• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Joined
Sep 3, 2024
Messages
356
முல்லை - 34.2

கதிரும் நாகராஜனும் சிரித்து பேசியபடி அங்கேயே உறங்கி விட,முல்லையும் ரோஜாவின் அறையில் பேசிக்கொண்டு இருந்தவள்,தன்னை மீறி அவள் அறையிலேயே உறங்க. இன்றைய தினம் இரவு கதிர் முல்லை இருவரும் தனித்தனியே படுத்திருப்பதை அறிந்து இன்னும் கதிர் மனதில் தன்னைத் தவிர வேறொரு பெண் இல்லை என்ற நிம்மதியில் மீனா. ஜீவாவின் அறையில் கண்ணுறங்கினாள்.

மறுநாள் காலை அழகாகவே விடிந்தது. நேற்றைய தினம் இரவு நேரம் கதிர்வேலன் தன் அறைக்கு உறங்க வராததை முல்லையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்தவள் இயல்பாகவே அனைவரிடமும் பேசி பழகினாள்.
கதிர்வேலனுக்கும் முல்லையின் அருகாமை பிடித்திருந்தாலும். அவளிடம் தானாக முன்வந்து உரிமை எடுத்துக் கொள்வதற்கு அவனுக்கு சிறு தயக்கம் இருக்கத்தான் செய்தது.

இவர்கள் இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை அருந்திடாத மீனாவின் மனதில் இன்றும் கதிர்வேலனின் மீது தவறான அபிப்ராயம் இல்லாமல் இருந்தாலும். அவன் மீது ஒரு சின்ன ஏக்கம், இல்லை இல்லை. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கத்தான் செய்தது.

இப்படியாக அன்றைய நாள் ஆரம்பிக்க. இந்த நொடி வரை ஜீவா எங்கே சென்றான் என்ற கேள்விக்கு உண்டான பதில் கிடைக்காமல் இருக்க. காலை நேர உணவை சாப்பிடுவதற்காக இவர்கள் அனைவரும் ஒன்றாக டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த சமயம்.

“வீட்ல யார் இருக்கிங்க” என்ற குரலைக் கேட்டு அனைவரும் வாசலுக்கு செல்ல, பாண்டியனின் வீட்டு வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது.

காவல்துறையினர் எதற்காக வந்துள்ளார்கள் என்று இவர்கள் யூகிக்கும் முன்னே, “இங்க கதிர்வேலன் யாருங்க. அவர் பேர்ல கொலை முயற்சி பண்ணதாக புகார் கொடுத்து இருக்காங்க” என்று காவலாளி சொன்னதும்.

“என்ன சொல்றிங்க. யார் கம்பளைண்ட் பண்ணது??” என்று முல்லை கேட்க.

“நான் தான் கம்பளைண்ட் கொடுத்தேன்” என்ற குரலில் அனைவரும் வாசலை பார்க்க. கை கால் கட்டுடன் வாசலில் வந்து நின்றான் கேசவன்.
கேசவனை பார்த்ததும் அங்குள்ள அனைவரின் முகத்திலும் கோவ ரேகை படர்ந்தது.

“டேய். நீ இன்னும் இருக்கியா.” என்ற கேள்வியோடு கதிர் கேசவனை நெருங்கி வர.

“சார் சார். இவன் தான் என்னை ஆள் வச்சி லாரி ஏத்தி சாகடிக்க பார்த்தான்” என்று கதிர் மீது இல்லாத பழியை சுமத்ததினான் கேசவன்.

“டேய் டேய். ஏன் டா இப்படி பொய் சொல்லி அழிஞ்சி போற. ஏற்கனவே நீ முருகனை பண்ணது எல்லாம் போதாதா” என்ற கேள்வியோடு பாண்டியனும் கேசவனை நெருங்க.

“ஓ. இதெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தான் உங்க பையன் என்னை லாரி ஏற்றி கொல்ல பார்த்தானா?” என்று காவலாளி அருகே நின்று இருந்த கேசவன் கேட்டான்.

“டேய் டேய் அடங்கு டா. உன்னை எல்லாம் நான் போடணும்னு நினைச்சு இருந்தா லாரி எல்லாம் வச்சி தூக்க மாட்டேன் டா பக்கி. நானே நேரா உன் கண்ணு முன்னாடி வந்து நின்னு இதோ இப்படி ஒரே மிதி மிதிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்ற கதிர் சொன்னதோடு நில்லாமல் வந்த கோவத்திற்கு கேசவனை ஒரு அடி அடிக்க கையையும் ஓங்கி இருந்தான்.
கதிரின் செய்கையில் முல்லை பயந்து போனவள்.”மாமா சார் மாமா சார். அவரை அடிக்காதிங்க” என்ற முல்லை. கதிரின் அருகே ஓடி சென்று அவன் கரங்களை இருக்கமாக பிடித்துக்கொண்டாள்.

“ஏய். நான் வீட்ல இல்லாத சமயம். இந்த ரவுடி பையலை கட்டிக்கிட்டியா” என்ற கேசவன், முல்லையின் அருகே சென்று அவள் கையை பிடிக்க நினைத்தவனின் கன்னத்தில் கதிர் ஓங்கி அறைந்ததும்.

“தம்பி தம்பி என்ன பா நீ. போலீஸ் இருக்கும் போதே இப்படியா சண்டி தனம் பண்ணுவ. முதல்ல நீ ஸ்டேஷன்க்கு வா பா” என்ற காவலரை கடுப்போடு முறைத்தான் கதிர்.

“என்ன பா முறைக்கிற. வா வா போகலாம். புதுசா வந்த போலீஸ்க்காரர் உன்னை நேரா ஸ்டேஷன்க்கு அழைச்சிட்டு வர சொன்னாரு”என்ற காவலாளி ஜீப்பை நோக்கி நடக்க.

”சார் ஒரு நிமிஷம்” என்ற ரோஜாவின் குரலில் போலீஸ் அதிகாரி அதே இடத்தில் நின்று இருந்தார்.

“சார். யாரு கம்பளைண்ட் கொடுத்தாலும் விசாரிக்காமல் அவங்கள உடனே போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்விங்களா” என்று ரோஜா கேட்க.

”ஆமா மா. கம்ப்ளைன்ட் கொடுத்தா போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தான் ஆகணும்” என்றார் போலீஸ் அதிகாரி.

“சரி சார். போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்ற வரைக்கும் சரிதான். ஆனால் இந்த கேசவன் கொடுத்த கம்ப்ளைன்ட் உண்மையா பொய்யான்னு தீர விசாரிக்காமல் நீங்க எப்படி இவரை குற்றவாளியா நினைச்சு ஜீப்ல ஏற சொல்லுவீங்க” என்று ரோஜா கேட்க காவலாளியிடம் அதற்கு பதில் இல்லாமல் போனது.

“ஏய், இதுல நான் பொய் சொல்ல என்ன இருக்கு. என்னை அடிச்சு போட்டுட்டு தான் என் முறை பொண்ணு முல்லை கழுத்துல உன் அண்ணன் தாலி கட்டி இருக்கான். இன்னும் கேட்டா என்னை இவன் கொலை பண்ண தான் முயற்சி செஞ்சு இருப்பான்” என்று மூச்சு விடாமல் கேசவன் கதிரை குற்றம் சாட்ட நீங்க சொல்றதுக்கெல்லாம் என்ன சாட்சி இருக்கு என்று கேட்டாள் முல்லை.

கதிர்வேலனுக்காக பரிந்து பேசும் முல்லையை பார்த்து கேசவனுக்கு அதீதக் கோபம் வந்த நிலையில். “என்னடி. இவன் தாலி கட்டிட்டா உனக்கு இவன் புருஷன் ஆகிடுவானா? என்ன இவனுக்காக பரிந்து பேசிக்கிட்டு வரியா? இவன் உனக்கு அவ்ளோ முக்கியமா” என்று மீண்டும் கேசவன் கதிரை ஒருமையில் பேசினான்.

கேசவனின் மரியாதை இல்லாத வார்த்தையை கண்டு முல்லைக்கு கோவம் எழுந்த நிலையில், “இங்க பாருங்க. முதல்ல கேக்குறதுக்கு மரியாதையா பதில் சொல்லுங்க. மாமா சார் தான் உங்களை லாரில அடிச்சு தூக்கினாரா?”என்று முல்லை கேட்க.

“ஆமா. கண்டிப்பா இவன்தான் என்னை சாகடிக்க பார்த்தான்” என்றான் கேசவன்.

“ஹலோ ஹலோ, சும்மா வாய் புளிக்குது, மாங்கா புளிக்குது எல்லாம் பேசக்கூடாது. உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆனதற்கு வாத்தி தான் காரணமுன்னு நீங்க சாட்சி ஏதாவது ஏற்பாடு பண்ணி வச்சிருக்கீங்களா” என்று ரோஜா கேட்க.

“எனக்கு எதுக்கு சாட்சி என் மனசாட்சி தான் என் சாட்சி” என்று பச்சையாக பொய் உரைத்தான் கேசவன்.

“ஐயோ கதிர். இங்க என்னப்பா நடக்குது? ஏன் நம்ம வீட்டுக்கு போலீஸ் எல்லாம் வரணும்?. நீ இந்த கேசவனை அடிக்க லாரி டிரைவரை ஏற்பாடு பண்ணியா“ என்று பாண்டியன் கேட்டதும்.

“அப்பா. நான் மறுபடியும் சொல்றேன்,இந்த கேசவனை நான் போட்டு தள்ளனும்னு முடிவு பண்ணா ஆள் வச்சி எல்லாம் இந்த வேலையை பண்ண மாட்டேன். நானே தட்டி தூக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்” என்றான் கதிர்.

“தூக்குவடா தூக்குவ. இன்னும் கொஞ்ச நேரத்துல நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போக போற. அங்க உன்ன தூக்கிப்போட்டு மிதிக்க ஒரு ஆளு காத்துகிட்டு இருக்காரு” என்று கேசவன் சொன்னதும்.

“அய்யய்யோ. எனக்கு ரொம்ப பயமா இருக்கு,யாராவது என்னை காப்பாற்றுங்கள்” என்று மார்பின் குறுக்கே இரண்டு கரங்களையும் கட்டிக்கொண்டு சிறுபிள்ளைத்தனமாக கதிர்வேலன் பயந்ததைப் போல நடித்துக் காட்டியதும். முல்லை மீனா ரோஜா ஏன் பாண்டியனே ஒரு நொடி சிரித்து விட்டார்.

“பார்த்திங்களா சார் இவனுக்கு எவ்வளவு கொழுப்புனு” என்ற கேசவனை மேலும் கதிர் முறைக்க.

“பாண்டியன் ஐயா. நீங்க பஞ்சாயத்து தலைவர் என்ற ஒரே காரணத்தால தான் உங்க மகன்கிட்ட நான் பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன். நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்க இன்ஸ்பெக்டர் கண்டிப்பா கதிர்வேலனை கையோட அரெஸ்ட் பண்ணி அழைச்சிட்டு வர சொல்லி இருக்காரு” என்று காவலாளி சொல்ல,

“ஹாங். நானே அந்த போலீஸ்காரனை நேருக்கு நேரா சந்திக்க காத்துக்கிட்டு தான் இருந்தேன்.” என்றார் கதிர்வேலன்.

“என்னப்பா சொல்ற. புதுசா வந்த போலீஸ்காரரா.?” என்று பாண்டியன் புரியாமல் கேட்க.

“ஆமா அப்பா. அடி வாங்குன சொறி நாய் ஒன்னு தெருவோரம் போய் கத்தும் பாருங்க,அந்த மாதிரி இப்போ அந்த போலீஸ்காரன் நம்ம ஊருக்கே டிரான்ஸ்பர் ஆகி வந்து இருக்கான்,அதான் மறுபடியும் நம்மகிட்ட பிரச்சனை பண்ணனும்னு முடிவு எடுத்து நம்பல சீண்டி பார்க்கிறான்” என்று சரியாக கணித்திருந்தார் கதிர்வேலன்.

“என்ன மாமா சார் சொல்றீங்க. அப்போ மறுபடியும் அந்த சுந்தரேசனால நமக்கு பிரச்சனை வருமா” என்று முல்லை கேட்க.

“எவனால எந்த பிரச்சனை வந்தாலும் இனி சும்மா பிரிச்சு மேய்ஞ்சிட வேண்டியதுதான்,நமக்கும் ஒரு என்டர்டைன்மென்ட் மாதிரி ஆகும்தானே” என்றான் கதிர்வேலன்.

“வாத்தி. இந்த மாதிரி சல்லி பசங்ககிட்ட எல்லாம் சரிக்கு சமமா நின்னு நம்ப பேச்சு கொடுக்கக் கூடாது” என்று ரோஜா சொல்ல “நீங்களே சொல்லிட்டீங்க. அப்போ கூடிய சீக்கிரம் அந்த ஆளுக்கு ஒரு முடிவை கட்டலாம்.” என்றான் கதிர்வேலன்.

“என்ன கதிர் இதெல்லாம். அந்த போலீஸ்காரனுக்கு நம்மகிட்ட இருந்து என்னதான் வேணுமா” என்று பாண்டியன் கேட்க


“வேற என்ன. செம்மையா அடி கேட்கிறான் போல, அவனே ஒரு பொறாமை புடிச்ச புடலங்கா. இப்போ அவனுக்கு துணையா இந்த கை உடைஞ்ச கத்திரிக்காவும் சேர்ந்து கூட்டுக் களவாணித்தனம் பண்றாங்க” என்ற கதிரின் பார்வை கேசவன் மீது பதிந்தது.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top