• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
75
பாலைவனத்து முல்லை
முல்லை – 36.1


அன்றைய தினம் மாலை நேரம் 6 மணியை கடந்து இருக்க,
பாண்டியனின் வீட்டில் ரோஜாவும் முல்லையும் வீட்டு வேலைகளை முடித்தவர்கள். மொட்டை மாடியில் நின்று இயல்பாக பேசிக் கொண்டிருந்த சமயம். பக்கத்து வீட்டில் இருக்கும் ஏழு வயது சிறுமி, “அக்கா அக்கா. “ என்று ரோஜாவை கை அசைத்து அழைத்தாள்.
“என்னடி வாண்டு நாளைக்கு ஸ்கூல் தானே, நேரத்தோடு போயி தூங்காம இன்னும் வெளியே நின்னு என்ன வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்க” என்று ரோஜா கேட்க,
“அக்கா. நாங்க முழு பரிச்ச லீவுல இருக்கோம். எனக்கு வீட்ல இருக்க பிடிக்கல. அம்மா போனே கொடுக்க மாட்டாங்க. நீங்க ரெண்டு பேரும் என்ன பண்றீங்க. நான் உங்க வீட்டுக்கு வரட்டா” என்று சின்ன பெண்ணவள் உரிமையுடன் ரோஜாவிடம் கேட்டாள்.
“அதுக்கு என்ன வாயேன். இரு நாங்க ரெண்டு பேரும் கீழே இறங்கி வரோம்”என்ற ரோஜா. முல்லையை அழைத்துக் கொண்டு தன் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்க,
“யாரு ரோஜா இந்த பாப்பா, இதுக்கு முன்னாடி நான் இவளை இங்கே பார்த்ததே இல்லையே. “ என்றாள் முல்லை
“போன மாசம் தான் அண்ணி இந்த வீட்டுக்கு புதுசா குடி வந்து இருக்காங்க. ரொம்ப சமத்து பாப்பா” என்று குழந்தையை கொஞ்சிய ரோஜா. குழந்தையின் கண்ணத்தில் முத்தம் கொடுக்க. குழந்தையோ முல்லையை குறுகுறுவென பார்த்த படி நின்று இருந்தது.
“என்ன பாப்பா என்ன அப்படி பாக்குற” என்று முல்லை கேட்க, “ நீங்கதான் தாடிக்கார மாமாவை கல்யாணம் பண்ணி இருக்கீங்களா” என்று சிறுமி கேட்க,
முல்லை அந்த மழலையின் கேள்வியில் இருக்கும் அழகை எந்த அளவிற்கு ரசித்தாளோ. கதிர்வேலனின் மனைவி அவள் தான் என்ற அங்கீகாரத்தையும் ரசித்தவள். “ஆமாம்” என்று ரீதியில் அழகாய் தலை அசைத்தாள்
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. ஆமா எங்க அந்த மாமா வீட்ல இல்லையா” என்று சிறுமி கேட்க, “என்னடி வாத்திகிட்ட உன்னை பிடிச்சு கொடுக்கணுமா” என்று கேட்டாள் ரோஜா.
“ஏன். என்னை ஏன் பிடிச்சு கொடுக்குறீங்க. நான் இப்ப எல்லாம் நல்ல பிள்ளையா இருக்கேன். அந்த மாமாகிட்ட என்ன பிடிச்சு கொடுக்காதீங்க” என்ற சிறுமி வீட்டுக்குள் எட்டி எட்டி கதிர்வேலனை பார்க்க.
“என்ன ஆச்சு, யார நினைத்து பாப்பா பயப்படுறா” என்று கேட்டாள் முல்லை
“அதுவா அண்ணி. இந்த குழந்தை சப்பிடலனா வாத்தி பெயரை சொல்லி தான் இவங்க அம்மா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டுவாங்க” என்று ரோஜா சொல்ல முல்லை சத்தமாக சிரித்தவள்
“ஆமாமா, மாமா சாரை பார்த்தா எனக்கே பயமா இருக்கு. குழந்தைக்கு பயம் இருக்காதா” என்றாள் முல்லை
“அப்படியா. ஆனா எனக்கு என்னவோ வாத்தி இந்த உலகத்திலேயே உங்கள மட்டும் தான் பார்த்து பயப்படுற மாதிரி தோணுது” என்று ரோஜா சொல்ல.
“தோணும் தோணும். நீ எப்பவும் உன் அண்ணன விட்டுக் கொடுக்க மாட்ட என்று முல்லை சிணுங்கினாள்.
“அக்கா அக்கா. நான் இங்க உங்க கூட விளையாட வந்தா. நீங்க ரெண்டு பேரும் உங்களுக்குள்ள பேசிக்கிறிங்களா. வாங்க அக்கா விளையாடலாம்”என்ற குழந்தை முல்லையையும் ரோஜாவையும் விளையாடுவதற்கு அழைக்க.
“என்னடி விளையாட சொல்ற” என்று கேட்டாள் ரோஜா
“நீங்க ரெண்டு பேரும் போயி மறஞ்சுக்கோங்க. உங்களை நான் கண்டுபிடிக்கிறேன்” என்று சிறுமி சொல்ல. “என்னது கண்ணாமூச்சியா. இந்த வயசுக்கு மேல கண்ணாமூச்சி விளையாடனுமா” என்று முல்லை கேட்டாள்.
“அட வாங்க அண்ணி. குழந்தை பாவம். இப்ப இருக்குற குழந்தைங்க ஓடி ஆடி எல்லாம் விளையாடுறது இல்ல. ஒரு போனை கைல கொடுத்து மூளையில் உட்கார வச்சிட்டு பெரியவங்களும் போனுக்கு அடிமையாகி இருக்கிறோம். இந்த குழந்தைகிட்டயாவது நம்ம ரெண்டு பேரும் விளையாடலாம் வாங்க” என்று ரோஜா சொல்ல. “ஐ ஐ வாங்க விளையாடலாம்” என்று பாப்பா குதித்தாள்.
“சரி சரி நீ இப்போ கண்ண மூடிக்கிட்டு ஒன்னுல இருந்து 30குள்ள சொல்லு. நாங்க ரெண்டு பேரும் போயி மறஞ்சிக்கிறோம்”
என்ற ரோஜா வேகமாக சென்று ஒரு அறைக்குள் ஒழிந்து கொண்டாள்.

முல்லையோ வீட்டில் இருந்தால் அகப்பட்டு விடுவோம் என்று நினைத்தவள், அருகே நாகராஜனின் இல்லம் அமைந்து இருக்கும் தென்னந்தோப்பின் தென்னை மரத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டாள்.
“ரெண்டு பேரும் ஒளிஞ்சிகிட்டீங்களா. இதோ நான் வந்து உங்களை கண்டுபிடிக்க போறேன்”என்ற சிறுமி முதலாக பாண்டியனின் வீட்டுக்குள் சென்று மறைந்திருக்கும் இருவரை தேட. அதே சமயம் வாசலில் கதிர்வேலனின் பைக் வந்து நின்றது.
மாலை நேரம் என்பதால். வீட்டிற்குள் சென்றால் தான் முல்லை இன்றும் தன்னை சரக்கு அடிக்க வெளியே விட மாட்டாள் என்று எண்ணிய கதிர்வேலன் நேரே தன் நண்பனை காண்பதற்காக நாகராஜனின் வீட்டிற்கு செல்லும் வழியில் முல்லை கதிரை கண்டுக்கொண்டாள்.
“மாமா சார் இங்க வாங்க” என்று கதிரை அழைத்ததோடு மட்டும் இல்லாமல் அவனை இழுத்துக் கொண்டு மீண்டும் தென்னை மரத்தின் பின்னே சென்று மறைந்து கொண்டாள் முல்லை.
“ஹேய் நீ இங்க என்ன பண்ற. என்னை எங்கடி இழுத்துட்டு போற” என்று புரியாமல் கதிர் கேட்க ,
தென்னை மரத்தின் பின்னே நின்று தலையை மட்டும் நீட்டி பார்த்து மீண்டும் கதிரை பார்த்த முல்லை,
“அங்க பக்கத்து வீட்டு பாப்பா என்னை தேடுறா. இப்போ நீங்க போனா கண்டிப்பா என்னை போட்டுக்கொடுத்துடுவீங்க. இருங்க இருங்க நம்ம அப்புறம் போகலாம்” என்றாள் படபடப்புடன் முல்லை.
“ஏண்டி, நீ என்ன குழந்தையா. அந்த சின்ன பொண்ணுகூட விளையாடுற. இரு நான் போய் நீ இங்க தான் இருக்கன்னு சொல்லிடுறேன்” என்ற கதிர் அங்கிருந்து செல்ல முயல.
“ஐயோ மாமா சார் சொல்லுடாதிங்க”
என்றபடி அவன் கருப்பு ஷேர்ட்டை பற்றி இழுத்தாள் முல்லை.
அவள் இருந்த பதட்டத்தில் அவளின் செயல் அவள் கருத்தில் இல்லாமல் போக. கதிரோ அவனின் நிலை இழந்து விட்டான்.
அவளின் மூச்சு காற்று அவன் இதயத்தை வருடி செல்ல. அவளின் நெருக்கம் அவனை நிலை குழைய செய்தது.
முல்லை அவனின் ஷேர்ட்டை பற்றியதில் அவளது விரல்கள் அவனது தேகத்தை தொட்டு இருக்க. இவனோ
அவளையே பார்த்து இருந்தவன்.
அவளின் கள்ளம் இல்லா அழகில் மோச்சம் அடைய தவமிருந்தான்.
அவன் அவள் விழிகளை கூர்ந்து கவனித்து இருக்க. அவளின் விழிகளோ இவளிடம் கதிர் அகப்பட்டிருப்பதை அறிந்திடாமல். குழந்தையிடம் தான் அகப்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் கவனத்துடன் இருந்தாள்.
பெண்ணவளின்
அடர்ந்த புருவம். அஞ்சனம் தீட்டிய விழிகள்.
வைரக்கல் மூக்குத்தி குத்திய கூர் நாசி. அதற்கும் கீழ் வரைந்து வைத்த செந்தூர இதழ்கள் என்று அவள் முக அழகை ரசித்தவனின் பார்வை மெல்ல மெல்ல கீழ் நோக்கி முல்லையின் முன் அழகைக்கண்டு எச்சிலை கூட்டி விழுங்கியது.
தன்னை தன்னவன் ரசிப்பதையே அறிந்திடாத பேதை பெண்ணோ.
“மாமா சார் பாப்பா உள்ள போயிட்டாளா. “ என்றாள் இப்பொது அவன் விழிகளை நேருக்கு நேர் பார்த்தபடி.
அவள் கேள்வியை காதில் வாங்காதவன். அவளின் இதழ் அசைவுகளில் மட்டும் கவனத்தை பதித்து இருக்க.
“மாமா சார் உங்கள தான், பாப்பா போயிட்டாளா” என்று முல்லை கேட்க.
சட்டென்று அவளை நோக்கி குனிந்து அவள் இதழ்களில் அழமாக தன் அதரங்களை பதித்துக்கொண்ட கதிரின் செயலில் முல்லைக்கு மூச்சே நின்று விட்டது.
இது கனவா நினைவா என முல்லை யூகிக்கும் முன்னே. மேலும் அழுத்தமாக அவள் இதழை ருசித்தவனின் செயலில் முதலில் திமிரிய முல்லையின் தேகமும் விழிகளும் அப்படியே அவனின் முத்தத்திற்கு இணங்க ஆரம்பிக்க, இருவருக்குமான முதல் முத்தத்தை இருவருமே ரசித்து ருசிக்க தொடங்கி இருந்த சமயம்.
“முல்லை. “ என்று அதீத கோபத்துடன் ஒருவரின் குரல் இவர்கள் இருவரின் நெருக்கத்தை உடைத்திருந்தது.
சட்டென்று அவளை நோக்கி குனிந்து அவள் இதழ்களில் அழமாக தன் அதரங்களை பதித்துக்கொண்ட கதிரின் செயலில் முல்லைக்கு மூச்சே நின்று விட்டது.
இது கனவா நினைவா என முல்லை யூகிக்கும் முன்னே. மேலும் அழுத்தமாக அவள் இதழை ருசித்தவனின் செயலில் முதலில் திமிரிய முல்லையின் தேகமும் விழிகளும் அப்படியே அவனின் முத்தத்திற்கு இணங்க ஆரம்பிக்க, இருவருக்குமான முதல் முத்தத்தை இருவருமே ரசித்து ருசிக்க தொடங்கி இருந்த சமயம்.
“முல்லை. “ என்று அதீத கோபத்துடன் மீனாவின் குரலை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து நின்றுருக்க.
“நான் ரோஜா அக்காவை கண்டுபிடிச்சிட்டேன்னு” என்று சத்தமாக கூப்பாடு போட்டாள் சிறுமி.
பல நாள் பசியில் இருந்த பிள்ளையின் கையில் இருக்கும் தேவாமிர்தத்தை காகம் பிடுங்கியது போல மீனாவின் வருகை இருந்து இருக்க.
கதிரின் கண்கள் அவன் அதரங்கள் சுவைத்து இருந்த முல்லையின் இதழ்களை ஏக்கமாக பார்த்து இருந்தது.
ஏன்.
எப்படி.
எதனால் கதிருக்கு இப்படியொரு மாற்றம் என்று முல்லை நினைக்கும் முன்னே.
“இங்க என்ன நடக்குது?” என்று அதே கோவத்தில் கத்தினாள் மீனா.

மீனாவின் கேள்வியில் கதிர் முகம் மாறியவன், பதில் ஏதும் சொல்லாமல் முல்லையை ஏக்கத்துடன் பார்த்தபடி அங்கிருந்து நாகராஜனின் வீட்டிற்கு சென்றிருந்தான் கதிர்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top