Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 73
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை 35.2
கேசவனின் செய்கையில் முருகன் கோபத்துடன் நின்று இருந்தவரை, “மாமா. ஏன் வாசலில் நின்னு பேசுறீங்க. வாங்க வீட்டுக்குள்ள போகலாம்” என்று ரோஜா அழைக்க. அனைவரும் பாண்டியனின் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
முருகன் உள்ளே வந்ததும். “என்ன மச்சான், வாசல்ல வச்சு நீ என்ன சொன்ன. அப்ப கேசவனை நீ தான் ஆள் வச்சி இப்படி பண்ணியா” என்ற பாண்டியனின் சந்தேகத்துக்கு.
“ஆமா மாமா. அவனை ஆள வச்சி தூக்கினது நான்தான்” என்று முருகன் சொல்ல. பார்வதியின் விழிகளும் அதிர்ச்சியில் உறைந்தது.
முருகனின் வார்த்தையைக் கேட்டு கதிரும் ஆச்சிரியம் அடைந்தவன், “என்ன மாமா. நீங்க பெரிய சண்டியர் போல”
என்று கதிர் சொல்ல.
“அப்புறம் என்ன மாப்ள. நம்ம வீட்ல இருந்துகிட்டு எனக்கே எமனாக மாறியவனை அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுடுவேனா” என்றார் முருகன்.
“சரி சரி. இந்த கதையை இதோட விடுங்க. ஆனாலும் இந்த அடிதடி எல்லாம் நீ இன்னும் மறக்கல முருகா” என்று பாண்டியன் சொன்னதும்.
“எப்படி மாமா மறக்க முடியும். அது நம்ப ரத்தத்திலே ஊறியிருக்கே” என்றார் முருகன்
கேசவனால் பெரிய பிரச்சனை வரும் என்று நினைத்த ரோஜா. “எப்படியோ தலைக்கு வந்தது தலப்பாகையுடன் போன மாதிரி இந்த கேசவன் மறுபடியும் வாத்தியையும் முல்லை அணியையும் பிரிக்கணும்னு நினைச்சதை நீங்க தடுத்துட்டீங்க” என்றாள் மகிழ்ச்சியுடனே.
என்னதான் பார்வதிக்கு கேசவன் தம்பியாக இருந்தாலும். இப்பொழுதெல்லாம் பார்வதிக்கு முல்லை மீது தாய்மை உணர்வு பிறந்து இருக்க. “சரி சரி அந்த விளங்காதவனை பற்றி பேசிக்கிட்டே நம்ப வந்த விஷயத்தை மறந்துட்டோம் பாருங்க” என்ற பார்வதி. முல்லைக்கு சீர் கொடுக்கும் நகைகளை எடுத்து மேசையில் வைக்க மீனாவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
“அண்ணா. இதெல்லாம் முல்லைக்கு நாங்க திருமணத்துக்கு சீராக கொடுக்கிற நகை, பாத்திரப் பண்டங்கள் எல்லாம் இன்னிக்கி சாயங்காலத்துக்குள்ள வீட்டுக்கு வந்துடும். வேற ஏதாவது வேணும்னா, “ என்று பார்வதி தன் வார்த்தையை முடிக்கும் முன்னே
“என்னமா. என்ன கெட்ட பழக்கம் இதெல்லாம். முல்லை இந்த வீட்டு பொண்ணு. நீங்க என்ன.? முல்லைக்கு சீர்சனம் கொடுத்து எங்களை அசிங்க படுத்துறீங்களா?” என்றார் கோபத்துடன் பாண்டியன்.
“அய்யய்யோ, மாமா இது எங்க கடமை தானே மாமா. அதனாலதான் முல்லைக்கு சீர் கொண்டு வந்திருக்கோம். அதுவும் இல்லாம முல்லை மீனாவுக்கு சேர்த்து சீர் எடுத்துட்டு வர சொல்லுச்சு. அதான் மீனா முல்லை ரெண்டு பேருக்குமே சீர் கொண்டு வந்திருக்கேன்” என்றார் முருகன்
“என்ன சொல்றீங்க. எனக்கு சீரா. “ என்று மீனா ஆச்சரியமாக கேட்க,
“ஏமா. நீயும் எனக்கு பொண்ணு முறை தானே. முல்லைக்கு சீர் கொடுக்கும் போது உனக்கும் கொடுக்கறதுல தப்பு இல்லையே” என்று முருகன் சொல்ல,
“மச்சான். முல்லைக்கே நீங்க எதுவும் பண்ண வேண்டாம்ம்னு சொல்லிக்கிட்டு இருக்கேன். இதுல நீங்க மீனாவுக்கும் வேற சேர்த்து பண்றேன்னு சொல்றீங்க, இல்ல மச்சான். நீங்க கோச்சுக்காதீங்க. இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்கல” என்றார் பாண்டியன்.
தன் தந்தையின் பேச்சில் உள்ள நியாயத்தை புரிந்து கதிரும் கைகளை மார்புக்கு நடுவே கட்டிக்கொண்டு ஓரமாக நின்று இருக்க, “அப்பா. மாமாவுக்கு விருப்பம் இல்லனா எனக்கும் சீரெல்லாம் வேண்டாம்ம்”என்றாள் முல்லை.
“இல்லம்மா. இதெல்லாம் பொண்ணுக்கு நாங்க பண்ண வேண்டிய முறை தானே” என்று முருகன் சொல்ல,
“இல்லப்பா. மாமா மனசை வருத்தப்பட வச்சிட்டு நான் இதெல்லாம் வாங்கிகிட்டா எனக்கும் கஷ்டமா இருக்கும். பரவால்ல. நீங்க சீர் எதுவும் அனுப்பி வைக்க வேண்டாம்ம்” என்றாள் முல்லை.
தன் மகளின் தயக்கத்தை புரிந்துகொண்ட முருகனும், “சரி. அப்புறம் உன் இஷ்டம். ஆனால் இந்த நகை எல்லாம் உன் அம்மாவோடது. இதெல்லாம் உன் கல்யாணத்துக்கு கொடுக்கனும்னு அவ ரொம்ப ஆசைப்பட்டா. இந்தா இதையாவது வாங்கிக்கோ” என்று முருகன் சொல்ல,
பார்வதி பெரிய நகைப்பெட்டியை முல்லையிடம் கொடுக்க. முல்லை தயக்கத்துடன் பாண்டியனை பார்த்தாள்.
“என்னமா என்னைய பாக்குற. உங்க அம்மா ஆசை தானே வாங்கிக்கோ” என்று பாண்டியன் சம்மதம் சொன்னதும்.
சிரித்த முகத்துடன் முல்லையும் நகைப்பெட்டியை தன் வசம் வாங்கிக் கொள்ள. மீனாவிற்கோ தன் அன்னையின் கெட்ட குணத்தை தத்தெடுத்தது போல மனம் மாறி இருந்தது.
மீனாவின் முகத்தை வைத்தே அவள் எண்ணத்தை கணித்து இருந்த முருகன், ““மீனா. இந்தாமா உனக்கும் இதுல கொஞ்சம் நகை வாங்கி இருக்கேன். இந்தா வாங்கிக்கோ” என்ற முருகன் மீனாவிற்கும் நகை பெட்டியை கொடுக்க. மறுப்பு எதுவும் சொல்லாமல் மீனா அந்த நகையைப் பெற்றுக்கொண்டாள்.
பாண்டியனின் வீட்டில் உள்ள அனைவரும் அங்கே இருக்க, “ஆமா ஜீவா மாப்பிள்ளை எங்க??அவரைப் பற்றி ஏதாவது செய்தி கிடைத்ததா இல்லையா?” என்று பார்வதி கேட்டார்.
ஜீவா மீது உள்ள கோபம் குறையாத நிலையில், “எதுக்கு இந்த வீட்டுக்கு சம்பந்தம் இல்லாதவங்களை பத்தி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க”என்றார் பாண்டியன்.
பாண்டியனின் கோவத்தை குறைக்க நினைத்த முருகனோ “மாமா. என்ன நீங்க, அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இதுக்கு மேல பசங்ககிட்ட கோச்சிக்கிட்டு என்ன ஆகப்போகுது” என்று முருகன் கேட்க. பாண்டியன் பதில் பேசாமல் அதே கோபத்துடன் தான் அமர்ந்து இருந்தார்.
“கதிர் மாப்ள, ஜீவா மாப்பிள்ளை ஏன் இன்னும் வீட்டுக்கு வரல” என்று முருகன் கேட்க.
“நாகாகிட்ட சொல்லி இருக்கேன் மாமா. எப்படியும் இன்னைக்கு நைட்டுக்குள்ள அண்ணனை வீட்டுக்கு அழைச்சிட்டு வந்துடலாம்” என்று நம்பிக்கையுடன் சொன்னான் கதிர் வேலன்
“ஜீவா மாமா என்ன குழந்தையா. அதெல்லாம் அவரே தானாக வீட்டுக்கு வருவாரு” என்ற மீனா. இவர்கள் தனக்காக கொடுத்த நகையை எடுத்துக்கொண்டு அவள் அறைக்குள் செல்ல. ஜீவா மீது கொஞ்சம் கூட பாசமே இல்லாத மீனா எதற்காக ஜீவாவின் கரங்களால் தாலியை ஏற்றுக் கொண்டாள் என்ற சந்தேகம் கதிர்வேலனுக்கும் ரோஜாவிற்கும் இருந்தது போலவே முல்லையின் மனதிலும் இருக்கத்தான் செய்தது.
இருப்பினும். ஜீவா மீனாவின் திருமணம் முடிந்த செய்தியை கேட்டு முல்லைக்கு சிறிதளவு தான் கவலை நேர்ந்ததே தவிர இனி ஜீவா தனக்கு சொந்தம் இல்லை என்று நெல்மணி அளவு கவலை கூட முல்லையின் மனதில் இல்லாமல் தான் இருந்தது.
இன்னாருக்கு இன்னார் தான் என்ற சொல்லுக்கு எடுத்துக்காட்டாக கதிருக்கு முல்லை தான். முல்லைக்கு கதிர் தான் என்று இறைவன் முடிவு செய்து இருப்பதை இந்த நொடி வரை கதிரும் முல்லையும் அறிந்திடாமல் இருந்தாலும். இவர்கள் இருவரின் வாழ்வில் நாளுக்கு நாள் இவர்களின் அன்பும் காதலும் கூடிக் கொண்டே தான் இருந்தது.
கேசவனின் கெட்ட எண்ணம் ஈடேறாதே நிலையில். அனைவரும் அன்றைய தினம் ஒன்றாக கூடி பேசி மகிழுந்து இருக்க. மதிய நேரம் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
***************************************
அன்றைய தினம் மாலை நான்கு மணி அளவில், “ என் அம்மா ரொம்ப நாளா இந்த பக்கமே ஆள காணோம். நான் அம்மாவை ஒரு எட்டு பார்த்துட்டு வரேன்” என்ற மீனா கஸ்தூரியை பார்ப்பதற்காக அவள் இல்லத்திற்கு சென்றாள்.
பஞ்சாயத்து விஷயமாக நாகராஜனுடன் பாண்டியனும் வெளியே சென்று இருக்க. பொழுது சாய்ந்த வேளையில் பாண்டியனின் இல்லத்தில் இருந்து முருகனும் பார்வதியும் வார இறுதியில் மீண்டும் வருவதாக சொன்னவர்கள், குன்னக்குடியில் இருந்து சிவகங்கைக்கு திரும்பினார்கள்.
இவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறியதும்.
கதிர் தன் அறையில் அமர்ந்து இருந்தவன் தீவிரமாக போனில் எதையோ பார்த்துக்கொண்டு இருக்க.
“மாமா சார். “ என்ற அழைப்புடன் முல்லை அவன் முன்னே வந்து நின்றாள்.
முல்லையின் அழைப்பில் தலை தூக்கி அவளை பார்த்தவன். ஒற்றை புருவத்தை வளைத்து, “என்னடி?” என்றதும்.
“அப்பா கொடுத்த நகை பெட்டியை எங்க வைக்கிறது” என்று கேட்டாள் முல்லை.
“ம். வேணும்னா அடகு கடையில வைக்கிறியா” என்று கதிர்வேலன் கேட்க.
“ம். வேணும்னா உங்கள தூக்கிட்டு போய் அடகு கடையில வைக்கவா” என்ற முல்லையை கோபத்துடன் முறைத்து பார்த்த கதிர் என்ன நினைத்தானோ சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்து அவளை நெருங்கினான்.
முல்லையின் முன்னே வந்து நின்று தன் இருக்காரங்களையும் தூக்கியப்படி.
“ம். வேணும்னா என்னை தூக்கிட்டு போய் அடகு வச்சிக்கோ” என்ற கதிரை கடுங்கோபத்துடன் முறைத்தாள் முல்லை.
“என்னடி அப்படி பாக்குற. நீதானே என்ன தூக்கிட்டு போய் அடகு வைக்க போறேன்னு சொன்ன. வா முடிஞ்சா ட்ரை பண்ணு” என்று கதிர்ச்சொல்ல,
“உங்களை கொண்டு போய் அடகு வச்சா சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்ல. அப்படி என்ன உங்ககிட்ட இருக்குன்னு உங்கள அடகு வைக்க சொல்றீக?” என்று கிண்டலாக கேட்டாள் முல்லை.
“என்னடி இப்படி கேட்டுட்ட. ஏன்?? என்கிட்ட என்ன இல்ல?
அழகில்லையா?
அறிவில்லையா?” என்று கதிர் கேட்டான்.
கதிரை மேலிருந்து கீழ் வரை கண்ணால் நோட்டமிட்ட முல்லை
“உங்ககிட்ட அழகு கொஞ்சம் இருக்கு. அறிவும் கொஞ்சம் தான் இருக்கு. ஆனா இது ரெண்ட விட அதிகமா மூஞ்சி மேல இருக்கிற தாடி தான் இருக்கு” என்றதும்,
கதிர் கோபம் கொண்டவன் அவள் கையைப் பிடித்து தன் வசம் இழுக்க. நேராக அவன் மார்பில் வந்து மோதியவள், “ஐயோ மாமா சார். என்ன பண்றீங்க. நான் விளையாட்டா தான் சொன்னேன். என்னை அடிக்க போறீங்களா?என்று பயத்துடன் கேட்டாள்.
அவள் கேள்வியில் அவளின் இதழ்களை ஆழ்ந்து பார்த்தவன்,
“அடிக்கணும்னு தான் ஆசையா இருக்கு, ஆனா. “ என்று அழுத்தமாக தன் தலையை கோதி விட்டவன்,
“இப்ப நேரம் சரியில்ல” என்றபடி வேக வேகமாக தன் கைபேசியுடன் தன் அறையில் இருந்து வெளியே சென்றவனை வெரித்து பார்த்துக் கொண்டு இருந்தாள் முல்லை.