• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
100
பகுதி - 23

அலுவலகத்தில் தனது கேபினில் அமர்ந்து தீவிரமாக கணினியில் மூழ்கி இருந்த ரகுவம்சியிடம் "ஸார்! உங்கள பார்க்க ஓரியன் டெக்னாலஜிஸ் எம் டி வந்திருக்கார்." என்றான் சக பணியாளர் ஒருவன்.

புருவ முடிச்சுடன் யோசித்த ரகு வரச்சொல்லுமாறு பணித்துவிட்டு தனது பணியை தொடர, உள்ளே வந்த யுவாவை கண்டு யோசனையானான்.

" வாங்க யுவா! என்ன திடீர்னு ஆஃபிஸ் எல்லாம் வந்திருக்கீங்க? இஸ் எனிதிங் சீரியஸ்? " யோசனையாக வினவிய ரகுவிடம்,

"எதாவது சீரியஸான விசயம் இருந்தா தான் உங்கள பார்க்க வரனுமா மச்சான்?. வொர்க் விசயமா வந்தேன்.ஸாரி! உறவுமுறை சொல்லி பேசலாமா?" இயல்பான சிறு புன்னகையுடன் தொடங்கியவன், திடுமென நினைவு வந்து சந்தேகம் கேட்டான்.

அதற்கு லேசாக புன்னகைத்த ரகு, "அதான் பேசியாச்சே. அப்றம் எதுக்கு பர்மிஷன்? பரவால்ல அப்படியே கூப்பிடுங்க மாப்ள." என்ற ரகுவை வியப்பு மேலிட பார்த்தான் யுவ்ராஜ்.

ரகுவிடம் இதுவரை பேசியதில் எப்போதும் ஒரு கவனம் இருக்கும் ஆனால் இன்று சர்வ சாதாரணமாக உறவாடிப் பேசியவனிடம் மனதில் தோன்றிய தன் எண்ணத்தை மறைக்காமல் வெளியிட்டான் யுவா.

அதற்கு சிரித்த ரகு, "இன்னமும் எத்தன நாளைக்கு அப்படி தள்ளியே இருக்க முடியும் மாப்ள? சரி வந்த விசயத்தை சொல்லுங்க." விசயத்திற்கு வந்தான் அவன்.

தோள்களை குலுக்கிய யுவா, மனம் இலகுவாக, அவனது கம்பெனிக்கு ஆடிட்டிங் பார்த்து கொடுக்க முடியுமா என்று தான் வந்த விசயத்தை முழுதாக விளக்கினான்.

யுவா பேசும் வரை கவனமாகக் கேட்ட ரகு," ஆனா, உங்க கம்பெனிஸோட ஐடி ஃபைல் பண்ற ஆடிட்டர் சுதாகர் இருக்கும் போது, ஏன் திடீர்னு எங்கிட்ட..? " கேள்வியை எழுப்பியவன் யுவாவின் முகத்தை ஆராய்ந்தான்.

அவனது கேள்வியை புரிந்து கொண்ட யுவா, " நீங்க நினைக்கிற மாதிரி உங்களுக்கு ஃபேவர் பண்றதுக்காக எல்லா ஒன்னுமில்ல மச்சான். அவர்ட்ட ஏற்கனவே கேட்டுட்டேன். அவருக்கு இப்ப வொர்க் ஹெவியா இருக்காம். "

"இன்னும் ரெண்டு மாசத்துல ஐடி ஃபைல் பண்ணியாகனும். திடீர்னு நம்பிக்கையான ஆளுக்கு நான் எங்க போறது? அதான் உங்ககிட்ட வந்தேன்." யுவா சட்டெனக் கூறவும் ரகு சமாதானமானான்.

சிறிது நேரம் யுவாவின் கம்பெனி பற்றிய விபரங்களை சிரத்தையுடன் கேட்ட ரகு, தேவையான ஃபைல்களை கொண்டு வரச் சொல்லிவிட்டு தானே முடித்து தருவதாக உறுதியளிக்க மகிழ்ந்தான் யுவா.

"ரொம்ப சந்தோஷம் மச்சான். சரி இந்த வொர்க் முடிச்சு தர்றதுக்கு உங்க டிமாண்ட் என்னன்னு சொல்லுங்க?" என்றவனிடம் மர்மப் புன்னகை பூத்தான் ரகுவம்சி.

அதன் பொருள் புரியாமல் விழித்த யுவா, ரகுவிடமே என்னவென்று கேட்க, "நான் பெருசா ஒன்னும் கேட்கல, ஆனா எனக்கு சில விசயங்களுக்கு உண்மையான பதில் வேணும்." என்றான் அவன்.

யுவாவிற்கு மனதிற்குள் அபாய மணியடிக்கவும் திருதிருவென விழிக்க, " உங்க லவ் மேட்டர் எனக்கு தெரியும்." ரகுவின் பேச்சில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஒருங்கே அடைந்தான் யுவா.

விசயம் அறிந்து அவனது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று முதலில் அதிர்ச்சி!. பின்பு தங்களது காதல் விசயத்தை இத்தனை சுலபமாக ஏற்றுக் கொண்டு விட்டானா!? என்று ஆச்சர்யம்!.

"ஸாரி மச்சான். உங்கள ஏமாத்தனும்னு நினைக்கல. எங்களுக்கு வேற வழி தெரியல. யுவனி மட்டும் அன்னிக்கு அந்த மேரேஜ்க்கு வரலைனா, ஹனி.."

"அவ இன்னிக்கு உயிரோடவே இருந்திருக்க மாட்டா." அன்று அவள் செய்யவிருந்த காரியத்தை எண்ணி இப்போதும் அதே நடுக்கத்துடன் நடந்த அனைத்தையும் கூறினான் யுவா.

ரகு ஒன்றை நினைத்து பேச்சைத் தொடங்கி இருக்க, யுவாவின் வாழ்மொழியாக தற்போது அவனே எதிர்பாராத விசயம் தெரிய வர, யுவா சொன்னதை கேட்டு அதிர்வுடன் நின்றவனுக்கு இது புதிய செய்தி!

முதலில் தன் தங்கை காதலித்தாள் என்பதே அதிர்ச்சியாக இருக்க, இதில் அவள் அந்த காதலுக்காக தற்கொலை வரை முயன்றது அறிந்து நொறுங்கிப் போனான்.

அவனது நிலையைக் கண்டு குழம்பிய யுவா, "ஹனி மேல எந்த தப்பும் இல்ல மச்சான். ப்ளீஸ் அவளை எதுவும் தப்பா நினைக்காதீங்க."

மதுராவிடம் ரகு கோபம் கொண்டால் அதற்காக அவள் சிந்தும் கண்ணீரை காணும் தைரியம் யுவாவிற்கு கிடையாது.

ஆகையால் உடனே மனைவியை தாங்கிப் பேசிய யுவா அவர்களது காதல் முதல் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடந்த திருமணம் வரை மொத்தமும் உரைத்தான்.

சிறிது நேரம் நிசப்தமான அந்த நொடிகளில் யுவா சொன்ன மொத்த விசயங்களும் ரகுவை திகைப்படைய செய்ததில், சொற்கள் வெளிவர முடியாதவாறு தொண்டையை அடைக்க, கஷ்டப்பட்டு உண்மையை விழுங்கினான்.

தன் சகோதரனின் காதலுக்காக சம்பந்தமே இல்லாமல் தனது திருமணத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினாள் என்று யுவனி மேல் அவன் மனதில் கொண்ட கோபம்,

அவன்மீதான அவளது உறுதியான காதலை அறிந்து ஏற்கனவே கலங்கலாக மறைந்திருக்க, யுவனி அன்று வராமல் போயிருந்தால் தங்கையின் நிலை என்னவாக இருக்கும் என்று எண்ணும் போதே அவனுக்கு நடுங்கியது.

தனது பேச்சை மீறி காதல் கொண்ட தங்கை தன்னிடம் அதை சொல்ல முடியாமல் அந்த காதலுக்காக அவளது உயிரைவிட துணிந்து விட்டாளே! அதற்கு தனது பிடிவாதமும் ஒரு காரணம் என்ற வருத்தமும் ஒருங்கே தோன்றியது.

ரகுவின் நீண்ட நேர மௌனம் யுவாவை கலவரப்படுத்த, "நான் சொல்றத நீங்க எந்தளவு நம்புவீங்கனு தெரியல. என் லைஃப்ல ஹனி இல்லைனா எனக்கு எதுவுமே இல்ல."

"நீங்க நினைக்கிற மாதிரி அவளை கழட்டிவிட்டுட்டு போனா நான்தான் உயிரில்லாத நடைபிணமா மாறிப் போவேன்." என்றவன் சற்று தயங்கியபடி,

" உங்க மேரேஜ் ப்ரோபோஸலை யுவனி அக்செப்ட் பண்ணுன போது கூட நான் வருத்தப்பட்டு 'உண்மைய சொல்லி இருக்கலாம்ல யுவனி'னு அவகிட்ட கேட்டேன். அதுக்கு," யுவா தயக்கத்துடன் நிறுத்த ரகு அவனை ஏறிட்டான்.

"அதுக்கு யுவனி 'எப்படினாலும் எவனையாவது ஒருத்தனை எனக்கு கட்டிவைக்க தான் போறாங்க அதனால அவனுக்கு பதிலா இவன்'னுட்டு சொல்லி நான் வருத்தப்பட கூடாதுனு எனக்கு சமாதானம் சொன்னா."என்று

யுவனி ஒருமையில் பேசியதை தயக்கத்துடன் யுவா கூறி முடிக்கவும், அதைக்கேட்டு அதிர்வுடன் நெற்றியை கைகளில் தாங்கியபடி அப்படியே அமர்ந்து விட்டான் ரகுவம்சி.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top