Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 151
- Thread Author
- #1
15.2
“ஆமா. நான் பாட்டுக்கு வீட்டுல சிவனேன்னு இருந்தேன். நீ தானே என்னை உன் கூட வர சொன்ன?” என்று மீனா அலட்சியமாகச் சொன்னாள்.
உதயா ஓட்டிய கார், நகர சாலைகளை கடந்து ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸை நோக்கி சென்றுகொண்டிருந்தது.
முன்சீட்டில் அமர்ந்திருந்த ரம்யா, அமைதியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தவளின் மனதில் ஆத்திரம் அடைந்து தான் இருந்தது.
“இந்த ரம்யா அப்பா, என்னமோ ஒரு இடத்தை இவ பேர்ல வாங்கப் போறாரு போல. அங்க போய் நம்ம சும்மா கடமைக்குனு நின்னுட்டு,
அப்படியே அங்கிருந்து நேரா போன் கடைக்கு போய் ஒரு புது போன்
வாங்கிட்டு—”என்று அவன் பேச்சை முடிக்கும் முன்னே,
“ஐ. எனக்கா மாமா? போன்?”என
மீனா உடனே உற்சாகமாகக் கேட்டாள்.
உடனே கதிர் முகம் சுளித்தபடியே,
“உனக்கு இல்ல. முல்லைக்கு,”
என்றான்.
“ஓ. அப்படின்னா அந்த போனை முல்லைக்கிட்ட எப்படியாவது கொண்டு போய் தரணும்னு என்னை அழைச்சிட்டு போறியா?”
என்று மீனா கேட்டாள்.
“ஆமாடி. இன்னைக்கு காலேஜ் லீவு. அதனால அந்த பங்களாவுக்குள்ள போய் முல்லையை பார்க்க உன்னை விட்டா எனக்கு வேற ஆள் இல்ல,”
என்று கதிர் சொன்னான்.
“டேய். என் அப்பா தான் உனக்கு மாமா. நான் உனக்கு மாமா இல்லடா,”
என்று மீனா கடுப்புடன் பதில் சொன்னாள்.
“வயசுல பெரியவன வாடா போடான்னு கூப்பிடுவியா?”
என்று சொல்லிக்கொண்டே, அவளுடைய தலையில் மெதுவாக ஒரு குட்டு வைத்தான் கதிர்.
பின்புறக் கண்ணாடியில், கதிரும் மீனாவும் பேசிக்கொண்டிருப்பதை ரம்யா ஒரு நொடி பார்த்தாள்.
அடுத்த நொடி, அவள் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
அதே நேரம்,
உதயா காரை ரெஜிஸ்ட்ரேஷன் ஆபீஸ் முன்புறம் சரியாக நிறுத்தினான்.
'டேய் மாமா... நான் காருல இருக்கேன் நீ உள்ள போ' என்று மீனா சொல்ல...
'ஆமா பேபி வா நம்ம போகலாம்' என்ற ரம்யா கதிருடன் கை கோர்த்துக்கொண்டு ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு சென்றாள்.
'இவ இவனை லவ் பண்ணுறா...
இவன் முல்லையை ல...வ்... பண்ணுறான் தான் போல. ஆனா இதுல யாரோடு யாரு சேர போறாங்க!?' என்று மீனா தனக்குள் எண்ணிக்கொண்டு இருந்த நேரம் அவளின் செல் போனுக்கு வெங்கட்டிடம் இருந்து அழைப்பு வந்தது.
அவன் அழைப்பை பார்த்து முகம் மாறிய மீனா..' இவன் ஏன் நம்மள கூப்பிடுறான். இவன் வேற போன் பண்ணி நம்ம நேரத்த வீணாக்குவான்' என்று எண்ணியவள் நேற்றைய தினம் கதிர் சொன்ன வேலையை செய்ய தொடங்கி
இருந்தாள்.
மீனாவின் கைபேசியில் இரண்டு நாட்களாக தொடர்ந்து நடக்கும் கொலையை பற்றி அவள் ஆராய்ந்து கொண்டு இருக்க. அங்கே எந்த இடத்திலும் CR என்ற பெயரே இடம் பெறாமல் போனது.
"ம்... இந்த CR யாரு!?.. சரி கூகுள் சர்ச் பண்ணி பார்க்கலாம்' என்று எண்ணிய மீனா... VCR குரூப்ஸ் என்று type செய்ததும். அதில் நிறைய கம்பெனிகள் ரியல் எஸ்டேட் adds வந்த வண்ணமாக இருந்தது.
'என்ன இது... எதுலயும் அந்த கம்பெனியோட முதலாளி போட்டோவே இல்லையே' என்று எண்ணிக்கொண்டே அவள் எல்லா படத்தையும் ஆராய்ந்து பார்க்க... அதில் அங்கே பணி புரியும் பெண்கள் ஆண்கள் படத்தை தவிர்த்து வேறு எந்த படமும் இல்லாமல் போனது.
'அந்த CRயை எப்படி கண்டுபிடிக்கிறது!?' என்று மீனா யோசிக்க... இதே தருணம் தூரத்தில்
தன் தந்தையை கட்டிக்கொண்டு ரம்யா அன்பு மழை பொழிந்துக்கொண்டு இருந்தாள்.

'என்ன மா ரம்யா... ஆள் ஏன் இப்படி மெலிஞ்சு போய் இருக்க' என்று சம்பத் கேட்க,'எல்லாம் உங்கனால தான்' என்று கோவமாக சொன்னாள் ரம்யா.
'என்ன!! என்னாலையா... ஏன் மா நான் என்ன பண்ணேன்' என்று புரியாமல் சம்பத் கேட்க,
'யார கேட்டு நீங்க நம்ம UD பங்களாவை யாரோ ஒரு ரவுடி பொம்பளைக்கு வித்து இருக்கீங்க' என்று கேட்டாள் ரம்யா.
'அதானே... என்ன அப்பா நீங்க... எங்க கையெழுத்து இல்லாம நீங்க எப்படி அந்த பங்களாவை விற்க முடியும்!?' என்று உதயாவும் தன் தந்தையை கடிந்துகொண்டான்.
'அட... இதான் உங்க கோபமா... ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அந்த UD பங்களா நம்பளது இல்ல' என்று சம்பத் சொல்ல,
'என்ன சொல்றிங்க' என்று புரியாமல் கேட்டாள் ரம்யா.
'அட ஆமா மா... அந்த பங்களாவுக்கு சொந்தக்காரன் மலேசியால இருக்கான். கிட்டத்தட்ட 20 வருஷமா யாரும் இந்தியா பக்கம் வராம இருந்தாங்க. சரி... இந்த சொத்தை மறந்து இருப்பாங்கன்னு நினைச்சு நான் அத ஆட்டையை போட பார்த்தேன்' என்று சம்பத் சொல்ல... கதிர் அவர் சொல்வதை கவனமாக கேட்டுக்கொண்டு இருந்தான்.
'என்ன சொல்றிங்க... ஆட்டையை போட பார்த்திங்களா' என்று உதயா கேட்க,
"ஆமா.. அப்படி நினைத்து தான் எல்லாம் பண்ணேன். ஆனா பாரு... அந்த இடத்துக்கு சொந்தரனோட மருமக பொண்ணு வந்து பழைய பத்திரத்தை எல்லாம் தூசி தட்டி அவங்க சொத்தை அவங்களே எடுத்துக்குட்டாங்க' என்ற சம்பத்தை கேள்வியாக பார்த்தான் கதிர்.
'என்ன சொல்றிங்க... அப்போ அந்த இடம் அந்த ராங்கியோடது தானா!?' என்று கதிர் கேட்க,
'ராங்கியா... அது யாரு!?' என்று கேட்டான் சம்பத்.
'அவ தான் நம்ம உதயாவை அடிச்சா.. அவ பொம்பளையே இல்ல... சரியான அடங்கா பிடாரி' என்று ரம்யா சொல்ல.
'என்ன?என் மகன் மேல ஒருத்தர் கை வச்சாங்களா!!' என்று பற்களை கடித்தான் சம்பத்.
“ஆமா அப்பா. நீங்க நம்ம பங்களாவை வித்துட்டீங்கன்னு எங்களுக்கு தெரியாது” என்று ரம்யா சொல்ல,
அதற்கு சம்பத், “அது முதல்ல நம்ம பங்களாவே இல்ல. நம்ம பங்களாவா இருந்தா தானே நான் விக்கிறதுக்கு?” என்றார்.
உடனே ரம்யா, “அப்பா, இந்த விவரமே எங்களுக்கு தெரியாம, நாங்க பாட்டுக்கு அது நம்ம பங்களான்னு நினைச்சுக்கிட்டு போய் அவள்கிட்ட சண்டைக்கு போனோம். ஆனா அவ உதயாவை.” என்று வார்த்தையை முடிக்குமுன்,
“என்ன ஆடியாள் வைத்து உதைச்சாளா?” என்று சம்பத் கேட்டார்.
அதற்குக்குள் கதிர், “நீங்க வேற அங்கிள். அவ மட்டும் தான் உங்க பையனை அடிச்சா,” என்றான்.
“என்ன? ஒரு பொம்பள தனியா என் மகனை அடிச்சாளா?” என்று ஆத்திரமாக சம்பத் கேட்க,
“அவ எல்லாத்தையும் லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றா,” என்று ரம்யா சொன்னாள்.
அதற்கு சம்பத், “சரி சரி. இந்த தோப்பை முதல்ல உன் பேர்ல வாங்கிட்டு, அதுக்கப்புறம் அவளை என் மகன் கிட்ட மன்னிப்பு கேட்க வைத்து, இந்த ஊரை விட்டேன் துரத்துறேன்” என்றார்.

இதே தருணம் பனை மர தோப்பின் சொந்தக்காரர் கருப்பனும் அவனின் குடும்பமும் ரெஜிஸ்டர் ஆபீஸ்க்கு வந்து சேர்ந்தார்கள்.
மஞ்சள் விளக்குகளின் வெளிச்சத்தில், பழைய மர மேசையின் மேல் பத்திரம் விரிக்கப்பட்டிருந்தது.
மையத்தில் கருப்பு மை புள்ளியாய் தெரியும் கையெழுத்து இடம். அதையே பார்த்துக்கொண்டு நின்றான் கருப்பன்.
அவன் விரல்கள் பேனாவை இறுகப் பிடித்திருந்தாலும், உள்ளம் மட்டும் தடுமாறிக் கொண்டிருந்தது.
இது ஒரு கையெழுத்து மட்டும் அல்ல தேன்மொழி ஆசையின் கடைசி கோடு என்பதை அவன் உணர்ந்திருந்தான்.
அவனருகே, எதையும் புரியாத வயதில் சிறுமி தேன்மொழி. கையில் சில்லறை பை. அந்தப் பையின் எடைவிட அவள் கண்களில் இருந்த எதிர்பார்ப்புகள் தான் அதிகம்.
“என்ன நடக்குது?” என்று கேட்காமல், எல்லோரையும் மாறி மாறி பார்த்துக்கொண்டே நின்றாள்.
சுற்றிலும் கருப்பனின் உறவுகள். அனைவரின் கண்களிலும் பேராசை, கருப்பனின் மாமன் மகள் பத்மாவின் உதடுகளில் சிரிப்பு மறைந்து இருந்தது. ஆனால் யாரும் ஒருவருக்கு ஒருவர் பேசவேவில்லை. ஆனால் தேன்மொழி அமைதியே உள்ளுக்குள் சத்தமாக கத்திக் கொண்டிருந்தது.
அந்த நிசப்தத்தை பார்த்து கடுப்பான கதிரோ,
“இங்க வந்த வேலையை சீக்கிரம் முடிச்சா. நம்ம பாட்டுக்கு இங்க இருந்து கிளம்பிடலாம் 'என்று தனக்குள் முணங்கியவன் கண்களில் கோபமும், கடுப்பும் கலந்திருந்தது. அவன் அங்கே நிற்பதே அவனுக்கே பிடிக்கவில்லை. ஆனாலும் அவன் அங்கிருந்து நகரவில்லை.
அப்பொழுது தான், மேசையின் மறுபுறத்தில் இருந்து நிதானமாக முன்னே வந்த XMLA சம்பத். அரசியல்வாதிக்கே உரிய அந்த குரலில் கட்டளையுடன்,
“வா கருப்பா.
உன் தோப்பை என் மகள் பேர்ல மாத்தி கொடு.”என்றார்.
அந்த ஒரு வாக்கியம் கருப்பனின் மார்பை இறுக்கி பிடித்தது. அவன் கண்கள் ஒரு நொடி தேன்மொழியைத் தேடின. அந்தச் சிறுமிக்கு இந்த தோப்பு என்னவென்று தெரியாது.ஆனால் அந்த தோப்பு தான் அவளின் தந்தை, தாய்,வாழும் இடம் என்று அவள் நம்பினாள்.
கனத்த இதயத்தோடு, கருப்பன் பேனாவை உயர்த்தினான்.
மை நிரம்பிய முனை மெதுவாக காகிதத்தைத் தொடப் போகும் அந்த நொடி
ஷ்ஷ்ஷ்ஷக்!
காற்றைக் கிழித்துக் கொண்டு தூரத்திலிருந்து பறந்து வந்த கத்தி,
பத்திரத்தின் நடுவில் பாய்ந்து நிற்க!
மேசை நடுங்கியது.
மை தெறித்தது. சிலர் அலறினர். சிலர் உறைந்து போனார்கள்.
ஒரே நேரத்தில் எல்லோரும் திரும்பிப் பார்க்க,அவர்கள் முன்னே, கண்களில் நெருப்புடன் வந்து நின்றாள்
சித்ராங்கி.
அவள் கையில் இன்னும் கத்தியின் அதிர்வு இருந்தது.
அவள் முகத்தில் பயமில்லை.
மாறாக ஏளனமான புன்னகை மட்டும் இருந்தது.
சித்ராங்கியை பார்த்த அந்த நொடியில், கதிரின் முகம் மாறியது.
அங்கே அவன் ஒரு வார்த்தை கூட பேசாமல் தன் கைபேசியை எடுத்து, விரல்கள் ஓட மீனாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்.
அடுத்த சில நொடிகளிலேயே, மீனா அமர்ந்து இருந்த
கார் கதவு ஓங்கி திறந்தது.
அடித்து பிடித்து கீழே இறங்கி, மூச்சு வாங்க ஓடி வந்த மீனா,
“இவங்க தான் CR-ஆ?” என்று ஆவலுடன் கேட்டாள்.
'ஆமா' என்று கதிர் சொன்னதும்,
சட்டென்று பத்திரிகை ஆசிரியர்கள் பயன்படுத்தும் வீடியோ பேனாவை On செய்து,
சித்ராங்கியை குறிவைத்து படம் பிடிக்க ஆரம்பித்தாள் மீனா.
அந்த சமயத்தில்
சித்ராங்கியை அங்கே எதிர்பார்க்காத உதயா அச்சத்தில் குரல் உடைந்து,
“அப்பா. அப்பா. இவ தான் என்னை அடிச்சா அப்பா!” என்று கத்த... சம்பத்தின் கோப பார்வை சித்ராங்கி மீது படிய... அவளோ அங்கிருந்த இருக்கையில் அதிகாரத்துடன் அமர்ந்தாள்.
அந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரின் கண்களை பார்த்து சித்ராங்கி, சமிக்ஞை காட்டிய அடுத்த நொடி அங்கே பொருத்தப்பட்ட CCTV கேமராவின் இணைப்பு அவனால் துண்டிக்கப்பட்டது.
அனைவரும் அவளின் செயலில் வாயடைத்து நின்று இருக்க,தன் முதுகின் பின்பக்கத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்த சித்ராங்கி அவள் விழிகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தாள்.
இதே சமயம் இது வரை இப்படியொரு ஆளுமையான பெண்ணை பார்த்ததே இல்லை என்று எண்ணிய மீனாவின் படம் பிடிக்கும் எழுதுகோல் காட்சிகளாக சித்ராங்கியின் Silent சம்பவத்தை பதிவேற்றிக்கொண்டு இருந்தது..
- தொடரும்