Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 73
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
முல்லை 35.1
“இந்தாயா போலீஸ்காரா. இவன அரெஸ்ட் பண்றதுக்கு உங்கள நான் இங்க அழைச்சிட்டு வந்தா. அவன் பேசுற வசனத்தை கேட்டுகிட்டே இருக்கீங்க” என்று கேசவன் காவலாளியை மரியாதை இல்லாமல் பேச
“இங்க பாரு கேசவா. இன்ஸ்பெக்டர் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் நாங்க இவர அரெஸ்ட் பண்ண வந்திருக்கோம். மத்தபடி உன்னுடைய உருட்டல் மிரட்டல் எல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என்ற காவலாளியும் கேசவனை கடிந்து கொண்டார்
“எரியறத புடுங்கினா கொதிக்கிறது தானா அடங்கும். நானே வந்து அந்த சுந்தரேசன்கிட்ட உனக்கு என்னதான்டா தேவைன்னு கேட்டுட்டு வரேன்” என்ற கதிர்வேலன் கோபத்துடன் வெளியே செல்ல முயன்றவனை பார்த்து முல்லை பயந்தவளாக
“மாமா சார் மாமா சார் நானும் உங்க கூட வரேன்” என்றதும் கதிருக்கு அவளின் வார்த்தையைக் கேட்டு சிரிப்பு தான் வந்தது
“என்ன. இப்ப எதுக்கு சிரிக்கிறீங்க” என்று கோபத்துடன் முல்லை கேட்க
“ஏண்டி. நைட்ல நான் வெளியே போனா சரக்கு அடிச்சிட்டு வருவேன்னு சொல்லி நீயும் கூட வரேன்னு சொல்றதுல ஒரு நியாயம் இருக்கு. ஆனா நான் இப்போ போறது அந்த பொறாமை புடிச்ச புடலங்காயை பொளக்க தான். இப்பவும் நீ கூட வரேன்னு சொன்னா உன்னை நான் எப்படி அழைச்சிட்டு போறது” என்று கதிர் கேட்க முல்லையோ சிறு புன்னகையுடனே அவனை ஏறிட்டவள்
“உங்களை தனியா அனுப்ப எனக்கு மனசு வரல மாமா சார்” என்றாள் அவன் மீது உள்ள தன் காதலை மறைத்தபடியே.
முல்லையின் வார்த்தையை கேட்டு கதிரும் முல்லையும் ஒருவரை ஒருவர் விழிகளால் தழுவிக்கொள்ள இந்த காட்சியினை பார்த்த மீனாவை விட கேசவனுக்கு கோபம் தலைக்கு ஏறிய நிலையில்
“டேய் கதிர் நீ இதுக்கெல்லாம் அனுபவிப்ப டா” என்று தன்னை மறந்து கேசவன் சத்தமாக கதிர்வேலனை கண்டிக்க.
“நானும் இந்த அழகியை அனுபவிக்க தான் டா தவமிருக்கிறேன்” என்று கதிரும் சபையினரை மறந்து முல்லை மீது உள்ள காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
இலை மறை காயாக கதிர் பேசும் வார்த்தைகளை அறிந்திடாத முல்லை, “மாமா சார் இருந்தாலும் நீங்க தனியா போறது எனக்கு பயமாயிருக்கு” என்றதும்
“சரி. இப்ப என்ன நான் தனியா போக கூடாது அவ்வளவுதானே” என்று அருகில் இருந்த கேசவனின் சட்டையை பிடித்து கதிர் தன் வசம் இழுக்கும் நேரத்தில் பாண்டியன் வீட்டு வாசலில் முருகனின் கார் வந்து நின்றது.
“என்ன மாமா வீட்டில போலீஸ் ஜீப் நிக்குது. ஏதாவது பிரச்சனையா” என்று கேட்டுக்கொண்டே பார்வதியுடன் முருகன் பாண்டியன் வீட்டிற்குள் வர தன் எதிரே நின்றிருந்த கேசவனை பார்த்ததும் முருகனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.
என்னதான் இருந்தாலும் கேசவன் பார்வதியின் தம்பி என்பதால் அவன் கை கால்களில் அடிபட்டதை பார்த்து பார்வதியின் மனம் சற்று இழகும் முன்னே , “என்ன அப்படி பாக்குறீங்க. நான் திரும்ப உயிரோட வரமாட்டேன்னு நினைச்சீங்களா” என்று கேசவன் தன் அக்கா பார்வதியை கடிந்து கொண்டான்
“டேய் டேய் அடங்குடா. நல்லவங்க தான் சீக்கிரம் சாவாங்க. உனக்கு என்ன கேடு. நீ நல்லா தானே இருக்க. “ என்று முருகன் தன் மச்சானை கடிந்து கொள்ள
“என்ன மாமா. நான் ஹாஸ்பிடல்ல இருக்கிற சமயமா பார்த்து முல்லைக்கு திருட்டுத்தனமா கதிர் கூட கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்களா” என்று கோபத்துடன் தன் அக்கா கணவனை கடிந்து கொண்டான் கேசவன்.
“டேய் அடங்கு டா. நான் எதுக்குடா திருட்டுத்தனமா கதிருக்கு என் மகளை கட்டிக் கொடுக்கணும். அவங்க ரெண்டு பேரும் முறை பசங்க. கதிருக்கு மட்டும் தான் என் பொண்ணு மேல எல்லா உரிமையும் இருக்கு. ஆமா. நீ என்ன போலீஸ் கூட இங்கே வந்து இருக்கிற. என்ன விஷயம், “ என்று கேட்டார் முருகன்
“வேற என்ன விஷயம். இதோ இந்த கதிர் லாரி ஏத்தி ஆக்சிடென்ட் பண்ணி என்னை சாகடிக்க பிளான் போட்டு என் முல்லையை அவன் கட்டிகிட்டான். அதனால இவன் மேல நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கேன்” என்று கேசவன் சொன்னதும் அங்குள்ள அனைவரின் காதுகளிலும் ஒழிக்கும்படி சத்தமாக சிரித்தார் முருகன்.
முருகனின் செயலில் கூடியிருக்கும் அனைவரும் குழம்பி இருக்க “அப்பா என்ன ஆச்சு ஏன் சிரிக்கிறீங்க. இவரு மாமா சார் மேல கம்ப்ளைன்ட் கொடுத்ததை கேட்டு நீங்க கோபப்படுவீங்கன்னு தானே பார்த்தேன். நீங்க ஏன் அப்பா சிரிக்கிறீங்க” என்று புரியாமல் கேட்டாள் முல்லை.
“சிரிக்காம என்னமா பண்ண சொல்ற. இந்த வீணா போன கேசவனை எல்லாம் அடிக்க என் மாப்பிள்ளை எதுக்கு . . . இவனுக்கு நான் ஒரு ஆள் போதாதா” என்று முருகன் கேட்டதும் கேசவனின் முகம் மாறியது.
“என்ன மாமா சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே” என்று கதிர்வேலனும் முருகனின் வார்த்தையில் உள்ள சூட்சமத்தை அறியாமல் கேட்க.
“ஒரு நிமிஷம் இருங்க மாப்ள. டேய் கேசவா ஒழுங்கு மரியாதையா மாப்பிள்ளை மேல கொடுத்த கம்ப்ளைன்டா வாபஸ் வாங்கு உனக்கு அரை மணி நேரம்தான் கெடு அத தாண்டிச்சுன்னா என் சொத்தில் இருந்து சல்லி காசு உனக்கு கிடைக்காது” என்று முருகன் எச்சரிக்க.
“என்ன, நான் எதுக்காக வாபஸ் வாங்கணும். இவன்தான் என்னை ஆள வச்சு சாகடிக்க பார்த்தான்” என்று கேசவன் சொல்ல
“டேய் மறுபடியும் சொல்றேன். உனக்கு அடிபட்டதுக்கும் கதிர் மாப்பிள்ளைக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. ஒழுங்கு மரியாதையா போய் கேசை வாபஸ் வாங்கு” என்றார் முருகன்
“முடியாது முடியாது என்னால் கேசை வாபஸ் வாங்கவே முடியாது” என்று கேசவன் சொல்ல. என்ன நினைத்தாரோ முருகன் அதித கோபம் கொண்டவர் ஓங்கி கேசவனின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்திருந்தார்.
அந்த இடத்தில் முருகனின் கோபத்தை எதிர்பார்க்காத கேசவனோ கன்னத்தில் கை வைத்த படி முருகனைப் பார்க்க. “என்னடா பாக்குற. என்னை சாகடிக்கிற நிலைமைக்கு எடுத்துட்டு போன உன் மேல என் பொண்ணு கேஸ் கொடுக்க கூடாதுன்னு மிரட்டி இருக்கிற, ஆனா ஒண்ணுமே செய்யாத என் மாப்பிள்ளை மேல நீ கேஸ் கொடுப்பியா” என்று முருகன் கேட்க. “ அதுவும் இதுவும் ஒண்ணா” என்று கேட்டான் கேசவன்
“ஒன்னு தாண்டா, ஆனா நீஎன்னை அன்னைக்கி தள்ளிவிட்டு நான் கீழே விழனா உன்னுடைய உண்மையான சுயரூபம் எனக்கு தெரிஞ்சிருக்காது. என் பொண்ணுக்கு உன்னை கட்டி வச்சு பெரிய பாவத்தை நான் பண்ணி இருப்பேன். இப்ப பாரு என் பொண்டாட்டி செஞ்ச புண்ணியம். என் பொண்ணுக்கும் அவ ஆசைப்பட்ட மாதிரியே வாழ்க்கை கிடைச்சிருக்கு” என்று முருகன் சொல்ல.
அவர் வார்த்தையைக் கேட்டு புரிந்தும் புரியாமலும் கதிர் முல்லையை பார்க்க, முல்லையோ திருட்டு விழி விழித்தவளின் பார்வை கதிரை உள்வாங்கி இருந்தது.
“மாமா நீங்க என்ன சொன்னாலும் என்னால கேசை வாபஸ் வாங்க முடியாது. “ என்று கேசவன் கத்தியதும்
“டேய் உன்னை லாரி ஏத்தி சாகடிக்க முயற்சி பண்ணது நான் தான் டா” என்று கர்ஜனையுடன் முருகன் சொல்ல. அங்குள்ள அனைவரும் அதிர்ச்சியுடன் முருகனை பார்த்தார்கள்.
“என்ன உங்க மாப்பிள்ளையை காப்பாத்தறதுக்காக பழியை நீங்க ஏத்துக்க போறீங்களா” என்று கேசவன் கேட்க. “நான் உண்மைய தான் சொல்றேன். உன்ன ஆள் வச்சி தூக்க சொன்னது நான்தான். உன்ன முழுசா முடிச்சு விட தான் பிளான் பண்ணேன். ஆனால் பார்வதியுடைய முகத்துக்காக போனா போதுன்னு உன் உடம்புல உயிர் மட்டும் இருக்கிற மாதிரி உன்னை தட்ட சொல்லிட்டேன்” என்று முருகன் சொன்னதும் கேசவனின் விழிகள் பிதுங்கியது
“என்னடா அப்படி பாக்குற, வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு குங்குமப்பொட்டு வச்சிக்கிட்டு வெள்ளை மீசை வைத்திருக்கிற முருகன தான உனக்கு தெரியும். நான் ஒரு காலத்துல லாரி சங்கத்தோட தலைவர்டா. நான் கண்ணசைச்சா போதும் உன்ன தட்டி தூக்குறதுக்கு இந்த நொடி கூட ஆள் தயாராக இருப்பாங்க” என்ற முருகனின் வார்த்தையில் கேசவனின் முகத்தில் பயம் தாண்டவம் ஆடியது,
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்குள் இருந்துகிட்டு என்னையே சாகடிக்கிற அளவுக்கு கொண்டு போனது மட்டும் இல்லாம. என் பொண்ணு வாழ்க்கையையும் கெடுக்கிறதுக்கு பிளான் பண்ணி இருப்ப. இந்த நிமிஷம் சொல்றேன். ஒழுங்கா வால சுருட்டி கிட்டு என் பொண்ணு வாழ்க்கையில் இருந்து தள்ளி இருந்தினா ஏதோ மச்சான் அப்படின்ற உரிமைக்காக உன் பேர்ல ஒரு பங்கு சொத்தை எழுதி வைக்க யோசிப்பேன்.
இல்ல அதெல்லாம் நான் பண்ண மாட்டேன். எனக்கு முழு சொத்தும் வேணும். நான் கதிர பழி வாங்கணும். முல்லைய அடையணும் அப்படின்னு ஏதாவது தப்புக்கணக்கு போட்ட. நீ இந்த முருகன சூரசம்ஹாரம் பண்ற கடவுளா தான் பார்க்க நேரிடும்” என்று முருகன் சொல்ல. இதுவரை தன் அப்பா கோபப்பட்டு பார்த்திருந்த முல்லைக்கு முருகனின் இந்த பரிமாணம் தன் மகளுக்காக எந்த எல்லைக்கும் முருகன் செல்வார் என்பதை உணர்த்திய நேரத்தில் சுற்றம் மறந்து முல்லை தன் தந்தையை ஓடிச்சென்று கட்டிக்கொண்டாள்.
இங்கு என்னதான் நடக்கிறது என்று வந்திருந்த காவலாளி குழம்பிய தருணம் “இங்க பாருங்க. இது எங்க குடும்ப விஷயம். கேசவன் கொடுத்த கேஸ அவனே வாபஸ் வாங்கிப்பான். இப்போ நீங்க ஸ்டேஷனுக்கு கிளம்புங்க” என்று காவலாளியிடம் பார்வதி சொன்னார்.
“சரி. மேற்கொண்டு என்ன பண்ணனுமோ நீங்க பார்த்து பண்ணிக்கோங்க” என்ற காவலாளி பாண்டியனைப் பார்த்து மரியாதையின் நிபத்தமாக வணக்கத்தை வைத்துவிட்டு பாண்டியனின் வீட்டில் இருந்து வெளியேறினார்.
கண்கள் கலங்கி தன் தந்தையை ஆரத்தழுவி கட்டி அழுது கொண்டிருந்த முல்லையின் தலையை வருடி கொடுத்த முருகன். “போதுமா. நீ அழுததெல்லாம் போதும். உன் விருப்பப்படி நீ பாண்டியன் விட்டுக்கு மருமகளா ஆகிட்ட. இனி நீயும் கதிர்வேலனும் 100 வருஷத்துக்கு சந்தோஷமா வாழ்ந்து. பிள்ளை குட்டிகளை பெற்று கொடுங்க.
அவங்கள ஆசை தீர நாங்க வளர்த்துக்கிட்டு எங்க மீதி காலத்தை கழிச்சிடுறோம்” என்று முருகன் சொல்ல
தன் தந்தையின் இதயத்தில் முகத்தை புதைத்தப்படி அழுதுக்கொண்டு இருக்கும் முல்லையின் ஓர விழிகள் கதிர்வேலனை தழுவ, கதிர்வேலனின் மீசை முடிக்குள் மறைந்திருக்கும் அதிரங்களின் நடுவே மெலிதாய் கீற்று புன்னகை மலர்ந்தது.
முருகனின் வாழ்த்தை கேட்டு கோவமடைந்த கேசவன், “அப்போ குடும்பமா சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்களா” என்று மீண்டும் முருகனிடம் வம்புக்கு வந்தான்.
“டேய். இன்னும் நீ போகலையா. போ போ, போய் கேச வாபஸ் வாங்குற வழிய பாரு, இல்லன்னு வையென். உனக்கு நான் வேற விதமா பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டியது வரும்” என்று முருகன் சொல்ல. கேசவன் முழு வன்மத்துடன் பாண்டியனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் முறைத்தபடி அங்கிருந்து இருந்து வெளியேறினான்.