• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
156
தீமையே 🔱 வெ[கொ]ல்லும்.

படலம் - 17

இடம் சம்பத்தின் பங்களா.

வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் தூக்கி கீழே வீசி அடித்தாள் ரம்யா.

"பீச்... இப்போ ஏன் இவ்ளோ கோவப்படுற" என்று உதயா கேட்க, "இதை கேட்க உனக்கு அசிங்கமா இல்லையா" என்றாள்.

"ரம்யா... உன் கோவம் எனக்கு புரியுது. ஆனா... அந்த பத்திரம் சட்டபடி பதிவாகி இருக்கு" என்று உதயா சொல்ல, "அதான் எப்படி!?" என்று முறைத்தாள்.

"ஏன் எப்படி எதனாலன்னு நான் கண்டுபிடிக்கிறேன். நீங்க இனி இதபற்றி பேச வேண்டாம்" என்ற சம்பத். தன் கைபேசி வாயிலாக அவரின் அடியாட்களை அமைத்து VCR பங்களாவில் இருக்கும் சித்ராங்கியை தன் இடத்துக்கு இழுத்து வருமாறு கட்டளையிட்டார்.

தன் தந்தையின் செயலில் உதயா சற்று சாந்தம் ஆனான். ஆனால் மாறாக ரம்யா கோபத்துடன் நின்று இருக்க, "இன்னும் என்ன ரம்மி என்ன உனக்கு பிரச்சனை" என்று தன் மகளின் அருகே வந்தார் சம்பத்.

தனக்காக எதையும் செய்ய துணியும் தந்தையின் அன்பை அறிந்து இருந்த ரம்யா இது தான் நல்ல தருணம் என்று எண்ணியவள், "dad... நான் கதிரை காதலிக்கிறேன்" என்றாள்.

தன் மகளின் வார்த்தையை கேட்டு சம்பத்தின் முகம் மாறியது.
"என்ன dad... உங்களுக்கு கதிரை பிடிக்கலையா" என்று ரம்யா கேட்க, "அப்பா... கதிர் நம்ம குடும்பத்துக்கு ஏற்ற மாப்புள்ள தான்" என்றான் உதயா.

"டேய்... யாருடா நம்ம குடும்பத்துக்கு ஏற்ற ஆளு.அவங்க சரியான பிச்சக்கார குடும்பம் டா" என்று சம்பத் சொல்ல, "dad... கதிர் பேமிலி நம்ம அளவுக்கு ரிச் இல்ல தான். ஆனா after mrge அவரை நான் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடுவேன்" என்றாள் ரம்யா.

தன் மகளின் சொற்களை கேட்டும் மனம் இறங்க எண்ணமில்லாத சம்பத் ஆழ்ந்த யோசனையில் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்தார்.

"என்ன dad... என் ஆசையை நீங்க நிறைவேற்றி வைக்க மாட்டிங்களா" என்று ரம்யா கேட்க, "நான் உனக்கும் உன் அண்ணனுக்கும் கோடிஸ்வரன் வீட்டுல பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கலாமுன்னு நினைச்சேன்" என்றார் சம்பத்.

தன் தந்தையின் அருகே அமர்ந்த ரம்யா, "dad... pls... எனக்கு கதிர் வேணும். அவர் இல்லனா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்" என்று அனைவரும் பேசும் அதே வசனத்தையே இவளும் பேசி இருக்க. தன் மகளின் முகத்தை பார்த்து சற்று மனம் இறங்கி வந்தார் சம்பத்.

சில நொடிகள் யோசித்த சம்பத், "சரி... நாளைக்கு கதிர் வீட்டுல இருந்து வந்து என்னை பார்க்க சொல்லு" என்றார்.

தன் தந்தை தனக்காக இறங்கி வந்த மகிழ்ச்சியில் ரம்யா அவரை கட்டி அணைத்து அன்பு மழை பொழுந்தவள், "இதோ இப்போவே கதிர் அம்மாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிடுறேன்" என்று துள்ளி குதித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

தன் தங்கையின் மகிழ்ச்சி தான் தன்னுடைய சந்தோஷம் என்று எண்ணிய உதயா சிரித்த முகத்துடன் நின்று இருக்க, "டேய் உதயா இங்க வா" என்று அழைத்தார் சம்பத்.

"சொல்லுங்க அப்பா.. நாளைக்கு கதிர் வீட்டுல இருந்து வரும் போது இங்க விருந்து ஏற்பாடு பண்ணனுமா" என்று உதயா கேட்க,

"அதெல்லாம் அப்புறமா பண்ணலாம். முதல்ல அந்த குடும்பத்துல இருந்து கதிர் இந்த வீட்டுக்கு வீட்டோட மாப்பிளையா வர சம்மதிப்பானான்னு கேட்டு சொல்லு" என்றார் சம்பத்.

"அது.. அதெல்லாம் சம்மதிப்பான் தான்" என்று உதயா நம்பிக்கையுடன் சொன்னதும்,

"அவன் இங்க வந்துட்டா. ரம்யா கூட அவனை கனடாக்கு அனுப்பி வச்சி. அங்க இருக்குற நம்ப பிஸ்னஸை பார்த்துக்க சொல்லணும்" என்று சம்பத் சொல்ல...உதயாவும் சம்மதம் சொல்லும் விதமாக தலையாட்டினான்.

"சரி சரி...மேற்கொண்டு எல்லாத்தையும் நாளைக்கு பேசிக்கலாம்" என்ற சம்பத் நேரே தன் அறைக்குள் சென்றவன் இன்றைய இரவு சித்ராங்கியை பழி வாங்க வேண்டும் என்று காத்து இருந்தான்.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே தருணம்.
ஈஷாவுடன் சித்ராங்கி காரில் பயணித்து இருந்தவளுக்கு கதிரை பார்க்க முல்லை சென்ற விஷயம் கோவத்தை உண்டாகியது.

கதிரின் குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்து இருந்த சித்ராங்கி, "முல்லையை கதிர் பலி ஆடாகி பார்க்க போகிறான்" என்று சொன்னாள்.

"மேடம், ஆனா நம்ம வேணும்னா முல்லையோட அம்மாகிட்ட சொல்லி அவங்க பொண்ணை கண்டிக்க சொல்லலாமா" என்று கேட்டாள் ஈஷா.

"அவங்க ஹஸ்பண்ட்க்கு முடியாம போனத எண்ணியே அவங்க ரொம்ப கவலையா இருக்காங்க. இப்போ இந்த விஷயம் எல்லாம் அவங்க காதுக்கு போனா அது சரியா இருக்காது" என்ற சித்ராங்கி அவள் கவனத்தை வேலையில் செலுத்தினாள்.

"மேடம்... நேரா ஸ்பாட்க்கு போய் அந்த கதிரை உண்டு இல்லைனு பண்ணிடவா" என்று ஈஷா கேட்க,

"நீ அப்படி பண்ணா இன்னும் அந்த பொண்ணுக்கு அவன் மேல Sympathy தான் அதிகமாகும்" என்றாள் சித்ராங்கி.

"அப்போ என்னதான் மேடம் பண்றது" என்று ஈஷா கேட்க,

"We play by the book" என்ற சித்ராங்கி, சட்டென்று அவளின் மடிக்கணினி மூலம் Mrs மாயா என்ற பெயரில் உள்ள எண்ணுக்கு Call செய்தாள்.

இவள் அழைத்த அடுத்த நொடியே, "CR மேடம்... எப்படி இருக்கீங்க மேடம்" என்று மறுமுனையில் இருந்து வந்த கேள்விக்கு பதில் தராமல், "உங்க மெடிக்கல் காலேஜ்ல ஒரு Girlக்கு சீட் வேணும்" என்றாள் சித்ராங்கி.

"மேடம்... இந்த காலேஜ் இப்போ என்கிட்ட இருக்க காரணமே நீங்க தான். ஒரு சீட் இல்ல மேடம்... எத்தனை சீட் வேணும்னாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன் மேடம்" என மறுமுனையில் இருந்து பதில் வந்தது.

"கூல்... மீதி விஷயத்த Londonல இருக்குற VCR குரூப் மேனேஜர் உங்கள மீட் பண்ணி பேசுவாங்க" என்ற சித்ராங்கி இணைப்பை துண்டித்தவள் ஈஷாவை பார்க்க... அவள் முகத்தில் அப்போது தான் தெளிவு பிறந்தது.

"முருகன் அங்கிள் இன்னும் 4 to 5 days ல இங்க வந்துடுவாரு. So இன்னும் 10 days ல அந்த Girl-ஐ லண்டன்க்கு அனுப்பி வச்சா இந்த ரோட் சைடு ரோமியோவை அவனால பார்க்க முடியாது" என்ற சித்ராங்கியின் திட்டத்தை கேட்ட ஈஷா அது தான் சரி என்பதை போல அவள் இயக்கும் காரின் மீது கவனத்தை செலுத்தி இருந்தாள்.

இதே தருணம் கதிரின் இதயத்தில் முல்லை சாய்ந்து இருக்க, அவள் கூந்தலை அன்பாக வருடியவன்,அவனை மறந்து அவளை ரசித்துக்கொண்டு தான் இருந்தான்.

"கதிர்... அடுத்து நீங்க டாக்டர்க்கிட்ட எப்போ போகணும்" என்று முல்லை கேட்க, "நாளைக்கு போவேன்" என்றவன் தேனுண்ட வண்டய் போல அவளிடம் கிறங்கி கிடந்தான்.

"உங்கள நான் பார்க்க கூடாது, உங்ககிட்ட பேசக்கூடாதுன்னு வீட்டுல ஒரே பிரச்சனை தெரியுமா" என்று முல்லை வருத்தமாக சொல்ல, "அந்த ராங்கி யாரு உனக்கு ஆர்டர் போட" என்று கேட்டான் கதிர்.

"அட... நான் ஏன் அந்த ராங்கிக்கு பயப்புடனும். நான் என் அண்ணனையும் என் தம்பியையும் சொன்னேன்" என்று முல்லை சொல்ல... "மாறனுக்கும் உன் வயசு தானே. அவனுக்கெல்லாம் நீ பயப்படணுமா" என்று கேட்டான் கதிர்.

"ஒரு வயசா இருந்தாலும் அவரு எனக்கு அண்ணன் தான். என்னைக்கு உங்கள நான் லவ் பண்ணுறேன்னு சொன்னானோ, அப்போதுல இருந்தே மாறன் அண்ணன் என்கிட்ட பேசுறதே இல்ல" என்ற முல்லைக்கு மனதில் தன் சகோதரன் மீது அளவில்லாத பாசம் இருக்க தான் செய்தது.

"சரி சரி... எல்லாம் போக போக சரியாகிடும். ஆமா வெங்கட் உனக்கு கொடுத்த பரிசை பிரித்து பார்த்தியா" என்று கதிர் கேட்க, அப்போது தான் அருகே இருந்த கிப்ட் boxஐ வேகமாக பிரித்தாள் முல்லை.

அந்த பெட்டியில் New மாடல் செல் போன் இருப்பதை பார்த்தவள்,"ஐ போன்" என்று ஆசையாக கையில் எடுத்துக்கொண்டாள்.

"இதுல நான் ஒரு simcard போட்டு இருக்கேன், இனிமே தினமும் நைட் எனக்கு நீ போன் பண்ணு. நீ பண்ணலைனா நான் பண்ணுவேன்" என்று கதிர் சொல்ல... "thanks கதிர். நானே உங்ககிட்ட எப்படி டா பேசுறதுனு கவலையா இருந்தேன்" என்றாள்.

"சரி சரி இனி நம்ம தினமும் பேசலாம்" என்ற கதிரின் விழிகளை பார்த்தவள், "ஏன் கதிர் உங்களுக்கு என்னை பிடிக்கும் தானே" என்று கேட்டாள்.

அவளின் சந்தேகமான கேள்வியில் கதிரின் முகம் சட்டென்று மாறி போக, "சொல்லுங்க கதிர். என்னை உங்களுக்கு பிடிக்கும் தானே"என்று கேட்டாள்.

"பிடிக்காம தான் கையில அடிபட்டத்தோட உன்னை பார்க்க வந்து இருக்கேனா" என்று கதிர் கேட்க, "என்ன!? அடி பட்டுச்சா!?... நீங்க என்னமோ அந்த கொலைகாரி தான் உங்கள ஆள் வச்சி அடிச்சானு சொன்னிங்க" என்று முல்லை அவனை எதிர் கேள்வி கேட்டாள்.

"இவ என்ன விட்டா நம்மள கேள்வி கேட்டே சாகடிப்பா போல" என்று எண்ணியவன்,

"அந்த அடிய சொல்லல. காயத்தை சொன்னேன்" என்று சமாளித்தவன், "சரி... என்ன இது தலையை விரிச்சு போட்டு பேய் மாதிரி இருக்குற" என்று பேச்சை மாத்தினான்.

"என்ன பேயா... நான் உங்களுக்கு பேயா" என்று முல்லை செல்லமாக கதிரின் மார்பில் குத்தியதும், "ஆமா ஆமா நீ பேய் இல்ல...நீ அழகான மோகினி" என்று அவளை பார்த்து கண்கள் சிமிட்டினான்.

எப்போதும் கதிரின் வார்த்தையில் மயங்கிப்போகும் முல்லை,அவனின் அருகாமையை ரசித்து இருக்க, "சரி... அன்னைக்கு என்னமோ அந்த கொலைகாரியை பற்றி சொன்னியே என்ன விஷயம்" என்று மீண்டும் கேட்டான் கதிர்.

"அத ஏன் கேக்குறீங்க கதிர்" என்று முல்லை அன்றைய தினம் சித்ராங்கி அவள் கையால் கலா என்ற பெண்மணியை கொலை செய்த விஷயத்தை சொன்னதும் கதிரின் முகத்தில் கலவரம் கூடி போனது.

"அவ பயங்கரமான ஆளு போல. என் அம்மா அப்பா வந்ததும் நாங்க சீக்கிரமா இங்க இருந்து கிளம்பிடனும்" என்று முல்லை சொல்ல..."அந்த ராங்கியோட பேமிலி எல்லாம் எங்க இருக்காங்க" என்று கேட்டான் கதிர்.

"அதெல்லாம் தெரியல கதிர். ஆனா இவள பார்த்தாலே பெரிய டான் போல இருக்கு" என்ற முல்லை, "ஹாங்... இவ பண்ண கொலையை விசாரிக்க தான் மேலிடத்துல விக்ராந்த் என்ற போலீஸ் ஆஃபீஸரை தமிழ் நாட்டுக்கு வர வச்சி இருக்காங்கலாம்" என்ற முல்லையின் வார்த்தையை கேட்டு கதிரின் இதழ்கள் தானாக மலர்ந்தது.

"கதிர்.. அவர் யாரு என்னன்னு நீங்க விசாரிங்க. அவர்கிட்ட சொன்னா சீக்கிரமா இந்த கொலைகாரியை அவர் அரெஸ்ட் பண்ணுவாரு" என்று முல்லை சொன்னதும், "சூப்பர் டி.. உடனே நான் இந்த விஷயத்தை ரம்யா அப்பாகிட்ட சொல்லுறேன்" என்றான் கதிர்.

வேறொரு பெண்ணின் பெயரை கேட்டு முகம் மாறிய முல்லை," ஆமா யாரு அது ரம்யா" என்று புருவம் உயர்தினாள்.


"ரம்யா என் Friend. Xmla பொண்ணு" என்று கதிர் சொன்னதும், "ஏன் கதிர். நான் படிச்சிட்டு வர வரைக்கும் நீங்க எனக்காக வெயிட் பண்ணுவீங்க தானே" என்று கேட்டாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top