Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 84
- Thread Author
- #1
பகுதி - 7
திருமணத்தை நிறுத்த வேண்டும் என்று அவர் சொன்னதும், அதற்கு 'இன்னொருத்தரை விரும்புறவங்கள எப்படி என் பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்? ' என்று கேட்டவரிடம், தன் தங்கை காதலிக்க மாட்டாள் என்று அத்தனை உறுதியாக கூறினான் ரகுவம்சி.
ஆனால் அவரோ, " உங்க தங்கையை சொல்லலை மிஸ்டர் ரகுவம்சி. நான் சொன்னது உங்கள." என்றதும் ரகு புரியாத பாவனையுடன் நிற்க, வியப்புடன் விழிவிரிய திரும்பி அண்ணனை பார்த்த மதுராவின் மனதில் குழப்பம் சூழ, நடப்பதை கவனிக்கலானாள்.
"வாட் நான்சென்ஸ்! காதலா?! நானா!? அப்படினு உங்களுக்கு யாரு சொன்னா?" சற்று கோபமாகவே ரகு கேட்க, "உங்க காதல் விசயம் எனக்கு தெரிஞ்சுடுச்சு ரகு. அந்த பொண்ணு எல்லாத்தையும் சொல்லிட்டாங்க." காட்டமாக சொன்ன குப்தா,
மணமேடையை திரும்பிப் பார்த்து இன்னமும் சில நிமிடங்களில் ரகுவம்சியிடமிருந்து தாலி வாங்கி அவனது மனைவியாகவிருந்த தன் மகளை நோக்கி முறைத்தபடி,
"எழுந்திரு அவந்திகா. உனக்கு வேற தனியா சொல்லனுமா? நீ விரும்பின காரணத்தால தான் இவரை உனக்கு மேரேஜ் செய்யவே சம்மதிச்சேன். " என்று இரைந்தவர்,
"ஆனா விசயம் இப்படினு தெரியாது. முதல்லயே நான் நல்லா விசாரிச்சு இருக்கனும். நல்லவேளை இப்பயாவது தெரிஞ்சதே.பெத்தவங்க வளர்த்திருந்தா இதெல்லாம் அவங்களுக்கு தெரியும்."அங்குநின்ற தேவநாதனையும் ஜெயந்தியையும் பார்த்தபடி சொன்னவர்,
"எல்லாம் என்னைச் சொல்லனும். நீ ஆசைப்பட்டதும் சரினு சொல்லி கல்யாணம் பேச கிளம்புனேன் பாரு. நம்ம ஸ்டேடஸ்க்கு நான் இந்தளவு இறங்கி வந்ததே பெரிய விசயம்." மகளிடம் பேசுவது போல சொற்களை சிதறவிட அவ்வளவு தான்.
ரித்தேஷ் குப்தா எந்த பெண்ணைப் பற்றி சொல்கிறார் என்ற குழப்பமும் கோபமுமாக இருந்த ரகுவிற்கு அவரது ஸ்டேட்டஸ் பற்றிய பேச்சு, நிதானத்தை இழக்கச் செய்து அவனது கோபம் மேலோங்கியது.
"தட்ஸ் இட். இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதீங்க. எல்லாம் முடிஞ்சது. உங்க பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு இங்க யாரும் நிக்கலை." என்றபடி ரகு மாலையை கழட்டி எறிய, 'என்னடா நடக்குது இங்க?' என்ற ரீதியில் நின்றிருந்தாள் மதுரா.
" ரகு கொஞ்சம் பொறுப்பா." என்ற ஜெயந்தியின் சொற்களோ, "என்னைப் பற்றி யோசிக்கலையா ரகு." என்று கெஞ்சிய அவந்திகாவின் பேச்சும் காற்றில் கரைய, அந்த திருமணமேடையை விட்டு இறங்கி உடைகளை மாற்ற மணமகன் அறைக்குள் சென்றிருந்தான்.
சிறிது நேரத்தில் மகளை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டும், 'உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்க நானென்ன பொம்மையா?' என்று மகனது கோபமானப் பார்வையை தாங்கிக் கொண்டும்,
மகளின் ஆட்டத்திற்கு ஆடி தற்போது சொந்தங்கள் முன்னிலையில் அவமானம் அடைய செய்ததற்காக மனைவியின் மானாவாரியான வசவுகளையும் பெற்றுக்கொண்டு குப்தா கிளம்பி விட,
சொந்தபந்தங்கள் குப்தா சொன்ன காரணத்திற்கு தங்களுக்குள் ஏதேதோ பேசி அலங்காரங்கள் செய்து கிசுகிசுத்தபடி சென்றிருக்க மண்டபம் மொத்தமாக காலியாகி, ரகுவின் குடும்பத்தினர் வீடு திரும்பி இருந்தனர்.
வீட்டிற்கு வந்த தேவநாதன், "உனக்கு எதுக்கு இவ்ளோ கோபம் வருது ரகு?. குப்தாகிட்ட கொஞ்சம் பொறுமையா பேசி இருக்கலாம்ல." மிகப்பெரிய பணக்கார சம்பந்தத்தை இழந்த ஏமாற்றம் அவரை இப்படி கேட்க வைத்தது.
குப்தாவின் ஸ்டேட்டஸ் பற்றிய பேச்சினால் கிளறப்பட்ட கோபத்தில் இருந்தவன், தனது பெரியப்பாவை தீவிரமாக முறைத்தான்.
"புரியாம பேசாதீங்க. அவர்ட்ட என்ன பேச சொல்றீங்க பெரியப்பா? அவர் என்னமோ எனக்கு வாழ்க்கை பிச்சை போட்ட மாதிரி சொல்றாரு. பெரிய ஸ்டேட்டஸ். மை ஃபூட்! " கொதித்துக் கொண்டிருந்தான் ரகுவம்சி.
அவனது மனம் கோடைகால அனலை விட தகித்தது. இவனாகவா அந்தப் பெண்ணை மணக்கக் கேட்டான். அவராகத் தானே மிகவும் வற்புறுத்தி கேட்டதால் ரகுவும் சம்மதித்தான்.
ரகுவம்சி சிஏ முடித்த சிறந்த கணக்கு தணிக்கையாளன் என்று அறிந்த குப்தா, அவரது கம்பெனிக்கு தனிப்பட்ட முறையில் ஆடிட்டிங் பார்த்து தரக் கோரினார்.
அதனால் அவ்வப்போது இவனது விஜயம் குப்தாவின் கம்பெனிக்கு ஏற்பட, அம்மாதிரியான சில சமயங்களில் அவந்திகாவின் பார்வையில்பட்டான் ரகுவம்சி.
அவனது கம்பீரமான தோற்றத்திலும் அறிவுக்கூர்மையிலும் கவரப்பட்டவள் அவன்மீது காதலில்விழ, தந்தையிடம் தன் காதலைப்பற்றி சொல்லி ரகுவை மணம் முடித்து வைக்குமாறு அடம் பிடித்தாள்.
அவருக்கு அதில் விருப்பம் இல்லை. ஆனால் சிறு வயது முதலே மகளின் எந்தவொரு ஆசையும் பூர்த்தி செய்து பழக்கியதன் பலன் தற்போது அவருக்கே வினையாகிப் போனது.
கடிவாளம் கட்டிய குதிரை போல வேலை விசயத்தை தவிர அவரிடம் வேறெதுவும் பேசாத ரகுவிடம் இவ்விசயத்தை எப்படித் தொடங்க என்று யோசித்தவர் அவனது பெரியப்பாவை சந்திக்க முடிவு செய்தார்.
அவருக்குமே ரகு போன்ற புத்திசாலி தங்களுடன் இருந்தால் தனக்கு சகாயம்தான். ஆனால் ரகுவிடம் தலைகீழாக நின்றாலும் கணக்கு வழக்கை மாற்றி தகிடுதத்தம் செய்ய வைக்க முடியாது. அவனை தனது இஷ்டத்திற்கு வளைப்பது சற்று சிரமம் என்று யோசித்தார்.
அதற்கு அவனை அடக்கும் அங்குசம் போல ஒன்று தன் கையில் இருந்தால் நல்லது என சிந்தித்தவருக்கு மற்றொரு யோசனை தோன்றியது. அதற்கு தனது மகனது வாழ்வை பிணையாக்கினார்.
ரகுவின் தங்கையை மகனுக்கு மணம் புரிந்து தன் வீட்டிற்கு வரவழைத்து விட்டால், வருங்காலத்தில் ரகுவால் மகளது வாழ்வில் ஏதேனும் சண்டை சச்சரவுகள் என்றால் கூட மதுவின் வாழ்வை காரணமாகக் கொண்டு சரிகட்டலாம் என்ற எண்ணம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
அதனால் தேவநாதனிடம் நேரடியாக திருமணத்தைப் பேசி அண்ணன் தங்கை இருவரையும் தன் பிள்ளைகளுக்கு மணம் முடிக்க கேட்டதும் அவருக்கு தலைகால் புரியவில்லை.
சிறிய ஹார்ட்வேர் கடை வைத்து வாழ்க்கைச் சக்கரத்தை ஓரளவு தடுமாறாமல் ஓட்டிக் கொண்டிருக்கும் தேவநாதனுக்கு, ரகுவின் மூலமாக எத்தனை வசதியான சம்பந்தம் கிடைக்கப் போகிறது!
'இனி தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடும். எண்ணியெண்ணி செலவளிக்க வேண்டியதில்லை. தன் மகன் சரணுக்கு வளமான வாழ்க்கை அமைத்து விடலாம்' என்றெல்லாம் கற்பனைக் கோட்டை கட்டினார்.
எத்தனை பெரிய பணக்காரர் தன்னோடு சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்புகிறாரே என்று மதுவின் படிப்பு முடியாததைக் கூட கண்டு கொள்ளாமல் தேவநாதன் குப்தாவிடம் பெரிதாக தலையாட்டி சம்மதித்து விட, விசயம் அறிந்த ரகுவம்சி வானத்திற்கும் பூமிக்கும் குதித்தான்.
'பணக்காரர்களின் உறவே வேண்டாம்' என்று ஒரேயடியாக மறுத்தவனை, "உங்கம்மாவுக்கு அப்படி நடந்தா எல்லாருக்கும் அப்படித்தான் நடக்கும்னு இல்ல ரகு."
"உங்கம்மா அவளா காதலிச்சு தான் அந்த வீட்டுக்கு போனாங்க. ஆனா இது அவங்க வீட்டு ஆளுங்களே வந்து கேட்கும் போது, இதில் உனக்கென்ன பிரச்சனை?" அவனது வாயை அடைக்கப் பார்த்தார் தேவநாதன்.
பெரியப்பாவிடம் எதிர்த்து பேசாத ரகு ஜெயந்தியிடம் குதித்தான். கணவனின் பிடிவாதத்தை உணர்ந்த ஜெயந்தி, கல்லைக் கரைப்பது போல சென்டிமெண்டாக பேசியே ரகுவை சம்மதிக்க வைக்க, 'மதுவின் படிப்பு வீணாகிவிடும்' என்று அடுத்த கத்தியை எடுத்தான் மகன்.
அதற்கும் "அவளுக்கு கடைசி செம் தானே. வேணும்னா கல்யாணம் முடிஞ்சதும் படிக்கட்டும். அதுக்காக தானாக அமையற நல்ல இடத்தை விட வேணாம். எப்படியும் அவளுக்கு திருமணம் முடிக்கத்தான் போறோம். "
"அது வசதியான இடமாக இருந்தால் மது வளமாக வாழ்வாள்ல, நீ ஏன் உன் பிடிவாதத்தால தங்கச்சிக்கு வர்ற நல்ல வாழ்க்கையை கெடுக்கற ரகு?" தேவநாதன் வினவ, மீண்டும் முருங்கை மரம் ஏறினான்.
"அதனாலதான் சொல்றேன். வசதியானவங்க வேணாம். நம்ம தகுதிக்கு தகுந்த மாதிரி அவ படிப்பு முடிஞ்சதும் பார்த்துக்கலாம்னு சொல்றேன்." தனது கருத்தில் வந்து நின்றான்.
"நான் உங்க நல்லதுக்காக தானே சொல்றேன். அதுசரி இதுவே உங்கள பெத்தவங்களா இருந்தா, சொல்றத கேட்பீங்க. நாங்க யாரோ தானே." என்றெல்லாம் திரும்பத் திரும்ப தேவநாதன் அதையே சொல்ல கடுப்பாகிப் போனவன்,
" என்ன பெரியப்பா இது? நாங்க என்னிக்காவது அப்படி நினைச்சு இருக்கோமா? இனிமே இதுமாதிரி எப்பவும் சொல்லக்கூடாது." வருத்தமாக கூறியவன், தங்கைக்கு சம்மதம் இருந்தால் மட்டுமே தனக்கும் சம்மதம் என்று அரைகுறையாக முடித்தான்.
மதுவிடம் பேசி தன்வழிக்கு கொண்டு வந்து இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்தலாம் என்பது அவனது திட்டம்.
ஆனால் மறுநாளே ' எனக்கு சம்மதம் தாண்ணா' என்று முகம் முழுவதும் சந்தோஷமாக வந்து சொன்ன தங்கையின் பேச்சில் ரகு திகைக்க, வேறுவழியின்றி திருமணம் முடிவு செய்யப்பட்டது.
இவர்களுக்குள் நடந்த பேச்சு எதுவும் அறியாத மதுராவிடம் ரகுவிற்கு முன்பே வந்து, " உன் அண்ணனோட குணத்தைப் பற்றி உனக்கு தெரியும் தானே. அந்த பொண்ணு அவனை ரொம்ப காதலிக்குது."
"அதை தெரிஞ்ச அவங்கப்பா மகள் சந்தோஷத்துக்காக வசதி எல்லாம் பார்க்காம நம்ம வீட்ல கல்யாணம் பண்ணக் கேட்கறாங்க." என்ற தேவநாதன்,
"இவனுக்கும் அந்த பொண்ணு மேல விருப்பம் இருக்கு போல, அவங்க பணக்காரங்கன்ற காரணத்தால அதை மனசுல போட்டு மறைச்சு வைச்சு இருக்கான். "
"உங்க அப்பா ஸ்தானத்துல இருக்கற நானும் என் மூத்த மகனோட ஆசைய பூர்த்தி செய்யனும்ல மது? நீ சம்மதம் சொன்னா தான் அவன் மனசுக்கு பிடிச்ச வாழ்க்கை அவனுக்கு அமையும்." என்று அவளை கரைக்க,
அதைக்கேட்ட மதுரா, 'அண்ணனுக்கு இந்த திருமணம் முடிந்தால், யுவா தன்னை பெண் கேட்டு வரும்போது தனக்கும் பிரச்சனை இருக்காது' என்று குதூகளித்து வானில் பறக்கத் தொடங்கினாள்.
ஆனால் சம்பிரதாய பெண் பார்க்கும் படலம் நடக்கும்போது தான் அவளுக்கும் சேர்த்து ஆப்பு தயாராகி இருந்ததை அறிந்து பெரும் அதிர்ச்சிக்குள்ளாள்.
விசயமறிந்து பெரியப்பாவிடம் சென்று 'அண்ணனுக்கு மட்டும் மேரேஜ் செய்யலாமே பெரிப்பா. நான் இன்னும் படிப்பு கூட முடிக்கலையே.' என்று காரணம் சொன்னாள்.
ஆனால் ரகுவிடம் பேசிய அதே 'சாமர்த்தியப் பேச்சு, அண்ணனின் சந்தோஷமான வாழ்க்கை, சென்டிமெண்டல் கார்னர்'களில் அடைபட்டு இவளது காதலையும் வெளிப்படுத்த முடியாமல் போனது.