• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Joined
Feb 6, 2025
Messages
111
படலம் - 1

கருப்ப சாமி கோவிலில் உடுக்கை சத்தம் ஒலிக்க, தடப்புடலாக கறி விருந்து ஏற்பாடு நடத்துக்கொண்டு இருந்தது.

'எல்லாம் வல்ல இயற்கையே துணை.
என் பிள்ளைங்க பண்ண பாவத்தை எல்லாம் மன்னிச்சு அவங்க குலம் விருத்தி அடைய நீ தான் துணையா இருக்கனும் கருப்பா ' என மனமுருகி வேண்டும் சித்ராதேவி தான் இந்த குடும்பத்தின் மூத்தவர் என சொல்லலாம்.

சித்ராதேவியின் கணவர் தேவேந்திரன் தீராத நெஞ்சு வலியில் மரணிக்கும் பொழுது இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தனர்.

தேவேந்திரனின் மரணத்திற்கு பிறகு பதினைந்து வயதான அவரின் மூத்த மகன் விநாயகம் தான் அந்த குடும்பத்தை கட்டி காத்தார்.

இரண்டாவது மகன் ஆறுமுகம் குணத்தில் நல்லவனாக இருந்தாலும் எடுப்பார் கை பிள்ளையாக இருப்பவர்.

மூன்றாவது பெண் பிள்ளை சாமுண்டிஸ்வரிக்கு எப்போதும் கை பேசிய பிறகு தான் வாய் பேசும். ஆம் சண்டைக்காரி.

நான்காவது பெண் பரமேஸ்வரியும் அவளின் அக்காவுக்கு தப்பாமல் இருக்கும் பெண்மணி தான்.

சித்ராதேவியின் கணவன் தேவேந்திரனின் மறைவுக்கு பின்னே. அவர்களின் மூத்த பிள்ளை விநாயகம் தன் குடும்பத்தை காப்பாற்ற நாடு விட்டு நாடு சென்று பதினைந்து வருட காலம் செருப்பாய் உழைத்து இவர்களது குடும்பத்தை காப்பாற்றினார்.

தன் இரு தங்கைகளுக்கு ஒரே வீட்டில் மாப்பிளை பார்த்து அண்ணன் தம்பி இருவருக்கும் தன் தங்கைகளை திருமணம் செய்து வைத்தார் விநாயகம்.

அவர்களின் திருமண நிகழ்வுக்கு கூட விநாயகம் வராமல் இருக்க, தன் மூத்த பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்க முடியவில்லை என்ற கவலை சித்ரா தேவிக்கு இருக்க தான் செய்தது.

ஆனால் விநாயகத்தை பற்றி அங்கு வேறு யாரும் கவலைப்படவில்லை.
விநாயகம் பணம் சம்பாதித்து போடும் கருவியாக தான் அனைவரின் கண்ணுக்கும் தெரிந்தார்.

சுருக்கமாக சொன்னால் விநாயகத்தின் உழைப்பை வைத்து இவர்கள் சொகுசு வாழ்கை வாழ்ந்து இருந்தார்கள்.

சாமுண்டிஸ்வரி மற்றும் பரமேஸ்வரியின் கணவர்கள் இருவரும். விநாயகம் அனுப்பும் பணத்தைக்கொண்டு வட்டிக்கு விட்டு துணி கடை, பாத்திர கடை, ரியல் எஸ்டேட் என்று எல்லா தொழிள்களும் சித்ராதேவி என்ற பெயரில் ஆரம்பித்து இருந்தார்கள்.

விநாயகத்துக்கு 45 வயதை கடந்த நிலையில் அவர் இந்தியாவிற்கு திரும்பினார்.

அப்போது தான் அவருக்கு பெண் பார்க்கும் படலம் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் எங்கே அவருக்கு திருமணம் முடிந்தால் நாளை வீட்டுக்கு வரும் மருமகள் கணக்கு வழக்கு கேட்க போகிறாள் என்று எண்ணி விநாயகத்தின் தங்கைகளே தன் அண்ணனின் திருமணத்திற்கு தடையாக இருந்தார்கள்.

'மாப்பிளைக்கு ரொம்ப வயசாகிடுது. மாப்பிளை பார்க்க கிழவன் போல இருக்காரு. வேணும்னா ஒரு குழந்தையோட இருக்குற பெண்ணை பேசி முடிக்கலாம்' என்று சிலர் பல கருத்துகளை தெரிவிக்க,

'எனக்கு கல்யாணமே வேண்டாம். நீங்க தம்பி ஆறுமுகத்துக்கு கல்யாணம் பண்ணி வையுங்க' என்றார் விநாயகம்.

வெளியே இருந்து யாராவது வந்தால் நம்மால் இந்த சுகப்போக வாழ்க்கையை வாழ முடியாது என்று அஞ்சிய சாமுண்டிஸ்வரியும் பரமேஸ்வரியும் சேர்ந்து அவர்களின் நாத்தனார் வள்ளியை ஆறுமுகத்துக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.

காலம் வேகமாக கடந்து இருந்தது.
இன்று வரை தன் மூத்த பையனுக்கு திருமணம் முடியவில்லை என்ற கவலையில் சித்ராதேவி சோகமாக அமர்ந்து இருந்தார்.

'அம்மாச்சி அம்மாச்சி... நேரமாகுது. ஏன் இன்னும் பெரிய மாமா வரல!? அவர் வந்தா தான் எங்களுக்கு காது குத்தி மொட்ட போடுவாங்களா' என்று கேட்டுக்கொண்டே சாமுண்டிஸ்வரியின் 10வயதுடைய மகன் வெங்கட் ஓடி வந்தான்.

'ஆமா... அவரு பெரிய இவரு பாருங்க. அவருக்காக நான் ஏன் காத்து இருக்கனும். என்னால எல்லாம் யாருக்காவும் காத்து இருக்க முடியாது' என்ற முறைப்போடு பரமேஸ்வரியின் 7வயதுடைய மகன் கதிர்வேலன் வீராப்பாக நின்று இருந்தான்.

'டேய் கோவக்கார பையலே... உன் பெரிய மாமா இல்லைனா நீங்க யாரும் இல்லடா. அவனுக்காக நீ மட்டும் இல்ல, இந்த குடும்பமே காத்து தான் இருக்கனும்' என்று தன் பேரனுக்கு புத்தி சொன்னார் சித்ரா தேவி.

'யாருக்காகவும் நான் காத்து இருக்க மாட்டேன். எனக்கு மொட்டை அடிக்கிற விஷயமே பிடிக்கல, இதுல நான் கண்டவங்களுக்காக காத்து இருக்கணுமா' என கேட்டான் கதிர்வேலன்.

'பத்து வயசு கூட முழுசா ஆகல. வாயை பார்த்தியா இவனுக்கு' என்று சித்ரா தேவி கதிரின் தலையில் ஒரு குட்டு வைக்க,
'என்ன அம்மா இன்னும் ஏன் பெரிய அண்ணன் வரல' என்று கழுத்து நிறைய நகையோடு அங்கே வந்தாள் சாமுண்டிஸ்வரி.

'அண்ணனை பார்த்து ரொம்ப வருஷம் ஆகிடுது. பாவம் அவரு எப்படி இருக்காருன்னே தெரியல' என்ற ஆறுமுகத்தின் கையில் அவரது ஆறு வயது பெண் பிள்ளை மீனலோகேஷினி இருந்தாள்.

'என்ன பண்ண சொல்ற ஆறுமுகம், நீ தான் கையால் ஆகாத அண்ணன்.ஆனா விநாயகம் அப்படி இல்லையே' என்று அவரை பரமேஸ்வரியின் கணவன்
பரந்தமான் கேலி செய்தார்.

'அண்ணா... போதும் நிறுத்து. விநாயகம் மாமா இல்லைனா நீயும் இந்த நிலைமைக்கு வந்து இருக்க முடியாது' என்று ஆறுமுகத்தின் மனைவி வள்ளி தன் அண்ணனையே எதிர்த்து பேசினாள்.
 
Joined
Feb 6, 2025
Messages
111

'ஐயோ உங்க சண்டையை நிறுத்துங்க. இப்போ இங்க விஷேசம் நடக்குமா நடக்காதா' என்ற கதிர் சிறு வயதிலேயே மூர்க்க குணம் கொண்டவனாக இருந்தான்.

இவர்கள் அனைவரும் இன்று வெங்கட் மற்றும் கதிர்வேலனின் காது குத்து விஷேஷத்திற்காக காத்து இருக்க,
'ஏன் அண்ணா... நம்ம கேள்விப்பட்ட மாதிரி விநாயகம் ஊருல யாரையோ கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்திகிட்டு இருந்தா நம்ம என்ன பண்ணுறது' என்று தன் அண்ணன் சாரங்கமிடம் கேட்டான் பரமானந்தன்.

'என்னடா உளறுற... அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல. அந்த கிழவனை யார் கல்யாணம் பண்ணிப்பாங்க' என்று சாரங்கம் கேலியாக பேசிக்கொண்டு இருக்கும் வேளையில்,

'மீறி கல்யாணம் முடிஞ்சா கூட வேற எதுவும் நடக்காது' என்றாள் பரமேஸ்வரி கிண்டலாக தன் அண்ணன் என்று கூட பாராமல்.

✨✨✨✨✨✨

இதே தருணம்...

"சித்துமா...பட்டுக்குட்டி, என் செல்லமே அப்பாவை பாரு" இத்துடன் நான்காவது முறையாக 5 வயது இருக்கும் பெண் பிள்ளையை அழைத்தார் விநாயகம்.

அம்பாஸ்ட்ர் காரின் பின் இருக்கையில் தன் அம்மா வினிதா மடியில் காலை நீட்டிக்கொண்டு, விநாயகம் மடியில் தலை சாய்து உறங்குவதை போல நடிக்கும் சிறுமியின் பெயர் தான் சித்ராங்கி.

"என்ன வினிதா!சித்து இன்னும் என் மேல கோவமா தான் இருக்காளா"என்று விநாயகம் வினிதாவை கேட்க, சிறுமி ஒரு கண்ணை திறந்து விநாயகத்தை பார்த்தாள்.

"சித்துக்கு மட்டும் இல்ல, எனக்கும் தான் உங்க மேல வருத்தம்" என்று வினிதா விநாயகத்தின் முகம் பாராமல் பதில் கொடுக்க,"வருத்தமா பயமா!? " என கேட்டார் விநாயகம்.

"பயம்ன்னு கூட சொல்லலாம். இப்போ நம்ம ஏன் அவங்கள பார்க்க போகணும், நம்ம போனா அங்க கண்டிப்பா பிரச்சனை வரும். உங்க தங்கச்சிங்க எதாவது தப்பா பேசினா என்னால அதை தாங்கவே முடியாது" என்று கண்கள் கலங்கினார் வினிதா.

'நீ பயப்புடுற அளவுக்கு எல்லாம் அங்க எந்த பிரச்சனையும் வராது வினிதா. நான் தான் இருக்கானே! நான் பார்த்துப்பேன்' என்று விநாயகம் தைரியம் கொடுக்க,இவர்கள் பயணித்த கார் கருப்ப சாமி கோவிலை சென்று அடைந்தது.

'அதோ அண்ணன் வந்துட்டாரு' என்று ஆறுமுகம் காரின் அருகே ஓடி வர,
விநாயகம் சித்ராங்கியை தோளில் தூக்கிக்கொண்டு கீழே இறங்கினார்.

அதுவரை விநாயகத்தின் வருகைக்காக காத்து இருந்த குடும்பத்தைனரின் முகத்தில் குழப்பமும் கோவமும் நிறைந்து இருக்க, காரின் மறுபக்க கதவை திறந்துகொண்டு வினிதா கீழே இறங்கினார்.

விநாயகம்,வினிதா,சிறுமி என்று இவர்கள் மூவரையும் ஒன்றாக பார்த்த சித்ராதேவி, 'விநாயகா... யாருப்பா இந்த பொண்ணு' என்று சிறுமியை பார்த்து கேள்வி எழுப்பினார்.

'இவ தான் உன் பேத்தி சித்ராங்கி. இவங்க தான் உன் மூத்த மருமக வினிதா' என்று விநாயகம் தன் குடும்பத்தை அறிமுகம் படுத்த,' என்னப்பா சொல்ற!?' என்று அதிர்ச்சியுடன் கேட்டார் சித்ராதேவி.

'ஆமா அம்மா... நான் இவங்கள கல்யாணம் பண்ணிகேட்டேன்' என விநாயகம் சொல்ல,
'இதெல்லாம் எப்போ நடந்துச்சு!? அதுவும் ஒரு குழந்தை பிறக்கும் வரை எங்களுக்கு மறச்சு திருட்டு தனமா குடும்பம் நடத்தி இருக்கியா?!' என்று ஒருமையில் தன் அண்ணனை கேள்விக்கேட்டாள் சாமுண்டிஸ்வரி.

'சாமு... என்ன நீ... நான் உன் பெரிய அண்ணன். மரியாதையா பேசு' என்ற விநாயகத்தின் முகம் கோவமாக மாறியது.

'எல்லோரும் அமைதியா இருங்க. விநாயகம்... என்னப்பா இதெல்லாம். என்கிட்ட சொல்லாம நீ இப்படி ஒரு காரியத்த பண்ணிருக்கவே மாட்ட' என்ற சித்ராதேவி தன் மகனை கலங்கிய விழிகளோடு பார்த்தார்.

'அம்மா... நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம். முதல்ல என் மாப்பிள்ளைங்களுக்கு கடா வெட்டி காது குத்துற விஷேஷத்தை நல்ல படியா முடிப்போம்' என்று விநாயகம் சொல்ல,
'அதெல்லாம் ஒரு மண்ணும் வேண்டாம்' என்றாள் பரமேஸ்வரி.

'இப்போ இங்க என்னாச்சுன்னு ஆளாளுக்கு கோவமா இருக்கிங்க' என்று விநாயகம் கோபத்துடன் கத்தியதும்.'அப்பா... என்னாச்சு... ஏன் நீங்க சத்தம் போடுறீங்க. இவங்கெல்லாம் யாரு' என்று கேட்டாள் சிறுமி சித்ராங்கி.

'வினிதா... நீ பாப்பாவை பிடிச்சுக்கோ' என்ற விநாயகம், தன் அம்மாவின் கையை பற்றியவன்,'அம்மா... வினிதா வேற யாரும் இல்ல. என் நண்பனோட தங்கை தான்.ஒரு இக்கட்டான சூழ்நிலையில தான் எங்களுக்கு போன மாசம் கல்யாணம் முடிந்தது' என்று விநாயகம் சொன்னார்.

'என்ன போன மாசமா!?' என்று சித்ரா தேவி புருவத்தை உயர்த்த,'ஆமா...போனில் இதப்பற்றி பேசினா எங்க உங்களுக்கு வீனா குழப்பம் ஏற்படும்ன்னு தான் நான் நேர்ல வந்துருக்கேன்' என்று விநாயகம் சொல்ல,அனைவரின் மனதிலும் எண்ணற்ற கேள்விகள் தோன்றியது.

'என்ன மாமா சொல்றிங்க, கல்யாணம் முடிந்து ஒரு மாசம் தான் ஆச்சுன்னா... அப்ப இந்த பெண் பிள்ளை யாரு?' என்று ஆறுமுகத்தின் மனைவி வள்ளி கேட்க,
'அது... அது நான் வினிதாவை ரெண்டாம் தாரமாக கல்யாணம் பண்ணிகிட்டேன்' என்றான் விநாயகம்.

'ஓ!! இதான் விஷயமா...கன்னுகுட்டியோடு சேர்த்து மாடயும் ஓட்டிகிட்டு வந்துட்டீங்களா' என பரந்தாமன் கேலி பேச,

'பரமா... தப்பா பேசாத, நாலு வருஷத்துக்கு முன்னாடி ஏற்பட்ட ஒரு விபத்துல வினிதாவோட கணவன் இறந்துட்டாரு. என் நண்பன் என்கிட்ட என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டபோது எனக்கு இந்த பெண் பிள்ளைக்கு அப்பாவாக இருக்க ஒரு குடுப்பணை கிடைத்த மகிழ்ச்சியில தான் நானும் வினிதாவை கல்யாணம் பண்ணி இங்க அழைச்சிட்டு வந்தேன்' என்றார் விநாயகம்.

'அண்ணா... நம்ம குடும்பம் என்ன மாதிரியான குடும்பம்.
நமக்குன்னு இந்த ஜாதி சணத்துல ஒரு பேர் இருக்கு. ஏற்கனவே வேறொருவர் கூட கல்யாணம் முடிந்து குழந்தை இருக்குற ஒரு பொம்பளையை நீ கல்யாணம் பண்ணி அழைச்சிட்டு வந்தினா, அத எப்படி நாங்க ஏத்துக்குறது' என்ற பரமேஸ்வரியின் கோவபார்வை வினிதாவை சுட்டேரித்தது.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top