Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 145
- Thread Author
- #1
“ஏன்டா. டான்ஸ் கத்துக்க வர பொண்ணுங்ககிட்ட, உன்னோட ஆட்டத்தை ஆடி காட்டுறியா?” என்ற கதிரின் குரலில் கொதித்தது கோபம்.
அந்தக் கோபத்தோடு அவன் திவாகரின் அருகே பாய்ந்தவன், அடுத்த நொடி, அவன் மார்பில் ஓங்கி விழுந்த கதிரின் காலடி, திவாகரை நிலைகுலையச் செய்தது.
“ஐயோ. அம்மா.!” என வலியோடு கலந்த அலறல் அந்த இடத்தையே அதிர வைக்க, அந்த சத்தத்தைக் கேட்டு, சுற்றிலும் இருந்தவர்கள் ஓடோடி வந்து சூழ்ந்தார்கள்.
“என்னாச்சு?” என்று அந்த இடத்தின் உரிமையாளர் பதற்றத்தோடு கேட்க,
“சார். நான் சும்மா இருந்தேன் சார். இந்த ஆளு தான் வந்து என்கிட்ட வம்பு பண்ணுறாரு.” என திவாகர் தத்தளித்தபடி எழுந்து நின்றான்.
“சும்மா இருந்த உன்ன நான் வந்து வம்பு பண்ணுறேனா? பொய்யா பேசுற!” என கதிரின் கண்களில் கோவம் தெரிய. அவன் காலடி மீண்டும் பாய்ந்ததும். திவாகர் இரண்டு அடிகள் தூரம் பறந்து விழுந்தான்.
“தம்பி. தம்பி. யாருப்பா நீ? எந்த காலேஜ் பையன்? உன் ஐடி கார்ட் எங்க?” என உரிமையாளர் கடுமையாக கேட்க,
“சார். முதல்ல அந்த பொறுக்கியை வெளியே துரத்துங்க சார்!” என மீனாவின் குரல் கோபத்தில் குலுங்கியது.
“என்னம்மா இது? நீங்க யாரு? எங்க காலேஜ் ஆளை வெளிய அனுப்ப சொல்லுறீங்க?” என்று அவர் கேள்வி முடிவதற்குள்,
“ஏன்? நான் யாருன்னு தெரிஞ்சுக்கிட்டு உன் பொண்ணை எனக்கு கட்டித் தரப் போறியா?” என்ற கதிரின் வார்த்தைகள் சுட்டெரித்தன.
“தம்பி. கொஞ்சம் மரியாதையா பேசு!” அந்த நபர் கோபம் கொள்ள,
“ஹாங். மரியாதை தானே? இரு. இவனை பொளந்துட்டு வந்து உனக்கு மரியாதை காட்டுறேன்!” என்ற கதிர், திவாகரின் சட்டையை கொத்தாகப் பிடித்து, தன் தலைக்கு மேலே தூக்கினான்.
“ஐயோ. யாராவது என்னைக் காப்பாத்துங்க!” என்ற திவாகரின் அலறலில் அங்கிருந்தவர்கள் உறைந்து போனார்கள்.
அனைவரின் முகத்திலும் பயம் தெரிய...
ஆனால், முல்லையின் விழிகளில் மட்டும், கதிரின் முரட்டு தனம் ஒரு விசித்திரமான பாதுகாப்பாய் தெரிந்தது.
“டான்ஸ் கத்துக்க வந்த பொண்ணுங்ககிட்ட தொட்டு தொட்டு பேசித் தான் கத்து தருவியா? அதுவும் இல்லாம, உன் முன்னாடியே ட்ரெஸ் மாத்த சொல்லுறியாமே?” என கதிரின் குரலில் அருவருப்பு தெரிய,
அவன் திவாகரின் ஆடையை கண்ட மேனிக்கு கிழித்து எறிந்தான்.
அவமானமும் கூச்சமும் கலந்த திவாகர், தன் உடலை மறைக்கப் போராட.
அங்கிருந்த பலரும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள்.
“அடுத்தவங்க உடம்ப பார்க்க ஆசைப்படுற ஈன புத்தி உனக்கு இருக்கே. அப்புறம், உன் உடம்ப மட்டும் யாரும் பார்க்க கூடாதுன்னு மறைச்சு வச்சுக்கிற?” என்று அடுத்தடுத்து விழுந்த நான்கு மிதிகளில், திவாகர் வலியால் சுருண்டு கிடந்தான்.
“இனி ஒரு முறை. எந்தப் பொண்ணு மேலையாவது கை வச்சி பாரு.”என்ற கதிர், சட்டைப் பையிலிருந்த சிகரெட்டை எடுத்து, உதட்டோரத்தில் பற்ற வைத்தான்.
ஒரு இழுப்பு புகையை திவாகரின் முகத்தில் ஊதியவன், யாரும் எதிர்பாராத அந்த நொடி அவன் வலது கையைப் பிடித்து, தன் காலில் அடித்து உடைத்தான்.
முன்னமே அடிகளை தாங்க முடியாத திவாகருக்கு, இப்போது உடைந்த கை. அவன் அலறல், அந்தக் கட்டிடத்தையே குலுங்க வைத்தது.
நூற்றுக்கணக்கான கண்கள். கதிர் திவாகரை மாறி மாறி பார்த்து இருக்க, ஆனால் முல்லைக்கு மட்டும், கதிர் தன்னை காக்க வந்த கடவுளைப் போலத் தெரிந்தான்.
“தம்பி. தம்பி. விடு பா!” என சிலர் கதிரைத் தடுத்தார்கள்.
“டேய் கதிர் விடு டா! ஆள் செத்து போயிடப் போறான்!” என்று வெங்கட் ஓடிவந்து கதிரின் கையைப் பிடித்து இழுத்தான்.
'இல்லடா இவன..' என்று கதிர் மீண்டும் திவாக்கரை அடிக்க போக, அங்குள்ள சிலர் திவாகரை காப்பாற்றினார்கள்.
'அடுத்து நீ கண்ணுல படவே கூடாது' என்று கதிர் அவனை எச்சரிக்க..மீனா, வெங்கட் ஆகிய இருவரும் கதிரை அங்கிருந்து அழைத்துக்கொண்டு வெளியேறினார்கள்.
திவாகர் வலியால் துடித்துக்கொண்டு இருக்க, கதிரை பின்தொடர்ந்து,
முல்லை ஓடினாள்.
“டேய். நீ அடங்கவே மாட்டியா?
இப்போ ஏன் டா அந்த ஆளை அடிச்ச?”
என்று வெங்கட் கேட்டான்.
“பின்ன என்ன?
அவனையெல்லாம் அடிக்காம, உன்னை மாதிரி எதையும் கண்டுக்காம இருக்கச் சொல்றியா?” என
மீனா சீறினாள்.
“ஓ. இதெல்லாம் உன் வேலையா?”
வெங்கட் கேட்க,
“ஆமா.
நம்ம வீட்டுல வேலை பார்க்குற கோகிலா அக்காவோட பொண்ணு.
இவன் கிட்ட தான் டான்ஸ் கத்துக்குறா.
இவன் அவ கிட்ட கேவலமா நடந்துக்கிட்டான்.
வீட்டுக்கு வர சொல்லி. டார்ச்சர் வேற.”
என்ற மீனாவின் வார்த்தைகள்,
அவள் பின்னால் நின்றிருந்த முல்லையின் காதில் ஆழமாய் விழுந்தன.
“அந்தப் பொண்ணு நல்லா டான்ஸ் ஆடுவா.
இவன் பண்ண காரியத்தால,
இப்போ படிக்க கூட போக மாட்டேன்னு வீட்டுக்குள்ள அடைஞ்சிருக்கா.”என்றாள் மீனா.
“அதெல்லாம் அவங்க குடும்பத்துல பார்த்துக்குவாங்க.
நமக்கு ஏன் இந்த வேலை?” என்று
வெங்கட் அலட்சியமாக சொல்ல...
அந்த ஒரு கேள்வியில்,
கதிரை விட மீனாவுக்கு கோபம் வெடித்தது.
“இதே.
அவன் உன் தங்கச்சிக்கிட்ட இப்படி நடந்திருந்தா.
நீ இப்படி தான் பேசுவியா?”என்று மீனா கேட்க,
வெங்கட்
தன் வார்த்தைகளின் கடுமையை உணர்ந்து,
மௌனமாக நின்றான்.
“டேய். அவன் ஒரு கை மட்டும் இல்லடா.
அவனோட”என்று
கதிர் சொல்லி முடிப்பதற்குள்,
“அவனோட காலையும் சேர்த்து
நீங்க உடைச்சிருக்கணும், கதிர்.”என்றாள் முல்லை.
முல்லையின் குரலில்
மூவரும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.
அங்கே
வயதுக்கேற்ற அழகோடும்,
கண்களில் தைரிய ஒளியோடும் மின்னும் சிலை போல் நின்று இருந்தாள்
முல்லை.
முல்லையை மேலிருந்து கீழ்வரை கேள்விக்குறியாகப் பார்த்த கதிர்,
“யார் நீ?” என்று கேட்டான்.
“நான் தான் முல்லை. ரத்தின முல்லை,”
என்று சொல்லியவள், தன் வலது கரத்தை அவன் முன்னால் நீட்டினாள்.
இதழ்களுக்கு நடுவே இருந்த சிகரெட்டை விரல் இடுக்கில் எடுத்த கதிர்,
“சரி. இப்போ என்ன அதுக்கு?” என்றான்.
“என்ன அதுக்கா!!. நீங்க எனக்கு எவ்வளோ பெரிய உதவி பண்ணிருக்கிங்கன்னு தெரியுமா, கதிர்?”
என்று உரிமையோடு கேட்டாள் முல்லை.
“ஏய். இரு இரு.இவன் பேர் கதிர்ன்னு உனக்கு எப்படி தெரியும்...அதுவும் இல்லாம இவனுக்கு நீ தான் பேர் வச்ச மாதிரி உரிமையா பேர் சொல்லி கூப்பிடுற?”
என்று வெங்கட் கேட்க,
“நீங்க தானே இவரை கதிருனு கூப்பிட்டீங்க... அதுவும் இல்லாம பேர் வைக்கிறதே நம்ம கூப்பிடத்தானே அங்கிள். அதான் கூப்பிட்டேன்,”
என்று சிரித்தாள் முல்லை.
“என்ன அங்கிளா!? ஏய். நான் உனக்கு அங்கிளா?”
என்று வெங்கட் முறைத்துப் பார்க்க,
“சரியா சொன்ன முல்லை. இவரு அங்கிள் தான்,”
என்று மீனாவும் சிரித்துக் கொண்டாள்.
முல்லை ‘அங்கிள்’ என்று அழைத்த கோபத்தை விட,
மீனா தன்னைப் பார்த்து கிண்டலாகச் சிரித்த கடுப்பு வெங்கட்டின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
“ஏய். இவனுக்கும் எனக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம்,”
என்று கதிரை பார்த்து முறைத்தான் வெங்கட்.
“அப்படியா! ஆனா கதிர் இப்பவும் ஸ்கூல் ஸ்டுடென்ட் மாதிரி இருக்காரு,”
என்று முதல் பார்வையிலேயே கதிரை பற்றி பெருமையாகப் பேசிய முல்லையின் வார்த்தைகள்,
யாருக்கும் புரியாத ஒரு ஈர்ப்பை கதிரின் பார்வையில் எழுப்பின.
அந்த பார்வை, மெதுவாக முல்லையின் இமைகளுக்கு நடுவே சிக்கிக்கொண்டது.
“ரொம்ப thanks, கதிர். இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் இப்படித்தான் உதைக்கணும்,”
என்று திவாகரை வசைபாடினாள் முல்லை.
“ஏன். அந்த வேலையை நீயே பண்ணியிருக்கலாமே?”
என்று மீனா கேட்க,
“ஹாங். பண்ணி தான் இருப்பேன். இன்னும் ஒரு நொடி கதிர் லேட்டா வந்திருந்தா கூட,
அந்த திவாகரை பூசணியைச் சுத்தி கீழே போட்டு உடைக்கிற மாதிரி,
என் கையாலேயே மிதிச்சு உடைச்சிருப்பேன்,”
என்று சொல்லும்போது முல்லையின் கண்களில் ஒரு தீப்பொறி மின்னியது.
முல்லையின் அழகு.
அவளின் துடுக்கான பேச்சு.
கதிரிடம் அவள் தானாக எடுத்துக்கொண்ட உரிமை.
இவையெல்லாம் சேர்ந்து, கதிரின் மனதில் அவள் மீது ஒரு கண்ணியமான ஈர்ப்பை விதைத்திருந்தது.
அதற்கும் மேலாக அங்கே நிற்காமல்,
வாயில் இருந்த சிகரெட்டை ஆழமாக இழுத்தபடி கதிர் அங்கிருந்து நகர்ந்தான்.
தான் இவ்வளவு பேசினாலும்,
கதிர் தன்னிடம் எதுவும் பேசவில்லை என்ற எண்ணத்தில் முல்லை,
அங்கிருந்து சென்ற அவனைத் தொடர்ந்து ஓடினாள்.
அதே நேரத்தில்,
“ஏய். நான் உனக்கு அங்கிள் மாதிரி இருக்கேனா?”
என்று வெங்கட் மீனாவிடம் வம்புக்கு வர,
“ஆமா. நீ அங்கிள் தான்,”
என்று மீனாவும் விடாப்பிடியாகப் பதிலளித்தாள்.
முல்லை கதிரைத் துரத்திச் சென்றவள்,
“நில்லுங்க, கதிர்,”
என்று சொல்லி, அவன் முன்னே இரு கைகளையும் விரித்து வழியை மறித்தாள்.
கதிர் படிக்கும் இடமாயினும்,
வெளியே செல்லும் இடமாயினும்,
எந்தப் பெண்ணும் இவ்வளவு உரிமையோடும் பயமில்லாமலும் அவனிடம் பேசியதே இல்லை.
அந்த வித்யாசமே, முல்லையை அவன் கவனத்தின் மையமாக மாற்றிக் கொண்டிருந்தது.
“என்ன கதிர். ஏன் என்கிட்ட பேசாம போறிங்க?”
என்று முல்லை கேட்க,
“என்ன பேசணும்?”
என்று கதிர் அமைதியாகக் கேட்டான்.
“பேசவா கதைகள் இல்லை? அதெல்லாம் நிறைய இருக்கு.
வாங்க. நம்ம ஒரு டீ குடிச்சுக்கிட்டே கொஞ்ச நேரம் பேசிட்டு வரலாம்,”
என்று சொல்லியவள்,
கதிரின் கையைப் பிடித்து கேண்டின் திசை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
இந்த காட்சியை தூரத்திலிருந்து பார்த்த வெங்கட்,
“ஏய். கையை விடு. என்ன நீ. பாட்டுக்கு கையை எல்லாம் பிடிக்கிற?”
என்று சத்தமிட,
“அங்கிள். உங்களுக்கும் டீ வேணுமா?”
என்று திரும்பக் கேட்டாள் முல்லை.
மீண்டும் மீண்டும் அவள் ‘அங்கிள்’ என்று அழைப்பதை கேட்ட கதிரின் இதழ்களில்,
தானாகவே சிறு புன்னகை தவழ்ந்தது.
“டேய். இந்தப் பொண்ணு என்னை காலாய்க்குது டா,”
என்றான் வெங்கட்.
“ஐயோ அங்கிள். நான் கலாய்க்கல,”
என்று சொன்ன முல்லையை கோபமாக பார்த்தபடி,
“சரி. இப்போ டீ தானே வேணும். வாங்க. போய் குடிக்கலாம்,”
என்று சொல்லி,
வெங்கட் கேண்டினை நோக்கி நடந்தான்;
மீனாவிடம் கையசைத்தபடி.
கதிர், முல்லை, மீனா, வெங்கட் நால்வரும் கேண்டினில் இருக்கைகளில் அமர்ந்தனர். அங்கே வேலை செய்த நபர் நான்கு டீ கப்புகளை கொண்டு வந்து வைத்தார்.
“இந்தாங்க, கதிர். டீ,” என்று முல்லை அவனிடம் ஒரு கப்பை நீட்டினாள்.
தேநீரை ருசித்தபடி அவள் அவனைப் பார்க்க, கதிர் பார்த்தும் பார்க்காதவண்ணம் அமைதியாக டீயை பருகினான்.
“அப்புறம் கதிர். நீங்க என்ன படிக்கிறீங்க?” என்று முல்லை கேட்க,
“அவன பற்றி அப்புறம் தெரிஞ்சிக்கலாம். ஆமா நீ யாரு? இந்த ஊர்ல இதுக்கு முன்னாடி உன்ன பார்த்ததே இல்லையே,” என்று மீனா கேட்டாள்.
அதற்குப் பதிலாக, முல்லை ஒரே மூச்சில் பேசத் தொடங்கினாள்