• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
Dec 5, 2025
Messages
21
பாலைவனத்து முல்லை❣️

பகுதி- 8

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் வேளையில் சற்றும் எதிர்பார்க்காமல் மீனா விஷத்தை குடித்தவளை பார்த்து அனைவரும் அலண்டு போனார்கள்.

'ஐயோ! மீனா!' என்று முல்லை பதறிப்போய் மீனாவை மடியில் தாங்கினாள்.

மீனாவின் செயலில் கதிர்வேலனும் ஜீவானந்தமும் செய்வதரியாமல் சிலையென நின்றார்கள்.

'ஐயோ என் பொண்ணுக்கு என்னாச்சு!?' என கஸ்தூரி வாயில் வயிற்றில் அடித்துக்கொண்டு துடித்து போனார்.

"டேய் என்னங்கடா வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கீங்க... போங்க! போய் வண்டியை எடுங்க" என்று பாண்டியன் சொன்னதும், கதிர்வேலன் மீனாவை தூக்க போனார்.

'வாத்தி இருங்க' என ரோஜா கையில் பச்சிளம் இலைகளோடு ஓடி வந்தவள், உள்ளங்கையில் வைத்து கசக்கி அதை மீனாவை உட்கொள்ள வைத்தாள்.

இலையின் சாறு மீனாவின் தொண்டை குழியில் இறங்கியதும்,குடலை பிரட்டிக்கொண்டு மீனா வாந்தி எடுத்து மயங்கி சரிந்தாள்.

'பெரியவரே! நீங்க காரை எடுங்க, வாத்தி வாங்க மீனாவை ஹாஸ்பிடல் அழைச்சிட்டு போகலாம்' என்று ரோஜா சொல்ல,

'ஐயோ என் பொண்ணு' என்று அலறி அடித்துக்கொண்டு கஸ்தூரியும் இவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றார்.

மீனாவின் செயலில் முல்லைக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

தன் தங்கை கஸ்தூரியின் செயலில் பாண்டியனின் கோவம் தலைக்கேரியது.

'மாமா... நீங்க வேணும்னா மீனாவை ஜீவா மாமாவுக்கே கல்யாணம் பண்ணி தந்துடுங்க' என்று முல்லை அழுதுக்கொண்டே சொல்ல,
'ஆனால் மீனா கதிரை தானே நேசிக்கிறாள்!' என்றார் பாண்டியன்.

'ஆனா மாமா... கஸ்தூரி சித்திக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லையே' என முல்லை சொன்னதும்,

'தாலி கட்ட போறவன் சம்மந்தமும், தாலியை வாங்கிக்க போற பொண்ணோட சம்மதமும் தான் எனக்கு முக்கியம்' என்று தன் முடிவை சொன்னார் பாண்டியன்.

தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நினைத்து முல்லைக்கு கண்கள் ஈரமானது.

தாயை இழந்த முல்லைக்கு தகப்பனின் அரவணைப்பும் இல்லை என்ற காரணத்த்தால் எப்போதும் பாண்டியனுக்கு முல்லை மீது கூடுதலான அக்கறை இருந்தது.

'அம்மாடி முல்ல... நீ கலங்காதே! யார் என்ன சொன்னாலும் நீ தான் இந்த வீட்டு மருமகள்' என பாண்டியன் தீர்க்கமாக சொல்ல,

'மாமா...மீனாவை அழைச்சிட்டு போன ஹாஸ்பிடலுக்கு நம்மளும் போவோமா!?' என முல்லை கேட்டாள்.

'வேண்டாம் முல்ல.
நம்ம இப்போ அங்கே போனால் கஸ்தூரி வாய்க்கு வந்த வசையை பாடிக்கிட்டு இருப்பாள், அதான் பசங்க மூணு பேரும் போய் இருக்காங்களே! அவங்க பார்த்துப்பாங்க' என்று பாண்டியன் சொல்ல, மீனாவிற்கு எந்த விபரீதமும் நேர்ந்திடக் கூடாது என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டாள் முல்லை.

******************

மருத்துவமனையில் மீனாவுக்கு மருத்துவர் சிகிச்சை கொடுக்க,'என்ன சார் தற்கொலை முயற்சியா!? போலீஸ்ல கம்பளைண்ட் பண்ணிங்களா!?'என்று கேட்டார் செவிலியர்.

தன் மகளின் பெயரில் போலீஸ் கேஸ் எல்லாம் வந்தால் அவள் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று எண்ணிய கஸ்தூரி,
'தற்கொலை முயற்சி எல்லாம் இல்லிங்க! குடும்ப சண்டை அவ்ளோ தான்' என்றார்.

'என்ன பிரச்சனையா இருந்தாலும் போலீஸ்க்கு தெரியப்படுத்தனும்' என்று செவிலியர் சொல்ல,

'என்ன இங்க பிரச்சனை?' என்ற கேள்வியோடு அங்கே சிவில் ட்ரெஸ்ஸில் காவலர் சுந்தரேசன் இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான்.

சுந்தரேசத்தை பார்த்த ஜீவானந்தன்,'கதிரு! நீ எதுவும் பேசிக்காத, நான் பார்த்துக்குறேன்' என்றார்.

'ஏன்!? நான் பேசினா தான் என்னவாம்!?' என்ற கதிர்வேலன் சண்டைக்கோழியை போல அவனை முறைத்து பார்க்க,
சுந்தரோ இவர்கள் இடையே நின்று இருந்த ரோஜாவை ஒரு மார்க்கமாக பார்த்து இருந்தான்.

தன் தங்கையின் மீது காரணமே இல்லாமல் பார்வையை பதித்து இருந்த சுந்தரின் கண் முன்னே தன் விரல்களை சுண்டி, 'அங்க என்ன பார்வை!' என்று கேட்ட கதிர்வேலனின் முகம் இறுகியது.

தன் பார்வையை சட்டென்று ஜீவானந்தம் மற்றும் கதிர்வேலனிடம் திருப்பிய சுந்தரேசன்,'இங்க என்ன பிரச்சனைன்னு கேட்டேன்' என்றான்.

'சார்! இவங்க வீட்டு பொண்ணு விஷம் குடிச்சிட்டாங்க, அதான் போலீஸ்ல கம்பளைண்ட் பண்ண சொன்னேன்' என்று செவிலியர் சொல்ல,

'ஓ!.... நல்லதா போச்சு! நானும் இந்த வாய்ப்புக்காக தான் காத்து இருந்தேன்' என்றான் ASI சுந்தரேசன்.

'நீங்க வாய்ப்புக்கு காத்து இருந்தாலும் சரி! வாழைப்பழத்துக்கு காத்து இருந்தாலும் சரி, போய் அந்த பக்கம் ஓரமா நின்னு காத்து இருங்க' என்ற கதிர்வேலனின் பேச்சில் ரோஜா சூழ்நிலை மறந்து சிரித்து இருந்தாள்.

தன்னை அவமானம் படுத்தும்படி பேசும் கதிர்வேலனை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் காத்து இருந்த சுந்தரேசனுக்கு இந்த வாய்ப்பை தவற விட மனமில்லாமல்,'சிஸ்டர்! உள்ள patient கண்டிஷன் எப்படி இருக்கு' என்று மீனாவை பற்றி கேட்டான் சுந்தரேசன்.

'அவங்க! ' என்று சுந்தரேசன் கேட்ட கேள்விக்கு செவிலியர் பதில் சொல்லும் முன்னே,

'அனேகமா நான் அடிச்ச அடிக்கு, patient உடம்புல உயிர் மட்டும் தான் இருக்கும்' என்று கதிர்வேலன் சொல்ல,தன் அண்ணனின் பதிலை கேட்டு புருவம் உயர்த்தினாள் ரோஜா.

தன் தங்கையின் மனதில் எழுந்த கேள்வியை அறிந்து இருந்த கதிர்வேலன்,'என்ன ம்மா! இவனை யாருன்னு உங்களுக்கு தெரியலையா! இவன் தான் சுந்தரேசன், நான் காலேஜ் புகுந்து அடித்தேனே வாத்தியார் ஸ்ரீனிவாசன், அவனோட அருமை அண்ணன்' என்றார் கதிர்வேலன்.

சுந்தரேசனை பற்றி தெரிந்ததும் ரோஜாவின் முகத்தில் அருவருப்பான பாவனை தோன்றியது,

இன்னும் ஒரு வாரத்தில் தன் தம்பிக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்று இருக்க காரணமே இந்த கதிர்வேலன் தான் என்று அறிந்து இருந்த சுந்தரேசனுக்கு எப்படியாவது அவன் அனுபவித்த அதே வழியை கதிர்வேலனுக்கு தர வேண்டும் என்று நினைத்தவனின் பார்வை மீண்டும் ரோஜாவின் மீது படிந்தது.

இவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி நின்று இருக்க,'அவங்க இப்போ நல்லா இருக்காங்க, நீங்க போய் பார்க்கலாம்' என்றப்படி மருத்துவர் மீனா இருக்கும் சிகிச்சை அறையில் இருந்து வெளியே வந்தார்.

தன் மகளுக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்ற செய்தியை கேட்டு கஸ்தூரிக்கு நிம்மதி எழுந்தது.

'என்ன டாக்டர் sucide கேஸ் தானே! நீங்க ஏன் போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணல' என்று சுந்தரேசன் கேக்க,

'sucide கேஸ்ன்னு யார் சொன்னாங்க!? அவங்களுக்கு food பாய்சன் ஆகியிருக்கு' என்றார் மருத்துவர்.

மருத்துவரின் பதிலில் சுந்தரேசனின் முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது.

'ஆமா! இந்த விஷயதுக்கே போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணனும்னு சொல்லுறியே! உன் தொம்பிக்கு எங்கேயோ படாத இடத்துல பட்டு,
விடக்கூடாத நரம்பு விட்டு போச்சாம்மே! அப்போ அந்த அசம்பவிதத்துக்கு எல்லாம் என்னனு நீ ரிப்போட் பண்ணி இருப்ப!?' என்று கதிர்வேலன் தனக்கே உரிய கிண்டலான பாவனையில் கேட்டதும், சுந்தரேசனின் முகத்தில் கோவகனல் வெடித்தது.

'வாத்தி! இவருக்கிட்ட நமக்கு என்ன பேச்சு! வாங்க நம்ம போய் மீனாவை பார்க்கலாம்!' என்று ரோஜா தன் அண்ணன்களை அழைத்துக்கொண்டு மீனா இருக்கும் சிகிச்சை அறைக்குள் நுழைய,

'என் தம்பி வாழ்க்கையை அழித்த இந்த கதிர்வேலனோட தங்கச்சி வாழ்க்கையை நான் அழித்தே தீருவேன்'என்று தன் மனதில் மண் கோட்டை கட்டினான் ASI சுந்தரேசன்.

**********************

சிகிச்சை அறைக்குள் அனைவரும் நுழைந்த சமயம் மீனா சோர்வாக கட்டிலில் படுத்து இருக்க, உள்ளே வந்த வேகத்தில் தன் மகளின் இருப்பக்க கன்னத்திலும் ஆத்திரம் தீர அறைந்து இருந்தாள் கஸ்தூரி.

'இந்த அடியை கொடுக்க தான், கடவுளே மீனாவை காப்பாற்றி கொடுன்னு கஸ்தூரி அத்த அவ்வளவு நேரம் அழுதுச்சா!' என்று கதிர்வேலன் இயல்பாக கேட்க,'வாத்தி கொஞ்சம் அமைதியா இருங்க! பாவம் மீனா' என்றாள் ரோஜா.

'பாவி மவளே ஏன் டி இப்படி பண்ண!' என்று கதறி அழுத தன் அன்னையின் குரலை மீறி மீனாவின் பார்வை கதிர்வேலனின் மீது படிந்தது.

'மீனா! நீ படிச்ச பொண்ணு தானே.
எந்த பிரச்சனை வந்தாலும் நின்னு போராடனும்ன்னு உனக்கு தெரியாதா!' என்று கண்டித்தார் ஜீவானந்தம்.

'காதலுக்காக நான் உயிரை விடக்கூட தயாராக இருக்கேன்னு என் அம்மாவுக்கு தெரியணும், அப்படி தெரிந்தால் தான் எனக்கு கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வைப்பாங்க' என்று மீனா மீண்டும் தன் காதலின் ஆழத்தை அவள் அன்னையின் முன்னே தெரியப்படுத்தினாள்.

' நீ பண்ண வேலையால், இந்நேரம் நாங்க தான் போலீஸ் ஸ்டேஷன்ல போய் குடும்பத்தோட உக்காந்து இருப்போம்' என்று ஜீவானந்தம் சொல்ல,

'நான் தான் டாக்டர்க்கிட்ட சொல்லி food பாய்சன்னு சொல்ல சொல்லிட்டேனே!' என்றாள் மீனா.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
'அவரு அப்படி சொன்னதோடு மட்டும் தான் அந்த போலீஸ்க்காரர் அமைதியா போனாரு! இல்லைனா கண்டிப்பா எங்களை ஸ்டேஷன்க்கு தான் அழைச்சிட்டு போய் இருப்பாரு' என்ற ஜீவானந்தத்தின் குரலில் இந்த முறை கோவம் தெரிந்தது.

'இங்க பாரு மீனா! நீ எனக்கு ஒத்த பொண்ணு! நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்! அம்மா உன் நல்லதுக்கு தானே சொல்லுறேன், அம்மா சொல்லுறத கேளு டி தங்கம், நீ ஆனந்தை கல்யாணம் பண்ணிக்கோ,நான் வேணும்னா அண்ணன்கிட்ட சொல்லி' என்று கஸ்தூரி வார்த்தையை முடிக்கும் முன்னே அருகே இருந்த கத்திரியை கையில் எடுத்தாள் மீனா.

'ஏய் ஏய் என்ன பண்ற!' என்று மீனாவின் செயலில் ரோஜா பதறிப்போய் அவள் கையில் இருந்த ஆயுதத்தை தன் வசம் வாங்கிக்கொண்டாள்.

'இங்க பாரு மா... எனக்கு கதிர் மாமாவை கல்யாணம் பண்ணி வைக்கலைனா கண்டிப்பா நாங்க செத்து மேலோகம் போய் அங்க நிம்மதியா வாழ்ந்துப்போம், அப்போ உன்னால எங்கள ஒன்னும் பண்ண முடியாது' என்ற மீனாவின் பிடிவாதத்தில் கஸ்தூரியை விட கதிர்வேலனுக்கு தான் அதிர்ச்சி அதிகரித்தது.

'அத்த... நீங்க சும்மாவே இருக்க மாட்டிங்களா! முதல்ல நீங்க உங்க வீட்டுக்கு கிளம்புங்க' என்று ரோஜா தன் அத்தையை கடிந்துகொண்ட சமயம் கதிர்வேலனின் நண்பன் நாகராஜன் அங்கே வந்து சேர்ந்தான்.

'ஹாங்... சரியான நேரத்துக்கு தான் நாகா வந்து இருக்காரு! பெரியவரே,அத்தையை அழைச்சிட்டு போய் நாகாவை அவங்க வீட்டுல விட்டுட்டு வர சொல்லுங்க' என்று ரோஜா சொல்ல,

'அப்போ மீனாவை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாமா?' என்று கேட்டார் ஜீவானந்தம்.

'ஆமா... இனி முல்லை கூட நம்ம வீட்டுல தான் இருக்க போறா! அப்போ மீனாவும் அவகூட இருக்கட்டும், மீதி விவரம் எல்லாம் ஐயன் முடிவெடுதுப்பாரு, முதல்ல இந்த அத்தையை இங்க இருந்து பேக் பண்ணி அனுப்பி விடுங்க' என்று ரோஜா சொன்னதும்,

'இல்ல நான் என் பொண்ணை விட்டு போக மாட்டேன்' என்று அடம் பிடித்தார் கஸ்தூரி.

'அத்த... ரொம்ப பண்ணாதீங்க, நான் ஒரு வார்த்தை சொன்னால் போதும். உங்க பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளாவே வர முடியாது, அப்புறம் பாண்டியன் வீட்டுக்கு சம்மந்தியாக போகணும் என்ற உங்க கனவுல மண்ணு தான் விழும், பரவாயில்லையா' என்று ரோஜா கேட்க,

'என் பொண்ணை பார்த்துக்கொங்க, நாளைக்கு நான் வீட்டுல வந்து அவளை பார்த்துக்குறேன்' என்ற கஸ்தூரி நாகராஜனுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.

ரோஜாவின் வார்த்தையை மீறி பாண்டியனாக இருந்தாலும் எந்த ஒரு முடிவையும் எடுக்க வாய்ப்பில்லை என்று அறிந்துருந்த கஸ்தூரி, எப்படியோ தன் மகளின் வாழ்கை நல்ல விதமாக அமைந்தால் போதும் என்ற எண்ணத்தில் அங்கிருந்து சென்று இருக்க,

'மீனா நீ வா நம்ம வீட்டுக்கு போகலாம், பாவம் உன்னால வீட்டுல அப்பாவும் முல்லையும் தான் கவலையா இருப்பாங்க' என்று ரோஜா மீனாவிடம் கோவித்து கொண்டாள்.

********************

வாசலுக்கும் வீட்டுக்கும் தவிப்புடன் முல்லை நடந்துக்கொண்டு இருக்க,
'மீனாவுக்கு ஒன்னும் ஆகாது முல்ல... நீ வந்து இப்படி உக்காரு மா' என்று தன் தங்கையின் மகளை தன் மகளாக பாவித்து அன்புடன் பேசினார் பாண்டியன்.

'இருந்தாலும் அவளை பார்க்குற வரைக்கும் என் தவிப்பு அடங்காது மாமா!' என்று முல்லை பதற்றத்துடன் மீண்டும் வாசலுக்கு செல்ல, வெள்ளை நிற காரை கதிர்வேலன் ஓட்டிக்கொண்டு காரை நிப்பாட்டி வைக்கும் இடத்திற்க்குள் நுழைந்தார்.

'மாமா மாமா... அவங்க வந்துட்டாங்க' என்ற முல்லை அதே வேகத்துடன் வாசலுக்கு ஓடியவள், பின் இருக்கையில் இருந்து ரோஜாவுடன் இறங்கிய மீனாவை பார்த்து கட்டி அணைத்து அழ தொடங்கினாள்.

முல்லையின் அணைப்பில் மீனாவின் கண்களும் ஈரமாக, காரில் இருந்து இறங்கிய கதிர்வேலன் ஓரமாக நின்று இருந்த புல்லட்டை எடுத்துக்கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து ரணமான இதயத்தோடு வெளியேறி இருந்தார்.

'சரி சரி... வாசல்ல நின்னு பேசாம வாங்க உள்ள போகலாம்' என்று ரோஜா அழைக்க, மீனாவும் முல்லையும் பாண்டியனின் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

'என்ன மீனா நீ! ஏன் இப்படி பண்ண!' என்று பாண்டியன் மீனாவிடம் கோவித்து இருக்க,'சாரி மாமா இனிமே இப்படி பண்ண மாட்டேன்' என்றவள் சோர்வாக காணப்பட்டாள்.

'அப்பா... வழியெல்லாம் நானே நல்லா திட்டி விட்டேன் அப்பா, பாவம் இனி இந்த மாதிரி பண்ண மாட்டாள்' என்று ரோஜா மீனாவுக்கு பரிந்து பேச,'ஆமா கஸ்தூரியும் ஆனந்ததும் எங்கே' என்று கேட்டார் பாண்டியன்.

'அத்தையை நான் தான் வீட்டுக்கு போக சொல்லிட்டேன், பெரியவரு பஞ்சாயத்து ஆபீஸ்ல இறங்கிட்டாரு' என்று ரோஜா சொல்ல,'மாமா சார் ஏன் வீட்டுக்கு வராம கோவமா வெளிய போனாரு' என்று கேட்டாள் முல்லை.

'வாத்தி மீனாவுக்கு மருந்து வாங்க போய் இருக்காரு முல்லை, மீனா நீ போய் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ, சாப்பாடு ரெடி ஆனதும் நான் எழுப்புறேன், முல்லை நீ என்கூட வா' என்ற ரோஜா முல்லையை அடுப்பணைக்குள் அழைத்து சென்றாள்.

'ரோஜா! மீனாவுக்கு அவ சாப்பிட்ட விஷத்தால எந்த பிரச்சனையும் வராது தானே' என்று முல்லை கேட்க,'இனி அதெல்லாம் ஒன்னும் ஆகாது முல்லை, அப்படியே இன்னும் மீதி நஞ்சு அவ வயத்துல இருந்தாலும் நம்ம அதுக்கெற்ற சாப்பாட்டை கொடுத்து சரி பண்ணிடலாம்' என்றாள் ரோஜா.

'ஆனாலும் இந்த மீனாவுக்கு ரொம்ப தைரியம் ரோஜா, மாமா சாருக்காக விஷமெல்லாம் குடிக்கிறாளே! அவளுக்கு மாமா சார் மேல அவ்வளவு காதல் இருக்கா!' என்ற முல்லையின் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர,

'இதெல்லாம் பண்ணா தான் காதல் இருக்குனு அர்த்தம் இல்லையே முல்ல! காதலை இப்படி கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது' என்றாள் ரோஜா.

ரோஜாவின் வார்த்தையில் உள்ள அர்த்தம் முல்லைக்கு விளங்காமல் போக,'யார் யாரை கட்டாய படுத்துறாங்க, நீ சொல்லுறத பார்த்தா மாமா சாருக்கு மீனா மேல காதல் இல்லையா!' என்று முல்லை சரியாக கணித்து கேட்டதும்,
'அதெல்லாம் விடு! மதியம் என்ன சமைக்கலாம்' என்று ரோஜா பேச்சை மாற்றினாள்.

ரோஜாவின் வார்த்தையை மனதிற்குள் அசைப்போட்டப்படி முல்லை அடுப்பணை கல் மேடையில் சாய்ந்துக்கொண்டு நின்று இருந்தவள்,' இருந்தாலும் மாமா சாருக்காக மீனா உயிரை கொடுக்க துணிந்து இருக்கானா! அவ காதல் உண்மையான காதல் தான்' என்று மீண்டும் முல்லை அதே வார்த்தையை உச்சரிக்கும் சமயம்,

'ஓ!! அப்போ உயிரைக்கொடுத்தா தான் என் காதலை நீ உண்மைன்னு நம்புவியா!' என்ற கதிர்வேலனின் குரல் கேட்கும் திசையை நோக்கி திரும்பிய முல்லைக்கு, அவர் பேச்சில் உள்ள உள் அர்த்தம் புலப்படாமல் போனது.

கதிர்வேலன் இடம் மறந்து பேசியதை பார்த்து ரோஜா தலையில் அடித்துக்கொண்டவள்,' வாத்தி! மருந்தை எடுத்துட்டு போய் நீங்களே மீனாக்கிட்ட கொடுத்துடுங்க' என்று கதிர்வேலனை அங்கிருந்து அனுப்பி வைக்க முயற்சி செய்தாள்.

ரோஜாவின் பதற்றத்தை அறிந்துக்கொண்ட கதிர்வேலனோ!! பெருமூச்சை எடுத்தவாரு முல்லையை அழுத்தமாக பார்த்தப்படி தன் கையில் இருந்த மருந்து பையை அவள் அருகே வைத்தப்பின்,அடுப்பணையில் இருந்து வெளியேறி இருந்தார்.

*************

ஆரம்பத்தில் இருந்தே மீனாதான் கதிர்வேலனை விரும்புகின்றாள்! கதிர்வேலனுக்கு மீனாவின் மீது பிரியம் இல்லை என்ற சந்தேகம் முல்லையின் மனதில் இருக்கத்தான் செய்தது.

இருப்பினும் கதிர்வேலனின் மூர்க்கமான இயல்புதான் அவர் காதலை மீனாவிடம் வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றது என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட முல்லைக்கு இந்த விஷயம் அவ்வளவு பெரியதாக தோன்றவில்லை.

மருந்தின் தாக்கத்தால் மீனா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ரோஜாவும் முல்லையும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மதிய உணவை தயார் செய்தார்கள்.

மதிய நேரம் ஜீவானந்தம் பஞ்சாயத்து வேலைகளை முடித்துக் கொண்டு நாகராஜனின் வண்டியில் தன் வீட்டிற்கு வந்து சேர,'எங்க வாத்தி? ஏன் இன்னும் அவர் வீட்டுக்கு வரல?' என்று கேட்டாள் ரோஜா.

'கதிருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்காம்! நைட்டு தான் வீட்டுக்கு வருவேன்னு சொல்ல சொன்னான் சின்னம்மா' என்று நாகராஜன் சொல்ல,

'எனக்கு போன் பண்ணி சொல்லாம! உங்ககிட்ட சொல்லி ஏன் சொல்ல சொன்னாரு!?' என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு கோபமாக கேட்டாள் ரோஜா.

'உங்ககிட்ட சொன்னா மதியம் வந்து சாப்பிட்டு ஆகணும்னு நீங்க பிடிவாதம் பிடிப்பீங்க! அதனால தான் உங்களுக்கு போன் பண்ணல' என்று நாகராஜன் சொல்ல, வேகமாக சமையல் அறைக்குள் சென்று, முல்லை அங்கிருந்த டிபன் பாக்ஸ் எடுத்து, கதிர்வேலனுக்கு மதிய உணவை தயார் செய்தாள்.

'என்ன முல்லை வாத்திக்கு சாப்பாடு காட்டுறியா!?' என்று ரோஜா கேட்க,
'ஆமா ரோஜா... மீனா தூங்காம இருந்தா அவ ரெடி பண்ணி கொடுப்பாள்..பாவம் அவளே டயர்டா இருக்காள். அதான் மாமா சாருக்கு நானே சாப்பாடு கட்டிட்டேன்' என்று முல்லை சொல்ல,
'பரவாயில்லையே!! என் தம்பி மேல முல்லைக்கு நிறைய அக்கறை தான்' என்றார் ஜீவானந்தம்.

'இதுல நீங்க ஆச்சரியப்பட என்ன இருக்கு பெரியவரே!! முல்லை நம்ம வீட்டுப் பொண்ணு. என்னதான் நீங்க ரெண்டு பேரும் ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணிக்க போறதா இருந்தாலும், முல்லைக்கு என்னைக்குமே வாத்தி மேலையும் அன்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்யும்' என்று தன் இளைய அண்ணனை விட்டுக் கொடுக்காமல் பேசினாள் ரோஜா.

'ஆமா ஆமா... நம்ம வீட்டு மருமகளுக்கு இந்த குடும்பத்தில் இருக்கிற எல்லார் மேலயும் பாசம் அதிகம் தான்' என்று சொல்லிக் கொண்டே பாண்டியன் அவர் அறையில் இருந்து வெளியே வர, 'எல்லாரும் ஒன்னா இருக்கும் போது மாமா சாரும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் நல்லா தானே இருக்கும்!' என்றாள் முல்லை.

'அவன் இப்படிதான் முல்லை. நீ கண்டுக்காத, சரி சாப்பாட்டு கூட முட்டை ஆம்லெட் வெச்சியா?' என்று ஜீவானந்தம் கேட்க,'ரெண்டு போட்டு வச்சிருக்கேன் மாமா ' என்றாள் முல்லை.

'நாகா... நீங்க வீட்டிலேயே சாப்பிட்டுட்டு வாத்திக்கு சாப்பாடு எடுத்துட்டு போங்க' என்று ரோஜா சொல்ல,' இல்ல...எனக்கு வீட்ல கஞ்சி இருக்கு நான் குடிச்சுப்பேன். கதிருக்கு மட்டும் சாப்பாடு கொடுங்க' என்றபடி நாகராஜன் கதிர்வேலனுக்கு சாப்பாட்டை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல,

எப்படி இருந்தாலும் இன்று கதிர்வேலன் மதிய உணவை உண்ண மாட்டார் என்ற உண்மை ரோஜாவிற்கு மட்டும் தெரிந்திருந்தது.
 
New member
Joined
Dec 5, 2025
Messages
21
வீட்டில் இதுவரை ரோஜா மட்டும் தனியாக இருந்தவள் வேண்டுமென்றே சமையலில் தன் நேரத்தை கழிக்க, இன்று முல்லை, மீனா,ரோஜா என்று மூவரும் தன் வீட்டில் ஒன்றாக இருந்ததும், அரட்டையும் கும்மாளமுமாக சந்தோஷமாக இருந்தவர்களை பார்த்து பாண்டியனின் உள்ளம் பூரித்துப் போனது.

'கடவுளே... இவங்க மூணு பேரும் எப்பவும் இதே மாதிரி சந்தோஷமா இருக்கணும்' என்று பாண்டியன் மனதளவில் எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையில் ஜீவானந்தம் கையில் நிறைய வாழை இலைகளை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

'என்ன மாமா...இவ்ளோ வாழை இலையை எடுத்துட்டு வரீங்க?'என்று மீனா கேட்க

'அதானே!! ஏன் இத்தனை வாழை இலை' என்று அதே கேள்வியை முல்லையும் கேட்க,

'என்ன பெரியவரே!? நாளைக்கே உங்க கல்யாணத்தை முடிச்சு, ஊருக்கே விருந்து போட ஆசைப்படுறீர்களோ!?' என்று தன் பெரிய அண்ணனை சீண்டினாள் ரோஜா.

'அட அதெல்லாம் இல்லமா... நம்ம வாழ தோப்புல இன்னைக்கு கொஞ்சம் இலை மீந்துடுச்சு, அதான் வீட்டுக்கு எடுத்துட்டு வந்தேன். நம்ம ரெண்டு வேளைக்கு வச்சி சாப்பிட்டுப்போம்' என்று ஜீவானந்தம் சொல்ல,
'ஆனாலும்... இது ரொம்ப அதிகமா இருக்கே' என்று ரோஜா சொன்னாள்.

சில நொடிகள் யோசித்த முல்லை 'ம்...வேணும்னா நம்ப வாழை இலை அல்வா செய்யலாமா?'' என்று கேட்க,
'என்ன வாழை இலையில அல்வாவா? அது எப்படி?' என்று மீனா ஆச்சிரியமாக கேட்க,

'நான் செய்றேன் வாங்க' என்ற முல்லை, ஆர்வமாக பாண்டியனின் வீட்டில் வாழை இலையைக் கொண்டு அல்வா தயாரித்து அனைவருக்கும் கொடுத்தாள்.

'ரொம்ப பிரமாதம்!!! இதுவரை இந்த மாதிரி ஒரு ஆரோக்கியமான அல்வாவை நான் சாப்பிட்டதே இல்லை! அதுவும் சக்கரைக்கு பதில் நாட்டு வெல்லம் போட்டு இருக்க, ரொம்ப ரொம்ப அருமையா இருக்கு' என்று மனமார்ந்து ஜீவானந்தமும் பாண்டியனும் ஒருவர் மாற்றி ஒருவர் முல்லையை பாராட்டினார்கள்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக அல்வாவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் நாகராஜன் மட்டும் வீட்டிற்கு வர,'என்ன நாகா வாத்தி எங்கே' என்று கேட்டாள் ரோஜா.

'அவன் என்கூட தான் இருக்கான், அதான் சொல்லிட்டு போகலாமுன்னு வந்தேன்' என்று நாகராஜன் சொன்னதும்,

'ஆங் சரி சரி... நீங்க ரெண்டு பேரும் கணக்கு வழக்கை பாருங்க, நான் அப்புறமா வாத்திக்கு சாப்பாடு கட்டி வச்சிட்டு உங்களுக்கு போன் பண்ணுறேன்' என்ற ரோஜா, அப்போதைக்கு தன் தந்தையிடம் இருந்து கதிர்வேலனை காப்பாற்றி இருந்தாள்.

அன்றைய தினம் இரவு நேரம் அனைவரும் இரவு உணவை முடித்து இருக்க, ஜீவானந்தமும் முல்லையும் சந்தோசமாக சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து பெருமூச்சு எடுத்தாள் மீனா.

'சரி முல்ல... நீங்க போய் தூங்குங்க, நான் அப்பாகிட்ட பஞ்சாயத்து விஷயமா பேச வேண்டியது இருக்கு' என்ற ஜீவானந்தம் சிரித்த முகத்துடன் பாண்டியனின் அறைக்கு செல்ல, அடுப்பணையில் பாத்திரத்தை உருட்டிக்கொண்டு இருந்தாள் ரோஜா.

'என்ன ரோஜா! என்ன பண்ணுற?' என்ற கேள்வியோடு முல்லை அடுப்பணைக்குள் நுழைய,'இந்த வாத்தி எப்படியும் மதியம் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாரு, அதான் சாப்பாடுக்கொண்டு போறேன்' என்ற ரோஜா வேகமாக தன் சின்ன அண்ணனுக்கு கூடையில் சாப்பாட்டை கட்டிக்கொண்டு தென்னந்தோப்பில் இருக்கும் நாகராஜனின் வீட்டிற்கு சென்றாள்.

'ரோஜா சென்ற பாதையை மீனா வெரித்துப் பார்த்துக் கொண்டு இருக்க,'என்ன மீனா ஏன் சோகமா இருக்க?' என்று முல்லை கேட்டாள்.

'ஹாஸ்பிடலை விட்டு வந்ததுல இருந்து,நான் கதிர் மாமாவை பார்க்கவே இல்லை.வீட்டுக்கு சாப்பிட வரும்போது பார்க்கலாமென்று நினைத்தேன், ஆனா அவரு வரவே இல்லை 'என்று வருத்தம் கொண்டாள் மீனா.

'இப்போ என்ன! உனக்கு மாமா சாரை பார்க்கணும் அவ்வளவுதானே!! சரி...நான் பண்ண வாழை இலை அல்வா இருக்கு, அதை கொடுக்குற சாக்குல நீ போய் மாமா சாரை பார்த்துட்டு வா' என்று முல்லை சொல்ல,

'ஐயையோ!! நான் எப்படி தனியா போறது!! நீயும் வாயேன்!' என்று முல்லையை துணைக்கு அழைத்தாள் மீனா.

முல்லையும் மீனாவும் தென்னந்தோப்பில் இருக்கும் நாகராஜனின் வீட்டிற்கு செல்ல,
அங்கே கதிர்வேலன் குடித்துவிட்டு வாய்க்கு வந்த பாட்டை எல்லாம் பாடிக்கொண்டு இருந்தவரை ரோஜா கடிந்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.

'என்ன இது மறுபடியும் மாமா சார் குடிக்கிறாரா!?' என்று கேட்டுக்கொண்டே முல்லை மீனாவுடன் நாகராஜன் வீட்டிற்குள் நுழைய அதே சமயம் மின்சாரம் தடைப்பட்டது.

'மறுபடியும் லைன் போச்சா' என்று புலம்பிய நாகராஜன்,தன் கைபேசியில் உள்ள டார்ச் லைட்டை ஆன் செய்ய, விளக்கின் வெளிச்சத்தில் முல்லையை தன் எதிரே பார்த்த கதிர்வேலன்,

🎶ஒளியிலே!!!தெரிவது,தேவதையா.....!!!

உயிரிலே.... கலந்தது, நீ இல்லையா.......!!!!

இது நெசமா நெசம் இல்லயா!!

உன் நெனவுக்கு தெரியலையா!!

கனவிலே நடக்குதா, கண்களும்

கண்கிறதா கண்கிறதா🎶

என்ற பாடலை பாடியதும்,ரோஜாவின் முகத்தில் பதற்றம் நிலவியது.

கதிர்வேலனின் செயலில் முல்லையும் மீனாவும் ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டு இருந்த தருணம், சட்டென்று கதிர்வேலன் முல்லையின் கையை பிடித்து தன் இதயத்தோடு அணைத்துக்கொண்டவாரு,

'ஓ!!மை ஸ்வீட் ஹார்ட்... என் காதலை எப்போ தான் டி நீ புரிஞ்சிக்க போற, இங்க பாரு!! உன் மாமா உன்னையே நினைத்து நம்ம பேரை பச்சை குத்தி இருக்கேன் இங்க பாரேன்' என்றப்படி தன் இதயப்பகுதியை முல்லையிடம் கதிர்வேலன் காட்டியதும்.

'KM🌹'என்ற ஆங்கில எழுதுக்களும்,அதன் அருகே ரோஜா பூவும் கொண்ட tatto இருந்ததை பார்த்து முல்லையின் அஞ்சன விழிகள் குழப்பத்தில் சுருங்கியது.

🫶என் கதையை படித்து கருத்து தெரிவிக்கும் வாசகர்களுக்கு நன்றி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top