Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 95
- Thread Author
- #1
பகுதி - 18
யுவனியின் பெற்றோரை பொறுத்தவரை ரகுவை யுவனி காதலித்து திருமணம் செய்திருக்க, ரகுவிற்கு அவள்மீது விருப்பம் இருந்தும் அந்தஸ்து பேதத்தால் விலகி இருக்கிறான் என்றெண்ணி இருக்கின்றனர்.
ரகுவின் வளர்ப்பு பெற்றோரின் கணிப்பு, யுவனி ஒருதலையாக ரகுவை காதலிக்கிறாள் என்றும், இனிமேலாவது ரகுவிற்கு அவளை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள்.
அதனால் இரு வீட்டு பெரியவர்களும் அவர்களை தொல்லை செய்ய மனமின்றி அவர்களுக்கு தனிமை கொடுத்து இருவரும் மகிழ்வாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் அவர்களது வீட்டிற்கு விஜயம் செய்வதில்லை.
அவ்வப்போது அழைத்து நலம் விசாரிக்கும் தாய் தந்தையிடம் மிகவும் மகிழ்வாக இருப்பதாக காட்டிக் கொண்டாள் யுவனி.
ஜெயந்தி அவர்களுக்குள் ஒற்றுமையாகி விட்டனரா என சிறு ஆர்வத்துடன் விசாரிக்கும்போது, அவரிடம் அவளது சமையல் கொலை பற்றி எல்லாம் கூறி வருத்தப்பட வைக்காமல் சமாளித்து பேசிக் கொண்டிருந்தான் ரகுவம்சி.
அவளது வீட்டின் செழுமையை கண்டு 'இத்தனை வசதியில் வாழ்ந்தவள் எதற்காக தனது திருமணத்தை நிறுத்த வந்தாள்? ஒருவேளை என்மீது காதலா?!' என்று ஆரம்பம் முதலே அவனுள் சிறு சந்தேகம் இருந்தது.
'ஆனால் அது எப்படி!? எங்கே தொடங்கி இருக்கும்!?' குழப்பத்தில் இருந்தவனுக்கு அவளது இயல்பான துடுக்குத்தனமான உரையாடல் ஒரு சுவாரஸ்யத்தை கொடுத்தது என்னவோ உண்மை.
இருந்தாலும்' பணக்காரர்களை மட்டும் நம்பி விடாதே, முதல்ல நல்லாத்தான் இருக்கும். போகப் போகத்தான் அவங்களோட இன்னொரு முகம் தெரியும்.' சிறுவயது முதல் மனதில் உருபோட்ட எண்ணம் தலைதூக்க உடனே தன்னை கட்டி வைத்தான்.
அவனது சிறிய வீட்டிற்கு அவளை அழைத்து வந்ததும் அவளது முகத்தில் சிறு சுணக்கத்தையோ, பிடித்தமின்மையோ எதிர்பார்த்து அவளது முகத்திலேயே கவனமாக இருந்தவன் ஏமாந்து போனான்.
அவள் இயல்பாக அந்த வீட்டில் பொருந்திப் போனதில் யுவனியை எண்ணி ஆச்சரியம் கொண்டவனுக்கு அவனுக்கே தெரியாமல் அவனது மனதின் ஏதோ ஒருமூலையில் அவள்மீது சிறு ஈர்ப்பு வந்தது.
அதிலும் அவள்தான் சமையல் செய்ய வேண்டும் என்று அவன் சொன்னதும் அவள் அதை அமைதியாக கேட்டதில் அவள்மீதான வியப்பு கூடிப்போக, தனக்காக சமைத்தது என்று அவள் சொன்னதும் அது நன்றாக இல்லை என்றாலும் உண்ண முயற்சித்தான்.
பெரும்பாலான நவநாகரீக யுவதிகளுக்கு ருசியான உணவை கடைகளில் தேடித்தேடி சாப்பிட தெரியுமே தவிர, சமைக்க தெரியாது. அப்படியிருக்க அத்தனை பெரிய பணக்காரி வெகு இயல்பாக தனக்காக மெனக்கெட்டு செய்ததை சகித்துக் கொண்டான்.
ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ருசியான உணவின்றி தவித்தவன், 'தனக்காக ஏதோ ஒன்றை செய்ய வேண்டுமென்று முயற்சிக்கிறாள்' என அவள்மீது அவன் மனதில் தோன்றிய இணக்கத்தில்தான் இயல்பாக அவளது உணவை வாய்விட்டுக் கேட்டு உண்டான்.
அதற்காக அவன் பணமில்லாமல் தான் அவளை சமைக்க சொன்னதாக எண்ணி (அவனைப் பொறுத்தவரை) அவள் வந்து கேட்ட கேள்வியில் ஈகோ சீண்டப்பட்டு வேண்டுமென்றே வெளி உணவை இருநாட்களாக தொடர்ந்து சாப்பிட்டான்.
யுவனிக்கோ தன்னை நினைத்தே ஆச்சரியம்! இதுநாள்வரை யாரும் அவளை ஆதிக்கம் செய்ததில்லை. அவளும் அனுமதிக்கவில்லை. ஆனால் இவனிடம் மட்டும் அடங்கிப் போகும் ரகசியம் தானென்ன!? அவளுக்கு புரியவில்லை.
ரகு அவளை முதல்நாள் சமைக்க சொன்ன அன்று மட்டுமே அவனை கடுப்பேற்றவே வேண்டுமென்றே காரமும் உப்பும் வைத்து விளையாட்டு காட்டினாள்.
ஆனால் அதையும் சாப்பிட்டவன் மீது அவளது மனம் சிறிது இளக்கம் கொண்டு, அடுத்து வந்த நாட்களில் ஓரளவு நன்றாக செய்யத்தான் முயற்சித்தாள். ஆனால் எதுவும் வேலைக்காகவில்லை.
அவள் சாப்பிட வைத்திருந்த உணவை அவனாகவே ஆசையாகக் கேட்டு சாப்பிட்டதில் மேலும் இளகியவள், அவனுக்காக அக்கறையில் சென்று கேட்டால் அவன் அதற்கு முறுக்கிக் கொண்டு பதிலளித்ததில் 'ச்சீ! ப்பே!' என்ற ரீதியில் விட்டு விட்டாள்.
அதேசமயம் 'என்னை கஷ்டப்படுத்த தான் வேணும்னே சமைக்கச் சொல்லி இருக்கான் அதுக்கு கடை சாப்பாடு ஒத்துக்காதுனு காரணம் வேற! இப்ப அதை சாப்டுட்டு நல்லா தானே இருக்கான்.' என அவனை நினைத்து கோபத்துடன் ஆயாசமாக இருந்தது யுவனிக்கு.
இவனுக்காக தான் ஏன் இத்தனை மெனக்கெட வேண்டுமென்று அவளுக்கே புரியவில்லை. தன்னை மதிக்காதவர்களை துச்சமென கடந்து செல்பவள், இவனிடம் அப்படி எதைக் கண்டு அடங்கிப்போகிறேன்?! என்று தன்னையே வினவிக் கொண்டாள்.
உணவை தட்டில் கண்டு விட்டால் சிறுபிள்ளை போல் அவனது முகத்தில் காட்டும் பாவனையிலா? அல்லது அலைபேசியில் பேசும்போது அதிசயமாக சில சந்தர்ப்பங்களில் புன்னகைப்பவனின் இடது கன்னக்குழியிலா?
மடிக்கணினியில் மூழ்கி சிலநேரம் தீவிர யோசனையில் இருக்கும்போது அவனது நெற்றிச் சுருக்கத்துடன் அபிநயிக்கும் புருவச்சுளிப்புகளிலா? அவளது சிந்தனையை பட்டென அங்கே நிறுத்தினாள்.
'இதென்ன யுவனி இத்தனை நுணுக்கமாகவா அவனை சைட் அடிச்சுட்டு இருக்கியா?' மனசாட்சி கேள்வியெழுப்ப தனக்குள் விதிர்த்தாள். அப்படியென்றால் இவனை என் மனம் ஏற்றுக்கொண்டு விட்டதா?!
எத்தனையோ அழகான ஆண்மகன்களை அசால்டாக கடந்து வந்த என்மனம் இவனிடம் விழுந்து விட்டதா? இதுதான் மஞ்சள் கயிறு மேஜிக்கா!? என்றெல்லாம் அன்றிரவு உறக்கத்திற்காக படுத்திருந்தவளின் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க,
தொடர்ந்து அசைந்து கொண்டிருந்த கட்டிலின் அசைவுகள் அவளது சிந்தனையை கலைத்தது. அதில் அவள் மறுபுறம் திரும்பிப் பார்க்க ரகு தான் உருண்டு கொண்டிருந்தான்.
விடிவிளக்கின் ஒளியில் அவள் திரும்பியதைக் கண்டு அவளது தூக்கம் கெட்டு விட்டதோ என்ற எண்ணத்தில் "ஸாரி" மெல்லியதாக முனகிவிட்டு அவளுக்கு முதுகு காட்டி ரகு திரும்பிப் படுக்கவும்,
அவள் மீண்டும் தன் சுயஅலசலில் இறங்க, யுவனியின் மனம் அவனிடம் சரிந்து விட்டதை அதிர்வுடன் உள்வாங்கிக் கொண்டிருந்த சமயம், மெல்லிய முனகல் சத்தம் கேட்டது.
பட்டென விளக்கை உயிர்ப்பித்தவள், "என்னாச்சு ரகு?!" அவனிடம் வினவ, வெளிச்சம் வந்ததும் எழுந்து அமர்ந்த ரகு அவளது கேள்விக்கு பதிலாக,
"தெரியல. வயிறு வலிக்குது. ஒருமாதிரி ஒமட்டுற.." முழுதாக முடிப்பதற்குள் தன் கைகளால் வாயை மூடியபடி பாத்ரூமிற்கு ஓடினான். ஆனால் அதற்குள் படுக்கையிலும் தரையிலும் அவனது கையை மீறி வெளியேறிவிட்டது.
உள்ளே சென்றவன் பெரும் சத்தத்துடன் வாந்தி எடுத்து முடித்து சில நிமிடங்களில் அயர்வுடன் வெளியே வர, அங்கு அவன் கண்ட காட்சியில் திகைப்புற்று நின்றான்.
படுக்கை விரிப்பை மாற்றிவிட்டு, தரையை சுத்தம் செய்து கொண்டிருந்த யுவனி அவன் வெளியே வந்ததை உணர்ந்து,
"அதுக்குள்ள வந்துட்டீங்களா? ஸாரி, இதை முடிச்சுட்டு உங்க ஹெல்ப்க்கு வரலாம்னு இருந்தேன்." என்றிட அவளை இமைதட்டாமல் பார்த்திருந்தான்.
எவ்வளவு நேரம் அவளை அசையாமல் பார்த்திருந்தானோ அதற்குள் "என்னாச்சு? ரொம்ப முடியலையா? ஏன் திடீர்னு?" அவள் பல கேள்விகளை அடுக்கிவிட்டாள்.
எதற்கும் அசையாமல் நிற்பவனை அருகே வந்து அவள் உலுக்க, "ஹான்!!" சுயநினைவிற்கு வந்த ரகு, "நீயேன் இதெல்லாம் செய்ற வர்ணிதா? நான் வந்து க்ளீன் பண்ணி இருப்பேனே." தவறிழைத்த குற்ற உணர்வுடன் சின்ன குரலில் வினவினான் அவன்.
அவனை முறைத்தவள், "இப்ப அதனாலென்ன?!" அதை இயல்பாக எடுத்துக் கொண்டதோடு, "ம்ப்ச்! நான் என்ன கேட்கறேன் நீங்க என்ன பதில் சொல்றீங்க? ஏன் உங்களுக்கு திடீர்னு இப்படி ஆச்சு கேட்டேனே?" அவளது கேள்வியையே மீண்டும் கேட்டாள்.
ஆனால் அவனால் தான் அதை இயல்பாக எடுக்க முடியவில்லை. "அவுட்சைட் ஃபுட் ஒத்துக்காதுனு சொன்னேன்ல, ரெண்டு நாளா சாப்பிட்டது வேலைய காட்டுது போல." பதிலளித்து விட்டு வேகமாக படுத்துக் கொண்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு 'அப்படினா அவனுக்கு உண்மையிலேயே வெளி சாப்பாடு ஒத்துக்காதா?' என்பது புரிந்து, தன்னால்தான் அவனுக்கு இந்த நிலைமையென யுவனிக்கு மனதில் குற்ற உணர்வு மேலோங்கியது.
'இது தெரியாம நல்லாதானே இருக்கான்னு நான்வேற கண்ணு வச்சுட்டேன் போல, அதான் முடியாம போயிடுச்சு. ஆனால் சுமாரான என் சமையலை சாப்பிட்டப்ப கூட நன்றாகத்தானே இருந்தான்!?' என்று யோசித்த யுவனிக்கு அதன் காரணம் புரியவில்லை.
சிறிதாக எடுக்கப்படும் நஞ்சு கூட மருந்தாகும். அளவுக்கதிகமான அமிர்தம் கூட நஞ்சாக மாறுமென்று! அதீத வெப்பத்திலும் எண்ணெயிலும் மசாலாக்கள் தூக்கலாக போட்டு சமைக்கப்படும் வெளி உணவுகளை ஓரளவுதான் நம் வயிறால் ஏற்க முடியும்.
அவளது உணவின் சுவை பிடிக்காததால் சிறிதளவு மட்டுமே சாப்பிட்டு வந்தவன், அதைக் காட்டிலும் ருசியான உணவாக தெரிந்த கடை உணவை சற்று அதிகப்படியாக சாப்பிட்டதன் விளைவு தான் இது.
அமைதியாக படுத்து இருந்தவனை பார்த்தவண்ணம் அவனை நினைத்து தவிப்புடன் படுத்துக் கொண்ட யுவனி அவனுக்காக வருந்த, அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவன் கண்கள் லேசாக கலங்க, விழிகளை இறுக்கமாக மூடி இருந்தான்.