Member
- Joined
- Sep 12, 2025
- Messages
- 92
- Thread Author
- #1
பகுதி - 15
மனம் முழுவதும் படபடப்புடன் அந்த சில படிகளை ஏறுவதற்குள் அவளது இதயத் துடிப்பு ஏகத்திற்கும் எகிறி அவளது செவிகளில் கேட்கும் அளவிற்கு சத்தமாகத் துடித்தது.
"ரிலாக்ஸ். ஒன்னுமில்ல. எதுனாலும் ஃபேஸ் பண்ணு." தனக்குள்ளேயே தைரியம் சொன்னபடி, மூச்சை நன்கு இழுத்து விட்டு ஒருவழியாக தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அந்த அறை வாயிலை அடைந்த யுவனி மெதுவாக கதவைத் தட்டினாள்.
"யா. கெட் இன்." கம்பீரமான அந்த குரலைக் கேட்டு உள்ளுக்குள் சிறு நடுக்கம் தான் இருப்பினும் அதை சாமர்த்தியமாக கண்களில் காட்டாமல் மறைத்தவள், மெல்ல கதவைத் திறந்து உள்ளே நுழைந்தாள்.
கதவு திறந்த சத்தத்தில் அதுவரை பால்கனியின் முழு கண்ணாடிக் கதவை ஒட்டி நின்று தன் பார்வையை தொலைதூரப் புள்ளி வெளிச்சத்தில் நிலைக்கவிட்டு இருந்த ரகுவம்சி திரும்பி வாயிலைப் பார்த்தான்.
வெள்ளை வெளேர் என்ற குர்தாவும் இலகுவான பலாஸோ பேன்ட்டும் அணிந்து கழுத்தில் புதுமஞ்சள் தாலி மின்ன, தும்பைப்பூ போல வந்து நின்றவளின் மீது உச்சி முதல் பாதம் வரை தனது லேசர் பார்வையை வீசிட, அவனை நிமிர்ந்து பாராமலே அதன் தாக்கத்தை உணர்ந்தாள் அவள்.
'வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி!' கவிஞர் வைரமுத்துவின் வரிகள் உண்மை என்பதை அவள் உணர்ந்த அந்த தருணத்தில்,
நிதானமாக அவளை நெருங்கி வந்தவன் அவள் மீதிருந்த ஆழமான பார்வையை அகற்றாமல், " நாட் பேட்." மேலிருந்து கீழாக ரசனையான பார்வையிட்டு, "ஆரம்பிக்கலாமா?" பின்னங்கழுத்தை இடதுகையால் வருடியபடி கேட்க, அந்த கேள்வியில் அவளுள் சர்வமும் ஆட்டம் கண்டது.
அதுவரை அவனை நிமிர்ந்து பாராமலே அத்தனையும் உணர்ந்து கொண்டிருந்தவள், அவனது பேச்சில் திகைத்து கண்களில் டன்கணக்கில் கலவரம் பொங்க, விழி விரிய எச்சில் கூட்டி விழுங்கி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது உணர்வுகளை படித்தவன் போல ரகுவின் கண்கள் சிரிக்கவும், அவனது சீண்டலை புரிந்து கொண்ட யுவனியின் இயல்பான தைரியம் தலைதூக்க அவனை முறைத்தாள்.
அதுவரை அவனை காதலிப்பதாக பொய் சொல்லி அவனது வாழ்வில் வலுக்கட்டாயமாக நுழைந்த குற்ற உணர்வில் தனக்குள் தர்க்கம் நடத்திக் கொண்டிருந்தாள் யுவனி.
திருமணம் நெருங்கும் நாட்களில்,
'நீ எங்க பொய் சொன்ன யுவனி? அவன்தானே சொன்னான். நீ அதை ஒத்துக்கிட்ட. அவ்வளவு தானே. அப்படி சொன்னதுக்காக அவன்தான் வருத்தப்படனும்' என்று தனக்குள்ளே தைரியம் சொல்லி ஒருவழியாக எதிர்கொள்ள துணிந்து விட்டாள்.
திருமணம் பேசியதிலிருந்து அவனிடம் பேச்சுக் கொடுக்காமல் தப்பித்தவள் இன்று தனது அறையில் தனிமையில் சிக்கிக் கொண்டதில் மீண்டும் அந்த குற்ற உணர்வில் தோய்ந்து விட்டாள்.
அவள் வந்தது முதலே அவனது நடவடிக்கையை உணர்ந்து 'திடீர்னு பாய்ஞ்சுடுவானோ?!' உள்ளுக்குள் சிறு நடுக்கத்திலும் இருந்தவள், அவனது எள்ளலான பார்வையில் இயல்பான யுவனியாக மாறிவிட்டாள்.
அவனை முறைத்தபடியே கட்டிலை அடைந்தவள், " இங்க பாருங்க மிஸ்டர் ரகு. இந்த ஒன் மன்த்ஆ கம்பெனி வொர்க் ப்ரஷர், அதோட சேர்ந்து இந்த மேரேஜ், ரிஷப்ஸன்னு செம்ம டயர்டுல இருக்கேன். நீங்க வேணும்னா தனியா ஆரம்பிச்சு டைம் பாஸ் பண்ணுங்க." என்றவள்
"இடையில உங்களுக்கு பசிச்சா, அங்க மில்க், ஃப்ரூட்ஸ் அப்றம் ஸ்வீட்ஸ் கூட இருக்கு. நல்லா சாப்பிட்டுட்டு தூங்குங்க. எனக்கு எதுவும் வேணாம். தூக்கம் கண்ணை சொழட்டுது. குட் நைட்." படபடவென பேசிவிட்டு படுக்க ஆயத்தமானாள்.
"ஹல்லோ மேடம்! ஒரு நிமிஷம்." என்று அவளை தேக்கியவன், "எங்கிருந்தோ திடுதிப்புனு வந்து வலுகட்டாயமா என்னோட வாழ்க்கையை சொழட்டிப் போட்டுட்டு, இப்ப உங்களுக்கு கண்ணை சொழட்டுதோ?" நக்கலாக வினவினான்.
"லிஸன். முடிஞ்சது முடிஞ்சு போச்சு. இனி இதான் உங்க தலையெழுத்து. அதுவும் நான் எழுதலை. நீங்களா எழுதிக்கிட்டீங்க. இட்ஸ் நாட் மை ஃபால்ட் யு நோ." எழுந்தமர்ந்து தோள்களை குலுக்கி வெகு சாதாரணமாக பழியை அவன்மேல் திருப்பிவிட்டாள்.
தன்னந்தனியாக தன்னிடம் சிக்கி இருக்கும் போது கூட இயல்பாக வெளிவரும் அவளது படபடவென்ற துடுக்குத்தனமான பேச்சு அவனை ஆகர்ஷித்தது என்னவோ உண்மை.
ஆனால் அவன் அதை உணராமல் அவளிடம் வம்பு வளர்க்க," என்னாது! உன் தப்பில்லையா? நீ மட்டும் அன்னிக்கு என் கல்யாணத்தை நிறுத்தாம இருந்தா, யாருகண்டது இந்நேரம் நான் அப்பாவாகி இருப்பேனோ என்னவோ." என்றான்.
அதைக்கேட்ட யுவனி, 'ஒருவேளை இவன் அந்த பொண்ணை விரும்பித்தான் மணக்க இருந்தானோ!? நாமதான் கெடுத்து விட்டுட்டோமோ' என்றெண்ணி வருந்தியவளுக்கு மனதினோரம் சுருக்கென்று வலித்தது.
'லூசாம்மா நீ?! அதான் அப்படி எல்லாம் எதுவுமில்லைனு மது அன்னிக்கே சொன்னாள்ல' என்று மூளை நினைவூட்ட மீண்டும் இயல்புக்கு வந்து விட்டாள்.
ரகுவுடன் திருமணம் பேசிய பிறகு மதுராவிடம் பேசி அவனைப் பற்றி யுவனி தெரிந்து கொண்ட விசயங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இவர்கள் பேசிக்கொண்டது எதுவும் இந்த ஆடிட்டருக்கு தெரியாது.
அதுவரை அவன் பேசியதில் இருளடைந்த அவளது முகம் கண்டு திருப்தியுடன் ரசித்த ரகுவிற்கு, திடீரென அவளது முகம் தெளிந்ததில் இப்போது அவள் என்ன சொல்லப் போகிறாள்!?என்றறிய ஆர்வம் பிறந்தது. ஆனால் பையன் தான் அதை உணரவில்லை.
"ஸாரி மிஸ்டர் ரகு! அப்படி உங்களுக்கு அப்பா ஆகறதுக்கு அவ்ளோஓஓ ஆசையிருந்தா குப்தாவை சமாதானம் செய்து அந்தப் பொண்ணை அப்பவே கல்யாணம் செய்திருக்கனும். நவ் இட்ஸ் டூ லேட்."
தோள்களை குலுக்கி அவனுக்காக பரிதாபப்பட்டவள்,
"அன்ட் பேபி ஃபேக்டரில உங்களோட பேபியை அங்கே அலாட் பண்ணலையாம். அதனால காமெடி பண்ணாம இப்ப போய் தூங்குங்க. குட் நைட்" கண்கள் சிமிட்டி ரகசியக் குரலில் சொன்ன அவளது பேச்சில்,
குப்தாவிடம் சமாதானம் செய்யச் சொன்னதில் முதலில் கோபம் கொண்ட ரகுவிற்கு, இரண்டாவது அவள் சொன்ன ரகசிய தொனியில் சுவாரஸ்யம் பிறந்தது.
இதுவரை எந்த பெண்ணுடனும் அவ்வளவாக அவன் பேசியதில்லை. அவனது உணர்வுகளற்ற ரோபோ முகத்தைக் கண்டு எந்தப் பெண்ணும் பேச விரும்புவதில்லை என்பதுதான் உண்மை.
ஏதோ தப்பித் தவறி அந்த அவந்திகா அவனது புறத்தோற்ற மயக்கத்தில் திருமணம் வரை இழுத்து வந்தாள். ஆனால் அவளுடன் திருமணம் நிச்சயித்தபிறகு கூட ஒருநாளும் இவனாக அவளுடன் பேசியதில்லை.
அவளாக அழைத்து பேசினாலும் ஃபீட் செய்த கம்ப்யூட்டர் பதில்களாக வந்து விழும் அவனது பேச்சில், அடுத்து பேச முடியாமல் திருமணத்திற்கு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று அவளே அழைப்பை வைத்து விடுவாள்.
ஆனால் இவளிடம் மட்டும் இத்தனை சரளமாக பேச வருவதுடன் குழந்தை பற்றி எல்லாம் பேசுகிறேனே! என்று தன்மீதே ஆச்சர்யம் கொண்டவனுக்கு ' அப்ப பேபி வேற எங்க அலாட் ஆகியிருக்காம்?' என்று அவளுடன் இன்னுமும் பேசி வம்பிழுக்க மனம் விரும்பியது.
அவன் தன் சிந்தனையில் ஆழ்ந்த இந்த சொற்ப நொடிகளுக்குள் அவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றிருக்க, அவளருகே வந்து அவளது முகத்தைப் பார்த்தான்.
அசந்து தூங்கியவளைக் கண்டு உண்மையிலேயே களைப்புடன் இருக்கிறாள் போல என்றெண்ணி பெருமூச்செறிந்தபடி கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டான் ரகு.
யுவனியை பொறுத்தவரை செய்யும் செயலை திட்டமிட்டு தான் செய்வாள் ஆனால் சில சமயங்களில் அவளது கையை மீறிப் போகும் சூழ்நிலையை அதன்படியே ஏற்கத் தொடங்கி விடுவாள்.
ஒருவேளை, அன்று அவளது தந்தையிடம் யுவனி செய்த காரியத்தால் அவர்களது திருமணம் நின்றதாக அவளை குற்றஞ்சாட்டி ரகு உண்மையைக் கூறி இருந்தால்,
அப்படி ஒரு சூழ்நிலையில் கேசவன் யுவனியிடம் விசாரிக்கும் போது அவளது பதிலாக என்ன சொல்லி விளக்க முடியும் என்று இன்றுவரை அவளுக்கே தெரியவில்லை.
யுவாவிற்காக அவ்வாறு செய்ததாக தன் தந்தையிடம் அவள் விளக்கம் சொன்னாலும், 'உன்னுடைய தம்பியின் காதலுக்காக அவன்தான் போராடனும் அதற்காக நீ போய் இன்னொருவர் வாழ்வில் விளையாடுவாயா? ' இவளுக்கும் டோஸ் விழுவதோடு,
இம்மாதிரி செயல்களில் தந்தை கோபத்தைப் பற்றி நன்கு அறிந்தவள், மேலும் 'உன் காதலை காப்பாற்றப் போராடத் தெரியாத உனக்கெல்லாம் எதுக்குடா காதல்?' என்று அவர் யுவாவை சாடுவார்.
அதனால் தனது சகோதரன் வேதனை அடைவான் அவனுக்காக எதையும் செய்யத் துணியும் அவளால் அதை தாங்க முடியாது என்ற காரணத்தால் அதையும் சொல்ல முடியாது.
இப்படி ஒரு சிக்கலில் ரகுவின் கூற்றை ஆமோதிப்பதை தவிர அவளுக்கு வேறு வழியில்லை என்பதால் வருவதை பார்த்துக் கொள்ளலாம் என்று அதை ஏற்றுக் கொண்டாள்.
அதற்காக யுவனால் தன்னிச்சையாக எதையும் எதிர்கொள்ள முடியாதா என்றால் இது அவ்வாறில்லை.
அவனால் தெளிவாக முடிவெடுக்க முடியாத சமயங்களில் குழப்பமான பாதையில் வரும் அம்புக்குறியிட்ட ஸைன் போர்டு போல வழிகாட்டியாக நிற்பவள் யுவனி.
மதுராவின் திருமணம் அறிந்து யுவனியிடம் ஆலோசனை செய்ய முயன்றவனிடம் அவளால் பேச முடியாமல் போன சூழ்நிலையால் ஏற்பட்ட குழப்பம்தான் நடந்தவை எல்லாம்.