• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
154
16. 2

"மீனா நீ இரு" என்று கதிர் அவளை அடக்கியவன்,"ரம்யா..இது உங்க வீடு பிரெச்சனை. நீ தான் அத சரி
பண்ணனும்"என்று தன கோவத்தை கட்டுப்படுத்திகொண்டு கதிர் சொன்னான்.

"என்ன கதிர் நீ... எங்க வீடு உங்க வீடுன்னு பிரச்சி பேசுற"என்று ரம்யா கேட்க ,

"பீச்...இப்போ ஏன் நீ எங்கேயோ இருக்குற கோவத்தை என் மேல காட்டுற...சரி இப்போ என்ன,Reg. நடக்கல தானே ...அப்போ நாங்க கிளம்புறோம் "என்றான் கதிர்

"என்ன கிளம்புறீங்களா !? என்ன கதிர் நீ ...இங்க என்ன நடக்குது நீ கிளம்புறேன்னு சொல்லுற"

"இங்க பாரு ரம்யா ...எங்களுக்கு வேற ஒரு appointment இருக்கு ...நம்ம அப்புறம் மீட் பண்ணலாம்.இப்போ நாங்க கிளம்புறோம். மீனா வா போகலாம் "என்று கதிர் மீனாவை அழைக்க, அவளோ தான் தொலைத்த பேனாவை தேடிக்கொண்டு இருந்தாள்.

"சரி இரு நான் அப்பாகிட்ட சொல்லிட்டு கார் வாங்கிட்டு வரேன்"என்று ரம்யா சொல்ல ,

"ஏய் இல்ல இல்ல எங்களை அழைச்சிட்டு போக வெங்கட் வருவான்"என்று கதிர் சொல்லி முடிக்கும் முன்னே வெங்கட்டின் கார் அங்கே வந்து சேர்ந்தது.

"bye ரம்யா ...ஏய் மீனா வா போகலாம்" என்று கதிர் வேகமாக அங்கிருந்து சென்றவனை மீனாவும் பின் தொடர்ந்து சென்று இருக்க ...ஏற்கனவே வந்த காரியமும் முடியாமல் கோவத்தில் இருந்த ரம்யாவுக்கு கதிரின் இத்தகைய செயல் மேலும் ஆத்திரத்தை வர வைத்தது .

உதய, ரம்யா, சம்பத் கருப்பனின் குடும்பம் என்று அனைவரும் கோவத்தின் உச்சியில் நின்று இருக்க ...மாறாக கருப்பன் மற்றும் தேன்மொழியின் விழிகளில் மட்டும் சந்தோஷம் நிறைந்து இருந்தது .

"அப்பா நீங்க என்ன பண்ணுவிங்கனு எனக்கு தெரியாது. எப்படியாவது அந்த CRஐ நம்ம பழி வாங்கியே தீரணும்"என்று உதயா சொல்ல. சம்பத் கோவமாக கருப்பணின் முன்னே சென்று நின்றான்.

"என்ன நடக்குது இங்க ...யாரு அந்த பொண்ணு .அவ ஏன் இந்த குட்டி சாத்தன் பேர்ல இந்த தோப்பை எழுதி
தரணும் "என்று சம்பத் கேட்க,

"யார பார்த்து குட்டி சாத்தான்னு சொல்லுற" என்று கருப்பன் சம்பத்தை ஒருமையில் பேசியவாறு முறைத்து பார்த்தான்.

"அண்ணா என்ன பண்ற .அவரு யாரு தெரியுமா" என்று கருப்பனின் சகோதரர்கள் தன் அண்ணனை அடக்க ..

"ஏன் தெரியாம! பல ஊரை அடிச்சு உலையில் போடுற மனகெட்டஜென்மம் தானே இவன் .இவனை பத்தி எனக்கு நல்லாவே தெரியும்" என்ற கருப்பனின் வார்த்தையை கேட்டு சம்பத்தின் முகம் இறுக்கமாக மாறியது

"என்னையா முறைக்கிற.என் தம்பிகளுக்கு பண தேவை இருக்குனு தெரிஞ்சிக்கிட்டு இவனுங்களுக்கு கொஞ்மா பணத்தை கொடுத்து நான் கோவிலா நினைக்கிற பனை மாற தோப்பை அழிக்க பார்த்த பிக்காலி பையன் தானே நீ "என்ற கருப்பனின் சட்டையை கோவமாக பிடித்து இருந்தான் உதயா.

"ஏய் கையை எடு "என்று அவன் கையை தட்டி விட்ட கருப்பனோ அருகே நின்று இருந்த குழந்தையை தூக்கிக்கொண்டவன்,

"பணம் இருந்தா என்ன வேணும்னாலும் பண்ணுவிங்களா...இப்போ பார்த்தீங்க இல்ல..வல்லவனுக்கு வல்லவன் இந்த வையகத்துல இருப்பான் .இல்ல இல்ல இருப்பாள்" என்ற கருப்பன் சிறுமியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றவனை அங்குள்ள அனைவரும்
அதீத கோபத்துடன் முறைத்து இருந்தார்கள் .

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

கதிர், மீனா, வெங்கட் என்று மூவரும் காரில் பயணிக்க...
"ஏய்... போன் பண்ணா எடுக்க மாட்டியா" என்று கேட்டான் வெங்கட்.

"நீங்க ஏன் எனக்கு போன் பண்ணுறீங்க. நீங்க பண்ணா நான் ஏன் எடுக்கணும்" என்று மீனா கோபத்துடன் கேட்க,

"சரி சரி உங்க சண்டையை எல்லாம் அப்புறமா வச்சிக்கோங்க. வாங்க முதல்ல போய் என் முல்லைக்கு ஒரு போன் வாங்கலாம்" என்றான் கதிர்.

"டேய் மாமா... நீ போன் மட்டும் இல்ல, போன் டவர் கூட வாங்கு, ஆனா அத எப்படி நான் ககொண்டு போய் அவகிட்ட தர முடியுமுன்னு நீ யோசிச்சு பார்த்தியா" என்று மீனா கேட்க,

கதிரின் புத்தியில் அப்போது தான் மீனாவை ரெஜிஸ்டர் ஆஃபிஸில் சித்ராங்கி பார்த்து இருப்பாள் என்ற எண்ணம் தோன்றியது.

"ஆமா டி, அத நான் மறந்தே போயிட்டேனே" என்று யோசித்த கதிரின் பார்வை சட்டென்று வெங்கட்டின் மீது படிய,

"டேய் டேய் என்ன ஏன்டா பாக்குற, நானெல்லாம் போய் முல்லையை பார்க்க மாட்டேன்" என்று பதறினான் வெங்கட்.

"No No அப்படியெல்லாம் சொல்லப்பிடாது.. தம்பிக்காக நீ தான் மாமா வேலை பார்க்கணும். So pls... எனக்காக நீ முல்லையை பார்த்து அவகிட்ட பேசி நான் தர போனை அவகிட்ட கொடுத்துடு" என்ற கதிரின் வார்த்தைக்கு வேறு வழியில்லாமல் கட்டுப்பட்ட வெங்கட்
கதிர் சொன்னதை செய்ய சம்மதித்து இருந்தான்.

விலை உயர்ந்த போனை முல்லைக்காக கதிர் வாங்கியவன், அவனின் இன்னோரு sim கார்டய் போட்டு அதை வெங்கிகட்டிடம் கொடுத்து, "நானும் மீனுவும் காருல வெயிட் பண்ணுறோம். நீ இத எப்படியாவது முல்லைகிட்ட கொடுத்துடு" என்று சொன்னான்.

சில நிமிடங்களில் வெங்கட் அவன் காரை VCR பங்களாவின் அருகே நிறுத்தியவன், "டேய்... எதுவும் பிரச்சனை வராதே" என்று தயக்கத்துடன் கேட்க,

"அதெல்லாம் வராது டா. யாராவது கேட்டா நீ முல்லையோட சீனியர்ன்னு சொல்லிடு" என்றான் கதிர்.

"சரி.. என்னமோ சொல்ற.நான் போறேன்" என்று வெங்கட் நேரே பங்களா வாசலில் நிற்கும் வாட்ச் மேன் செல்வத்தை நெருங்கியவன், "பாஸ்... உள்ள முல்ல..."என்று திக்கியவனை பார்த்து,"ஹாய் அங்கிள்" என்று தூரத்தில் இருந்து அழைத்தாள் முல்லை.

"என்ன இது... முல்லை குரல் மாதிரி இருக்கே" என்று ஜீவா தலையை தூக்கி பார்க்க... முல்லை அந்த பங்களாவின் 3ஆவது தளத்தின் மொட்டை மாடியில் இருந்தவள் அங்கிருந்து, "அங்கிள்... இருங்க இருங்க வரேன்" என்று தலை விரி கோலமாக ஓடி வந்தாள்.

முல்லையின் செயலை பார்த்தும் வாட்ச் மேன் செல்வம் கேட்டை திறக்காமல் வழியை மறைத்து நின்று இருக்க, "அண்ணா... கதவை திறந்து அவரை உள்ள விடுங்க" என்றாள் முல்லை.

"சாரி மா... மேடம் அனுமதி இல்லாம என்னால யாரையும் உள்ள விட முடியாது" என்று செல்வம் சொல்ல... "சரி... அப்போ கதவை திறங்க... நான் வெளிய போய் அவர்கிட்ட பேசிட்டு வரேன்" என்றாள்.

"இல்லமா... அதுக்கும் மேடம் permission வேணும்" என்று செல்வம் சொல்ல...
தலை குளித்து கூந்தலை மாடியில் உளற விட்டப்படி நின்று இருந்த முல்லை அவள் கையில் உள்ள கூர்மையான சீப்பை எடுத்துக்கொண்டே கீழே ஓடிவந்தவளுக்கு அந்த இடத்தில் அந்த சீப்பே உதவியாக மாறி இருந்தது.

ஆம்... அவள் கையில் இருந்த சீப்பை தன் கழுத்தின் அருகே வைத்துக்கொண்டவள், "அண்ண... இப்போ கதவை திறக்குறீங்களா, இல்ல இந்த சீப்பால என்னை காயப்படுத்திக்கவா" என்று முல்லை செல்வத்தை முறைத்து இருக்க,

"பாப்பா பாப்பா என்னமா நீ... மேடம் வீட்டுல இல்லாத நேரத்துல என்ன வேலை பண்ணுற" என்று பதறினான் வாட்ச் மேன் செல்வம்.

"அண்ணா... கடைசியா கேக்குறேன். கதவை திறக்க முடியுமா இல்லையா" என்று முல்லை கேட்க, வேறு வழியே இல்லாமல் செல்வம் கதவை திறந்து விட்டதும்,

"வெங்கட் அங்கிள்... எப்படி இருக்கீங்க அங்கிள்" என்று கேட்ட முல்லை தன் கையில் இருந்த சீப்பை முதுகின் பின்னே மறைத்துக்கொண்டாள்.

எப்படி டா முல்லையை பார்ப்பது என்று நினைத்து இருந்த வெங்கட்டுக்கு, அவளே வெளியே வந்ததை பார்த்ததும்,"முல்ல..." என்றவன் சற்றும் தாமதிக்காமல் அவன் கையில் இருந்த பொருளை அவள் முன்னே நீட்டினான்.

"அவன் கொடுத்த பொருளை வாங்கியவள்,"என்ன அங்கிள் இது... ஆமா நீங்க எப்படி இங்க" என்று கேட்க,

"நான்... நான், கதிர், மீனா மூணு பேரும் ஒண்ணா கடைக்கு போனோம். அப்போ கதிர் இத உனக்காக வாங்கி என்னை உன்கிட்ட கொடுக்க சொன்னான்" என்று வெங்கட் சொல்ல, அதற்குள் இங்கே நடப்பதை ஈஷாவின் கைபேசிக்கு தொடர்புக்கொண்டு
செல்வம் அனைத்தையும் சொல்லி இருந்தான்.

"என்ன!! கதிர் எனக்காக வாங்கி தந்தாரா... ஆமா கதிர் எப்படி இருக்காரு. அவருக்கு இப்போ கை எப்படி இருக்கு" என்று முல்லை நலம் விசாரிக்க, "கதிர் காருல தான் இருக்கான்" என்றான் வெங்கட்.

"என்ன காருலையா!?" என்ற முல்லை வேகமாக அங்கிருந்த காரை நோக்கி ஓடியவள், "கதிர்..." என்று அழைத்ததும் காரில் இருந்து இறங்கிய மீனா, "முல்ல எப்படி இருக்க" என்று கேட்டாள்.

"ஐ மீனா அக்கா... எப்படி அக்கா இருக்கீங்க" என்ற முல்லையின் விழிகள் காருக்குள் கதிர் இருக்கின்றானா என்று தேடி அலைய, "மீனா, ஏன் நீ காருல இருந்து கீழ இறங்குன" என்ற வெங்கட்டின் கேள்வி முடியும் முன்னே காருக்குள் இருந்த கதிர் சட்டென்று முல்லையை உள்ளே இழுத்து இருந்தான்.

கதிரை பார்த்த முல்லையின் முகம் சூரியனை பார்த்த மலராக மலர்ந்து இருக்க, "என்ன கதிர் நீங்க... ஏன் நேத்து என்னை பார்க்க காலேஜ்க்கு வரவே இல்ல" என்று எதிர்பார்த்து ஏமாந்தவளாக கேட்டாள்.

"அதான் இப்போ வந்துட்டேனே" என்றவன். "ஆமா... நீ என்னமோ நேத்து அந்த ராங்கியை பற்றி கொலை அது இதுன்னு பேசுனியே... என்ன விஷயம் அது" என்று கேட்டான்.

கதிரின் கேள்வியில் முகம் மாறிய முல்லை. "அப்போ நீங்க என்னை பார்க்க வரலையா. அந்த கொலைகாரியை பற்றி கேட்க தான் வந்திங்களா" என்று முல்லை கேட்க,

"நான்.. கொல்லக்காரியை பார்த்து கொலைகாரியை பற்றி விசாரிக்க வந்தேன்" என்றான் கதிர்.

"என்ன பேசுறீங்க... யாரு கொல்லைகாரி!?" என்று முல்லை புரியாமல் கேட்க, அவள் மூக்கின் நுனியை செல்லமாக சீண்டியவன், "என் இதயத்தை கொல்லைக்கொண்ட கொல்லக்காரி நீ தான்" என்றான் கதிர்.

கதிரின் பேச்சில் சூரியனை கண்ட பனியை போல உருகி போன முல்லை அவன் மீது காதல் கொண்டவளாக அவன் இதயத்தில் சாய்ந்து இருக்க, மீனாவும் ஜீவாவும் காரின் வெளியே நின்று இருந்தவர்களுக்கு கதிரின் போக்கு புரியாத புதிராக தான் இருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

✍🏻வரும் படலத்தில் வாசிக்க இருப்பது.

ஈஷா விரட்டும் கார் ஆள் இல்லாத சாலையில் பயணித்துக்கொண்டு இருக்கும் வேளையில் வாட்ச் மேன் செல்வம் கைபேசி மூலம் அவளை அழைத்து முல்லையை பற்றி சொல்லியதும் ஈஷா சட்டென்று தன் காரை ஓரம் நிறுத்தி பின் இருக்கையில் அமர்ந்து இருக்கும் சித்ராங்கியை பார்த்தாள்.

கார் நின்றதும் சித்ராங்கி தன் மடிக்கணினியில் செய்துக்கொண்டு இருந்த வேலையை நிறுத்தியவள்,
ஈஷாவை பார்க்க, "மேடம்... முல்லை அந்த கதிரை..." என்று ஈஷா சொல்லி முடிக்கும் முன்னே,

"Before she even understands him, she will be made a scapegoat" என்ற சித்ராங்கியின் கண்களில் கோவமும் பாவமும் ஒருசேர தெரிந்தது.

தொடரும் 🔱✍🏻
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top