• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
85
பகுதி - 8

மணமகள் அறையில் மதுராவிடம் 'இஷ்டமில்லாத கல்யாணத்துக்கு அப்றம் ஏன் ஒத்துக்கிட்ட மது?' யுவனியின் கேள்விக்கு அவளிடம் சொல்லப்பட்டு அவளுக்கு தெரிந்த அனைத்தையும் கூறினாள் மதுரா.

" அண்ணனுக்கு பணக்காரங்களை கண்டாலே பிடிக்காது யுவனி. அத்தோட பணக்காரங்களை காதலிக்கிறதும் சுத்தமா பிடிக்காது. அப்படிப்பட்ட அண்ணாவே அந்த பொண்ணை காதலிக்கிற விசயம் எனக்கு தெரிஞ்சபிறகு , நான் மறுப்பு சொல்றதால அவரோட காதல் நிறைவேறாம போயிடுச்சுனா?!"

" எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அண்ணா தான் எனக்கு எல்லாம். அவரோட கட்டுப்பாட்டை மீறி எனக்கு யுவன் மேல வந்த காதல் கூட அண்ணாக்கு நான் ஏதோ நம்பிக்கை துரோகம் செய்ற மாதிரி சின்ன உறுத்தல் இருந்தது."

"புத்திக்கு தெரியறது மனசுக்கு தெரியல. யுவனையே சுத்தி வருது. அதான் அண்ணனாவது சந்தோஷமா இருக்கட்டும்னு கல்யாணத்துக்கு சரினு சொல்லிட்டு இந்த முடிவை எடுத்தேன். என்னால யுவனை மறக்க முடியல." என்று அழுதாள்.

அதைக்கேட்ட யுவனி திகைத்து, இதென்ன முட்டாள்தனம் என்ற கோபம் வந்தது. இருப்பினும் மது சொன்ன விசயங்களில் எங்கேயோ முரண்படுவது போலவும் தோன்றிட, மதுராவின் அழுகையில் தனது சிந்தனையில் இருந்து திரும்பினாள்.

மதுவின் கரத்தை ஆறுதலாய் பிடித்து,"சரி விடு. இனி நான் பார்த்துக்கிறேன்." என்றபடி வெளியே வந்து, மணமேடையை பார்த்தவாறே குப்தாவிடம் சென்றவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அவரிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றாள்.

யுவர்ணிதாவை யாரென அறிந்து கொண்டவர், அவளோடு பேச சம்மதித்து, "சொல்லுங்க மேடம் என்ன பேசனும்?" வினவிட, முன்கை கட்டிக்கொண்டு சில நொடிகள் அவரை கூர்ந்து பார்த்தவள்,

"எனக்கு ஒரு விசயம் தெரியனும் மிஸ்டர் குப்தா. இப்போ அங்க மேடையில இருக்கிற ஜோடிகளோட முழு சம்மதத்துடன் தான் இந்த திருமணங்கள் நடக்க போகுதா?" எனக்கேட்க அவர் முகத்தில் சிறு தடுமாற்றம்.

"இப்போ இந்த நேரத்துல எதுக்கு இந்த தேவையில்லாத கேள்வி மேடம்?" என்று சிறு எரிச்சலுடன் குப்தா எதிர்க் கேள்வி கேட்க யுவனி லேசாக இதழ் வளைத்தாள்.

சட்டென மாறிய அவரது முகமும், தடுமாற்றதோடு கூடிய அவசரமான எதிர்க்கேள்வியும் அவளது சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்ய, தனது இன்ட்யூஸன் சரியென்ற முடிவிற்கு வந்தாள்.

"ஃபைன். ஆனா உங்க பொண்ணை கல்யாணம் பண்ணப் போறவர் ஏற்கனவே ஒரு பொண்ணை காதலிக்கற விசயமாவது உங்களுக்கு தெரியுமா?" யுவனியின் கேள்வியில் அவருக்கு அதிர்ச்சி. அவரிடம் அதைத்தான் அவளும் எதிர்பார்த்தாள்.

"அது மட்டுமில்ல அவருக்கு பணக்காரங்களை கண்டாலே பிடிக்காது. அவங்க உறவே வேணாம்னு வெறுக்கறவர். அவர் காதலிக்கற பொண்ணு ரிச்சான ஃபேமிலிங்கற காரணத்தால தான் தன் காதலைக்கூட அவகிட்ட அவர் சொல்லலை."

மதுரா இவளிடம் சொன்ன அதே விசயம்தான். அதைவைத்து சிறு வார்த்தை ஜாலம் செய்து விட்டாள். மதுராவின் காதலைத்தானே சொல்லக்கூடாது என்றாள் அவள். ஆனால் அவளது சகோதரனின் காதலைப்பற்றி சொல்லலாமே!

குப்தா அதைக்கேட்டு குழம்பி இருக்க, "மனசார ஒருத்தரை காதலிச்சுட்டு இருக்கறவர் கூட வாழப்போற உங்க பொண்ணோட வாழ்க்கை, எப்படி சந்தோஷமா இருக்கும் குப்தா ஸார்?" எனக் கேட்டாள்.

அவளது தெளிவான பேச்சும் தீர்க்கமான பார்வையும் பொய்யைப் போல தெரியவில்லை. இருப்பினும் "அதெப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க மேடம்? உங்களுக்கு எப்படி தெரியும்?" என்று மெதுவாக வினவினார்.

"அந்த பொண்ணை நானே நேர்ல பார்த்திருக்கேன் மிஸ்டர் குப்தா. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை. யோசிங்க. உங்க மகள் வாழ்க்கை, அப்றம் உங்க இஷ்டம்." என்றதோடு அறையை விட்டு வெளியேறினாள் யுவர்ணிதா.

அவள் பேசியதைக் கேட்டு முழு குழப்பத்துடன் இருந்த குப்தா, 'ரகுவை ஆசையாக விரும்பி மணக்கும் தன் மகள் அவன் மனதில் வேறொருத்தி இருந்தால் அவனுடன் எப்படி மகிழ்ச்சியாக வாழ்வாள்?'

'அதற்கு பதிலாக இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு அவளிடம் உண்மையைக்கூறி அவளை சமாதானம் செய்தால் கூட, அவனை காலப்போக்கில் மகள் மறந்துவிட வாய்ப்புண்டு.' என்ற தெளிவான முடிவுக்கு வந்தார்.

என்னதான் ரகுவால் தனக்கு ஆதாயம் என்று யோசித்தாலும் இதில் மகளது மகிழ்ச்சி கேள்விக்குறி ஆகுமெனும்போது மற்றதெல்லாம் ஒன்றுமில்லை என்றானது அவருக்கு.

அதனால்தான் மேடையில் வந்து ரகு காதலிப்பதாகச் சொல்ல, அவன் அதை மறுக்காமல் யார் சொன்னது என்று தானே கேட்டான். அதனால் திருமணத்தை நிறுத்த வாய்க்கு வந்ததை பேசிவிட்டு கிளம்பி விட்டார்.

அனைத்தையும் ஒரு ஓரமாக நின்று கவனித்த யுவர்ணிதாவிற்கு தனது யூகம் சரியெனப்பட்டது. மதுரா பேசியதில் இருந்து அவளுக்குள் சில சந்தேகங்கள். அதை தெளிவுபடுத்த குட்டையை குழப்பத்தான் வேண்டும் என்ற முடிவோடு தான் பேசினாள்.

மதுரா சொன்ன விசயங்களில் சில முரண்பாடுகளை உணர்ந்த யுவனிக்கு, பணக்காரர்களை வெறுக்கும் மதுவின் சகோதரன் அந்தப் பெண்ணை விரும்பி இருக்க மாட்டான் என்று ஏதோ உறுதியாக தெரிந்தது.

அதை அறிந்து கொள்ள குப்தாவை குழப்பிவிட்டு மேடையில் பேசச் செய்தால், அவன் உண்மையாகவே அவளை விரும்பிருந்தால் திருமணம் வரை கைகூடி வந்தபிறகு அவளை இழக்கக்கூடாது என்ற எண்ணத்தில், குப்தா சொல்லும்போது தனது காதலை ஒத்துக் கொண்டிருப்பான்.

அவன் அதையும் செய்யவில்லை எனும்போது கண்டிப்பாக இது அவர்களது வளர்ப்புப் பெற்றோரின் வேலையாகத்தான் இருக்கும் என யூகித்தாள்.

'எப்படியோ மதுராவின் திருமணம் நின்றுவிட்டது.' ஆசுவாசமாக நெஞ்சில் கைவைத்து நினைத்தவளின் மனசாட்சி,

'எல்லாஞ்சரி யுவனி. ஒருவேளை அவன் அந்த பொண்ணை விரும்பறதா ஒத்துக்கிட்டு இருந்தா இந்நேரம் மதுராவுக்கும் தானே கல்யாணம் ஆகி இருக்கும்?' லாஜிக்கான கேள்வி எழுப்பியது.

ஒருநொடி விழித்தவள்,' அப்படி எல்லாம் நடக்க விட மாட்டேன். அந்த பொண்ணு யாருன்னு நான்தான் குப்தாகிட்ட சொல்லலையே. அப்படி எதாவது நடந்தால் அவன் பொய் சொல்றான், அவன் லவ் பண்ற பொண்ணு நான்தான்னு சொல்லிடுவேன்.'

மனசாட்சிக்கு பதிலளிக்கும் வேகத்தில் சட்டென சொன்னபிறகு தான், அந்த பதிலை எண்ணி சில நொடிகள் அவள் விழிக்க, சிரிப்புடன் அகன்றது மனசாட்சி.

வேகமாக தலையை உலுக்கி ' என்ன கேணத்தனமான யோசனை இது!? அவன் பேர் கூட சரியா தெரியாது. இதுல அவனோட லவ்வராம். உனக்கு புத்தி கெட்டுப்போச்சு யுவனி.' என்று தன்னையே கடிந்து கொண்டவளிடம்,

'பேர் தெரிஞ்சா மட்டும் லவ் பண்ணப் போறியா?' போன மனசாட்சி எட்டிப் பார்த்து கேட்க, அதை தலையில் தட்டி அடக்கிவிட்டு தனது வீட்டை நோக்கி கிளம்பிச் சென்றுவிட்டாள்.

°°°°°°°°°°°°°°°°°

'நீ கொஞ்சம் பொறுமையாக இருந்து இருக்கலாமே' என்று கேட்ட பெரியப்பாவிடம் எரிந்து விழுந்த ரகு, அவரது முகம் சுருங்க அமைதியாக இருப்பதைப் பார்த்து, "ஸாரிப்பா" என்றான்.

"பரவால்ல விடு ரகு. ஆனா நீ லவ் பண்றதா அவர் சொன்னாரே!?" இழுத்தபடி தேவநாதன் கேட்க, "உங்களுக்கு என்னைப் பற்றி தெரியாதாப்பா? அவர்தான் ஏதோ கூறுகெட்டதனமா சொல்றார்னா நீங்களுமா?!" அங்கலாய்ப்புடன் கேட்டான் ரகு.

அங்கே வந்த மதுரா, " அப்ப நீங்க லவ் பண்ணலையாண்ணா?" புருவங்கள் சுருங்க யோசனையோடு கேட்ட தங்கையை முறைத்தான் அண்ணங்காரன்.

"நீயுமா குட்டிமா என்னை நம்ப மாட்டேன்ற?. உன்னையே லவ் பண்ணக்கூடாதுனு சொல்ற நான் எப்படி அதே தப்பை செய்வேன்?" ரகு வருத்தமாகக் கேட்டதும், மதுராவின் பார்வை தேவநாதனிடம் திரும்பியது.

அதில் தடுமாறிய தேவநாதன், "ஸாரி மது. உங்க நல்லதுக்குனு நினைச்சு நான் செய்தது எல்லாம் வீணாப் போச்சு. நீ இது எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம படிப்புல கவனம் செலுத்து. போம்மா." அவள் எதையாவது உளறும்முன் அவரசமாக அவளை அப்புறப்படுத்த முயன்றார்.

அவரது சாமர்த்தியமான பேச்சைக் கேட்டவள் சிறு முறைப்புடன் தனது அறைக்கு சென்று விட," நாங்க உன்னை நம்பறோம் ராஜா. ஆனா அவருதான் அவ்ளோ உறுதியா சொல்றாரே. அதோட அந்த பொண்ணே சொல்லுச்சுனு வேற சொன்னாரே?!"

" நீ கொஞ்சம் நிதானமா இருந்திருந்தா அந்த பொண்ணு யாருன்னு கேட்டு இருக்கலாம். நீ அதுக்குள்ள அவசரப்பட்டு வந்துட்ட." ஜெயந்தி கூறியபிறகுதான் ரகுவிற்கு அந்த யோசனையே வந்தது.

"ம்ஹ்ம்ம்! அந்தமாதிரி பெரிய ஆளுங்க நம்மள வேணாம்னு உதறுன பிறகு நம்மள மதிக்கக்கூட மாட்டாங்க. இதுல எங்க போய் அதைக் கேட்கறது? என்ன செய்றது நமக்கு கொடுத்து வைச்சது அவ்ளோ தான்." புலம்பலோடு அகன்றார் தேவநாதன்.

பிறகு அங்கயே நின்றால் ரகுவின் கண்டனத்திற்கு ஆளாவாரே!. செல்லும் அவரை பார்த்து திருத்த முடியாது எனும்விதமாக தலையசைத்த ரகு, ஜெயந்தி சொன்ன விசயத்தைப் பற்றி யோசிக்க, சில நொடிகளில் அதற்கான தீர்வு கிடைத்தது.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top