற்சாகமாக கூறினார்.

உடனே பெண்கள் பூத்தட்டுகளை கொண்டு வந்தனர். ரம்யாவுக்கும் அகல்யாவுக்கும் பூ வைத்து நிகழ்ச்சி தொடங்கியது.

ரம்யாவின் முகம் மகிழிச்சியில் மிளிர்ந்தது.கதிரின் முகத்தில் இருள் சூழ்ந்தது. மீனா இங்கே வேடிக்கை பார்க்கும் ஆளாக இருந்தாள்.
வெங்கட் சூழ்நிலை கைதியாக இருந்தான்.

யாரும் எதிர் பாராத வண்ணம் “இதை போடு,” என்று சாமுண்டி ஒரு மோதிரத்தை கதிரின் கையில் கொடுத்தார்.

கதிரின் விரல்கள் உறைந்தன. அவன் தயங்கினான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top