• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Sep 12, 2025
Messages
88
பகுதி - 11

அன்றைய இரவு உணவை நால்வரும் ஒன்றாக உண்டதோடு நிதானமாக அமர்ந்து பேச சாவகாசமாக நேரம் கிடைக்கவும், கணவனிடம் கண்ணைக் காட்டி கல்யாணப் பேச்சைத் துவக்கச் சொன்னார் ராஜலட்சுமி.

அதை புரிந்து கொண்ட ஆதிகேசவன் தனது பிள்ளைகளைப் பார்த்து, "யுவா, யுவனி உங்க ரெண்டு பேருக்கும் அலையன்ஸ் பார்த்திருக்கேன். உங்க மெய்ல்க்கு டீடெய்ல் அனுப்புறேன், சீக்கிரம் பார்த்துட்டு நல்ல பதிலா சொல்லுங்க." என்றார்.

யுவா அதில் திகைக்க, யுவனி அவனை கண்டு கொள்ளாமல், திருமணம் என்றதும் பொதுவாக பிள்ளைகள் சொல்லும் அதே அக்மார்க் டயலாக் ஆன, "இப்பவே என்னப்பா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே." என்றாள்.

"அதுசரி இப்பவே வயசு 25 ஆகுது. இதுல இன்னமும் கொஞ்ச நாளா? அதெல்லாம் முடியாது யுவனி. சீக்கிரமே நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவை சொல்லனும்." என்ற ராஜலட்சுமியின் பார்வை யுவாவை தழுவியது.

மகனுக்கு ஒரு நல்ல துணையை தேடிக் கொடுத்து விட்டால், அவரது மனதிற்கு சற்று நிம்மதி. யுவனியை பற்றி பிரச்சனை இல்லை எந்த சூழ்நிலையையும் கையாளக் கூடியவள். மகனைப் பற்றித்தான் அவரது கவலையே.

"நீங்க என்ன பேசுறீங்கம்மா?! இப்ப பொண்ணுங்க எல்லாம் முப்பது வயசானாலும் சிலர் கல்யாணம் பண்ணாம ஜாலியா தானே இருக்காங்க. என்னமோ 25 வயசை பெருசா சொல்றீங்க? அப்படி அவசரமா பண்ணனும்னா அவனுக்கு வேணும்னா செய்து வைங்க." தன் சகோதரனை இழுத்து விட்டாள்.

"யுவர்ணிதா!" ஆதிகேசவனின் அழைப்பிலேயே அவளது பேச்சில் தந்தையின் பிடித்தமின்மையை உணர்ந்தவள், எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து விட்டாள்.

அவளைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கிய ஆதிகேசவன், "ரெண்டு பேருக்கும் ஒரே டைம்ல தான் மேரேஜ் செய்யனும்னு நாங்க விரும்பறோம். அதனால உங்க மெய்ல் பார்த்துட்டு உங்க டெசிஷன் என்னனு சொல்லுங்க." என்றார்.

சரியாகச் சொன்னால் ராஜலட்சுமி தான் இருவரது திருமணத்தையும் சேர்த்தே வைக்க வேண்டும் என்று அதிக தீவிரத்துடன் இருந்தார்.

ஆனால் மனைவியின் விருப்பம் என்று கூறினால் மகள் மேலும் எதாவது எடக்குமடக்காகக் கேள்வி கேட்க வாய்ப்புண்டு. அதனால் தனது விருப்பத்தையும் இடைச்செருகல் செய்து விட்டார்.

கண்களை விரித்து ஆயாசமாக தலையசைத்தவள், " ஃபைன். நான் அப்றம் பார்த்துட்டு சொல்றேன்ப்பா. பட் என்னை கம்பெல் பண்ணக் கூடாது." என இறங்கி வந்த யுவனியின் மனக்கண்ணில்,

மணமேடையில் ஜோடியாக அவனும், அவளும் அமர்ந்திருந்த காட்சி விரிய அதில் அவள் அவுட் ஆஃப் ஃபோகஸிலும், அவனது முகம் தெளிவாகவும் மின்னியது.

அவள் அதை உணர்வதற்குள், "நானே உங்ககிட்ட இதைப்பற்றி பேசலாம்னு இருந்தேன்ப்பா." மென்று விழுங்கித் தொடங்கிய யுவாவின் பேச்சு அவளை நிகழுக்கு இழுத்து வந்து விட்டது.

தற்போது மூவரும் யுவராஜின் முகத்தைப் பார்த்திருக்க அவன் சற்று தயக்கத்துடன், " அது வந்து, நான் நாலு வருசமா ஒரு பொண்ணை லவ் பண்றேன்." என்றிட அதைக்கேட்ட தாயும் தந்தையும் ஆச்சர்யத்துடன் ஆராய்ச்சியோடு அவனைப் பார்த்தனர்.

மகன் காதலிக்கிறான் என்றதிலேயே அவனது தற்கொலை முயற்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று இருவருக்குமே சந்தேகம் தோன்றி வலுப்பெற்றது.

"என்னோட ஸ்டார்ட் அப்ல ஓரளவுக்கு ஸ்டெடியானதும் இதைப்பற்றி உங்ககிட்ட பேசலாம்னு இருந்தேன். பட் நீங்க இவ்வளவு தூரம் அவசரப்படுத்தறதால, இப்பவே விசயத்தை சொல்ல வேண்டியதாப் போச்சு." யுவா விளக்கம் கூறினான்.

"எப்ப இருந்து இந்த காதல் யுவா? யாரந்தப் பொண்ணு?" ஆதிகேசவன் அடுத்த விசயத்திற்கு பேச்சை நகர்த்தினார்.

மதுராவைப் பற்றிய விபரங்களை கூறியவன், பணக்காரக் குடும்பங்களின் மீதான அவளது அண்ணனின் நிலைப்பாட்டையும் விளக்க, மகனை தீவிரமாக முறைத்திருந்தார்.

"இதுல நான் என்ன செய்யனும்னு நீ எதிர்பார்க்கிற?" கூர்மையான பார்வையோடு அவனிடம் கேட்டவருக்கு அது என்னவென்று தெரியும் இருந்தாலும் அவனே முடிக்கட்டும் என்று கேட்டார்.

" ப்ளீஸ்ப்பா. நீங்களா பெண் கேட்டு போற மாதிரி அவங்கள அப்ரோச் பண்ணினா கண்டிப்பா அவங்க வீட்ல ஒத்துக்குவாங்க. அப்றம் அவங்கள வைச்சு அவ அண்ணனை கன்வின்ஸ் பண்ணிடலாம்." திட்டமிட்டபடி யுவா சொல்ல ஆதிகேசவன் மறுப்பாக தலையசைத்தார்.

" அப்படிப் போய் பேச, அந்தப் பொண்ணோட அண்ணன் எதாவது எங்கள தரக்குறைவா பேசிட்டா அடுத்து என்ன செய்யனும்னு அதையும் நீயே சொல்லு?" ஆதிகேசவன் கடுமையாக கேட்க,

சட்டென பதில் சொல்ல இயலாமல் அவன் விழிக்க, "அவங்கள்ட்ட எங்களை போய் கெஞ்சிட்டு நிற்கச் சொல்றியா? இல்ல அவங்க கால்ல விழுந்து கேட்கனுமா? எங்க மானம் மரியாதையை விட உனக்கு அந்த பொண்ணு தான் வேணுமா? " எனக் கேட்டார்.

" நீங்க என்னப்பா மகன் காதலைப் பற்றி தெரிஞ்சதும் பூமர் அப்பா மாதிரி பேசிட்டு இருக்கீங்க? அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணு கூட வாழ நினைக்கிறான். அதுல தப்பொன்னும் கிடையாதே."

"எத்தனையோ பிஸ்னஸ் டீல்லை சக்ஸஸ்ஃபுல்ஆ முடிச்ச உங்களுக்கு மதுவோட அண்ணன்ட்ட பேசி சமாளிக்கிறது பெரிய விசயமா?" வேகமாகக் கேட்டாள் யுவனி.

யுவ்ராஜே சொல்லாத மதுராவின் பெயரை அவள் இயல்பாக சொல்லி அவளுக்கும் அவனது காதல் விசயம் தெரியும் என்பதை உளறி விட்டாள்.

ஆதிகேசவன் பார்வை இப்போது மகளை துளைக்க, ' இவர் ஏன் இப்படி பார்க்கறாரு!? கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமே?' என்றவளுக்கு இன்னமும் விசயம் விளங்கவில்லை.

"அப்ப உனக்கும் இவன் காதலிக்கிற விசயம் தெரியும்? அப்படினா இவனோட ச்யூசைட் அட்டெம்ட் கூட அந்த பொண்ணுக்காகத் தான். அப்படித்தானே யுவனி?" அவர் கேட்டபிறகு தான் அவள் உளறி விட்டதை உணர்ந்தாள்.

கண்களை மூடி' ஸ்ஸ்ஸ்' மானசீகமாக மண்டையில் கொட்டிக் கொண்டவள் 'சரி சமாளிப்போம். இப்ப என்ன ஆகிடப் போகுது.' சட்டென அவளது இயல்பான தைரியம் வந்து மனதில் குடிகொண்டது.

"இப்ப முடிஞ்சு போனதைப் பற்றி இன்வெஸ்டிகேட் பண்ணி என்ன செய்யப் போறீங்கப்பா? நாம பேசிட்டு இருக்கறது மதுவை இவனுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைக்கிறதுன்ற விசயத்தைப் பற்றி." அதை அப்படியே ஒதுக்கி வைக்க முயன்றாள்.

அவளது பார்வை ராஜலட்சுமி மீது சென்றதை உணர்ந்த கேசவன், மனைவியை நினைத்து அந்தப் பேச்சை அப்படியே விட்டுவிட்டு, "சரி இப்ப என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்க? " தற்போதைய பிரச்சனைக்கு தாவி விட்டார்.

அவரது கேள்வியில் அதிர்வுடன் மகனைப் பார்த்திருந்த ராஜலட்சுமியும் தற்காலிகமாக அதை விடுத்து இந்தப் பேச்சில் கவனம் திரும்பியதில் மூவரும் சற்று ஆசுவாசமாகினர்.

" நீங்க போய் மது வீட்ல பேசுங்க. கண்டிப்பா அவங்க வீட்டு பெரியவங்க ஒத்துக்குவாங்க. அவ அண்ணன், அப்படி எல்லாம் பெரியவங்கள மரியாதை இல்லாம பேசறவரில்ல." பேச்சு வேகத்தில் மறுபடியும் யுவனியின் உளறல்.

தற்போது ஆதிகேசவன் பார்வை மகள் மீது கூர்மையாகப் பாய, தனது பேச்சை ரீவைண்ட் செய்து கண்டு கொண்டவள் மீண்டும் மானசீகமாக தலையிலடித்துக் கொண்டு,

"அதாவது, மது அவ அண்ணனைப் பற்றி இவன்ட்ட சொன்னதா, எங்கிட்ட இவன் சொன்னதை வைச்சு, அப்படிச் சொன்னேன்." மகளிடமிருந்து தடுமாற்றதோடு தலையை சுற்றி மூக்கைத் தொட்ட சமாளிப்பு வேறு.

' என்ன யுவனி இன்னிக்கு இப்படி தொக்கா உன் வாயால நீயே போய் சிக்குற?!' தன்னையே நொந்து கொண்டு ஒருவழியாக சமாளித்து உரையாடலை மீண்டும் யுவாவின் திருமணப் பேச்சில் கொண்டு வந்து நிறுத்தினாள்.

அவளை முறைப்புடன் பார்த்த ஆதிகேசவன், " என்னமோ சொல்ற!? ட்ரை பண்ணி பார்க்கறேன். ஓகே இப்ப உன்னோட விசயம் என்ன யுவனி? நீயும் யாரையாவது லவ் பண்றியா? இப்பவே சொல்லிடு."

" அப்றம் நான் கஷ்டப்பட்டு மேட்ச் பார்த்து எல்லாம் முடிச்ச பிறகு கேட்கறப்ப, எதாவது சொல்லிட்டு இருக்காதே." இப்போதே எச்சரிக்க,

'தனக்கு அந்த மாதிரி எதுவும் இல்லை' என்று உறுதியாக கூறியவள், அவர் அனுப்பிய அலையன்ஸ் பார்த்து ஓகே என்றால் மட்டும் பதில் சொல்வதாக முடித்தாள்.

"தேங்க்ஸ்ப்பா. தேங்க்ஸ்ம்மா." என பெற்றவர்கள் சம்மதித்ததில் வேகமாக வந்து இருவரையும் அணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யுவாவிடமிருந்து விலகிச் சென்றார் ராஜலட்சுமி.

தாயின் விலகலில் வருத்தம் கொண்டவன் யுவனியை பார்க்க, 'போய் சமாதானம் செய்.' என்பது போல அவள் செய்கை செய்ய பெருமூச்சுடன் அவனும் தாயின் பின்னே சென்றான்.

அவர்கள் அகன்றதும் தந்தையின் பார்வை இப்போது மகளின் பக்கம் திரும்பியது. அதில் திருதிருத்த யுவனி அவரிடமிருந்து தப்பிக்க, "நானும் போய் அம்மாட்ட பேசறேன்ப்பா." என்றபடி எழுந்து ஓடினாள்.

அவளாகச் சொல்ல விரும்பாமல் அவளிடமிருந்து எதையும் வாங்க முடியாது என்று உணர்ந்து மகளின் செயலில் ஆயாசமாக இடவலமாக தலையசைத்த ஆதிகேசவனுக்கு அவள் எதையோ மறைக்கிறாள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது.

அடுத்து வந்த ஓர் நன்னாளில் மதுராவின் வீட்டில் யுவாவிற்கு அவளைப் பெண்கேட்டு வந்து அமர்ந்திருந்தனர் ஆதிகேசவனும் ராஜலட்சுமியும்.

அவர்களுக்கு எதிர் இருக்கைகளில் தேவநாதன் மற்றும் ஜெயந்தியோடு வந்திருந்தவர்களை பார்வையால் அளவிட்டபடி ரகுவம்சியும் அமர்ந்திருந்தான்.

 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top