• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
98
பகுதி - 21

ரகுவின் கேள்வியில் திகைப்புடன் நின்ற யுவனிக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. அவனுமே கோபமாகத்தான் கேட்க முயன்றான். ஆனால் உள்ளக்குமுறல் குரலில் சதி செய்து விட்டது.

ரகு அவளது பதிலிற்காக அவள்முகம் பார்த்திருக்க, அவளோ மௌனம் சாதிக்கவே " பதில் சொல்லு யுவி? எல்லாம் பொய் தானே?" சற்று அழுத்தமாகக் கேட்டான்.

"நீங்க எதைக் கேட்கறீங்கனு தெளிவா சொல்லுங்க. நானும் பதில் சொல்றேன்." நிமிர்வுடன் சொன்னவளைக் கண்டு அவனது நிதானம் நீராவியாகத் தொடங்கியது.

"ஓஹோ! சரி தெளிவா கேட்கறேன். நீ எதுக்காக எனக்கு நடக்க இருந்த கல்யாணத்தை நிறுத்துன? உன் உடன்பிறப்பு என் தங்கையை காதலிச்சதுக்கு என்னோட லைஃப்ல விளையாட உனக்கு யாரு பர்மிஷன் கொடுத்தா?" கேட்கத் தொடங்கி விட்டான்.

சில நொடிகள் அவனது கேள்வியை உள்வாங்கியவள் அவனை கூர்மையாகப் பார்க்க,"மதியம் நாங்க பேசுனதை ஒட்டுக் கேட்டீங்களா? ஐ டின்ட் எக்ஸ்பெக்ட் ஃப்ரம் யூ ரகு." கூறவும்,

" நான் ஒன்னு கேட்டா, அதுக்கு பதில் சொல்றத விட்டுட்டு நீ வேற கேட்கற. அஃப்கோர்ஸ்! க்ளைன்ட்ஐ மீட் பண்ணும்போது கொண்டு போக வேண்டிய ஃபைல்ல ஒன்னை மறந்துட்டேன். பாதி வழியில திரும்பி வீட்டுக்கு வந்தேன்."

"உனக்கு பிடிக்காத கல்யாணம்னு பேசவும் நின்னுட்டேன். அப்படி நின்னதால தானே மறைக்கப்பட்ட உண்மைகளை நான் தெரிஞ்சுக்க முடிஞ்சது. நவ் ஆன்ஸர் மீ." விளக்கம் தந்தவன், தனது கேள்விக்கு பதிலைக் கேட்டு விரைப்புடன் நின்றான்.

கண்கள் மூடி வருவதை சமாளிக்க வேண்டும் என தயாராகி மூச்சை இழுத்து விட்டவள்,"சரி கேளுங்க." என்றதும்,

"மதுராவை உன் தம்பி விரும்புற காரணத்தால என்னோட லைஃப்ல விளையாட உனக்கு யாரு பர்மிஷன் கொடுத்தா? அத்தனை பேர் முன்னாடி என்னை அவமானப்படுத்திட்டல." என கொதிக்கத் தொடங்கினான்.

"லவ் பண்றது என்ன அவ்ளோ பெரிய குத்தமா?" அவள் நிதானமாக கேட்க, "ஏய்!!" கண்களில் கனல் பறக்க அவளை நெருங்கியவன், "பொய் சொல்லாத. உன் தம்பி விரும்புனா என்ன வேணும்னாலும் செய்வியா நீ?!" மிரட்டலாகக் கேட்டான்.

அவனது பேச்சில் யுவா மதுவை விரும்புவதாக மட்டுமே கூறவும், மதுவின் காதல் பற்றி அவனுக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள்.

யுவாவை மது காதலித்தது முதல் அவளது காதலைப் பற்றி சபையில் சொல்லாதே என அவள் கேட்டுக் கொண்டது வரை அனைத்தையும் கூறி அவனிடம் அவளால் தன்னிலை விளக்கம் தர முடியும். ஆனாலும் அமைதி காத்தாள் யுவனி.

அவளது மௌனம் அவனுக்குள் இருந்த கோபத்திற்கு எரிபொருளாகி பற்றியெரிய தொடங்க, "தம்பிக்காக எவனையோ லவ் பண்ணிட்டு இருந்த நீ, என்னை கல்யாணம் பண்றதுக்கு துணிஞ்சுட்ட. நீயெல்லாம்.." அவன் சொல்ல வருவதற்குள் கைகாட்டி நிறுத்தினாள்.

அவன் சொல்வது புரியாமல் அவள் புருவங்கள் சுருங்க தலை சாய்த்து, "கம் அகைன்.." அவனை கூர்மையாக பார்த்துக் கேட்க,

"அதான் சொன்னியே அவன் இல்லனா இவன்னு, நான் என்ன அவ்ளோ கேவலமா போயிட்டனா? உங்கள மாதிரி பணக்காரங்களுக்கு மத்தவங்க மனசைப் பற்றி எல்லாம் கவலை இல்ல."

" நீங்க நினைச்சத சாதிக்கனும். அவ்ளோ தானே? எங்கம்மா அப்பவே எழுதி வச்சாங்க. நாந்தான் அதை மறந்து உங்கிட்ட மயங்கிட்டேன். நல்லவேளை இப்பயாவது உண்மை தெரிஞ்சதே " அவன் பாட்டிற்கு பேசிக்கொண்டே சென்றான்.

"ஸ்டாப் இட் ரகு." குரலை உயர்த்தி அவனை அடக்கியவள், "நான் தெரியாமத்தான் கேட்கறேன் ஏன் மிடில் கிளாஸ்ல யாரும் லவ் பண்றதில்லையா? இல்ல நினைச்சத சாதிக்க எதுவும் செய்றதில்லையா?"

"அதென்ன பணக்காரங்கனு ஒரு டேக் குத்துறீங்க? அவளுக்காக அவன் உயிரை விடப்போய் செத்துப் பொழச்சு வந்தான். என் தம்பி சந்தோஷத்துக்காக நான் செய்தேன். நான் ஒத்துக்கறேன். ஆனா, "

"இதே மாதிரி, ஒருவேளை உங்க தங்கை லவ் பண்ணி இருந்தா உங்களால அவ காதலை சேர்த்து வைக்க முடியுமா? இல்ல அந்த தைரியம்தான் உங்களுக்கு இருக்கா?" அவனை சீண்டி விட்டாள்.

அதற்கு என் தங்கை காதலிக்க மாட்டாள் என்று அழுத்திச் சொன்னவனை ஏளனமான புன்னகையுடன் பார்த்தவள்,

"காதலென்ன நீங்க ஆர்டர் செய்தா மட்டும் வர்ற ஆன்லைன் டெலிவரியா? அது தானாகவே வரும். ஏன் நீங்க சொல்லலை இப்ப, எங்கிட்ட மயங்கிட்டேன்னு. அதுமாதிரி மதுவும் லவ் பண்ணினா நீங்க என்ன செய்வீங்க?அதான் என்னோட கேள்வி." உறுதியாகக் கேட்டாள்.

"அது அவ காதலிக்கிற ஆளைப் பொறுத்து இருக்கு. அவன் உங்கள மாதிரி பணக்காரங்களா இருந்தா, கண்டிப்பா செய்ய மாட்டேன். மனசை தொலைச்சதுக்காக மது வாழ்க்கை முழுக்க கஷ்டப்பட நான் அனுமதிக்க மாட்டேன்." தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தவன்,

"நீ பேச்சை மாத்தாதே. அதான் உங்கள மாதிரி ரிச்சானவங்களோட காதல் லட்சணம் தான் உன்னை பார்த்தே தெரியுதே. எவனையோ லவ் பண்ணுனவ, என்னைய ஏன்டி கல்யாணம் பண்ணுன?" அவனுக்கு அதான் தற்போது தவறாகப்படுகிறது.

"உன் தம்பி மதுவை லவ் பண்ணுனான்னு சொல்றியே, நாள பின்னே அவனும் இதே மாதிரி வேற எவளையாவது தேடிப் போனா, என் தங்கச்சி வாழ்க்கை என்னாகிறது? இந்த கருமத்துக்குத் தான் உங்க சகவாசமே வேணாம்னு இருந்தேன்." வார்த்தைகளை சிதற விட்டான்.

தவறான புரிதலில் தன்னைச் சொன்னவரை பொறுத்துக் கொண்ட யுவனிக்கு யுவாவை சொன்னதும் அவனது சூறாவளியான பேச்சில் அவளது பொறுமை பொரியாக பறந்து போனது.

இதுவே வேறு யாராவதாக இருந்தால் நடப்பதே வேறாக இருந்திருக்கும், ஆனால் எதிரில் நிற்பவன் அவள் மனம் விரும்பிய மணாளனாகப் போய் விட்டான்.

கை முஷ்டியை கஷ்டப்பட்டு இறுக்கிக் கொண்டு, "ஜஸ்ட் ஸ்டாப்பிட்!" அடிக்குரலில் சீறியவள், "யுவாவை பற்றி பேசறதுக்கு உங்களுக்கு எந்த தகுதியும் கிடையாது." சொற்களை கடித்துத் துப்பியபடி விரல் நீட்டி எச்சரித்தாள்.

"இஷ்டப்படி ஊர்மேயற மாதிரி எங்க பேரண்ட்ஸ் எங்கள வளர்க்கல. மனசுல ஒருத்தரை நினைச்சா அவங்களோட தான் வாழ்க்கை முழுவதும். நீங்க சொல்ற மாதிரி உங்க தங்கச்சி வாழ்க்கைக்கு எந்த குறையும் வராது."

"அன்ட் இன்னொரு விசயம், நம்ம கல்யாணம் நடக்கும் முன்னே வரை நான் யாரையும் விரும்பவும் இல்ல, அதுல எனக்கு இன்ட்ரஸ்டும் இல்ல. ஆனா,"

"இப்ப உங்கள போய் என் மனசு விரும்புதேனு நினைச்சு, எம்மேலயே எனக்கு கோபமா வருது. இதை இப்படி ஒரு சூழ்நிலையில சொல்றது நினைச்சு ஐ ஹேட் மைசெஃப்." ஒரு நொடி இடைவெளி விட்டவள்,

"ஐ லவ் யூ.. அன்ட் யூ ஒன்லி ஃபார்எவர்." அவள் அத்தனை அழுத்தமாகச் சொல்ல, கோடை வெயிலில் இதமாக வீசும் தென்றலாக, அவளது காதலைச் சொன்னது அவன் மனதை வருடிச் சென்றது.

"இத்தன நாளா கூடவே இருக்கற என்னைப் பற்றி புரியாத உங்ககூட இனிமேலும் என்னால ஒன்னா இருக்க முடியாது." யுவனி சொன்ன சொற்கள் ஒவ்வொன்றும் உறைபனியில் உறைந்த நீரூசியாக அவனை தாக்க,

"அதுக்காக உங்க வாழ்க்கைய விட்டு போயிடுவேன், வேற எவளையாவது புதுசா சேர்த்துக்கலாம்னு கனவு காணாதீங்க. இந்த ஜென்மத்துல உங்களுக்கு நான் மட்டும் தான்." என்றுவிட்டு தனது பொருட்களை எடுத்து வைக்கத் தொடங்கினாள்.

அவளது அக்கறையிலும் அன்பிலும் கொஞ்சம் கொஞ்சமாக அவன் மனதை ஈர்த்தவள் மீது காதலில் விழுந்தவன், அவளது மனதையும் அறிய நினைத்திருந்த வேளையில்,
அவன் கேட்ட விசயங்கள் அவனை நிலைகுலையச் செய்தன.

யுவா மதுவை விரும்பிய விசயம் தெரிந்து அவனுக்கு ஏற்பட்ட பாதிப்பின் வீரியத்தை விட, யுவனியின் அலட்சியமான 'அவன் இல்லனா இவன்' என்ற சொற்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ரகு சொன்னதைப் போல யுவா மதுவை அப்படி கழட்டி விட முயன்றால், அதைக்கூட சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் தனது காதல்!?

வேறொருவனை விரும்பிவிட்டு தன் சகோதரனுக்காக தன்னை மணந்து அவள் தன்னுடன் சகித்துக் கொண்டு இருக்கிறாளோ என்றெண்ணி வருந்தியவன் இரவு வீடு திரும்பும் வரை அதிலேயே உழன்று கொண்டிருந்தான்.

அதன் விளைவாக வார்த்தைகளை சிதறவிட்டவனால், தற்போது அவளது மனதில் அவன் மட்டுமே இருப்பதை உணர்ந்து மகிழ முடியவில்லை.

அவள் தனது பொருட்களை எடுத்து வைக்கும்வரை உறைநிலையில் நின்றிருநதவன், அவள் அறையை விட்டு வெளியேற, வேகமாக அவள் பின்னோடு விரைந்தான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top