• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
97
பகுதி - 20

கடந்த ஒருமாத காலத்தில் இரு வீட்டு பெரியவர்களும் அவர்களை வந்து பார்த்துச் சென்றனர். ரகுவும் யுவனியும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தவர்கள் மகிழ்ந்தனர்.

யுவாவும் மதுராவும் போராபோரா தீவிலிருந்து தங்களது தேனிலவு முடிந்து சமீபத்தில் தான் நாடு திரும்பி இருந்தனர்.

மதுரா பயணக் களைப்பிலும் யுவா கம்பெனி வேலைகளும் நெட்டி முறிக்கவே விரைவில் அவர்களை பார்க்க வருவதாகக் கூறி இருந்தனர்.

யுவனிக்கும் ரகுவம்சிக்கும் இடையே உடலளவில் நெருக்கம் இல்லை என்றாலும் மனதளவில் சற்று நெருங்கத் தொடங்கி இருந்தார்கள்.

அவனுக்கான அவளது அக்கறை அவன் மனதில் தேன்துளியாய் இறங்க, அந்தஸ்து பேதத்தால் அதுவரை அந்நியத்தன்மை காட்டி எட்டி நின்றிருந்தவன்,

மலையென மறைத்த அந்த பெரும் தடையைத் தாண்டி அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவள்பால் இழுத்துவிட்டவளுடன் மனதாரப் பேசி சிரிக்குமளவிற்கு மாறியிருந்தான்.

யுவனியை பொறுத்தவரை அவளது மனத்திற்கு நெருக்கமாக உணராத யாராக இருந்தாலும் அவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனது மனதில் படுவதை செய்து விடுபவள்,

ஆனால் அவனை தன் மனம் ஏற்றுக் கொண்டதை என்று உணர்ந்தாளோ, அன்றிலிருந்து அவனுக்காக எதையும் செய்யத் தயாராகி இருந்தாள்.

திருமணம் முடிந்தது முதல் ஏதோ வில்லியைப் பார்ப்பது போல் அவளிடம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தவன் இந்தளவிற்கு மாறியதே அவளுக்கு இதமாக இருந்தது.

'எப்படி இருந்த யுவனி, இப்படி ஆகிட்டியே!' மனசாட்சி எள்ளல் செய்தாலும், அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

அன்றைய தினம் அவனது முகத்தில் கண்ட தாயின் ஏக்கத்தை கண்டவளுக்கு மனம் பாகாக உருக மொத்தமாக அவனிடம் சரிந்து விட்டாள்.

அண்ணன் தங்கை இருவருமே தங்களது பெற்றோர் இன்றி இன்னொருவரின் வீட்டில் வளர்ந்த பிள்ளைகள். பிறந்தது முதலே தாயை இழந்து இவர்களிடம் மட்டுமே வளர்ந்திருந்தால் அந்த இழப்பு பெரிதாக தெரியாதோ என்னவோ!.

ஆனால் இருவரும் சிலகாலம் தாயின் அரவணைப்பில் தாய்பாசத்தை அனுபவித்த பிறகு, அவரை இழந்த நிலையில் யாராலும் அந்த இடத்தை பூர்த்தி செய்ய இயலாது.

அவனது தாய் இறந்த சமயம் மதுரா கூட சிறு வயது குழந்தை, அந்த மாற்றத்தை விரைவில் ஏற்றுக் கொள்வாள். இவன் பதின்ம வயதில் தாயை இழந்திருக்கிறான்.

பொதுவாகவே ஆண்பிள்ளைகளின் எழுதப்படாத டைரி அம்மா தான். தனது மன உணர்வுகளை எதையும் யோசிக்காமல் கொட்டி விடும் இடம் தாய். அப்படிப்பட்ட வயதில் தாயை இழந்தவன் என ரகுவை நினைத்து வருந்தினாள் யுவனி.

மனதில் பட்டதை பேசவும் செய்யவும் துணிந்தவள் அவள். ஆனால் ரகுவின் விசயத்தில் அவனுக்கு அடங்கிப் போக இந்த விசயமும் அவளது மனதில் ஒரு காரணியாக இருந்ததில் மறுப்பதற்கில்லை.

தனது உடன்பிறப்பின் முகத்தில் வாட்டத்தை கண்டாலே அதைக் களைய எதையும் செய்பவள். அவளது உள்ளம் கவர்ந்தவனுக்காக செய்யாமல் இருப்பாளா?!

அன்றைய தினம் காலை உணவை முடித்துவிட்டு ரகு அவசரமாக கிளம்பிவிட, தனது கம்பெனியைப் பார்க்க யுவனியும் கிளம்பிக் கொண்டிருந்த வேளையில் அவளது அலைபேசி சிணுங்கியது.

யுவா அழைக்கிறான் என்பதை கண்ணுற்றவள், "சொல்லுடா புது மாப்ள! ஒருவழியா ஹனி கூட மூன் போயிட்டு வந்துட்டியா? எல்லாம் ஓகே தானே?" வெகு உற்சாகமாக வினவியவள் அவர்களது நலத்தையும் விசாரித்தாள்.

அவளது கேள்விகளுக்கு பதிலளித்த யுவா, "இப்ப எங்க இருக்க யுவனி?" எனக் கேட்க, கம்பெனிக்கு கிளம்பிக் கொண்டிருப்பதாக அவள் கூறவும் அவளைக் காண வீட்டிற்கு வருவதாகக் கூறினான் யுவ்ராஜ்.

"கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் கழிச்சு இப்ப தான் கம்பெனிக்கு போலாம்னு இருந்தேன். அதுக்குக்கூட விட மாட்டீங்களாடா?" விளையாட்டாக சலித்துக் கொண்டு யுவனி சொல்ல,
அவன் அதை வேறு மாதிரி எடுத்துக் கொண்டான்.

ரகு அவளை கம்பெனிக்கு செல்ல அனுமதிக்கவில்லை போல, அதான் இப்படி கூறுகிறாள் என தப்பர்த்தம் கொண்டவனுக்கு இனி அவளை நேரில் சந்தித்துப் பேசினால் மட்டுமே மனம் அமைதியாகும்.

அரைமணிநேரத்தில் அங்கு இருப்பதாகக் கூறியவன் மதுவையும் அழைத்துக் கொண்டு சொன்ன நேரத்தில் யுவனியின் வீட்டில் இருந்தான்.

"ஏன்டா இவ்வளவு அவசரம்? ஈவினிங் மேல வந்து இருந்தா அவரையும் பார்த்து இருக்கலாம். அப்படியே இங்க டின்னர் முடிச்சிட்டு கெளம்பி இருப்பீங்கள்ல? அலைச்சலும் மிச்சம் தானே?" தம்பியை கடிந்தவள்,

"என்னம்மா புதுப் பொண்ணு ட்ரிப் எப்படி இருந்தது? இவன் ஊர்சுத்தி பார்க்க விட்டானா? இல்லையா?" கண்கள் சிமிட்டி குறும்பாகக் கேட்டாள் யுவனி.

"போங்கண்ணி நீங்க வேற! நீங்களும் அண்ணனும் சந்தோஷமா இருக்கீங்களானு தெரியாம அங்கே எங்களால எப்படி நிம்மதியா இருக்க முடியும்? "

"மாமா ஏதோ ரொம்ப இன்சிஸ்ட் செய்ததாலேயும் அதோட புக் செய்தெல்லாம் வேஸ்டா போகும்னு தான் போயிட்டு வந்தோமே." என்ற மதுராவை விசித்திரப் பிராணி போல பார்த்த யுவனி,

"எல்லாம் இந்த மாக்கானோட வேலையா? உன்னையும் சேர்த்து மாத்திட்டானா? ஏன்டா டேய் நாந்தான் அவ்வளவு எடுத்து சொன்னேன்லடா எதுவுமே உன் மரமண்டைல ஏறலையா? " யுவாவை திட்டித் தீர்த்தாள்.

"ஏம்மா அவன்தான் சொல்றான்னா உனக்கும் புத்தி எங்க போச்சு? எந்த பைத்தியமாவது ஹனிமூன் ட்ரிப் இந்த லட்சணத்துல போயிட்டு வருவாங்களா? நல்லா சேர்ந்தீங்க ரெண்டு பேரும், ஜாடிக்கேத்த மூடி மாதிரி." சலித்துக் கொண்டாள் யுவனி.

"நீ பேசாதே யுவனி! எங்களால தான் உனக்கு விருப்பம் இல்லாத இந்த கல்யாணத்துல சிக்கிட்டியேனு எங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?" வருத்தமா சொன்ன யுவா,

" நீ, ஓகேயா யுவனி? அங்க இருந்தாலும் எனக்கு உன்னை நினைச்சு தான் வருத்தமா இருந்துச்சு. அதுலேயும் நீ பொய் சொன்னது தெரிஞ்சு மச்சான் என்ன செய்தாரோனு கொஞ்சம் பயமாக்கூட இருந்துச்சு." தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறினான் யுவா.

அதற்கு யுவனி பதில் பேசத் துவங்கிய அதேசமயம் மதுரா அவர்கள் குடித்து முடித்த ஜுஸ் டம்ளர்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

"அட லூசே! உனக்கு என்னைப் பற்றி தெரியாதாடா? அதெல்லாம் நான் சமாளிச்சுடுவேன். உங்கிட்ட ஏற்கனவே சொன்னேன் தானே? அவன் இல்லனா இவன். இதெல்லாம் சகஜம் தானேடா. "

"அதுக்காக இத்தனை வருசம் நீ லவ் பண்ணி ஆசையா கல்யாணமும் செய்துட்ட மதுவை ஏன்டா கஷ்டப்படுத்தற? திஸ் இஸ் நாட் ஃபேர் யுவா." சகோதரனை கண்டிந்து கொண்டாள் யுவனி.

அந்த கோணத்தில் யோசிக்காத யுவா, மதுவிற்கு நியாயம் செய்யவில்லையோ என்று வருந்த, திரும்பி வந்த மது யுவாவின் வருத்தமான முகத்தைக் கண்டு பதறி அவனுக்கு சமாதானம் சொல்ல,

யுவனியும் அவனுக்கு புரிய வைக்க முயன்று அவனைத் தேற்றுவதற்குள் ஒருவழியாகி விட்டனர் பெண்கள் இருவரும்.

"இனிமேலாவது என்னைப் பற்றி யோசிக்காம, உங்க வாழ்க்கைய பாருங்க." இருவருக்கும் பொதுவாக சொன்ன யுவனி,

"என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும் மது. உங்கொண்ணனை வந்த முதல்நாளே கதற விட்டவ நான். பாவம் அவர்! அவரை நான் பார்த்துக்கறேன். இனிமே இந்த பைய இப்டி எதாவது லூசுத்தனமா உளறிட்டு சுத்துனான் வைய்யி,"

"மண்டையிலேயே நங்குனு நாலு கொட்டி சரி பண்ணு. இனிமே அதெல்லாம் உன் பொறுப்பு, சொல்லிட்டேன்." மதுவிற்கும் ஆதரவாக பேசி சகோதரனின் பொறுப்பை அவளிடம் ஒப்படைக்க, சரியாக உள்ளே வந்தான் ரகுவம்சி.

அதன்பிறகு கிளம்புகிறேன் என்றவர்களை வற்புறுத்தி மதிய உணவை முடித்தபிறகு வழியனுப்பி வைத்தனர்.

உணவை முடித்தபின்னர் வேலை இருப்பதாகக் கூறி உடனே ரகு கிளம்பிட, இத்தனை நாட்களில் அவன் இம்மாதிரி மதியமே வந்தால் மீண்டும் செல்வது கிடையாது. ஆனால் இன்று ஏதோ வேலை போல என்றெண்ணிக் கொண்டாள் யுவனி.

மறுநாள் ஃபேக்டரிக்கு செல்லலாம் என்று முடிவெடுத்த யுவனி டிவியிலும் அலைபேசியிலும் பொழுதை நெட்டித் தள்ள, தேவிம்மா வந்து இரவு சமையலைக் கூட முடித்து சென்று விட்டார்.

ஆனால் ரகு மட்டும் வீடு வந்து சேரவில்லை. அவனது எண்ணிற்கு அழைக்க அணைத்து வைக்கப்பட்டு இருப்பதாக வரவுமே, அவனுக்கு முக்கியமான வேலை போல என்று விட்டு விட்டாள்.

இரவு தாமதமாக வந்த ரகு, "நான் சாப்டுட்டேன். நீ சாப்பிடு." என்றதோடு அறைக்குள் சென்றுவிட, அவனிடம் இன்று ஏதோ வித்தியாசம் தெரிவதை உணர்ந்தாள்.

அவனது பின்னோடே வந்தவள், "அவ்ளோ தூரம் நான் சொல்லியும் கடையில சாப்பிட்டுட்டு வர்றீங்களா?" இடுப்பில் கைவைத்து முறைத்தபடி கேட்டாள் யுவனி.

அவளை நிமிர்ந்து பார்த்தவன், "என்னைப் பார்த்துக்க எனக்கு தெரியும். இத்தன வருசமா அதைத்தான் செய்தேன். உனக்கு எந்த தொல்லையும் வராது." என்றவனை தீவிரமாக முறைத்தாள்.

"இன்னிக்கு என்னாச்சு உங்களுக்கு? நான் என்னிக்கு உங்கள தொல்லைனு சொன்னேன். ஸ்பிட் இட் அவுட் ரகு." அவன் ஏதோ பொடிவைத்து பேசுகிறான் என்பதை உணர்ந்து, முன்கை கட்டிக்கொண்டு அவனை கூர்ந்து பார்த்தபடி வெளிப்படையாக பேசச் சொன்னாள்.

அவளை ஆழமாகப் பார்த்தவன், "அப்ப எல்லாமே பொய்யா யுவி??" எனக் கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஆனால் அவனது வலி தாங்கிய சொற்களும் வேதனையான முகமும் ஏதோ உணர்த்த உள்ளுக்குள் 'திக்'கென்றானது .

அவனாலும் அதற்கு மேல் கேட்காமல் இருக்க முடியவில்லை. மதியம் முதல் தன்னை கட்டுப்படுத்த முயன்று தோற்றவன் மனதிலிருந்த குமுறல், அவனையும் மீறி வார்த்தைகளில் வழிந்து விட்டது.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top