Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 70
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி – 33.1
முல்லை மீது தனக்கு இருக்கும் காதலை கட்டுப்படுத்த முடியாமல் கதிர் அப்படியொரு வார்த்தையை சொல்லி இருக்க,அதன் அர்த்ததத்தை புரிந்துகொள்ளாத மீனாவோ.
முல்லையை கதிர் முழு மனதாக ஏற்றுக்கொள்ள வில்லை என்று எண்ணி இருந்தாள்.
மீனாவின் முகத்தை வைத்தே அவளின் எண்ண ஓட்டத்தை கணித்து இருந்த ரோஜாவோ.”மீனா அண்ணி.நைட் இட்லி கூட கத்திரிக்காய் சட்னி வச்சிடலாம். ஜீவா அண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்” என்று சொன்னதும். மீனா சம்மதமாக தலையசைக்க. ஜீவாவின் பெயரை கேட்டதும் பாண்டியன் அவர் அறைக்கு சென்று விட்டார்.
“ரோஜா. என்ன சாப்பாடு பண்றீங்க. வாங்க நானும் வந்து உதவி பண்றேன்” என்ற முல்லை சமையலறைக்குள் நுழைய பார்த்தவளை தடுத்து நிறுத்திய ரோஜா.
“நீங்க போய் டிரஸ் மாத்திட்டு வாங்க. சாப்பாடு வேலையெல்லாம் நாங்க பார்த்துப்போம்” என்று சொல்ல.
முல்லை ரோஜாவின் அறையை நோக்கி நடந்தாள்,
தன் அறைக்கு சென்ற முல்லையை பார்த்து,”அண்ணி அண்ணி ஏன் என் ரூமுக்கு போறீங்க. நீங்க உங்க ரூம்ல போய் டிரஸ் மாத்திக்கோங்க” என்ற ரோஜாவின் வார்த்தையை கேட்டு. முல்லையை விட மீனாவுக்கு தான் அதிர்ச்சியானது.
“என்ன சொல்ற. என் ரூமா. நான் எப்பவும் உன் ரூம்ல தானே இருப்பேன்.” என்று முல்லை கேட்க.
“இனி நீங்க எப்பவும் உங்க ரூம்ல தான் இருக்கனும்.” என்று ரோஜா சொல்ல.
“முல்லைக்கு தனி ரூமா” என்று மீனா கேட்க.
“அவங்களுக்கு ஏன் தனி ரூம். வாத்தி இருக்குற ரூம் தான் இனி முல்லை அண்ணியின் ரூம்” என்ற ரோஜாவை மீனா கடுப்பாக பார்த்தாள்.
ரோஜாவின் வார்த்தையில் நியாயம் இருந்தாலும். முல்லை தயக்கத்துடனே நின்று இருக்க,
“அண்ணி. போங்க. போய் ட்ரெஸ் மாத்துங்க. மீனா அண்ணி நீங்க வாங்க” என்ற ரோஜா. மீனாவின் கையை பிடித்து தன்னோடு சமையலறைக்குள் அழைத்து சென்றாள்.
“இவ வேற ஒரு இம்ச. இப்போ ஏன் என்னை மாமா சார் ரூமுல போய் தங்க சொல்லுறா. ஏற்கனவே அவருக்கு என்னை ஆகாது. இப்போ அவர்கூட ஒரே ரூம்ல இருக்க அவரு எப்படி சம்மதிப்பாரு!!?” என்று தனக்குள்ளே கேள்விகேட்டுக்கொண்டு முல்லை கதிரின் அறைக்கு வெளியே நின்று இருந்தவள்,கதவு திறக்கும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு போனாள்.
கதவின் அருகே நின்று இருந்த முல்லையை கேள்வியாக கதிர் பார்க்க.
“என்ன? இப்படி முறைக்கிறாரு. அவரு ரூமுக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்லுவாரா?” என்று தனக்குள் யோசித்த வண்ணமாகவே நின்று இருந்தாள் முல்லை.
தயக்கத்துடன் நின்று இருந்த பெண்ணவளை பார்த்து,” நான் வேணும்னா ஆரத்தி எடுக்க ஏற்பாடு பண்ணவா!?” என்று கதிர் கேட்க.
“அ.அர்த்தியா, அது யாரு” என்று முல்லை புரியாமல் கேட்டவளின் உச்சி மண்டையில் நக்கென்று குட்டு வைத்தவன்,”ம்.ஓடி போன உன் பாட்டி” என்றான் கதிர்.
கதிரின் வார்த்தையை கேட்டு முல்லை சிரித்தவள்.”பாட்டியால எப்படி ஓட முடியும் மாமா சார்” என்ற முல்லையை கதிர் ஏகத்துக்கும் முறைத்தவன்.
“நேரா நம்ம ரூமுக்குள்ள வராம.பிடிச்சி வைச்ச பிள்ளையார் கணக்கா இங்கேயே நிக்குறியே. அதான் உனக்கு ஆரத்தி எடுத்து உள்ள அழைக்கணுமான்னு கேட்டேன்” என்ற கதிரை ஆச்சிரியமாக பார்த்தாள் முல்லை.
ஆம்,ஆச்சிரியத்தில் அவளின் மான் விழிகள் அழகாய் நடனம் ஆடும் அழகினை ஆடவனும் ரசிக்க தவரவில்லை.
என் அறை என்று சொல்லாமல். நம் அறை என்று கதிர்வேலன் தன்னையும் அவனுடன் சேர்த்துக்கொண்ட சொல்லாடல் மங்கையின் மனதை அவன் வசம் மயங்க தான் செய்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தப்படியே நின்று இருக்க.
“என்ன நண்பா கண்ணால கபடி ஆடுறியா?” என்ற தன் நண்பனின் குரலில் கதிரின் பார்வை கடுப்பாக வாசலை பார்க்க. அங்கே சிரித்த முகத்துடன் நின்று இருந்தான் நாகராஜன்.
நாகராஜனின் குரலை கேட்டு முல்லையும் வாசலை பார்க்க.”உள்ள போ.நம்ம வீட்டுல உனக்கு என்ன தயக்கம்” என்று இனிமையாகவே சொன்னான் கதிர்.
கதிரின் வார்த்தையில் சின்னதாக மகிழ்ச்சி அடைந்த பெண்ணவள் உரிமையுடன் அவன் அறைக்குள் நுழைய.
“இந்த ரூமுக்குள்ள வந்து எத்தனை வருஷமாச்சு” என்று தனக்குள் எண்ணிக்கொண்டாள் முல்லை.
அவள் அறையினுள் சென்றதும் கதிர் தன் நண்பனுடன் சேர்ந்து தோட்டத்து பக்கம் வந்தவன்,”ஜீவா அண்ணன் எங்க டா. ஏன் இன்னும் அவர் வீட்டுக்கு வரல” என்று கதிர் கேட்க.
“நானும் அவர் போற இடத்துல எல்லாம் தேடிப் பார்த்துட்டேன் நண்பா,ஆனா அவர் எங்கேயும் வரலன்னு தான் பதில் வருது” என்றான் நாகராஜன்.
“என்னடா சொல்ற. அண்ணன் எங்க தான் போய் இருக்கும்.” என்று கதிர்வேலன் யோசித்தவனுக்கு. தனக்கும் முல்லைக்கும் திருமணம் ஆன செய்தி ஜீவானந்தத்திற்கு தெரிய வந்தால் அவனின் செயல் என்னவாக இருக்கும் என்ற குழப்பம் இந்த நொடி வரை இருக்கத்தான் செய்தது.
அன்றைய தினம் இரவு நேரம் பாண்டிய இரவு உணவை முடித்துக்கொண்டு அவர் அறைக்கு செல்ல.
அவசர அவசரமாக கதிர்வேலன் தன் அறையில் இருந்து சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டவனின் எதிரே வந்து நின்றாள் முல்லை.
முல்லையின் செயலில் மீனாவின் பார்வை அவர்களையே பார்த்து இருக்க.”என்னடி! வெளியே இருந்து ஏதாவது வாங்கிட்டு வரணுமா” என்று கதிர் கேட்க,
“எனக்கு எதுவும் வேணாம், நீங்க எங்க கிளம்புறீங்க?” என்று கேட்டாள் முல்லை
“போகும் போது எங்க போறீங்கன்னு கேட்கலாமா” என்ற கதிரை பார்த்து,”சரி அப்போ எங்க இருந்து வருவீங்கன்னு சொல்லுங்க” என்று கிண்டலுடன் முல்லை கேட்க,” ஏய்.நீயேன் இதெல்லாம் கேட்குற” என்றான் கதிர்
“என்ன மாமா சார்.மறுபடியும் சரக்கு அடிக்க கிளம்புறீங்களா” என்ற முல்லையின் கேள்விக்கு.”ஆமா! சரக்கு அடிக்க தான் போறேன்.ஏன் உனக்கும் வேணுமா” என்று கதிர் கேட்க.
“எனக்கெல்லாம் வேணாம். சரி இருங்க நானும் வரேன்” என்ற முல்லை வாசலை நோக்கி நடந்தாள்.
“ஏய். என்ன!! நேத்து மாதிரி மறுபடியும் பிரச்சனை பண்ணலாம்னு நினைக்கிறியா. இங்க பாரு! இந்த ஊர்ல சரக்கு அடிச்சிட்டு எப்படி வீட்டுக்கு வரணும்னு எனக்கு தெரியும். நீ என்னை பத்தி கவலைப்படாம போயி சாப்பிட்டு தூங்கு” என்று கதிர் சொல்ல,
“இங்க பாருங்க.நீங்க சரக்கடிக்க போறதா இருந்தா உங்க கூட நானும் வருவேன். இல்லனா நீங்க தனியா போகக்கூடாது” என்று முல்லை கட்டளையாக சொல்ல.
“என்னடி. மீறி போனா என்ன பண்ணுவ” என்று கதிர் கேட்டதும்.”என்ன வேணாலும் பண்ணுவேன் மாமா சார்” என்றாள் முல்லை.
“அதான் கேக்குறேன் என்ன பண்ணுவ. உன்னால என்ன பண்ண முடியும்” என்ற கதிரை முறைத்த முல்லை.
“நீங்க சரக்கு அடிக்க போனா நான் இந்த நிமிஷமே இங்கருந்து கோவில் குலமுன்னு எங்காவது போயிடுவேன்” என்ற முல்லையின் வார்த்தையில் கதிரின் முகம் கோவத்தில் இறுகியது.
“ஏய், என்ன பைத்தியம் மாதிரி பேசுற” என்று கதிர் கத்தியதும்,
“பின்ன எப்படி பேச சொல்றீங்க.இப்ப எதுக்காக நீங்க சும்மா சும்மா சாராயக்கடையை தேடி போறிங்க. அப்படி என்ன பிரச்சனை உங்களுக்கு” என்று இயல்புக்கு மாறாக முல்லை கோபத்துடன் பேச.”அண்ணி அண்ணி என்ன ஆச்சு?, என்ன பிரச்சனை” என்று பதறி அடித்து இவர்கள் அருகே ஓடி வந்தாள் ரோஜா.
“இங்க பாரு ரோஜா, உன் அண்ணன் கிட்ட சொல்லி வை, எனக்கு சாராய வாடையே பிடிக்காது” என்று முல்லை சொன்னதும்.”உன்னை யாருடி குடிக்க சொன்னது” என்று கேட்டார் கதிர்.
“ஜோக்கா.என்ன ஜோக்கா.இங்க பாருங்க மாமா சார். இனி நீங்க தண்ணி அடிச்சிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்” என்று முல்லைச் சொல்ல.
“ சரி.நான் வரல,நான் போயி என் நண்பன் கூட படுத்துக்கிறேன்” என்றான் கதிர்.
“ஓ. அப்போ நான் இங்க இருக்குறது உங்களுக்கு பிடிக்கல.அதனால தானே இங்க இருந்து போறேன்னு சொல்றிங்க, சரி நீங்க எங்கேயும் போக வேணா.நான் கிளம்புறேன்” என்ற முல்லை. கோவமாக வாசலை நோக்கி நடக்க.
“ஏய் எங்கடி போற” என்று அவளின் கையைப் பிடித்து தடுத்து நிறுத்திதான் கதிர் வேலன்.
“உங்க கிட்ட சண்டை போடற தெம்பு எனக்கு இல்ல,நீங்க இப்போ வெளிய போனா நான் இந்த வீட்டை விட்டு வெளியே போயிடுவேன்” என்று முல்லைச் சொல்ல,
“ச்சே,ஒரு மனுஷனால நிம்மதியா சரக்கு கூட அடிக்க முடியல. எல்லாம் என் தலையெழுத்து” என்று முகத்தை திருப்பிக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் கதிர்.
கோபமாக சென்ற கதிரை முல்லை முறைத்துப் பார்த்தபடி நின்று இருக்க,”என்ன அண்ணி நீங்க.ஏன் வீட்டை விட்டு எல்லாம் வெளியே போறேன்னு சொல்றீங்க” என்ற ரோஜாவை பார்த்து ஒற்றைக்கண் அடித்து சிரித்த முல்லை.
“அப்படி சொன்னாதான் மாமா சார் குடிக்க போக மாட்டாரு ரோஜா, இப்ப பாத்தியா உன் வாத்தி ரூம்குள்ள போயிட்டாரு” என்று சிரித்த முகத்துடன் முல்லை சொன்னதும்.
“ஐ. சூப்பர் அண்ணி, இந்த வைத்தியம் கூட நல்லா தான் இருக்கு” என்ற ரோஜா, முல்லையை கட்டி அணைத்து சிரித்துக் கொண்டாள்.