Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 81
- Thread Author
- #1
மதுராவிற்கு திருமணம் என்று யுவா சொன்னதை அவளால் நம்ப முடியவில்லை. " வாட்!! என்னடா சொல்ற?! உனக்கு யாரு சொன்னா?" அதிர்ச்சியுடன் கேட்டாள் யுவர்ணிதா.
" வினோத் கால் பண்ணுனான். அவன் அப்பா பிஸ்னஸ் ஃப்ரெண்ட் ஒருத்தரோட மேரேஜ் இன்விடேஷன் கொண்டு வந்தாராம். அதுல அவளோட பேரை பார்த்ததும் எனக்கு கால் பண்ணுனான்." விளக்கினான் யுவா.
அவனை முறைத்த யுவனி," ஃபூல்! அது வேற யாராவது மதுராவாக் கூட இருக்கலாமேடா?" எனக் கேட்க, அதற்கு மறுப்பாக தலையசைத்தான் யுவ்ராஜ்.
"வேற நம்பர்ல இருந்து நானே அவளுக்கு கால் பண்ணி, அவகிட்ட நேரடியா கேட்டேன்." என்றவனது நினைவுகள் அன்றைய தினத்திற்கு சென்றது.
புது எண்ணிலிருந்து அழைப்பு வரவும் குழப்பத்துடன் அழைப்பை ஏற்ற மதுரா, அது யுவனாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதுவும் அவன் அவளது திருமணம் பற்றி கேட்டதும் என்ன பதில் சொல்ல என்று அவளுக்குத் தெரியவில்லை.
"எப்படி ஹனி உன்னால முடிஞ்சது? இத்தனை வருசக் காதலை ஒரு நிமிசத்துல தூக்கிப் போட்டுட்டு உடனே எப்படி மேரேஜ்க்கு ரெடியாக முடியுது?" அவனது கேள்விகள் அவளுள் குத்தீட்டியாய் இறங்கியது.
இருப்பினும் தளரும் மனதை இழுத்து இறுக்கி கட்டிக் கொண்டு, "இனிமே என்னை தொந்தரவு பண்ணாதீங்க யுவன். நீங்களும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து மேரேஜ் செய்துக்கங்க."
"நம்ம காதலைக் காரணமா காட்டி இந்த கல்யாணத்தை நிறுத்த பார்த்தீங்கன்னா, அதுக்கு அப்றம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்." இறுக்கமான குரலில் கேட்ட அவளது பேச்சின் சிறு ஒலியை கூட அவனால் நம்ப முடியவில்லை.
முற்றிலும் உறுதியாக ஒலித்த அவளது உயிர்கொல்லி சொற்கள் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டாக்களாய் அவனைத் தாக்க அதில் மரித்துப் போனவன், அடுத்து பேச வார்த்தைகளற்று இருந்தான்.
அனைத்தையும் கஷ்டப்பட்டு இரும்பு குண்டை விழுங்குவது போல விழுங்கிவிட்டு, "ஐ ஸ்வேர். என்னால உன்னோட மேரேஜ் லைஃப்ல எந்த தொந்தரவும் வராது மதுரா. ஹேப்பி மேரீட் லைஃப்." சிரமத்துடன் ஒவ்வொரு சொற்களாகக் கூறிவிட்டு பட்டென அழைப்பை வைத்து விட்டான்.
'இப்படி உயிரின் ஆழம்வரை வலிக்கப் பேசியது தனது ஹனி தானா? எப்படி இந்த மாதிரி மாறிப் போனாள்? அப்படி என்றால் இத்தனை வருடக் காதல் எல்லாம் ஒன்றுமே இல்லையா அவளுக்கு?'
'சில நாட்கள் பாசமாக பழகிய மிருகத்தை பிரியும் போது கூட மனம் வலிக்குமே. அவளது மனதில் அந்த அளவு கூட என்மீது காதலோ பாசமோ இல்லையா? '
' உருகி உருகி வசனம் பேசி காதலிக்கவில்லை என்றாலும், இருவரும் உயிர்வரை உணர்ந்த காதலை எப்படி பட்டென்று வீசிவிட்டு அவளால் வேறொருத்தனை மணக்க இயலும்?' அவனது மனம் கொன்று போட்டது.
மனதின் கேள்விகள் முடிவிலிகளாய் தொடர, அதற்கு பதில் தெரியாமல் தலையை பிடித்தவாறு தவிப்புடன் அலைபாய்ந்தவன், மனதின் வலி தாள முடியாமல் உடலை காயப்படுத்த முடிவு செய்தான்.
அதற்காக அலைப்புறுதலுடன் கூர்மையானப் பொருளை தேடி அலைந்து கிடைக்காமல் கதவைத் திறந்து வெளியேற முனைந்தவன், அறைக்குள் இருந்த கண்ணாடி டம்ளரில் பார்வை பதிய அதை உடைத்து கையில் அறுத்துக் கொண்டான்.
உடலில் வலியை கொடுத்தாலாவது மனதில் ரீங்காரமிடும் கேள்விகளில் இருந்து தப்பிக்கலாம் என்றெண்ணி முயன்றவனின் முயற்சி தோல்வியை தழுவ, தலையை கைகளில் தாங்கி கட்டிலில் அமர்ந்து விட்டான்.
சிறிது நேரத்தில் உடலில் ஏற்பட்ட இரத்த இழப்பும், மனதில் எழும்பிய விடையறியா கேள்விகளின் படையெடுப்பும் சேர்ந்து அவனை அயர்ச்சியுறச் செய்ய அப்படியே படுக்கையில் சரிந்து விட்டான்.
அவள் தந்த வலியை விட கையில் அறுபட்ட காயம் கூட பெரிதாக வலிக்கவில்லை அவனுக்கு. அவளை எண்ணி 'ஏன்டி இப்படி செய்த? நானெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே இல்லையா? லவ் யூ ஹனி. ஐ மிஸ் யூ பேட்லி. ஐ கான்ட் பேர் திஸ் பெய்ன்.' புலம்பியபடி அப்படியே மயங்கிப் போனான்.
இரு தினங்களுக்கு முன்பு நடந்ததை நினைவு கூர்ந்தவனுக்கு அவளது வார்த்தைகள் இப்போதும் அதே வலியை கொடுக்க, அந்த வலி இதயப்பகுதியை கனக்கச் செய்து கண்கள் தாமாக கலங்கியது.
தன் சகோதரனின் நிலையை உணர்ந்த யுவனி, அடுத்த நொடி அவனருகில் வந்து நின்றவாக்கில் அவளது வயிற்றோடு சேர்த்து அவனை அணைத்துக் கொண்டாள்.
அதற்குள் ராஜலட்சுமி அவனுக்கான ஜுஸை கொண்டு வர, அமைதியாக அவனிடமிருந்து விலகிய யுவனியின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது.
இருவரது முகத்தையும் மாறி மாறி ஒரு மார்க்கமாக பார்த்த ராஜலட்சுமி, "எதாவது பிரச்சனையா யுவனிமா?" எனக் கேட்க,
"நாங்க பேசிட்டு இருக்கோம்மா. இன்னமும் கொஞ்ச நேரத்துக்கு இங்க வராதீங்க." முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு பட்டென சொன்ன மகளைக் கண்டு பெருமூச்சுடன் வெளியேறினார் தாய்.
மதுராவிடம் பேசியதாக யுவா சொன்னதைக் கேட்டும், அதனால் அவன் பட்ட வேதனையையும் எண்ணி அவளது மனம் கொதிகலனாகிக் கொண்டிருந்தது.
தங்களது பெற்றோர் அவனை அதட்டி ஒரு சொல் திட்டினால்கூட, "அவன் என்ன வேணும்னா செய்தான். தெரியாம தானே நடந்துச்சு." என்று அவர்களிடம் சண்டைக்கு செல்பவள்.
பள்ளியில் அவனை யாராவது கிண்டல் செய்வதாக தெரிந்தால் கூட யோசிக்காமல் அவர்களிடம் கட்டி உருண்டு அடித்து, ஒருவழி செய்து பிரின்சிபால் முன்பு விரைப்புடன் நிற்பவள்.
கல்லூரி நாட்களில் ரேகிங் செய்த போது அவனுக்காக சீனியரை எதிர்த்துப் பேசி, பின் வந்த நாட்களில் அவர்களுடன் நண்பர்களாக மாறிய கதைகள் கூட உண்டு.
இதுவரை அவனை எந்த சூழ்நிலையிலும் துவள விடாமல் அவள் தாங்கி நின்றாலும், அவன் தவறிழைத்தால் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அடித்தும் விடுவாள்.
அப்படிப்பட்ட அவளது உயிரான உடன்பிறப்பை காதலிப்பதாக இத்தனை ஆண்டுகள் கடத்திவிட்டு, எவ்வளவு தைரியம் இருந்தால் இப்போது காயப்படுத்தத் துணிவாள் அவள் என மதுராவின் மீது கோபம் திகுதிகுவென பொங்கியது.
யுவா கட்டிலில் சோர்வாக சாய்ந்தவாறு இருக்க, மனம் ஆறாமல் அறைக்குள் இடமும் வலமுமாக கோபத்துடன் நடந்தவள்,
"பார்க்க அப்பாவி மாதிரி இருந்துட்டு, ஹவ் டேர் ஷி பெட்ராய்ட் யூ?. நாளைக்கு எப்படி அந்த மேரேஜ் நடக்குது?னு நானும் பார்க்கறேன்." என்ற பொருமலோடு யுவனி கூற, யுவா அமைதியாக அவளைப் பார்த்தான்.
"இல்ல யுவனி. என்னோட காதலால அவளோட மேரேஜ் தடைபடாதுனு அவகிட்ட சொல்லி இருக்கேன். அதனால நீ எதுவும் செய்யக்கூடாது. அவளால நான் இல்லாம சந்தோஷமா வாழ முடியும்னா, போகட்டும் விடு." விரக்தியுடன் கூறினான்.
"அடங்கப்பா! உங்க அளவுக்கெல்லாம் எனக்கு காருண்யம் பார்க்க தெரியாது ஸார். " அவனருகில் வந்து கைகளை விரித்து விழிகளை அகற்றி நையாண்டி செய்தவள்,
"உன்னைய இத்தனை வருசம் லவ் பண்றேன்னு சொல்லி ஏமாத்திட்டு இப்ப திடீர்னு நீ வேணாம்னு அவ இன்னொருத்தனோட வாழப் போவாள். அதைப் பார்த்துட்டு என்னை அமைதியா இருக்க சொல்றியா?" ஆத்திரமாகக் கூறினாள்.
"ஃபைன். உங்க காதலைப் பற்றி சொல்லி தானே அந்த மேரேஜ் நிறுத்த மாட்டேன்னு ப்ராமிஸ் செய்திருக்க. அவளை நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கூட கேட்காம உன்னை மாதிரி 'எங்கிருந்தாலும் வாழ்க'னு என்னால இருக்க முடியாது. "
"அதை நான் பார்த்துக்கறேன். அப்றம் நீ, இவளுக்காக மறுபடி எதாவது ட்ரை பண்ணுன தெரிஞ்சது அவ்ளோ தான். போய் சேரு னு விட்றுவேன் பார்த்துக்க." மிரட்டி விட்டு விறுவிறுவென வெளியேறினாள்.
அவளது கோபத்தைக் கண்டு யுவாவிற்கு சற்று கலக்கமாகத் தான் இருந்தது. அவனையே வேண்டாம் என்று மதுரா சொன்னது எல்லாம் அவனது மூளையில் மறைந்து போக,
யுவனியை பற்றியும் அவளது கோபத்தைப் பற்றியும் நன்கு அறிந்தவனால், நாளை மதுராவிற்கு இவளால் எதுவும் அவமானம் நேர்ந்து விடுமோ என்றுதான் கவலை கொண்டான் அந்த காதல் பைத்தியம்.
நல்லவேளை அவன் அதை யுவனியிடம் வாய்விட்டு கூறவில்லை. இல்லையென்றால் மருத்துவமனை சென்று தேறி வந்தவன் என்ற கரிசனம் ஏதுமின்றி இந்த பைத்தியகாரனை அடி வெளுத்திருப்பாள் அவள்.
யுவனியின் கோபத்தைக் கண்டு அஞ்சிய யுவராஜிற்கு மருந்தின் வீரியத்தில் கூட இரவெல்லாம் உறக்கம் வரவில்லை. தன்னை மீறி அதிகாலையில் அசந்து உறங்கி விட்டவன் திடுக்கென விழித்தான்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு யுவனியின் அறைக்கு சென்றவனை பூட்டிய அறையே வரவேற்றது. உடனே தாயைத் தேடி மெதுவாக இறங்கி வந்தான்.
மகன் வருவதைக் கண்ட ராஜலட்சுமி, " எழுந்துட்டனா இன்டர்காம்ல கூப்பிட்டு இருக்கலாமே கண்ணா. ஏன் சிரமப்படுற? கொஞ்சம் பொறு. உனக்கு சத்துமாவு கஞ்சி கொண்டு வர்றேன்." என்று அவர் விரைய, அவரை தடுத்து நிறுத்தி யுவனி எங்கே எனக் கேட்டான்.
" பாப்பாவா? காலையிலேயே ஏதோ ஃபங்ஷன் போல, அழகா புடவை எல்லாம் கட்டி கிளம்பி வெளியே போயிட்டாளே." யதார்த்தமாக தாய் பதிலளிக்க, அவனுக்கு உள்ளுக்குள் உதறல்.
" இதோ வர்றேன்ம்மா." என்றபடி மீண்டும் தனது அறைக்கு திரும்பியவன் அலைபேசியில் அவளை தொடர்பு கொள்ள, அவளது அலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
இப்பொழுது அவளை எப்படி தொடர்பு கொள்ள என்று யுவா இங்கே குழம்பித் தவிக்க, அங்கே மணமகள் அறையில் மதுராவின் முன் நின்று இருந்தாள் யுவர்ணிதா.