• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
75
பாலைவனத்து முல்லை
முல்லை – 36.2

முல்லையை எரிக்கும் பார்வையில் பார்த்து இருந்த மீனாவை பார்த்தும் பார்க்காததை போல முல்லை அங்கிருந்து சென்றவளை மீனாவும் பின் தொடர்ந்து சென்றாள்.

“அக்கா அக்கா. ரோஜா அக்கா தோத்து போயிட்டாங்க” என்று சிறுமி கத்தியதும்.

“சரி சரி மீதி விளையாட்டை நாளைக்கு விளையாடிபோம். இப்போ போய் தூங்கு” என்று ரோஜா சொல்ல,

“சரி அக்கா டாட்டா”என்ற சிறுமி அவள் வீட்டிற்கு சென்றாள்.

“அண்ணி. ரொம்ப வருஷத்துக்கு பிறகு இன்னைக்கு தான் இப்படி விளையாட முடிஞ்சது. மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ரோஜா சொல்ல, மீனா முல்லையை அழுத்தமாக முறைத்து பார்த்தபடி தான் நின்று இருந்தாள்.

முல்லையை மீனா முறைத்து இருக்க “ஐயோ அண்ணி. என்ன உங்க உதட்டுல ரத்தம்” என்ற ரோஜாவின் கேள்வியில் முல்லை அவள் சிவந்த இதழ்களை வருடி பார்க்க. ஆம். அவள் இதழ் ஓரத்தில் சிறு துளி ரத்தம் கசிந்து கொண்டு தான் இருந்தது.

கேள்வி கேட்டது ரோஜாவாக இருந்தாலும். முல்லையின் பார்வை மீனாவை பார்க்க, மீனாவோ “ச்சீ” என்றபடி ஜீவாவின் அறைக்குள் நுழைந்தவள், இருந்த ஆத்திரத்தில் அந்த அறையின் கதவை அடித்து சாத்தி இருந்தாள்.

“என்னாச்சு இந்த மீனா அண்ணிக்கு, ஏன் இப்படி கோவமா போறாங்க” என்று ரோஜா கேட்க. முல்லை வேக வேகமாக அவள் அறைக்குள் புகுந்தவளை புரியாமல் பார்த்து இருந்த ரோஜாவிற்கு சற்று முன் நடந்த முத்த யுத்தம் தெரியாமல் போனது.

இதே சமயம் நாகராஜனின் இல்லத்திற்குள் நுழைந்த கதிரோ புதிய பூரிப்புடன் தன் நண்பனை நெருங்கி இருக்க.

“என்ன நண்பா பிளீச்சிங் பவுடர் போட்டு முகத்த மூணு முறை கழுவுனியா. பார்க்க இவ்ளோ ப்ரெகாசமா இருக்குற.?” என்று கேட்டதும்.

கதிரின் சிந்தையில் சற்று முன் நடந்த சிறு கூடல் நினைவுக்கு வந்து. அவனின் அதரங்கள் தானாக புன்னகையை தத்தெடுத்துக் கொண்டது.

“டேய் டேய் நண்பா. என்னாச்சு? ஏன் தானா சிரிக்கிற?” என்று நாகராஜன் கேட்க. அதற்கும் கதிரின் பதில் புன்னகையாக மட்டுமே இருந்தது.

“ம். என்னமோ போ நண்பா. கல்யாணம் முடிந்ததில் இருந்தே நீ ஆள் சரியில்ல. சரி வா உனக்கு பிடிச்ச மேல் நாட்டு சரக்கு வாங்கி வச்சிருக்கேன். வா வா குடிக்கலாம்” என்றான் நாகராஜன்.
கிட்டத்தட்ட மூன்று நாட்கள் முல்லையின் பேச்சை கேட்டு மதுவை தொடாமல் இருந்த கதிருக்கு இப்பொது மதுவை விடவே மாதுவின் இதழ் முத்தம் போதையை தந்து இருக்க.

“எனக்கு வேண்டாம்ம் டா நண்பா” என்றான் கதிர்.

“ஐயோ. இது கனவா இல்லை நினைவா, என்ன.? உனக்கு சரக்கு வேண்டாம்மா.? உண்மையாவா.? நம்பவே முடியலயே” என்று நாகராஜன் நெஞ்சில் கைவைத்து பாவனை காட்ட,

“ஏன்டா. நல்லா இருக்குற என்னை கெடுக்குற?போ போ எனக்கு எதுவும் வேண்டாம்ம். நீயும் சாராயம் குடிச்சு நாசனமா போகாம. சுடு தண்ணியில சீரகத்தை போட்டு குடி. அப்போ தான் சீராகும் நம்ம தேகம்” என்ற கதிரை ஆச்சிரியமாக பார்த்தான் நாகராஜன்.

இதே சமயம் போலீஸ் அதிகாரி சுந்தரேசன் மறுபுறம் தன் வீட்டில் வாய்க்கு வந்த வார்த்தையை எல்லாம் சொல்லி கேசவனை வறுத்தெடுத்துக் கொண்டு இருந்தான்.

“சார். என்னை என்னதான் பண்ண சொல்றிங்க, என் மாமாவே எனக்கு வில்லனாக வருவாருன்னு நான் கனவுல கூட நினைக்கல” என்று கேசவன் சொல்ல,

“ச்சி வாய்யை மூடு, எதாவது அசிங்கமா சொல்லிட போறேன்” என்றான் சுந்தரேசன்

“அண்ணா. இனி இவங்கள எல்லாம் நம்பாம, நீங்க வேற விதமா யோசியுங்க” என சுந்தரேசனின் தம்பி ஸ்ரீனிவாசன் சொல்ல.

“எல்லாம் உன்னை சொல்லணும் டா. அன்னைக்கு கோவில்ல மட்டும் நீ அந்த ரோஜா கழுத்துல தாலியை கட்டி இருந்தால். இன்னைக்கு அந்த குடும்பமே நமக்கு அடிமை” என்றான் சுந்தரேசன்.

“சரி அண்ணா. அதான் அப்படி எதுவும் நடக்கலையே. இனி என்ன பண்ணுறதுனு சொல்லுங்க” என்று ஸ்ரீனிவாசன் சொல்ல,

“நீங்க என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது. எனக்கு என் முல்லை வேணும்” என்ற கேசவனை கொலை வெறியில் முறைத்தான் சுந்தரேசன்.

“ஆமா, இந்த ஜீவா எங்கன்னு விசாரிக்க சொன்னேனே. அவனை பற்றி எதாவது தகவல் தெரிஞ்சதா” என்று சுந்தரேசன் கேட்க.

“அண்ணா. நீங்க தான் போலீஸ். உங்களுக்கே அவன் எங்கன்னு தெரியலைனா எங்கனால எப்படி தேடி கண்ட பிடிக்க முடியும்” என்று கையை விரித்தான் ஸ்ரீனிவாசன்

“ம், கண்டு பிடிக்கணும். ஜீவாவை கண்டு பிடுச்சா தான் நம்ம வேற பிளான் போட்டு கதிர்வேலன் குடும்பத்தை பிரிக்க முடியும்” என்று சுந்தரேசன் கையேடு அவன் அடியாட்களுக்கு ஜீவாவை தேடும் படி உத்தரவு போட்டான்.

அன்றைய தினம் இரவு நேரம் முல்லையும் ரோஜாவும் சமயலறையில் நின்றபடி சப்பாத்தியை திரட்டிக்கொண்டு இருக்க. முல்லையின் மனதிலோ எப்படி கதிர் தனக்கு முத்தமிட்டான் என்ற கேள்வி கரையை தொடும் அலையை போல அவள் சிந்தையில் வந்து வந்து சென்றது.

முல்லையின் மனநிலையை அறிந்திடாத ரோஜாவோ வேறு கதைகளை பேசிக்கொண்டு இருக்க. அதே சமயம் மீனா அங்கே வந்தவள், “என்ன முல்லை. ரொம்ப சந்தோஷமா இருக்கியா?” என்று கேட்டாள்

மீனாவின் கேள்விக்கு உண்டான அர்த்தத்தை முல்லை அறிந்து இருந்தாலும் “என்ன அண்ணி. நீங்க தானே கஸ்தூரி அத்தையை பார்க்க போனீங்க. நீங்க தான் உங்க அம்மாவை பார்த்த சந்தோஷத்துல இருக்கணும். நீங்க ஏன் முல்லை அண்ணியை பார்த்து இப்படி கேக்குறீங்க” என்று கேட்டாள் ரோஜா

“நான் சரியா தான் கேட்டு இருக்கேன். முல்லை இன்னைக்க்கு ரொம்ப சந்தோஷமா இருப்பா” என்று மீனா சொல்ல.
“மீனா. என்ன வேணும் உனக்கு. ஏன் இப்படி பேசுற” என்று கோவமாக கேட்டாள் முல்லை

“ஓ. உனக்கு கோவமெல்லாம் வருதா முல்லை. உனக்கு இப்படியெல்லாம் பண்ண அசிங்கமா இல்லை” என்று மீனா கேட்க,

“இங்க என்ன நடக்குது. மீனா அண்ணி நீங்க எதை பற்றி பேசுறீங்க” என்று கேட்டாள் ரோஜா.

“நீ சும்மா இரு ரோஜா. ஏன் முல்லை. கதிர் மாமா என்னை தானே நேசிச்சாறு. ஏன்? நீயும் கூட ஜீவா மாமாவை தானே கல்யாணம் பண்ண ஆசை பட்ட. ஆனா இப்போ எப்படி அதுக்குள்ள கதிர் மாமாக்கூட கூத்தடிக்க உனக்கு மனசு வருது” என்ற மீனாவின் கேள்வியில் முல்லைக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“அண்ணி என்ன பேசுறீங்க நீங்க” என்று ரோஜா முல்லைக்காக வாதாடும் முன்னே மீனாவின் சொல்லை தாங்கிக்கொள்ளாத முல்லை கண்களில் கண்ணீருடன் கதிரின் அறைக்குள் ஓடியவள். அவன் கட்டிலில் படுத்து தேம்பி தேம்பி அழ தொடங்கி இருந்தாள்.

நாகராஜனின் வீட்டில் இருந்து நேரே கதிர் தன் வீட்டிற்குள் வந்தவனின் விழிகள் தேவியின் தரிசனத்தை காண தவமிருந்து.
ஆனால் அவனின் எண்ணத்துக்கு எதிராக முல்லை அங்கே இல்லையென்று தெரிந்ததும் கதிர் நேரே சமயலரைக்குள் புகுந்தான்.
தன் அண்ணனை பார்த்த ரோஜா.

“என்ன வாத்தி நேரத்தோட வீட்டுக்கு வந்து இருக்கீங்க. ஆச்சிரியமா இருக்கு” என்று கேட்க, தன் தங்கையின் கேள்விக்கு பதில் தராத கதிரின் கண்கள் இரண்டும் கன்னியின் காட்சியை காண காத்து இருந்தது

“என்ன வாத்தி. யாரை தேடுறீங்க” என்று ரோஜா கேட்க. அங்கே நின்று இருந்த மீனாவோ. “என்ன மாமா பசிக்குதா. “ என்று கேட்க. “வாத்தி. நீங்க போய் அண்ணியை அழைச்சிட்டு வாங்க சாப்பிடலாம்” என்றாள் ரோஜா.

கதிர் அவன் அறைக்கு செல்லும் முன்னே, “அதான் முல்லை அழுதுட்டு போய் படுத்து இருக்காளே. அவ எங்க இருந்து சாப்பிட போறா” என்று மீனா சொன்னதும், “என்ன அழுதுகிட்டு போனாளா” என்று புரியாமல் கேட்டான் கதிர்

மீனாவின் கேவலமான குணத்தை அறிந்திடாத ரோஜாவும். “ஆமா வாத்தி. என்னனு தெரியல, மீனா அண்ணி என்னமோ சொன்னாங்க. அதுக்கு முல்லை அண்ணி அழுதாங்க” என்று சொன்னவளின் வார்த்தையை முழுதாக கேட்டிடாத கதிர் இரண்டே எத்தில் அவன் அறையை சென்றடைந்தான்.

கதிர் உள்ளே வந்ததை கூட உணராமல் முல்லை அழுதபடியே உறங்கி இருந்தவள் கன்னத்தின் இரு பக்கமும் கண்ணீரின் காய்ந்த கோடுகளை பார்த்த கதிருக்கு காரணம் புரியாமல் போனது.

“ச்சே. ஒரு வேள நம்ம அவசரப்பட்டு முத்தம் கொடுத்ததை எண்ணி தான் இவள் அழுது இருப்பாளா. “ என்று யோசித்த கதிருக்கு. இனி அவளை எப்படி அணுகுவது என்ற குழப்பத்தில் அவளை பார்த்தபடி அவள் அருகே அமர்ந்தவனுக்கு இந்த நொடி வரை காமத்தை தாண்டிய காதல் தான் அவள் மீது நிரம்பி இருந்தது.

“இந்த வீட்டில் என்னதான் நடக்கிறது” என்று ரோஜா யோசித்து இருக்க. அவளின் தந்தை அதே சமயம் வீட்டுக்குள் நுழைந்ததும் பாண்டியனுக்கு இரவு உணவை கொடுத்து அவருக்கு மருந்து மாத்திரை கொடுக்கும் கடமையில் ரோஜா முழுகி இருந்தவளுக்கு முல்லையின் நிலையென்ன என்பதை யோசிக்க நேரமிள்ளாமல் போனது.

இரவு பதினாறு மணியை கடந்தும் கதிரும் முல்லையும் சாப்பிடாமல் இருக்க. “வாத்தி. “ என்ற அழைப்புடன் கையில் இரண்டு கோப்பை பாலை கொண்டு வந்து கொடுத்த ரோஜா.

“நீங்க ரெண்டு பேரும் இன்னும் சாப்பிடவே இல்ல. இந்தாங்க இந்த பாலை குடிச்சிட்டு படுங்க. நாளைக்கு பேசிக்கலாம் குட் நைட்” என்ற ரோஜா சோர்வாக அவள் அறைக்குள் சென்றாள்.

தன்னால் தான் முல்லை கவலையாக இருக்கிறாள் என்று நினைத்த கதிர் தயக்கத்துடன் முல்லையை நெருங்க, அப்போது தான் அவளின் இதழ் ஓரத்தில் காய்ந்து இருக்கும் சின்ன காயத்தை பார்த்தவனுக்கு முதலில் சின்னதாக பூரிப்பு எழுந்தாலும் அவள் விருப்பமின்றி அவளை முத்தமிட்டதை எண்ணி கவலையும் அடைந்தான். இனி எப்போதும் இப்படி ஒரு காரியாதை செய்யவே கூடாது என்று எண்ணிய கதிர் “ஏய் ரவா லட்டு. “ என்று முல்லையை அழைக்க.

அவளோ அவன் குரலை காதில் வாங்காமல் ஆழ்ந்த நித்திரைக்கு சென்று இருந்தாள். அவளை எழுப்பவும் கதிருக்கு மனமில்லாமல் இருக்க. எப்படி பசியுடன் நிம்மதியாக உறங்குவாள் என்ற கேள்வியும் அவனுள் இருக்கதான் செய்தது.
கையில் இருந்த பால் குவளைகளை மேசை மேல் வைத்தவன், முல்லை படுத்து இருக்கும் கட்டிலில் அமர்ந்து, “ஏய் ரவா லட்டு. உன்னை தான்” என்று அவளை செல்லமாக அழைக்க, அவளோ மேலும் நிம்மதியாக உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top