• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
154
தீமையே 🔱வெ (கொ)ல்லும்.

படலம் - 16

“யாருடா மவனே இவ? பார்க்க ஆள் ஒரு மார்க்கமா இருக்காளே!” என்ற சம்பத்தின் வார்த்தைகள் காற்றில் தொங்க,

அதே நொடியில் சிறுமி தேன்மொழி, கையில் சில்லறை பையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு, சித்ராங்கியின் பக்கம் ஓடி வந்தாள்.

“தேனு! தேனு! நில்லு புள்ள!” கருப்பனும் பதறி அவளின் பின்னால் ஓடிவந்தான்.

இங்கே நடப்பதை பார்த்து பொறுமை இழந்த சம்பத் “இந்தாம்மா!”
என்று குரலை உயர்த்தினான்.

“யாரு நீ? என்ன இது? பத்திரம் பதிய போற இடத்துல வந்து துப்பாக்கி, கத்தி எல்லாம் வீசி விளையாடிக்கிட்டு இருக்க?” என்றவனின் கேள்வி காற்றை கிழித்தது.

அவன் குரலை கேட்டும் சித்ராங்கி பதில் சொல்லதாவள்,
மெல்ல கண்களை திறந்து தன் கைகடிகாரத்தை பார்த்தாள்.

அடுத்த நொடி, அவள் அருகே நின்றிருந்த தேன்மொழியின் கையிலிருந்த சில்லறை பையை எந்த தயக்கமும் இல்லாமல் தன் வசம் எடுத்துக் கொண்டாள் சித்ராங்கி.

அந்த செயல், அங்கிருந்தவர்களின் புருவத்தை கேள்வியாக உயர்த்தியது.

அதே சமயம் ஈஷா அந்த இடத்திற்கு வேகமாக வந்து சேர்ந்தாள்.

அங்குள்ள யாரையும் கண்டுகொள்ளாத ஈஷா, நேராக தேன்மொழியிடம் சென்று அந்த சிறுமியின் கையில் ஒரு பத்திரத்தை கொடுத்தாள்.

“என்ன ஆன்ட்டி இது?” தேன்மொழியின் குரல் குழந்தைதனத்தோடு நடுங்கியது. “இந்த பேப்பரை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” என கேட்டாள்.

ஈஷா சற்று குனிந்து, அந்த குழந்தையின் கண்களை பார்த்தபடி,
“பாப்பா, உன் அம்மா அப்பா இருக்குற இடத்தை, மேடம் உன் பேர்ல மாத்தி கொடுத்துட்டாங்க. அதுக்கான பத்திரம் தான் இது.” என்றாள்.

ஒரு நொடி.
அந்த இடத்தில் நிசப்தம்.
அடுத்து..ஆச்சரியம்.அதிர்ச்சி.அமைதி.
என அனைவரின் கண்களும் ஒரே நேரத்தில் அகல்ந்தன.

“ஏங்க! என்னங்க நீங்க!”என
கருப்பனின் குரல் கோபத்தில் கத்தியது.
“ஏன் சின்ன குழந்தைக்கிட்ட இப்படி பொய் சொல்லி அவளை ஏமாத்துறீங்க?”என்று கேட்டான்.

“எது பொய்?” என்ற
சித்ராங்கியின் வார்த்தையில் மேலும் கோவம் கொண்ட கருப்பன்,
“இதோ இதுதான் பொய்!”
என முன்னே வந்தான்.

“இப்போ ஏன் தேனு கிட்ட இல்லாததை எல்லாம் சொல்றீங்க?” என்று கருப்பன் கேட்க, சித்ராங்கி அவனை கூர்மையாக பார்த்தவள்,ஒரு கணம் கூட இமைக்காமல்.
“Because,Iam a go-getter when it comes to protecting what's right" என்றாள்.

அந்த வார்த்தையின் அர்த்தம் புரியாமல் அனைவரும் அவளை கேள்வியாக பார்க்க,

“அண்ணா! இங்க என்ன நடக்குது?”
“யாரு இவங்க?” என்று
கருப்பனின் சகோதரர்கள் கூச்சலிட்டபடி முன்னே வந்தார்கள்.

அந்த குழப்பத்தில்
சம்பத், சிறுமியின் கையிலிருந்த பத்திரத்தை சட்டென்று பிடுங்கி வாசித்தான்.

பத்திரதை வாசிக்க வாசிக்க அவனின் முகத்தில் கோபம் மெதுவாக படர்ந்தது.

அதை பார்த்த உதயா, “என்னாச்சு அப்பா?” என்று பதறி கேட்டவன்,

‘பனைமர தோப்பின் உரிமையாளரான VCR நிறுவனம், தங்களுக்கு சொந்தமான தோப்பை சிறுமி தேன்மொழி பெயரில் எழுதி வைத்துள்ளது. அந்த குழந்தை 18 வயது அடையும் வரை, அந்த சொத்துக்கான Guardian-ஆக கருப்பசாமி நியமிக்கப்படுகிறார்.’ என அந்த பத்திரத்தில் இருப்பதை வாசித்தான்.

“இது எப்படி சாத்தியம்?” என்று ஒரு பக்கம் சம்பத் உருமினார்.

“யாருங்க நீங்க?” எங்க சொத்தை நீங்க எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?” என்று கருப்பனின் சகோதரர்கள் சண்டைக்கு தயாரானார்கள்.

கூச்சல்.கலவரம்.பதட்டம்.என்று எல்லாவற்றுக்கும் நடுவே
சித்ராங்கி மட்டும் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

ஆனால் நொடிகள் கடக்க... அங்கே சத்தம் ஓய்ந்த பாடு இல்லை.

சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்த சித்ராங்கி,சின்னதாக சிரித்த முகத்துடன், தேன்மொழியின் கன்னத்தில் தட்டிக் கொடுக்க, அந்த குழந்தை அழகாய் சிரித்தது.

சிறுமியிடம் இருந்து பெற்றுக்கொண்ட சில்லறை பையை சித்ராங்கி தன் இடது கையில் சுழற்றினாள்.

பத்திரத்தை வாசித்து கருப்பனும் வாயடைடைத்து போனான்.

ஆனால் அங்குள்ள அனைவரும் கோபத்துடன் சித்ராங்கியை பார்த்தனர்.

அப்போது, “அந்த பனைமர தோப்போட ரெஜிஸ்ட்ரேஷன் எப்போவோ முடிஞ்சு போச்சு.” என்ற சித்ராங்கியின் குரல் கலவரத்தை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு வந்தது.

"என்ன உளறுற... அது எப்படி முடியும்" என்று கருப்பனின் முறை பெண் பத்மா கேட்க,
“மேலும் சந்தேகம் இருந்தா கோர்ட்டுக்கு போங்க. அங்க வச்சி டீல் பண்ணிக்கலாம்.”என்றாள் சித்ராங்கி.

"ஏய்... நான் உன்ன சும்மா விட மாட்டேன்,யாரு தோப்பை யாரு சொந்தம் கொண்டாடுறது" என்று கருப்பனின் சகோதரன் கேட்க,

“இனி நீங்க மட்டுமில்ல. வேற யாரு நினைச்சாலும் அந்த தோப்பை ஒன்னும் பண்ண முடியாது.” என்றவள் சில்லறை பையை சுழற்றிக்கொண்டே, வாசலை நோக்கி நடந்தாள்.

சித்ராங்கியின் ஒவ்வொரு செயலும், சம்பத்தின் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த ஆத்திரத்தை மேலும் மேலும் தீ மூட்டியது.

“ஏய், ஏய்! நில்லு டி! யாரு டி நீ?” என்றவனின் கூச்சல், ரெஜிஸ்டர் ஆஃபிஸின் சுவர்களில் மோதித் திரும்பியது.

அந்த குரலைக் கூட பொருட்படுத்தாமல், அவன் கேள்வி முடிவதற்குள்ளேயே சித்ராங்கி ரெஜிஸ்டர் ஆஃபிஸிலிருந்து வெளியே வந்தாள்.

நேராக தன் காரை நோக்கி அவள் நடக்க, அவளை மீனா பின் தொடர்ந்து ஓடி வந்தவள் தன் எதிரே வந்த வயதான பாட்டியின் மீது மோதிய வேகத்தில், "ஆ... அம்மா" என்று பாட்டி கீழே விழுந்ததை கூட பெரிது படுத்தாமல் மீனா சித்ராங்கியை நோக்கி ஓடினாள்.

மின்னல் வேகத்தில் சித்ராங்கி காரை அடைந்து இருக்க...“ஏய்! உன்னதான் கூப்பிடுறேன். நில்லு டி!” என்று சம்பத்தும் அவளைப் பின்தொடர்ந்தான்.

அந்த நேரத்தில் ஈஷா ஒரு படி முன்னே வந்து, சம்பத்தின் வழியை மறித்தாள்.

“ஹலோ சார் கொஞ்சம் மரியாதையா பேசுங்க,” என்று கடினமான குரலில் எச்சரித்தாள்.

சம்பத்தின் கண்கள் சிவந்தன. “என் பொண்ணுக்கு சேர வேண்டிய இடத்தை இல்லாம பண்ணிட்டல்ல” என்று அவன் பற்களை கடித்துக்கொண்டு சொன்னான்.

“இதுக்கு நான் கண்டிப்பா உன்னை சும்மா விட மாட்டேன்!” என்றவனின் வார்த்தைகளை கேட்டு சித்ராங்கி இதழ்கள் வளைத்து ஏளனமாக சிரித்தாள்.

இதே நேரம் ரெஜிஸ்டர் ஆபீஸில் நின்று இருந்த கருப்பனின் குடும்பம் வெளியே வர,

"ஏய்...ஆமா யாரு நீ... எங்க தோப்பை நீ எப்படி VCR நிறுவனதுக்கு சொந்தமுன்னு கதை சொல்லுற" என்று கேட்டான் கருப்பனின் இளைய சகோதரன்.

அவன் கேள்வியில் சிக்ராங்கி ஈஷாவை பார்க்க,
"சார்... பத்திரம் பக்காவா ரெஜிஸ்டர் ஆயிருக்கு. மேற்கொண்டு உங்களுக்கு இதுல எந்த சந்தேகமா இருந்தாலும் நீங்க கோர்ட்ல போய் கேஸ் போடுங்க. அங்க வச்சி நாங்க டீல் பண்ணிக்கிறோம்" என்றாள் ஈஷா.

இங்கே நடப்பதை தூரத்தில் இருந்து கதிர் பார்த்துக்கொண்டு இருந்தவனுக்கும் இது எப்படி சாத்தியம் என்ற எண்ணம் எழாமல் இருக்கவில்லை.

"என்ன!? கோர்ட்ல போய் பேசணுமா!? இந்தா பொண்ணு. நான் யாருனுன்னு தெரியுமா... என் அரசியல் செல்வாக்கு என்னனு தெரியுமா... இப்போ... இப்போ நினைச்சா கூட நான் உன்னை என்ன வேணாலும் பண்ணுவேன்' என்று சம்பத் விரல் சுண்டி சித்ராங்கியை பார்த்து எச்சரித்தான்.

காரின் கதவில் சாய்ந்தப்படி நின்று இருந்த சித்ராங்கி, தன் கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தவள், சட்டென்று சம்பத்தின் சட்டை பையில் இருந்த அவனது போனை எடுத்து அவனிடமே நீட்டினாள்.

"ஏய் ஏய் என்ன பண்ற நீ" என்று உதயா கேட்க,

"உன் அப்பாவுக்காக 5mins நான் இங்கேயே இருக்கேன். அவரு யாருக்கு வேணும்னாலும் போன் பண்ணட்டும்.
உன் அப்பா சொன்ன மாதிரி யாரு வந்து இங்க என்ன கழட்டறாங்கனு பார்க்கலாம்" என்ற சித்ராங்கியின் பேச்சை கேட்டு சம்பத்துக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது.
 
Joined
Feb 6, 2025
Messages
154
"ஏய்... afterall ஒரு பொம்பள நீ... நீ என்கிட்ட சவால் விடுறியா" என்று சம்பத் கேட்க,
"Yes... நான் பொம்பள தான்... பட்... நீ ஆம்பளைனா உன்னால முடிஞ்சத பண்ணு.ஆல்ரெடிஉனக்கு கொடுத்த நேரத்துல 2 நிமிஷம் வீணா போச்சு" என்றாள்.

"இரு... இப்பவே என் கட்சி ஆளுங்ககிட்ட சொல்லி உன்னை என்ன பண்ண சொல்லுறேன் பாரு" என்ற சம்பத் தன் கைபேசியை On செய்ய...

"அப்பா அப்பா... இருங்க... இப்போ இவள ஒன்னும் பண்ணாதீங்க" என்ற உதயா... தன் கண்களால் இது பொது இடம் என்பதை அவன் தந்தைக்கு உணர்த்தி இருந்தான்.

அவன் சமிக்ஞையை பார்த்த சித்ராங்கி, "வேணும்னா சண்டையை தனியா மைதானம் எடுத்து வச்சிக்கலாமா" என்று கேட்க,
"ஏய்... இப்போ சொல்றேன் கேட்டுக்கோ... என்னைக்கா இருந்தாலும் உன்னை நான் பழி வாங்காம விட மாட்டேன்" என்றார் சம்பத்.

அவன் பேசியதை கேட்டு... தன் கண்களை மறைக்க கருப்பு கண்ணாடியை அணிந்துக்கொண்ட சித்ராங்கி...

"wow.. that's fine... So..உங்க வாயை வாடைக்கு விட்டு பிழைக்கிற பிழைப்பை நிறுத்திட்டு, இனி என்னை பழி வாங்குற வேலையை மட்டும் பார்க்க போறிங்க இல்லையா? Good... Go head " என்றவள் காரின் பின் கதவை திறந்துக்கொண்டு உள்ளே அமர்ந்தாள்.

அங்குள்ள அனைவரும் சித்ராங்கியின் செய்கையில் உறைந்து போய் நின்று இருக்க... ஈஷா காரின் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தாள்.

சித்ராங்கியின் செயலை பார்த்து மீனா ஆச்சிரியத்தில் முழுகி இருக்க, பின் இருக்கையில் அமர்ந்து இருந்த சித்ராங்கி தன் கண் கண்ணாடியை தலைக்கு மேல் தூக்கியவளின் பார்வை மீனாவை பார்த்து கேலியாக புன்னகை பூக்க... புழுதியை கிளப்பிக்கொண்டு ஈஷா விரட்டிய கார் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு இருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

கார் சென்ற பாதையை மீனா ஆவேன்று பார்த்து இருக்க,"என்ன டி மீனு...ராங்கியை பார்த்து ராவா அடிச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்க" என்று கேட்டான் கதிர்.

"டேய் மாமா... யாரு டா அவ... இந்த போடு போடுறா... என்ன பேச்சு... என்ன செய்கை, எப்பா... சூப்பர் டா மாமா" என்று மீனா சித்ராங்கியை பாராட்ட... கதிர் அவளை ஏகத்துக்கும் முறைத்தான்.

"என்னடா அப்படி பாக்குற" என்று மீனா கேட்க,"பின்ன என்ன... அவளை பற்றி விசாரித்து சொல்லுடின்னு சொன்னா... நீ என்னமோ அவளோட அருமை பெருமையை பாராட்டிகிட்டு இருக்க" என்ற கதிரை பார்த்து மீனா அர்த்தமாக சிரித்தாள்.

"என்னடி சிரிப்பு" என்று மீண்டும் கதிர் மீனாவை முறைக்க... "டேய் மாமா... கூகுள்லையே முழுக்க ஆராய்ந்து பார்த்துட்டேன். இந்த CR பற்றி ஒரு போட்டோ கூட இல்ல" என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு கோபமடைந்த கதிரோ,"இத சொல்ல தான் நீ பத்திரிகை துறையில வேலை பார்க்குறியா" என்று கடுப்பாக கேட்டான்.

"டேய் மாமா... என்னை பற்றி என்னவேனா பேசு... ஆனா என் வேலையை பற்றி பேசாத... நான் ஒன்னும் உன்ன மாதிரி முட்டாள் இல்ல... அந்த CR இங்க வந்தது... அவ பேசுனதுன்னு எல்லாத்தையும் நான் Start to end ரெகார்ட் பண்ணிட்டேன்" என்ற மீனாவை பார்த்து கதிரின் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.

"ஏய்... என்னடி சொல்லுற... ரெகார்ட் பண்ணிட்டியா" என்று கதிர் ஆர்வத்துடன் கேட்க...

"ஆமா டா மாமா... ரெகார்ட் பண்ணிட்டேன். இனி அவ ஜாதகத்தையே கண்டு பிடிச்சிடலாம்" என்றவளின் வார்த்தையை கேட்டு கதிரின் முகத்தில் சந்தோஷ ரேகை பரவியது.

"அப்போ வா... உடனே அவ யாருன்னு கண்டு பிடிக்கலாம்... ஆமா எப்படி நீ ரெகார்ட் பண்ண" என்ற கதிரின் கேள்விக்கு,

"இதோ இப்படி தான்" என்று தன் சட்டை மேல் பையில் வைத்து இருந்த பேனாவை மீனா எடுக்க எண்ணியவளுக்கு அதிர்ச்சி தான் மிஞ்சியது.

ஆம்... ஏனென்றால்... அவள் சட்டை பையில் இருந்த பேனா காணாமல் போய் இருக்க... "ஐயோ... பேனாவை காணோம்" என்று பதறினாள் மீனா.

"என்னடி சொல்லுற... பேனாவை காணோமா" என்று கதிரும் பதற்றதுடன் கேட்க,

"டேய் மாமா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பாட்டி மேல நான் தெரியாம மோதிட்டேன் டா... அப்போ தான் என் பேனா மிஸ் ஆகிடுது போல" என்ற மீனா வேகமாக சென்று எல்லா இடத்திலும் அவளின் கேமரா பேனாவை தேடினாள்.

எங்கு தேடியும் பேனா கிடைக்காத பட்சத்தில் அவள் சோர்வுடன் நின்று இருக்க,
"ஏய்... என்னாச்சு" என்று கேட்டான் கதிர்.

"இல்ல மாமா.. என் பேனா" என்று மீனா மீண்டும் தேட... அதற்குள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் ரம்யா.

"கதிர்...பார்த்தியா கதிர்.அவ இவ்ளோ பேசிட்டு போறா நீ என்ன இங்க வந்து உன் மாமன் மகளுக்கிட்ட பேசிகிட்டு நிக்குற " என்று ரம்யா கோவமாக கேட்டாள்

அவள் கேள்வியில் கதிரின் முகத்தில் கோவம் தெரிய ..."ஹலோ என்ன தேவையில்லாம பேசுறீங்க" என்று மீனா சண்டைக்கு போனாள்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top