• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
70
பாலைவனத்து முல்லை
முல்லை - 33.2

முல்லையும் ரோஜாவும் இப்படியாக பேசிக்கொண்டிருக்க,”ஏன் முல்ல நீ இப்படி பண்ற.அவரு பாவம். எனக்கும் கதிர் மாமாவுக்கும் தானே கல்யாணம் நடக்கிறதா இருந்துச்சு,இப்போ திடீர்னு அவரு உன் கழுத்துல தாலி கட்டினதால கொஞ்சமா கவலையா இருப்பாரு. அதனாலதான் சரக்கு அடிக்க போறாரு. அதுக்கு ஏன் நீ கதிர் மாமாவை கஷ்டப்படுத்துற.” என்று மீனா கோவமாக முல்லையிடம் சண்டைக்கு வர,
“ஐயோ, இந்த பெரிய அண்ணி வேற நடுவுல காமெடி பண்ணுது” என்றபடி மீனாவை பார்த்து முறைத்தாள் ரோஜா.
மீனாவின் வார்த்தையில் முல்லையின் முகமும் மாறி போக.”அண்ணி. எந்த நேரத்தில் என்ன பேசுறீங்க. இனி நீங்க வாத்தியை பற்றி கவலை படாதீங்க, போங்க போய் சாப்பிடுங்க” என்று ரோஜா சொன்னதும். மீனா கண்கள் சட்டென்று கலங்கியபடி.
“நீ என்ன தான் சொன்னாலும் கதிர் மாமா மனசுல இருந்து என்னை யாராலயும் அழிக்கவே முடியாது.என் மேல அவருக்கு அளவு கடந்த அன்பு இருக்குறதால தான் அவரோட நெஞ்சில என் பேர பச்சை குத்தி வச்சிருக்காரு” என்ற மீனா.முல்லையை முறைத்து பார்த்துக்கொண்டே அவள் அறைக்குள் புகுந்ததும், ரோஜாவிற்கு இவர்களை எப்படி சமாளிப்பது என்ற குழப்பம்தான் அதிகரித்தது.
மீனாவின் வார்த்தையில் முல்லை சோகமாக நின்று இருக்க,
“அண்ணி,நீங்க இதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க.நீங்க போய் வாத்தியை சாப்பிட அழைச்சிட்டு வாங்க”என்று ரோஜா சொன்னதும்,முல்லையும் சம்மதமாக இவர்கள் அறைக்குள் நுழைந்த தருணம்.தரையில் பாய் விரித்து இடுப்பில் வேஷ்டியும், மேலுக்கு உள்பணியுடன் படுத்திருந்த கதிர்வேலனை முறைத்தபடியே முல்லை உள்ளே நுழைதவள்,சிறு கடுப்புடன் கட்டிலில் அமர்ந்தாள்.
முல்லையை கண்டுகொள்ளாமல் வலது கையை தன் தலைக்கு கீழ் கொடுத்து. இடது கையைக்கொண்டு தன் கண்களை மூடியப்படி கதிர் படுத்து இருக்க.
அவன் வலதுபக்க மார்பை குறுகுறுவென முறைத்து பார்த்த முல்லையின் கண்களுக்கு இடது பக்கத்தில் இருக்கும் K என்ற எழுத்து மட்டும் தெண்டபட்டதும். மீதம் இருக்கும் M என்ற எழுத்தையும் பார்க்கும் ஆர்வத்தில் கீழே படுத்து இருக்கும் கதிரின் அருகே பூனை போல மெதுவாக சென்றாள் முல்லை.
கதிர் அவள் அருகாமையை உணராமல் படுத்து இருந்தவனின் மார்பு பகுதியில் பதிந்து இருந்த KM என்ற எழுத்தை பார்க்க பார்க்க முல்லையின் காதில் மீனா சொன்ன வார்த்தை மட்டுமே ஒலித்திக்கொண்டு இருக்க.
என்ன நினைத்தாளோ பெண்ணவள். அவளுக்கு எழுந்த ஆத்திரத்தில் தன் வலது கையை மடித்து கதிரின் இதயபகுதியை பார்த்து ஓங்கி ஒரு குத்து வைத்தாள்.
சிலம்பம் வாத்தியாரின் இதயத்தில் இந்த உலகிலேயே மிக அழகான மலராக அவன் நினைக்கும் முல்லை மலரின் ஒரே ஒரு இதழ் அவன் மேல் விழுந்ததை போல உணர்ந்து கண் விழித்தவன் அருகே அமர்ந்து இருந்த தன் மனைவியை பார்த்து ஏதும் புரியாதவனாக,”ஏய்,இப்போ நீ என்னை அடிச்சியா!?” என்ற கதிரை பார்த்து திருட்டு விழி விழித்தாள் முல்லை.
தன்னவளின் முழியே அவளின் கள்ள தனத்தை அவனுக்கு கட்டிக்கொடுக்க.”சொல்லு டி அடிச்சியா” என்ற கதிரை பார்த்து.
“நா. நான் அடிக்கலையே மாமா சார் “ என்று பதற்றதுடன் அவனிடமிருந்து எழ முயன்றாள் முல்லை.
அவளின் பதட்டத்தை கண்டு. முல்லையின் கரத்தினை பிடித்து தன் வசம் கதிர் இழுத்த வேகத்தில் முல்லை ஒரே அடியாக கதிர்வேலனின் இதயபகுதியில் விழுந்தவளின் மென் கனிகள் இரண்டும் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டது.
கதிரின் இத்தகைய செயலில் திடுக்கிட்ட முல்லை சுதாரிக்கும் முன்னே ஆண் அவனின் கரங்கள் அவள் இடையை இறுக்கமாக கட்டிக்கொள்ள,
அவனின் இதயபகுதியில் பச்சை குத்தி இருந்த KM என்ற ஆங்கில எழுத்துகள் இரண்டும் இந்த நொடி இவர்கள் வாழ்வின் உயிர் எழுத்துக்களாக மாறி இருந்தது.
“சொல்லுடி அடிச்சியா” என்ற கதிரை பார்த்து.
“நா. நான் அடிக்கலையே மாமா சார்“ என்று பதற்றதுடன் அவனிடமிருந்து எழ முயன்றாள் முல்லை.
அவளின் பதட்டத்தை கண்டு. முல்லையின் கரத்தினை பிடித்து தன் வசம் கதிர் இழுத்த வேகத்தில் முல்லை ஒரே அடியாக கதிர்வேலனின் இதயபகுதியில் விழுந்தவளின் மென் கனிகள் இரண்டும் அவன் மார்போடு ஒட்டிக்கொண்டது.
கதிரின் இத்தகைய செயலில் திடுக்கிட்ட முல்லை சுதாரிக்கும் முன்னே ஆண் அவனின் கரங்கள் அவள் இடையை இறுக்கமாக கட்டிக்கொள்ள,
அவனின் இதயபகுதியில் பச்சை குத்தி இருந்த KM என்ற ஆங்கில எழுத்துகள் இரண்டும் இந்த நொடி இவர்கள் வாழ்வின் உயிர் எழுத்துக்களாக
மாறி இருந்தது.
இருவரின் விழிகளும் ஒருவரை ஒருவர் ரசித்து இருக்க.
“என்னடி என்னை கொலைப் பண்ணப்போறியா” என்று கேட்டான் கதிர்.
அவன் கேள்வியில் கோவம் கொண்ட பெண்ணவள், அவனிடமிருந்து திமிறி எழ முயன்றவளின் இடையை மேலும் கதிர் வாகாக கட்டிக்கொள்ள. மேலும் அவன் அங்கத்தில் அடைக்கலம் அடைந்து இருந்தாள் முல்லை.
“கேக்குறேன் தானே! ஏன் என்னை கொல்ல பாக்குற.” என்றவனின் கேள்விக்கு முல்லையின் பதில் கண்ணீருடன் சேர்ந்த மௌனமாக மட்டுமே இருக்க.
அவள் கண்ணீருக்கு காரணம் இவன் மேல் அவளுக்கு பிரியம் இல்லை என்று தானாக தப்புகணக்கு வகுத்துக்கொண்டான் கதிர்வேலன்.
“உனக்கு என்னை பிடிக்காதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன பண்ண சொல்லுற. அதான் பெரியவுங்க எல்லாம் சேர்ந்து நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே” என்ற கதிரின் வார்த்தை இப்போதும் பொதுவாகவே வெளிப்பட்ட காரணத்தால் முல்லையின் மனதில் மேலும் வேதனை கூடிப்போனது.
முல்லையின் முக மாற்றத்தை பார்த்து அவளை தன் வசமிருந்து விடுவித்த கதிர். படுக்கையில் இருந்து எழுந்து சுவற்றின் ஆணியில் மாட்டி இருந்த சட்டையை எடுத்து அணிந்துகொண்டவன்.பாயில் கண்ணீருடன் அமர்ந்து இருந்த பெண்ணவளை பெருமுச்சுடன் பார்த்தான்.
இருவரும் உடைத்து பேசினால் இந்த நொடியே இவர்களின் பணிப்போர் மறைந்து போகும்.
ஆனால் இருவரும் கண்ணால் பார்த்ததை, காதால் கேட்டதை உண்மையேன்று நம்பியவர்களுக்கு இன்றைய நாளும் இனிமையாக அமையாமல் போனது.
அந்த அறையே அமைதியாக இருந்த தருணம்.”அண்ணி. வாத்தியை அழைச்சிட்டு சாப்பிட வாங்க” என்ற ரோஜாவின் குரல் இவர்கள் இருவரின் சிந்தனையை மாற்றி அமைக்க,
“கண்ண துடைசிகிட்டு சாப்பிடு போ” என்றான் கதிர்.
“நீங்களும் வாங்க” என்று முல்லை அவனை அழைக்க.”நான் வெளிய போயிட்டு வந்து சாப்பிடுறேன்” என்றவனை தன் கண்களால் கண்டிப்புடன் முறைத்தாள் முல்லை.
அவள் பார்வையின் அர்த்தத்தை அறிந்துக்கொண்டவன்,”முறைக்காத டி. குடிக்க போகல” என்றதும் அவனை நம்பாமல் மேலும் அவள் முறைக்க.
“சத்தியமா குடிக்க போகல” என்றவனை பார்த்து அழகாய் சிரித்தாள் பெண்ணவள்.
கோவம் மறந்து சிரிக்கும் பெண்ணை பார்த்து தானும் சிரித்தவன்.
“உனக்கு இருக்கு டி ஒரு நாள்” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னவன். அவள் காதில் விழ வேண்டும் என்றே சத்தமாக சொல்லிக்கொண்டே அறையின் கதவை திறந்தான்.
Dinning டேபிள் அருகே ரோஜா நின்று இருந்தவள்,”வாத்தி. நீங்களும் அண்ணியும் சாப்பிடுங்க. எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்” என்ற ரோஜா அவள் அறையை நோக்கி நடக்க,
“அம்மா நீங்க சாப்பிடலையா” என்று கேட்டான் கதிர்.
“அதானே. ஏன் ரோஜா நீ சாப்பிடாம தூங்க போற” என்று முல்லை கேட்க.
“அண்ணி நான் சாப்பிட்டேன்” என்றாள் ரோஜா.
“என்னமா சொல்றிங்க, நான் இல்லாம நீங்க சாப்பிட மாட்டீங்களே” என்று கதிர் கேட்டதும்.”அதெல்லாம் போன வாரம். இப்போ உங்கள பார்த்துக்க உங்க பொஞ்சாதி வந்துட்டாங்க. அதனால இனி நீங்க அண்ணியையும். அண்ணி உங்களையும் கவனச்சுக்கோங்க. நான் போய் இப்போ தூங்க போறேன்” என்ற ரோஜா. சிரித்த முகத்துடனே அவள் அறைக்கு சென்றாள்.
“ம். சரி நீ சாப்பிடு. நான் வெளிய போய்ட்டு வரேன்” என்ற கதிர் வாசலை நோக்கி நடக்க.”ஹாங் வாங்க ரெண்டு பேரும் ஒண்ணா போய்ட்டு வந்து, ஒண்ணா வந்து சாப்பிடலாம்” என்றாள் முல்லை.
“என்னடி. ஏன் இப்படி இம்சை பண்ற. இத்தன நாள் நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா தான் இதெல்லாம் பண்ணோமா” என்று அவன் கோபத்துடன் கேட்க.
“இத்தன நாள் இல்ல, ஆனா இனிமே இப்படி தான்” என்றாள் முல்லை.
முல்லையின் வார்த்தையை கேட்டு கதிருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி எழுந்தாலும், முகத்தை மட்டும் கோவமாகவே வைத்து இருந்தான்.
“இப்போ என்ன மாமா சார். சொல்லுங்க.நான் உங்கூட வரணுமா இல்ல,நீங்க என்கூட சாப்பிட போறிங்களா” என்று முல்லை கேட்க ,
“உக்காரு சாப்பிடலாம்.” என்று கடுகடுத்த முகத்துடன் டைனிங் டேபிளில் அமர்ந்தான் கதிர்வேலன்.
வேண்டுமென்றே சாப்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று எண்ணியவன், சாப்பாட்டு மேசையில் உள்ள பாத்திரங்களைத் திறந்து பார்த்து,”என்ன இது.இட்லி சப்பாத்தி சாதம்ன்னு இருக்கு, இல்ல இல்ல எனக்கு தோசை தான் வேணும். தோசை இல்லாம நான் நைட்டு சாப்பிட மாட்டேன்.அதனால! நீ என்ன பண்ற,இங்க இருக்குற சாப்பாட்டெல்லாம் நீ சாப்பிடு.
நான் வெளியே போய் தோசை சாப்பிட்டு வரேன்” என்ற கதிர் இருக்கையில் இருந்து எழுந்தவனின் கையை சட்டென்று அவன் எதிர்பார்க்காத வண்ணம் பற்றி நிறுத்துனாள் முல்லை.
அவள் தொடுதலில் அவளை திரும்பிப் பார்த்தவன்,” என்னடி.” என்று கேட்க.
“இப்ப என்ன உங்களுக்கு.தோசை தானே வேணும். வாங்க.நானே ஊத்திக் கொடுக்கிறேன்” என்றவள், அவன் கையைப் பற்றிக் கொண்டு சமையல் அறைக்குள் அவனை இழுத்துச் செல்ல. அன்னையின் பின்னே நடக்கும் பிள்ளையை போல அவளைத் தொடர்ந்து சென்றான் கதிர்வேலன்.
“நீங்க இங்க உட்காருங்க மாமா சார்,நான் தோசை ஊத்துறேன்.”என்று முல்லைச் சொல்ல,அவள் வார்த்தைக்கு எதிர் வார்த்தை பேசாமல் சமையலைரை மேடையில் ஏறி அமர்ந்தவன், முல்லை தோசை ஊற்றிக் கொடுக்க கொடுக்க திருப்தியாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட 3தோசை சாப்பிட்டு முடித்ததும்,”ஏய் ரவா லட்டு. நீயும் சாப்பிடு” என்ற கதிர்,முல்லை எதிர்பாரா நேரம் அவளுக்கு தன் கையாலேயே ஊட்டிவிடவும்,
முல்லையின் விழிகள் ஆச்சிரியத்தில் மிளிர்ந்தது.
கதிரின் அன்பு எப்படிப்பட்டது. இவன் மனதில் அவள் எந்த இடத்தில் இருக்கிறாள் என்று முல்லை யோசிக்கும் நேரம்.
“என்ன பண்றீங்க” என்ற கேள்வியோடு சமையலறைக்குள் நுழைந்தாள் மீனா.

மீனாவின் கேள்வியில் முல்லைக்கு முகம் மாறி போக.கதிரோ எந்த பக்கமும் பாராமல் தோசையை எடுத்து முல்லை வாயில் திணித்துக் கொண்டு இருந்தான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top