Well-known member
- Joined
- Feb 6, 2025
- Messages
- 134
- Thread Author
- #1
தீமையே
வெ[கொ]ல்லும்.
படலம் - 10
கதிரின் நிலைமை வெங்கட்டை விடவே பாவமாக இருந்தது.
ஆம்!! இருக்க தானே செய்யும். வெங்கட்டுக்காவது நினைவு தெரிந்ததில் இருந்தே மீனா மீது அவனுக்கு காதல் இருக்கிறது.
அவன் பல முறை மறைமுகமாக மீனாவிடம் அவன் காதலை தெரிப்படுத்தியும் இருக்கின்றான்.
ஆனால் கதிருக்கு அப்படி இல்லை.
முல்லையை அவன் சந்தித்த நிகழ்வை மட்டுமே இத்தனை நாள் மனதில் எண்ணி பார்த்து மகிழ்ந்தவனுக்கு அவளின் புகைப்படம் ஒன்று தான் துணையாக இருந்தது.
முல்லை மீது கதிருக்கு இருப்பது காதலா இல்லை ஈர்ப்பா என்று அவன் அறியும் முன்னே கதிரின் குடும்பம் அவனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய முடிவு எடுத்து இருந்தார்கள்.
'என்ன கதிர்... எதாவது சொல்லனுமா' என்று சாரங்கம் கேட்க...'பெரியப்பா நான்...' என்று கதிர் ஏதோ சொல்ல வரும் முன்னே,'இந்த இடம் மட்டும் முடிந்தால் வெங்கட்டும் நீயும் கோடிஸ்வரன் வீட்டு மாப்பிளை' என்றான் பரந்தாமன்.
'சித்தப்பா...ஆனா நான் மீனாவை' என்று தன் மனதில் உள்ளதை வெங்கட் பேசும் முன்னே,'அதெல்லாம் சரி வராது வெங்கட்' என்றார் சரங்கம்.
தன் அப்பாவுக்கு தன் காதலை பற்றி தெரிந்து இருக்கிறது என்றதும் வெங்கட்டுக்கு மேலும் கவலையாக இருந்தது.
'மீனா என் தங்கச்சி பொண்ணு தான். உனக்கு அத்த மகள் தான். ஆனா மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டா நீ கோடிஸ்வரன் ஆக முடியாது' என்று சரங்கம் சொல்ல,'எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் அப்பா.. மனசுக்கு பிடிச்ச பொண்ணு கூட வாழ்ந்தா போதும்' என்றான் வெங்கட்.
கதிருக்கு நினைவு தெரிந்ததில் இருந்து வெங்கட் யாரையும் எதிர்த்து பேசாதவன், இந்த முறை தன் தந்தையிடம் அவன் காதலை சொன்னதை நினைத்து கதிருக்கு ஆச்சிரியமாக இருந்தது.
'அப்பா...நான் மீனாவை தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். எனக்கு கல்யாணமே ஆகலைனா கூட பரவாயில்ல. ஆனா என்னால மீனாவை மறக்க முடியாது' என்ற வெங்கட் வேகமாக மாடியில் இருந்து கீழே இறங்கி சென்று இருந்தான்.
வெங்கட்டா இப்படி பேசியது என்று கதிர் ஆச்சிரியத்துடன் பார்த்து இருக்க..
'என்ன அண்ணா.. வெங்கட் என்ன சொல்லிட்டு போறான்' என்று கேட்டார் பரந்தாமன்.
வெங்கட் சென்ற பாதையை கோபத்துடன் பார்த்த சரங்கம்,'டேய் கதிர்...உனக்கும் அவனுக்கும் ஏகப்பட்ட பணக்கார சம்மந்தம் வந்துகிட்டே இருக்கு. உங்க ரெண்டு பேரால தான் இந்த குடும்பத்துக்கு இன்னும் பல கோடிகள் வர போகுது,
'அதனால அந்த பைத்தியக்காரன் கிட்ட சொல்லி இந்த காதல் கடப்பாறையை எல்லாம் தூக்கி வீச சொல்லு... அத விட்டுட்டு மறுபடியும் என்கிட்ட காதல் மோதலுன்னு பேசிகிட்டு இருந்தா அவனை ஒன்னும் பண்ண மாட்டேன்,
அவன் யாரை காதலிக்கிறேன்னு சொல்லறானோ அவங்கள காலி பண்ணிடுவேன்' என்ற சாரங்கத்தின் வார்த்தையை கேட்டு கதிரின் விழிகள் அதிர்ச்சியில் உறைந்து போனது.
வெங்கட்டை கண்டித்தால் கதிரின் முகத்தில் ஏன் திகில் தெரிய வேண்டும் என்று எண்ணிய பரந்தாமன்,'என்னடா அப்படி பாக்குற. அவனுக்கு மட்டும் இல்ல.. உனக்கும் சேர்த்து தான் சொல்லுறேன். வர திங்கள் கிழமை உங்க ரெண்டு பேருக்கும் பொண்ணு பார்க்க போறோம்' என்றார் பரந்தாமன்.
தன் அப்பாவின் பேச்சில் மனமுடைந்த கதிர் பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்று இருக்க...
'என்ன தம்பி... கதிர் ஏன் ஒரு மாதிரி இருக்கான்' என்று கேட்டான் சாரங்கம்.
'தெரியலயே... எதாவது காதல் விவாகரமா'என்று பரந்தாமன் சந்தேகத்துடன் கேட்க..
'பணக்கார வீட்டு சம்மந்தமா இருந்தா பேசி முடிக்க வேண்டியது தான்' என்றான் சரங்கம்
தன் அண்ணனின் வார்த்தையை கேட்டு,'அதெல்லாம் முடியாது அண்ணா... பணக்காரன் யாருக்கு வேணும். நமக்கு கோடிஸ்வர வீட்டு பெண் தான் மருமகளா வரணும்' என்ற பரந்தாமனை பார்த்து அர்த்தமாக சிரித்தான் சாரங்கம்.
அண்ணன் தம்பி இருவரும் தன் பிள்ளைகளை கல்யாணம் என்கிற சந்தையில் விற்க முடிவு எடுத்து இருக்க. இவர்கள் முடிவை எழுத அங்கே செத்து பிழைத்து மீண்டு வந்து இருக்கும் உண்மை இவர்களுக்கு தெரியாமல் போனது.
கதிர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன் நேரே வெங்கட்டின் அறைக்கு சென்று இருக்க. அங்கே படுக்கையில் ஆழ்ந்த யோசனையில் படுத்து இருந்தான் வெங்கட்.
கதிர் நேரே சென்று வெங்கட் அருகே அமர்ந்தவன்.'என்ன நீ... ஏன் பெரியப்பாகிட்ட மரியாதை இல்லாம பேசுன' என்று கேட்டதும், அவனை ஏகத்துக்கும் முறைத்தான் வெங்கட்.
'முறைக்காத... சொல்லு.. ஏன் அப்படி பேசுன'
என்று கதிர் கேட்டதும்,'எனக்கு மீனா கூட கல்யாணம் நடக்கலைனா நான் செத்து போயிடுவேன்' என்றான் வெங்கட்.
பெரியப்பா மகனாக இருந்தாலும் வெங்கட் மீது கதிருக்கு அன்பும் பாசமும் அளவுக்கு அதிகமாகவே இருந்து இருக்க..'டேய் பைத்தியம்... ஆனா உங்க கல்யாணம் நடந்தா இல்ல நடக்கணும்னு நினைச்சாலே உன் அப்பாவும் என் அப்பாவும் சேர்ந்து மீனாவை தான் கொலைபனிடுவாங்க' என்றான் கதிர்.
தன்னை பயமுறுத்த தான் கதிர் பொய் உறைக்கிறான் என்று எண்ணிய வெங்கட்டோ,'அதெல்லாம் அவங்க பண்ண மாட்டாங்க. நீ வேணும்னா பாரு. நான் மீனாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தா கண்டிப்பா இவங் எல்லோரும் எங்கள ஏத்துப்பாங்க' என்றான் வெங்கட்.
தன் உடன் பிறவா அண்ணனின் நம்பிக்கையை பார்த்து வெறுமையாக சிரித்த கதிரோ, 'உனக்கு தெரியாது வெங்கட். இவங்களுக்கு பணமா நம்மளான்னு வந்தா கண்டிப்பா பணத்துக்காக நம்மள கூட இழக்க துணிவாங்க' என்றவன் வெங்கட்டின் அறையில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறி இருந்தான்.