• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
71
பாலைவனத்து முல்லை
முல்லை – 34.1

கதிரின் இத்தகைய செயலில் முல்லையின் விழிகள் அசைய மறுக்க.”மாமா என்ன பண்றீங்க” என்று கோபத்துடன் கேட்டாள் மீனா.
“என்ன கேள்வி இது. நைட் சாப்பாடு சாப்பிடுறோம்.ஏன் உனக்கு கண்ணு தெரியலையா” என்று கதிர் கேட்க.
“அது தெரியுது. ஆனா நீங்க ஏன் முல்லைக்கு ஊட்டி விடுறிங்க” என்ற மீனாவின் கேள்வியில் கதிருக்கு கோவம் வந்த நிலையில்,
“இப்போ என்ன பிரச்சனை உனக்கு” என்று பல்லை கடித்தான் கதிர்.
“மாமா சார்,ஏன் மீனாக்கிட்ட கோவமா பேசுறீங்க. மீனா. உனக்கு தோசை வேணுமா” என்று முல்லை கேட்க.
இவர்கள் இருவரும் மட்டும் தனியே சமையலறையில் நிற்பதை விரும்பாத மீனா. “ஆமா எனக்கு தோசை வேணும்” என்று இவர்கள் நடுவே வந்து நின்றுகொண்டாள்.
மீனாவின் செயலை கதிர் பெரிதாக எடுத்துக்கொள்ளதவன்.”இந்தாடி இன்னும் ஒரு வாய் ஊட்டிக்கோ,” என்றவன். மீண்டும் முல்லையின் வாயில் தோசையை திணிக்க. முல்லைக்கோ என்ன சொல்வதென்று புரியாமல் பாதி தொண்டையில் நின்று இருக்கும் தோசையை வேக வேகமாக விழுங்கிக்கொண்டு இருந்தாள்.
கதிர் செய்யும் வேலைகளை பார்த்து மீனா சொல்ல முடியாத கோபத்தில் இருந்தவள்
“முல்ல. எனக்கு நீ தோசை ஊத்துறியா இல்ல நானே ஊத்திக்கட்டுமா” என்று கேட்டதும்.
“சரி.அப்போ நீயே ஊத்திக்கோ. ஏய் ரவா லட்டு வா நம்ம ரூமுக்கு போகலாம்” என்றவன், முல்லையை விடாப்பிடியாக சமையலறையில் இருந்து இழுத்துக் கொண்டு தன் அறைக்கு சென்றான்.
கதிரின் செயலில் மேலும் மேலும் கோபமடைந்த மீனாவிற்க்கு கதிர் இனி தன் வாழ்வில் இல்லை என்ற ஏக்கத்தை விடவே, முல்லையை கதிர் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று எண்ணம் மீனாவின் மனதில் சிறு விதையாக விழத் தொடங்கியது.
“யார் என்ன நினைத்தால் எனக்கு என்ன.என் மனதில் பட்டதை தான் நான் செய்வேன்”என்று நினைத்திருந்த கதிரோ.முல்லையை அழைத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தவன் “ஆமா. நீ ஒழுங்கா சாப்பிட்டியா. உனக்கு தோசை பத்துச்சா” என்று கேட்க.அவனை ஏகத்துக்கும் முறைத்தாள் முல்லை.
“என்னடி முறைக்கிற தோசை பத்தலையா! நான் வேணும்னா பால் காய்ச்சி எடுத்துட்டு வரட்டா?” என்று கதிர் கேட்க
“ஒன்னும் தேவை இல்ல, ஏன் மாமா சார்
இப்படி பண்றீங்க.” என்று முல்லை கோவம் கொள்ள.
“என்ன டி?நான் என்ன பண்ணேன்” என்றான் கதிர்,
“மீனா தோசை தானே ஊத்தி குடுக்க சொன்னாள், ஏன் நான் ஊத்தி கொடுக்குறதுக்குள்ள என்ன இங்க அழைச்சிட்டு வந்தீங்க” என்று முல்லை கேட்க.
“ம்.உன் கூட டூயட் பாடறதுக்கு உன்னை அழைச்சிட்டு வந்தேன்” என்றான் கதிர்.
அவன் பதிலில் கடுப்பான முல்லை.”க்கும். நீங்க அப்படியே பாடிட்டாலும்” என்றதும்,
“என்னடி லந்தா” என்று கோவமாக கேட்டான்.
“பின்ன என்ன. அவ பாவம் தானே” என முல்லை மீனாவுக்கு பரிந்து பேச.
“யாரு பாவம்,ஏன் அவங்களுக்கு தேவையான தோசையை அவங்க ஊதிக்க மாட்டாங்களா” என்று கேட்டான் கதிர்.
“அப்படி இல்ல மாமா சார்.கூட்டு குடும்பத்தில் இந்த மாதிரி போட்டா போட்டி எல்லாம் போடக்கூடாது” என்று முல்லை சொல்ல.அது எனக்கும் தெரியும்.
ஆனா நம்ப ரெண்டு பேரும் அங்க இருக்கும்போது,நம்மள பிரிக்கணும்னே அவ நம்மகிட்ட வந்து பேசுற மாதிரி உனக்கு தோணலையா” என்று கேட்டான் கதிர்.
“என்ன,மீனா மேல திடீர்னு கோவமா பேசுறீங்க.” என்று முல்லை கேட்க.”அது என்ன திடீர்னு,தப்பு யாரு பண்ணாலும் எனக்கு கோவம் வரும் தான்.” என்று கதிர் சொல்ல,”ஆமாமா நீங்க தப்பே பண்ண மாட்டீங்க பாருங்க” என்று உதட்டை சுழித்தாள் முல்லை.
“ஏன் நான் என்ன தப்பு பண்ணேன்.” என்று கதிர் கேட்க.”சரி அந்த பேச்ச எல்லாம் விடுங்க.அப்போ மீனா மேல இருக்கிற கோவத்தால தான் என்ன நீங்க ரூமுக்கு அழைச்சிட்டு வந்தீங்களா” என்று முல்லை கேட்க.
“பின்ன வேற எதுக்கு அழைச்சிட்டு வருவாங்க” என்று கேட்டான்.
“ஓ.மீனா இவுகள கல்யாணம் பண்ணிக்கலன்னு இவுகளுக்கு மீனா மேல இவ்ளோ கோபம் வருதா” என்று முல்லை தனக்குள் நினைத்து இருக்க.
“சரி சரி உனக்கு மறுபடியும் பசிச்சா நீ போய் பால் காய்ச்சி குடி.
இப்போ நான் போய் நாகாவ பாத்துட்டு வரேன்” என்றான் கதிர்.
“என்னது. நாகா அண்ணனை பார்க்க போறீங்களா. பொய் சொல்லாதீங்க.மறுபடியும் சரக்கு கடைக்குதானே போகப் போறீங்க” என்று முல்லை கேட்க,
“அடியே. மணி பத்தர. அதுவும் இல்லாம சாப்பிட்டதுக்கு பிறகு இந்த நாட்டை ஆளுற அப்பனே வந்து கொடுத்தாலும் நான் சரக்கடிக்க மாட்டேன் புரியுதா. இப்போ நான் போயி நாகாவ பாத்துட்டு வரேன். நீ படுத்து தூங்கு” என்றான் கதிர்,
“இல்ல இல்ல நானும் வருவேன். நீங்க தனியா போக கூடாது.” என்று முல்லை சொல்ல.” ஏய்.நாங்க ரெண்டு பேரும் ஆம்பளைங்க டி, எங்களுக்குள்ள எதையாவது பேசுவோம். நீ எங்க நடுவுல வந்து என்ன பண்ண போற” என்று கதிர் கேட்க.
“தனியா இந்த ரூம்ல இருந்துகிட்டு மட்டும் நான் என்ன பண்றது. எனக்கு தனியா இருக்க போரடிக்குது” என்றாள் முல்லை.
“ம்.அப்ப நீ போயி அம்மாகிட்ட,இல்ல இல்ல!! அம்மா தூங்குவாங்க,அவங்கள நீ டிஸ்டர்ப் பண்ணாத,”என்று கதிர் சொல்ல,
“ஓ. உங்க அம்மா தூக்கத்தை நினைச்சு உங்களுக்கு கவலை இருக்கு. ஆனா என் மேல உங்களுக்கு அக்கறை இல்லையா” என்று முல்லை கேட்க.
“ஏண்டி படுத்துற. இப்ப நான் என்னதான் பண்ணனும்” என்று கதிர் கேட்க.
“நீங்க எங்கயும் வெளியே போகக்கூடாது. அப்படி போனீங்கன்னா என்னையும் அழைச்சிட்டு போங்க” என்றாள் முல்லை கண்டிப்புடன்
“இங்க இருக்குற தோட்டத்துக்கு போறதுக்கு கூட எனக்கு உரிமை இல்லையா” என்று கதிர் கோபத்துடன் கேட்க.
“உரிமை ஊறுகாய் பத்தி எல்லாம் இப்போ நான் பேசல.நான் உங்கள நைட்ள்ள எங்கேயும் தனியா விடமாட்டேன்” என்றாள் முல்லை.
“ நீ ரொம்ப பண்றடி,”என்று கதிர் முணங்க. “ஆமாமா.அப்படித்தான் பண்ணுவேன்” என்றாள் முல்லை சிலுத்துக் கொண்டே.
“ப்ச், இப்ப என்ன. நாகா வீட்டுக்கு நீயும் வர,அவ்வளவுதானே. சரி வா போகலாம்” என்ற கதிர்,முல்லையை அழைத்துக் கொண்டு நாகராஜன் தங்கியிருக்கும் தென்னந்தோப்பு வீட்டிற்கு செல்வதற்காக தன் அறையில் இருந்து வெளியே வந்தவனின் எதிரே ரோஜா கையில் தண்ணீர் பாட்டிலுடன் நின்று இருந்தாள்.
“அம்மா. நீங்க இன்னும் தூங்கலையா. நல்லதா போச்சு. நீங்க ரவா லட்டுக்கூட பேசிகிட்டு இருங்க. நான் நாகாவை பார்த்து பேசிட்டு வரேன்” என்ற கதிர், யார் பதிலுக்கும் காத்து இருக்கலாம் வேகமாக வீட்டில் இருந்து வெளியேறியவனின் செயலில் முல்லையின் முகம் வாடிபோக. இதே தருணம் ஜீவாவின் அறையில் இருந்து வெளியே வந்த மீனாவின் இதழ்களில் ஏளன புன்னகை பூத்தது.
***********************************
இதே தருணம்.தன் வீட்டிலிருந்து நேரே தன் நண்பனின் வீட்டிற்கு சென்ற கதிரை
“என்ன நண்பா. புது பொண்டாட்டி வந்த ஜோறுல என்னையெல்லாம் பார்க்க வரமாட்டேன்னு தானே நினைச்சேன்! ஆனா நீ என்ன இப்படி வந்து நிக்கிற” என்று தன் நண்பனை சீண்டிப் பார்த்தான் நாகராஜன்.
தன் நண்பனின் கேள்வியில் கதிரை அறியாமல் அவன் இதழ்களில் புன்னகை மலர.”அய்யய்யோ!!! என்னடா சிரிக்கிற” என்று மீண்டும் கிண்டலாக கேட்டான் நாகராஜன்.
“பின்ன முறைக்கவா” என்று கதிர் கேட்க “இந்த சிரிப்புக்கு என்ன காரணம்” என கேட்டான் அவன் நண்பன்
“என் சிரிப்புக்கு காரணத்தை தேடுறது விட்டுடு,இப்போ என் சந்தேகத்துக்கு பதிலை சொல்லு” என்று கதிர் கேட்க
“அப்படி என்ன நண்பா உனக்கு சந்தேகம்” என்று கேட்டான் நாகராஜன்.
“இந்த ரவா லட்டுக்கு என்னை பிடிக்காமதானே இந்த கல்யாணம் நடந்துச்சு!!! ஆனா அவள் நடவடிக்கைல அவளுக்கு என் மேல நிறைய அக்கறை இருக்கிற மாதிரி தோணுது.சரி!! நம்ம மேல அக்கறையா இருக்கான்னு நம்ம ஏதாவது உரிமை எடுத்துக்கிட்டா நம்மள தப்பா நினைப்பாளான்ற பயமும் இருக்கு. இதைப் எப்படிதாண்டா நான் ஹேண்டில் பண்றது” என்று கதிர் கேட்டதும்,நாகராஜன் சத்தமாக சிரித்து விட்டான்
தன் நண்பனின் சிரிப்பில் கோபமடைந்த கதிரோ,”டேய். சந்தேகம் கேட்டா தீர்த்து வைக்கணும்!! இப்படி பைத்தியக்காரன் மாதிரி சிரிக்க கூடாது” என்று சொல்ல
“சிரிக்காம வேற என்ன பண்ண சொல்ற நண்பா. இங்க பாரு நண்பா.இதெல்லாம் தாலியோட மகிமை நண்பா” என்று நாகராஜன் சொல்ல.
“அப்போ முல்லை என்னை ஏத்துப்பாளா.” என்று கதிர் கேட்டான்.
“நீ எத மனசுல வச்சுக்கிட்டு இப்படி கேக்குறேன்னு எனக்கு புரியுது நண்பா.ஆனா எனக்கு ஆரம்பத்துல இருந்து முல்லை உன் அண்ணனை விரும்புற மாதிரி ஒரு சின்ன எண்ணம் கூட வந்ததே இல்ல. அது ஏன்னு எனக்கும் தெரியல,சரி அந்த கதையை விடு,ஆனா இப்போ முல்லை உன்னோட பொண்டாட்டி.நீ தேவையில்லாம எதையும் யோசிச்சு உங்க சந்தோசத்தை தள்ளி போடாம.முல்லை கூட மனம் விட்டு பேசி. அவங்க கூட வாழ்க்கையை ஆரம்பி” என்றான் நாகராஜன்
தன் நண்பனின் வார்த்தையைக்கேட்டு சிரித்த கதிரோ,”எனக்கும் அந்த ஆசை எல்லாம் இருக்குதாண்டா.ஆனா அண்ணனுக்கு எங்க கல்யாணம் முடிஞ்ச கதையே தெரியாது,தெரிஞ்சா அண்ணன் என்ன நினைக்குமுன்னு ஒரு சின்ன கவலையும் இருக்கு” என்று கதிர் சொல்ல.
“நீ என்ன லூசா.ஜீவா அண்ணனுக்கு முதல்ல கல்யாணம் நடந்ததாலதான நீ ஆசைப்பட்ட முல்லை உனக்கு கிடைச்சாங்க. இங்க பாரு நண்பா. நீயும் முல்லையும் சேரனும் என்றது தான் விதி. அதான் உன் ஆசைப்படியே உனக்கு உன் காதலியே மனைவியாக அமைஞ்சுட்டாங்க. நீ சும்மா அண்ணனுக்காக யோசிக்கிறேன் ஆயாவுக்காக யோசிக்கிறேன்னு இல்லாம, போ போய் முல்லைக்கூட உன் வாழ்க்கையை ஆரம்பி நண்பா” என்றான் நாகராஜன்.
“ஆமாமா, உனக்கு என்ன!! ஆரம்பி ஆரம்பின்னு சொல்ற.நானா அவகிட்ட ஏதாவது உரிமை எடுத்துக்கிட்டா என்னை அவ தப்பா நினைச்சிட மாட்டாளா. அதான், அவ மனசார என்ன ஏத்துக்கிட்ட பிறகு எங்க வாழ்க்கையை ஆரம்பிக்கணும்ன்னு காத்து இருக்கேன்” என்று கதிர் சொல்ல
“டேய். அவங்க மனசுல நீ இருக்கணும்னா நீ அவங்க மனசுல பதியுற மாதிரி ஏதாவது பண்ணி இடம் பிடிக்கனும் டா” என்று நாகராஜன் சொல்ல.
“என்னடா நண்பா சொல்ற. ஆனா எனக்கு தான் அந்த ரொமான்ஸ் எல்லாம் வரவே வராதே” என்றான் கதிர்.
தன் நண்பனை மார்க்கமாக பார்த்த நாகராஜனோ,”அது என்னமோ உண்மைதான்,நீ எப்ப பாரு மூஞ்ச ஊறுகாய் தின்ன உடும்பு மாறியே வச்சிருப்ப. உனக்கு இதெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான்.இருந்தாலும் ட்ரை பண்ணு நண்பா,நீ உலகநாயகன் படமா பாரு.பாத்துட்டு உன்னுடைய பெர்ஃபார்மென்ஸ்ச கொஞ்சம் மெருகேத்து. கூடிய சீக்கிரம் நீங்க ரெண்டு பேரா இருக்குறவங்க மூணு பேரா மாறுங்க” என்ற நாகராஜனை பார்த்து கதிர் வெட்கப்பட,
“ஐயையோ!!! நீ வெக்கப்படுறத பார்த்தா ரெண்டு பேர் நாலு பேரா மாறிடுவீங்க போல” என்று தன் நண்பனுடன் கிண்டலாக பேசிக்கொண்டு இருந்தான் நாகராஜன்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top