• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
135

✨முக்கிய செய்திகள்:

இன்றைய தினம் திருவெங்கை காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரு செங்கல் சூலையில், அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் பாதி எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

நேற்றைய தினம் அந்த பகுதியில் பெய்த மழையின் காரணமாக எரிந்து வந்த தீ அணைந்த நிலையில் இருந்ததாகவும்,

அதன் பின்னர் விடியல் காலை வேளையில் அந்த வழியாக ஆடு மாடுகளை ஓட்டிச் சென்ற சிலர், பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிய வந்துள்ளது.

கண்டெடுக்கப்பட்ட அந்த பெண்ணின் உடல் யாருடையது, இந்த சம்பவம் கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதைக் கண்டறியும் வகையில் காவல்துறையினர் பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனுடன் நமது ஊர் செய்திகள் முடிவடைகின்றன.

🎬 சினிமா செய்திகள்:

பிரபல திரைப்பட இயக்குனர் ஆதிசேஷன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப் போவதாக மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தனது உயிருக்கு பாதுகாப்பு கோரி, அவர் காவல் துறையினரிடம் அதிகாரப்பூர்வமாக பாதுகாப்பு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மிரட்டல் தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

மேலும் செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
வணக்கம்.

என்ற காலை செய்தியை கேட்டு சித்ராவின் இதழ்களில் கீற்று புன்னகை மலர்ந்தது.

ஆனால் அதே செய்தியை பார்த்து,'அண்ணா அண்ணா நான் சொல்லல... இவங்க தான் அண்ணா அந்த கொலையை பண்ணிருக்காங்க. வா அண்ணா நம்ம போய் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணலாம்' என்ற முல்லையின் குரலை கேட்டு சி த்ரா அவள் காதை கொடைந்துக்கொண்டாள்.

'மேடம்... இன்னைக்கு 9மணிக்கு என்ஜினீயர் கூட மீட்டிங் இருக்கு' என்று ஈஷா சொல்ல... சித்ரா வாசலை பார்த்தவள்,'அந்த குழந்தையோட பணத்தை திருப்பிக்கொடுதுடு' என்றாள்.

'இதோ இப்போவே தந்துடுறேன்' என்று ஈஷா அவள் அறைக்குள் நுழைய,
'காலேஜ்க்கு நேரம் ஆகலையா' என்று மாறனை பார்த்து கேட்டாள் சித்ரா.

' இதோ... இதோ இப்போ கிளம்பிடுவோம்' என்று மாறன் சொல்ல... சித்ரா வேகமாக மாடிக்கு ஏறி சென்றவளை பார்த்து முல்லை அதீத கோவம் அடைந்தவள்,'உன் போனை கொடு' என்று மாறனின் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்துக்கொண்டாள்.

'பாப்பா பாப்பா... போய் குளிச்சிட்டு கிளம்பு' என்று மாறன் சொல்ல... 'நான் போலீஸ்க்கு போன் பண்ணி அந்த சூலையில எரிந்த பொம்பளையை கொலை பண்ணதே இந்த ராங்கி தான்னு சொல்லபோறேன்' என்றாள்.

தன் தங்கையின் செயலில் கோவமடைந்த மாறனோ... 'பாப்பா... சும்மா எதையாவது உளராத... போ... போய் குளிச்சிட்டு கிளம்பு' என்று கோவமாக சொன்னதும், முல்லை தன் அண்ணனை முறைத்த வண்ணம் அவள் அறைக்குள் நுழைந்துக்கொண்டாள்.

ஈஷா அவள் அறையில் இருந்து சில்லறை காசு இருக்கும் பையை எடுத்து வந்து சிறுமியிடம் கொடுக்க... அதை கருப்பன் வெடுகென்று பிடுங்கியவன், ' இந்த குழந்தை அழறது கூட உங்க மேடமுக்கு தெரியல போல' என்று கேட்டான்.

'சார்.. நான் மறுபடியும் சொல்லுறேன். XMLA சம்பத்க்கிட்ட இருந்து எங்க மேடம் இந்த இடத்தை வாங்கிட்டாங்க. ஆனா உங்க தோப்பை எங்க மேடம் வாங்க போறது இல்ல... நீங்க எதாவது கேக்கணும்னுனா XMLA வை கேளுங்க' என்ற ஈஷா வீட்டுக்குள் சென்று இருந்தாள்.

ஒரு கையில் பண பை இன்னோரு கையில் சிறுமி தேனை கருப்பன் தூக்கிக்கொண்டு VCR பங்களாவில் இருந்து வெளியேறியதை மாடியில் இருந்தப்படி சித்ரா பார்த்துக்கொண்டு இருந்தாள்.

கருப்பணையும் குழந்தை தேனையும் பார்க்கப் பார்க்க சித்ராவிற்கு கதிரின் மாமா விநாயகத்தின் நினைவுகள் எழுந்த நிலையில் அவள் இதயத்தில் சொல்ல முடியாத அளவிற்கு வேதனையும் துரோகமும் நிறைந்தது தான் இருந்தது.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

இதே நேரம் மறுபுறம், கதிரின் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து காலை உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது,
“குட் மார்னிங் ஆன்ட்டி…”
என்று மலர்ந்த சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தாள் கதிரின் தோழி ரம்யா.

“ஹாய் ஆன்ட்டி…”
என்று அவளைத் தொடர்ந்து உதயாவும் உள்ளே வந்தான்.

ரம்யாவை பார்த்த அந்த நொடியில், கதிரின் அம்மா பரமேஸ்வரி மனதுக்குள் பழைய ஆசை மீண்டும் துளிர்த்தது. எப்படியாவது இந்த ரம்யாவையே கதிருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும்… என்ற எண்ணம் அவளுக்குள் உறுதியானதாகவே இருந்தது.

“என்னடா… ரெண்டு பேரும் சொல்லாம கொள்ளாம காலையிலேயே வந்து இருக்கீங்க?”
என்று கதிர் கேட்க,

“என்ன பேபி … உன்னை பார்க்க நாங்க இதுக்கு முன்னாடி இங்க வந்ததே இல்லையா?”
என்று சிரித்தபடி கேட்டாள் ரம்யா.

“வந்திருக்கீங்க… ஆனா சொல்லாம வர மாட்டீங்களே?”
என்று கதிர் சந்தேகமாக கேட்க,

“நான் தான் கதிரை வரச் சொன்னேன்…”
என்று இடையில் பேசினார் கதிரின் பெரியம்மா சாமுண்டீஸ்வரி.

தனக்குத் தெரியாமல் நண்பர்களை வீட்டிற்கு அழைத்ததற்கான காரணம் என்னவாக இருக்கும் என கதிர் யோசித்துக் கொண்டிருந்த வேளையில்,
“வேற ஒன்னும் இல்ல கதிர்… இந்த வீட்டுல சீக்கிரமே உனக்கும் ஜீவாவுக்கும் கல்யாணம் நடக்கணும். அதனால தான் ரம்யாவை வரச் சொன்னேன்,”
என்று சாமுண்டீஸ்வரி வெளிப்படையாகச் சொல்லிவிட்டார்.

“அதுக்கு ரம்யாவை ஏன் வரச் சொன்னீங்க?”
என்று கதிர் சற்று கடுப்புடன் கேட்க,

“எல்லாத்துக்கும் காரணம் இருக்கு…”
என்று தொடங்கிய சாமுண்டி,
“ரம்யா… உன் அப்பா எப்போ இங்க வராரு?”
என்று கேட்டார்.

“இன்னைக்கு நைட்டே அப்பா வந்துடுவாரு ஆன்ட்டி. ஏன்னா நாளைக்கு நாங்க பெரிய பனைமர தோப்பை என் பேர்ல வாங்கப் போறோம். அதுக்கப்புறம் அந்த தோப்பை முழுசா அழிச்சிட்டு அங்க பெரிய மால் கட்டப் போறோம்…”
என்று ரம்யா தன்னிச்சையாக பெருமை பேச,

அப்போ அந்த மாலுக்கு சொந்தக்காரன் ஆகப் போறது என் கதிர் தானா…
என்று மனதுக்குள் பெருமிதம் கொண்டாள் பரமேஸ்வரி.

யாரோ பேசும் எதிர்கால கனவுகளுக்கும் தன்னுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல, எதை வேணாலும் செய்யுங்க… என்று மனதில் நினைத்துக் கொண்ட கதிர், காலை உணவை அவசர அவசரமாக முடித்தான்.

“சரி… நான் கிளம்புறேன்,”
என்று சொல்லிக்கொண்டே வாசலை நோக்கி நடந்தான்.

“கதிர்… எங்க போற? நாங்க இங்க இருக்கும்போது நீ எங்க தனியா போற?”
என்று ரம்யா கேட்டாள்.

“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. உன்னை பெரியம்மாதான் வரச் சொன்னாங்க. என்ன ஏதுன்னு நீங்களே பேசிக்கோங்க,”
என்று சொல்லிவிட்டு, வீட்டில் இருந்து வேகமாக வெளியேறிய கதிர், தன் பைக்கை முல்லை படிக்கும் மருத்துவக் கல்லூரியை நோக்கி விரட்டினான்

நேரம் காலை எட்டு முப்பதை கடந்திருந்தது.
இன்னும் முல்லை வரலையா?
என்று கல்லூரி வாசலில் அவளை எதிர்பார்த்து நின்றிருந்தான் கதிர்.

அந்த நேரத்தில், நேற்றைய தினம் போலவே, முல்லையை சுமந்துகொண்டு ஒரு வெள்ளை நிற கார் மருத்துவக் கல்லூரி முன் வந்து நின்றது. காரிலிருந்து நீல நிற உடையில் முல்லை கீழே இறங்கினாள்.

ஆனால்…
ஏனோ அவளது முகம் வாடியிருந்ததை கதிர் உடனே கவனித்தான்.

கார் முல்லையை இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது. முல்லை சோகமாக கல்லூரி உள்ளே நடக்க முயன்ற அந்த நொடியில், அவளது கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் கதிர்.

நேற்றிலிருந்து மனதுக்குள் குழப்பமும் பயமும் நிறைந்திருந்த முல்லைக்கு, அந்த நொடியில் கதிரை பார்த்ததும்,
எனக்காகவும் ஒருவன் இருக்கிறான்…
என்ற எண்ணம் மனதில் பிறந்தது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை…
அதே இடத்தில் கதிரை இறுகக் கட்டிப்பிடித்து, குழந்தை போல ஓ என்று அழத் தொடங்கினாள் முல்லை.

✨✨✨✨✨✨✨✨✨✨✨✨

நேரம் காலை எட்டு முப்பதை கடந்திருந்தது.
இன்னும் முல்லை வரலையா?
என்று கல்லூரி வாசலில் அவளை எதிர்பார்த்து நின்றிருந்தான் கதிர்.

அந்த நேரத்தில், நேற்றைய தினம் போலவே, முல்லையை சுமந்துகொண்டு ஒரு வெள்ளை நிற கார் மருத்துவக் கல்லூரி முன் வந்து நின்றது.

காரிலிருந்து நீல நிற உடையில் முல்லை கீழே இறங்கினாள்.

ஆனால்…
ஏனோ அவளது முகம் வாடியிருந்ததை கதிர் உடனே கவனித்தான்.

கார் முல்லையை இறக்கிவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றது.

முல்லை சோகமாக கல்லூரி உள்ளே நடக்க முயன்ற அந்த நொடியில், அவளது கையை பிடித்து தன் பக்கம் இழுத்தான் கதிர்.

நேற்றிலிருந்து மனதுக்குள் குழப்பமும் பயமும் நிறைந்திருந்த முல்லைக்கு, அந்த நொடியில் கதிரை பார்த்ததும்,
எனக்காகவும் ஒருவன் இருக்கிறான்…
என்ற எண்ணம் மனதில் பிறந்தது.

என்ன நினைத்தாளோ தெரியவில்லை…
அதே இடத்தில் கதிரை இறுகக் கட்டிப்பிடித்து, குழந்தை போல ஓ என்று அழத் தொடங்கினாள் முல்லை.

முல்லை ஏன் இப்படிப் பயந்து அழுகிறாள் என்பது கதிருக்கு புரியவே இல்லை. அவள் கண்ணீரை துடைத்தபடி,
'என்னாச்சு Flower!?' என்று கேட்டான்.

அவன் கேள்விக்கு பதில் தராமல் மேலும் அவள் அழுததும்.'சரி... என்கூட வா' என்று அவள் கையை பிடித்து தன்னோடு அழைத்தான்.

'எங்க கூப்பிடுறிங்க' என்று தயக்கத்தோடு கேட்டாள் முல்லை.

“வா… நாம ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசலாம். மதியம் நான் உன்னை மறுபடியும் காலேஜ் கொண்டு வந்து விட்டுட்றேன்,”
என்று ஒரு வழியாக முல்லையை சமாதானப்படுத்தினான் கதிர்.

அவன் அழைப்பை ஏற்ற முல்லை அவனுடன் செல்ல....பைக் மெதுவாக நகர்ந்தது.

ஆனால் ஒரு தெரு கூட போக முடியாத அளவிற்கு, திடீரென அவன் முன்னால் வந்து நின்றது ஒரு கருப்பு கார்.

அந்த காரை பார்த்து கதிரின் புருவம் இடுங்க... அந்த காரிலிருந்து இறங்கினாள் ஈஷா.

சித்ராங்கி காரை பார்த்த நொடியில், முல்லையின் உடல் முழுவதும் நடுக்கம் ஓடியது.

“முல்லை… மேடம் உன்னை வரச் சொல்றாங்க,”
என்று ஈஷா கூப்பிட்டாள்.

கதிரோ... கண்ணால் இவளை போக வேண்டாம்
என்று சைகை செய்தான்.

அடுத்த நொடியில், சித்ராங்கி காரிலிருந்து இறங்கி முன்னே வந்தவள்
“ஈஷா…”
என்று அழைத்தபடி கையை நீட்டினாள்.

அந்த காட்சி... முல்லையை நேற்றைய இரவுக்கு இழுத்துச் சென்றது.

சித்ராங்கி அழைத்ததும், ஈஷா அவள் கையில் திணித்த துப்பாக்கயின் நினைவு தான் முல்லையின் இதயத்தை உறைய வைத்தது.

பயம் அவள் கண்களை மூடியது. என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், கதிரின் பக்கம் இருந்து உயிர் காக்க ஓடுவது போல சித்ராங்கி அருகே ஓடிச் சென்றாள் முல்லை.

ஆனால் இந்த முறை,
சித்ராங்கியின் கையில் இருந்தது துப்பாக்கி அல்ல…
ஈஷா அவள் கையில் கொடுத்திருந்தது ஒரு குச்சி மிட்டாய் தான்.

முல்லை காரில் ஏறி அமர்ந்ததும், சித்ராங்கி மெதுவாக நடந்து வந்து, பைக்கில் அமர்ந்திருந்த கதிரின் அருகே நின்றாள்.

அவள் கையில் இருந்த குச்சி மிட்டாயை அவன் பக்கம் நீட்டியபடி,

“ஆள் வளர்ந்த அளவுக்கு …அறிவு இன்னும் வளரலையே!
படிக்கிற பொண்ண காலேஜ் கட்டடிச்சிட்டு இப்படியா அழைச்சிட்டு போவ?
உனக்கு மூளைன்னு ஒன்னு மூலையா கூட இல்லையா?”
என்று கடுமையாக கேட்டாள் சித்ராங்கி.

சித்ராவின் வார்த்தையில் கதிரின் கண்கள் கோவத்தை தத்தேடுத்த நிலையில்,'ஏய்...' என்று ஒற்றை விரலை நீட்டி அவளை கண்டித்தவன் கையில் ஒரு குச்சி மிட்டாய் கொடுத்த சித்ரா,'கூல்...இந்தா இத வாயில வச்சிக்கிட்டு வந்த வழிய பார்த்து கிளம்பிகிட்டே இரு' என்றவள், நேரே தன் காரில் ஏறி அமர்ந்ததும். ஈஷா விரட்டிய கார் மின்னல் வேகத்தில் கதிரின் கண் முன்னே மறைந்து இருந்தது.

- தொடரும் 🔱
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top