• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
156
படலம் 17.2

அவள் எந்த நோக்கத்தில் கேட்கிறாள் என்று புரிந்துக்கொண்ட கதிரோ, "ஹாங்.. நீ படிச்சி டாக்டர் ஆகிட்டு வா. நான் வெயிட் பண்ணுறேன்" என்றவனின் வாக்குறுதி காருக்கு வெளியே நின்று இருக்கும் மீனா வெங்கட் காதில் விழ, அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டார்கள்.

"ஆமா உங்க வீட்டுல என்னை accept பண்ணிப்பாங்களா" என்று முல்லை மேலும் எழுப்ப, "அவங்க பண்ணலைனா கூட கதிர் உன்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணுவான்" என்று காரின் வெளியே நின்றப்படி சொன்னான் வெங்கட்.

அவன் கடுப்பாக சொல்கிறான் என்று அறிந்திடாத முல்லையின் முகத்தில் சந்தோசம் எழ, "அப்படியா கதிர்" என்று கேட்டவள் சட்டென்று அவனை இறுக்கமாக கட்டிக்கொண்டாள்.

கதிரின் உள் மனதில் இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் எழுந்தாலும் அந்த நொடி அவனும் முல்லையின் அன்பில் உருகி தான் போனான்.

சில நொடிகள் அங்கே அமைதி மட்டுமே நிலவிய நிலையில், "டேய் மாமா... நேரமாகுது. முல்லையை அனுப்பிவை" என்றாள் மீனா.

"ஆமா ஆமா... அந்த ராங்கி வந்துட்டா அப்புறம் அதுக்கு வேற நீ அவகிட்ட பதில் சொல்லணும்" என்று கதிர் சொல்ல.

"இன்னும் 5 நாள் தான் கதிர். என் அம்மா அப்பா வந்ததும் நாங்க எங்க வீட்டுக்கு போயிடுவோம். அப்புறம் நான் இந்த ராங்கிக்கு எல்லாம் கட்டுப்பட மாட்டேன்" என்ற முல்லை கதிர் வாங்கி தந்த போனை எடுத்துக்கொண்டு காரில் இருந்து சிரித்த முகத்துடன் கீழே இறங்கினாள்.

"கதிர்...இன்னைக்கு நைட்டு நான் போன் பண்றேன். உடம்ப பார்த்துக்கோங்க. எனக்காக ஃபோன் வாங்கி கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ். அப்புறம் மறந்துடாம அந்த போலீஸ் விக்ராந்த் யாருன்னு விசாரிச்சு இந்த ராங்கியை நம்மனால என்ன பண்ண முடியும்ன்னு பாருங்க" என்ற முல்லை பிரிய மனம் இல்லாமல் கதிர் வந்த காரில் இருந்து இறங்கி VCR பங்களாக்குள் சென்றாள்.

"மீனா காருல ஏறு" என்ற வெங்கட்... முல்லை சென்ற அடுத்த நிமிடமே அவன் காரை அங்கிருந்து தன் வீட்டை நோக்கி விரட்டினான்.

வழியெல்லாம் கதிர் அமைதியாகவே இருக்க,"நீ பண்றது உனக்கே சரியா படுதா" என்று கேட்டாள் மீனா.

அவள் கேள்வி எதைப்பற்றி என்று அறிந்து இருந்த கதிர் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க,"டேய் கதிர்...நீ என்னடா பண்ற...இப்போ ஏன் டா முல்லையை பார்த்து போன் எல்லாம் கிப்ட் தர" என்று கேட்டான் வெங்கட்.

மீனா வெங்கட் என்று இருவரும் கேட்கும் கேள்விகளுக்கு வாயை திறக்காத கதிர், "போலீஸ் ஆஃபீஸ்ர் விக்ராந்த் யாருன்னு விசாரிச்சு சொல்லு மீனு" என்றான்.

"டேய்... நான் என்ன கேக்குறேன் நீ என்ன பேசுற. இப்போ ஏன்டா அந்த சின்ன பொண்ணு மனசுல இல்லாத பொல்லாத ஆசையை எல்லாம் வளர்த்து விடுற" என்று மீனா கோவமாக கேட்க,

" இதெல்லாம் நீ கண்டுக்காத. நான் என்ன பண்ணுறேன்னு எனக்கு நல்லாவே தெரியும்" என்றான் கதிர்..

அவன் பதிலில் கடுப்பான மீனா, "என்னமோ பண்ணி தொல, ஆனா அந்த பொண்ணு பாவம். படிக்கிற வயசுல உன்ன போய் தற்குறி தனமா நம்பிகிட்டு இருக்கு பாரு. எல்லாம் இந்த வயசு கோளாறு" என்ற மீனா தன் கையில் உள்ள செல் போனில் விக்ராந்த்தை பற்றிய செய்திகளை ஆராய தொடங்கினாள்.

அன்றைய தினம் ஈஷாவும் சித்ராங்கியும் மாலை 7pm அளவில் தான் VCR பங்காளவிற்கு வந்து சேர்ந்தார்கள்.

அவர்கள் வரும் வரை வாட்ச் மேன் வாசலில் காத்து இருந்தவன், "மேடம் மேடம்... நான் எவ்வளவு சொல்லியும் உள்ள இருக்குற பொண்ணு பங்களாவை விட்டு வெளிய போயிட்டு வந்தாங்க மேடம்" என்றான்.

செல்வம் சொன்னதை காதில் வாங்கிய சித்ராங்கி, "நீங்க கிளம்புங்க. நாளைக்கு பேசிக்கலாம்" என்றவள் வீட்டுக்குள் நுழையும் தருணம், "ஆன்ட்டி" என்று அழைத்து இருந்தாள் சிறுமி தேன் மொழி.

தேனின் குரலை கேட்டு சித்ராங்கி அதே இடத்தில் நின்றதும், "வணக்கம் மேடம்" என்ற கருப்பன் தயக்கத்துடன் அங்கே வந்து பவ்யாமாக நின்றான்.

சிறுமியையும் கருப்பணையும் மாறி மாறி பார்த்த சித்ராங்கி,அப்படியே ஈஷாவை பார்க்க,"உள்ள வாங்க" என்று அழைத்தாள் ஈஷா.

சிறுமியை தூக்கிக்கொண்டு கருப்பன் பங்களாவிற்குள் நுழைய, "உக்காருங்க" என்றாள் ஈஷா.

கருப்பனும் சிறுமியும் அருகருகே அமர்ந்து இருக்க, சித்ராங்கி அவர்கள் முன்னே அமர்ந்தவள், "என்ன விஷயம்" என்று கேட்டாள்.

"இது எப்படி சாத்தியமுன்னு எனக்கு தெரியல மேடம். எங்க தோப்ப எப்படி நீங்க எங்க பேர்லயே எழுதி தர முடியும்" என்று கருப்பன் கேட்க,

"உங்க தோப்ப உங்க பேர்ல தானே எழுதி கொடுத்திருக்கேன், What's wrong about that!? என்று கேட்டாள்.

"அதான் மேடம் எப்படி!?" என்று மீண்டும் கருப்பன் புரியாமல் கேட்க,"அதெல்லாம் அப்படி தான். மேற்கொண்டு உங்களுக்கு அந்த இடத்துல எந்த பிரச்சனையும் வராது"என்றாள் சித்ராங்கி.

"சரி மேடம், நீங்க என்னமோ சொல்றிங்க. எனக்கு தான் எதுவும் விளங்கள. ஆனா என் ஆத்தா மாதிரி நீங்க தக்க சமயத்துல எங்கள காப்பாத்திருக்கிங்க. இந்த உதவியை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன் மேடம்" என்ற கருப்பனை பார்த்து நன்றியுடன் சிரித்தாள் சித்ராங்கி.

அவளின் சிரிப்பில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாமல் ஈஷாவே குழம்பி தான் போனாள்.

"மேடம்... உங்களுக்கு எப்ப எந்த உதவி வேணும்னாலும் ஒரு சகோதரனா இருந்து உங்களுக்கு உதவ நான் காத்து இருக்கிறேன் மேடம்" என்று கருப்பன் சொல்ல,

"ஹ்ம்... நீங்க எனக்கு எதிரியே கூட இருந்துடுங்க, but இந்த அண்னன் தம்பி உடன் பிறப்பு ஊறுகா உறவு எல்லாம் எனக்கு வேண்டாம்" என்ற சித்ராங்கியின் மனதில் கதிரின் குடும்பம் அவளுக்கு செய்த துரோகத்தின் வடு ஆராமல் தான் இருந்தது.

சித்ராங்கி என்ன பேசுகிறாள் என்று புரிந்துக்கொள்ள முடியாத சிறுமி தேன்மொழி, "ஆன்ட்டி... இனி என் அம்மா அப்பா இருக்குற இடத்தை யாரும் ஒன்னும் பண்ண மாட்டாங்க தானே!?" என்று கேட்க,

"இனி உன் பெரியப்பா கருப்பனே நினைச்சாலும் உன் பேர்ல இருக்குற இடத்தை எதுவும் பண்ண முடியாது" என்றாள் சித்ராங்கி.

"ஹ்ப்பா...இப்போ தான் ஆன்ட்டி எனக்கு சந்தோசமா இருக்கு" என்ற சிறுமி சித்ராங்கியின் அருகே சென்று அவள் கையை பிடித்து, "ரொம்ப thanks ஆன்ட்டி" என்றாள்.

குழந்தையின் முகத்தில் தெரிந்த சிரிப்பை பார்த்து சின்னதாக புன்னகையை உதிரித்த சித்திராங்கி, "எனக்கு ஏன் thanks சொல்லுற. இந்த வயசுல நீ தான் பணம் சேர்த்து வச்சி அந்த இடத்தை என்கிட்ட இருந்து வாங்கி இருக்க, அதனால எனக்கு உன் thanks வேணாம்" என்றாள் சித்ராங்கி.

"ஆமா ஆமா... நான் தான் பணம் கொடுத்து வாங்கினேன். ஆனாலும் உங்களுக்கு thanks" என்ற சிறுமி சித்ராங்கி கையை பிடித்து உரிமையோடு முத்தமிட்டவள், "நாங்க போய்ட்டு வரோம் ஆன்ட்டி" என்றவள் தன் பெரியப்பா கருப்பனை அழைத்துக்கொண்டு VCR பங்களாவில் இருந்து வெளியே சென்றாள்.

சிறுமி சென்ற பாதையை பார்த்து இருந்த ஈஷாவோ, "ஏன் மேடம்... இவ்ளோ பண்ண நீங்க.அந்த குழந்தை சேர்த்து வச்ச காசை அவகிட்டயே கொடுத்து இருக்கலாமே" என்று கேட்டாள்.

ஈஷாவின் கேள்வியில் சித்ராங்கி அர்த்தமாக சிரித்தவள், "அப்படி நான் பண்ணா! அந்த குழந்தைக்கு அந்த தோப்பு இலவசமா கிடைச்ச மாதிரி தோணும்,

ஆனா இப்போ பாரு. அவ சேர்த்து வச்ச பணத்துல அந்த இடத்தை அவளே என்கிட்ட இருந்து வாங்கி இருக்கான்னு ஒரு சந்தோசம் இருக்கு அவளுக்கு.

பிள்ளைங்க வளரும் போதே அடுத்தவுங்க பணத்துக்கு ஆசை படுறது, இலவசத்துக்கு மயங்குறதுன்னு இல்லாம. நம்ம பணம் கொண்டு தான் நமக்கு தேவையானதை வாங்கணும் என்ற நியாயத்தை உணர்ந்து வளரனும்" என்ற சித்ராங்கி வேகமாக மாடியில் உள்ள தன் அறைக்கு சென்று இருந்தாள்.

சித்ராங்கி சென்ற பாதையை கவனித்துக் கொண்டிருந்த ஈஷா,
“என்ன இது, மாறன், கந்தன், முல்லை யாரையும் காணோமே!” என்று எண்ணிக்கொண்டே தன் அறைக்குள் சென்றாள்.

அந்த சமயம், “அண்ணா, கதவைத் திற! வெளியே ஏதோ சத்தம் கேட்குது, பாரு!” என்று கந்தன் தன் அறையிலிருந்தபடியே கத்தினான்.

“டேய், அமைதியா இரு டா. இப்போ வெளியே போனா, முல்லை பண்ண காரியத்துக்காக பெரிய மேடம் என்னைத்தான் கட்டி வைத்து அடிப்பாங்க!” என்று மாறன் சற்று பதட்டத்துடன் சொன்னான்.

சித்ராங்கி வீட்டுக்கு வருவதற்கு முன்னரே சாப்பிட்டு விட்டு, தன் அறையில் அமைதியாக அமர்ந்திருந்தான் அவன்.

இதற்கிடையில், முல்லை தன் அறையில் பாடங்களை கவனமாகப் படித்துக் கொண்டிருந்தாள்.

கதிர் மீது அவளுக்கு இருந்த காதல் எவ்வளவு ஆழமோ, அதே அளவுக்கு அவள் படிப்பின் மீதும் கொண்டிருந்த தீராத ஆர்வம் குறையாமல் இருந்தது.

நீண்ட நேரம் படித்து முடித்தவள், தண்ணீர் எடுக்க வெளியே வந்தாள்.

அப்போது ஈஷாவும் சித்ராங்கியும் இரவு உணவை உட்கொண்டுக் கொண்டிருந்தனர்.

சித்ராங்கியை பார்த்தவுடன் முல்லையின் மனதில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்தது.

இன்று பங்களாவில் இருந்து கதிரைச் சந்திக்க வெளியே சென்ற விஷயத்தை பற்றி அவள் கேள்வி கேட்பாளோ என்று நினைத்தாள்.

ஆனால் அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்தது.

ஆம், வெங்கட், கதிர், மீனா இங்கு வந்ததையும், முல்லை அவர்களை கார் வரை சென்று சந்தித்ததையும் பற்றி சித்ராங்கி ஒரு வார்த்தை கூட கேள்வி எழுப்பவில்லை.

அது முல்லைக்கு ஆச்சரியமாக இருந்தது.
அவளும் அந்த விஷயத்தை பெரிதுபடுத்தாமல், தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள்.

உடனே கதிரின் கைப்பேசிக்கு அழைப்பு வைத்த முல்லை,
நீண்ட நேரம் அழைத்தும், கதிர் பதில் அளிக்கவில்லை.

“ஒருவேளை சாப்பிட்டு மாத்திரை போட்டுட்டு நேரத்தோட தூங்கிட்டாரோ என்னவோ, சரி, நாளைக்கு எப்படியாவது அவரே போன் பண்ணுவார்,” என்று எண்ணிக் கொண்டாள்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், முடிந்தவரை படிப்பில் கவனம் செலுத்திய முல்லை தன் வேலைகளை முடித்துவிட்டு, இன்று கதிரை பார்த்த மனநிம்மதியுடன் மகிழ்ச்சியாக உறங்கச் சென்றாள்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

அடுத்த படலத்தில் வாசிக்க இருப்பது ✨

இடம்: சம்பத்தின் இல்லம்.

“என்ன சொல்றீங்க? எங்க வீட்டுப் பையன உங்க வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பணுமா? இது எந்த ஊரு நியாயம்?”
என்று கதிரின் பாட்டி தேவி கோபமாகக் கேட்டார்.

அதற்கு பரமேஸ்வரி அமைதியாக,
“என்னம்மா, இதுல என்ன தப்பு இருக்கு? இவங்க எவ்வளவு பெரிய இடம், கோடீஸ்வர குடும்பம்! ‘என் புள்ள வீட்டோட மாப்பிள்ளையா இருக்கிறான்னு சொன்னா கேவலம் போல தோணும்.

ஆனா இந்த வீட்டுக்கு அவன் மூத்த பிள்ளையா இருக்கிறான்னு சொன்னா, எனக்கு அது கௌரவம்தான்!” என்றாள்.

சந்தையில் மாட்டை விலை பேசுவதை போல கதிரை அவர்களின் குடும்பம் சம்பத்திடம் விலை பேசிக்கொண்டு இருக்க,

இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு சோபாவில் ரம்யாவின் அருகே அமர்ந்திருந்த கதிரின் மனநிலை, மதில் மேல் நின்ற பூனை போலத் திணறிக் கொண்டிருந்தது.

-தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top