Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 104
- Thread Author
- #1
பகுதி - 27
சில வருடங்களுக்கு பிறகு..
புருவங்கள் நர்த்தனமாட, விரல்கள் தாளமிட அந்த அறையின் ஸ்டடி டேபிளில் அமர்ந்து தனது மடிக்கணினியில் தீவிரமாக கணக்கை நிகர் செய்து கொண்டிருந்தான் அவன்.
திடீரெனக் கேட்ட "யோவ்! கணக்குப்புள்ள!" என்றழைப்பில் சுருங்கிய புருவங்கள் உயர்ந்து விழிகள்விரிய, குரல் வந்த திசையில் வேகமாக திரும்பிப் பார்த்தான்.
இடுப்பில் கைகளையூன்றி புசுபுசுவென மூக்கில் காற்றடித்தபடி நின்றிருந்த அவனது ரௌடியை கண்டதும் 'இன்னிக்கு என்னெல்லாம் செய்யக் காத்திருக்காளோ!!?' என்ற ரீதியில் வேகமாக எழுந்து வந்தவன் முதலில் செய்தது கதவடைப்பு தான்.
அறைக்கதவை தாளிட்டுவிட்டு "இப்ப என்னடி பிரச்சனை? நீ இப்படி கூப்டுறத யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?" கோபமாகத்தான் கேட்க முயன்றான் ஆனால் குரல் சதி செய்ததில் கெஞ்சலாகிப் போனது.
"யோவ் கணக்குப்புள்ள! உனக்கு சொல்லித்தர தெரியலனா, தெரியலன்னு சொல்லனும். அதை விட்டுவிட்டு உன் இஷ்டத்துக்கு சொல்லுவீங்களோ?!" கொஞ்சமும் குறையாத கோபத்துடன் கொப்பளித்தாள் யுவனி.
"தாயே காளியாத்தா! என்ன நடந்தது? தெளிவா சொன்னா தானே எனக்கும் புரியும். நான் பாவம்ல." பரிதாபமாக முகத்தை வைத்து அவன் சொல்ல இன்னமும் அவனை முறைத்தபடி இருந்தவள்,
"புள்ள தெரியலனு கேட்டா ஒழுங்கா சொல்றத விட்டுட்டு, நான் தொட்டா எல்லாருக்கும் ஹார்ம்ஃபுல்னு சொல்லி அனுப்பறதா?" படபடவென பொரிய, விசயம் என்னவென்று புரியாமல் திருதிருவென விழித்தான் அவன்.
அவளை வான்டட் ஆக தன் வாழ்க்கையில் இழுத்து விட்டுக் கொண்டு அவளிடம் தற்போது வாய் பேசமுடியாமல் விழிக்கும் அப்பாவி கணவன்.
"சத்தியமா புரியல யுவி. நீயே என்னனு கொஞ்சம் விளக்கமா சொல்லிடேன். எதுனாலும் ஈகோ இல்லாம தெளிவா பேசனும்ன்றது தானே நாம ஃபாலோ பண்றது. நீயே சொல்லிடு செல்லம்! எனக்கு அந்தளவுக்கு அறிவில்ல." பாவமாக அவன் கூறவும்,
அவனது பாவனையில் உதட்டில் உற்பத்தியான புன்னகையை மறைத்தபடி, "அதான் அறிவில்லனு நல்லா தெரியுதே." கேலி செய்தவள்,
"ஏதோ போனாப்போகுது நானே சொல்றேன். மினுகுட்டி ஒரு டவுட்டு கேட்டா, அதுக்கு என்னைய ஏன் மேன் கிண்டல் பண்ணி சொல்லி இருக்கீங்க?" எனக் கேட்க அவன் இன்னமும் விழிக்கவும் தலையில் அடித்துக் கொண்டவள் நடந்ததை விளக்கினாள்.
சிறிது நேரத்திற்கு முன்பு..
விசேஷத்திற்கு செல்வதற்காக பட்டுப்புடவையை கட்டிவிட்டு, அது ஆங்காங்கே தூக்கிக் கொண்டிருக்க அதை அடக்க போராடிக் கொண்டு இருந்தவளிடம் வந்தாள் அவர்களது ஐந்து வயது சின்னக்குட்டி மின்னொளி.
"மம்மா! நீங்க எங்கள தொட்டா எங்களுக்கு எல்லாம் ஹார்ம்ஃபுல் ஆகுமாமே?" என்றதும் ஏற்கனவே கடுப்பில் இருந்தவள் மகளது கேள்வியில் விழித்தபடி,
"என்னடி செல்லம் சொல்ற? அப்படினு யாரு சொன்னா? திடீர்னு வந்து வித்தியாசமா கேட்கற?" வினவிட, அதற்கு மகள் பவ்யமாக நடந்ததை விளக்கினாள்.
ஸ்டடி ரூமில் அமர்ந்து தீவிரமாக கணக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகு, "யுவி! ஒன் செக் வந்துட்டு போயேன்." என்றழைக்க, அவள் வரவில்லை ஆனால் உள்ளே வந்தது மின்னொளி.
மினுகுட்டி சும்மாவும் வரவில்லை அவனுக்கான ஆப்போடு வந்தவள், "டாடி! வாட் இஸ் மீன் பை UV?" என்று சற்றுமுன் வெயிலில் விளையாண்ட சின்னக்குட்டியை விரட்டுவதற்கு,
"சன்ல இருந்து வர்ற UV rays நம்ம உடம்புல பட்டா ரொம்ப ஹார்ம்ஃபுல் அதனால வீட்டுக்குள்ள போய் விளையாடு." என்று பக்கத்து வீட்டு ஆன்ட்டி பாடம் எடுத்து அனுப்பியதில் பாதி மட்டும் புரிந்த பிள்ளை அந்த அறிவார்ந்த கேள்வியை தந்தையிடம் கேட்க,
நமது ஆடிட்டரோ தற்போது மனையாளை அழைத்ததைத்தான் மகள் வினவுகிறாள் என்றெண்ணி, "அப்படினா உங்க அம்மா செல்லம்!" என்று விளக்கம் வேறு கொடுத்துத் தொலைத்தான்.
ஆன்ட்டி சொன்னதையும், அப்பன் சொன்னதையும் ஜாயின்ட் அடித்து மசாலா தூவி, அவளது மம்மாவிடம் வந்து விளக்கம் கேட்டு வைத்தாள் வாண்டு. அவ்வளவு தான்.
'யாரு சொன்னா?' என்ற தாயின் கேள்விக்கு, "அப்பா தான் சொன்னாங்க." சிறப்பாகக் கோர்த்து விட்ட மகளிடம், விசாரணையை போட்டு விசயத்தையறிந்த யுவனிக்கு வந்த கோபத்தை மறைத்து,
அவளது பதிலுக்காக அவள்முகத்தை பார்த்து நின்ற மகளிடம், "அப்படி எல்லாம் இல்ல பட்டு!" என்றவள் அதற்கான சரியான விளக்கத்தை கொடுத்துவிட்டு,
"உங்கப்பா ஏன் அப்டி சொன்னாங்க கேட்கறேன் சரியா? நீ போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா. வெயிலில் விளையாண்டு டர்ட்டியா இருக்க பாரு. ஓடு! ஓடு! " மகளை ஓட்டியவள், மன்னவனிடம் வந்து விட்டாள் சண்டைக்கு.
யுவனி நடந்ததைச் சொல்ல, "நான் அப்பத்தான்டி உன்னை கூப்பிட்டேன். அவ அதைத்தான் கேட்கறாள்னு நினைச்சு பதில் சொன்னேன். இந்த மினியன் இப்படி கோர்த்து விடும்னு நினைக்கல. என்னை நம்பு யுவி." பாவமாக கெஞ்சினான் ரகு.
அவனைப் பார்க்கவும் பாவமாக இருக்க, உடனே இறங்கி வந்ததைப் போல காட்டிக் கொண்டால் அவள் யுவனி இல்லையே!
அதனால், "இத்தன வருசமாகியும் இன்னமும் என்ன சொல்ல வர்றாங்கனே புரியாம பேசற அவசரக்குடுக்கைத்தனம் மட்டும் போகலை. உங்கள வச்சுக்கிட்டு.." அவள் தலையிலடித்துக் கொள்ள,
அவளை இடையோடு இழுத்து கட்டிக் கொண்ட கள்வன், "என்னைய வச்சுக்காத, கட்டிக்கோ. அதான் உனக்கு புரியுதே அப்றமென்ன!?" கண் சிமிட்டி புருவங்கள் உயர்த்திக் கேட்டவன் அவனது வேலையை தொடங்க,
" தள்ளிப் போங்க. ஃபங்ஷனுக்கு டைம் ஆகுது. மினுகுட்டி குளிக்க போயிருக்கா. கதவை வேற சாத்தி வச்சுட்டு, நீங்க பண்ற வேலைய பாரு." நாணத்துடன் கூறியபடி அவனிடமிருந்து விலகியவள் கதவை திறந்து வெளியேற முனைந்தாள்.
" பின்னே! இதெல்லாம் கதவைத் திறந்து வச்சுட்டா, "அவன் அடுத்து சொல்ல வருவதற்குள் விரைந்து வந்து அவனது வாயை அடைத்தவள்,
"ஷ்ஷ்ஷ்! அந்த லேப்டாப் தூக்கி வச்சுட்டு சீக்கிரம் கிளம்புங்க. அங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க." அவனுக்கு அவசர முத்தம் வைத்து அடக்கியபடி ஓடிச்சென்று மகளை தயார்படுத்தச் சென்றாள்.
°°°°°°°°°°°
பெயர் தெரியாத அழகழகான வெளிநாட்டு மலர்கள் கண்கள் சிமிட்ட அலங்கரிக்கப்பட்டு இருந்த திருமண மஹாலில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில முக்கிய தொழில்முறை நண்பர்கள் குழுமி இருந்தனர்.
மேடையில் புரோகிதர் அமர்ந்து ஹோமம் வளர்த்தி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருக்க, மங்கல வாத்தியங்களின் இசை அந்த அறையை நிறைத்திருந்தது.
ஆனியன் வயலட் கலர் பட்டுப்பாவாடை சட்டை அணிந்து அதற்கு ஏற்ற தலைமுடி அலங்காரத்துடன் சிறிய அளவில் நகைகள் போட்டு அழகுச்சிலையென இருந்தாள் மின்னொளி.
மகளது கைபிடித்தபடி அந்த ஹாலில் நுழைந்த ரகு, அருகில் நின்ற மனைவியை முறைத்து, "கல்யாணப் பொண்ணும் மாப்பிள்ளையுமே வரல. அதுக்குள்ளே என்னைய கிளம்பச் சொல்லி ஏன்டி அவசரப்படுத்துன!?"
" ஒழுங்கா அந்த வேலையாவது முழுசா முடிச்சுட்டு வந்து இருப்பேன்." என்று புலம்பியபடி நிற்க, "நம்ம வீட்டு கல்யாணம், நாம தானே முன்னே இருந்து செய்யனும். அதை விட்டுட்டு விருந்தாளி மாதிரி வருவீங்களா? நகருங்க." என அவனை ஓரந்தள்ளி விட்டு உள்ளே சென்றாள் யுவனி.