Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 70
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி – 32.2
சரண்யாவின் கேள்விக்கு முல்லை பதில் தரும் முன்னே.
“சரண்யா.ஜீவா தம்பிக்கு மீனா கூட கல்யாணம் ஆயிடுச்சு. இந்த ஜென்மத்துல முல்லைக்கு கதிர் மாப்பிள்ளை தான் புருஷன்” என்று முருகன் சொல்ல.சரண்யா நிலைமையை புரிந்து கொண்டவள்
“புரிது அப்பா.வாழ்த்துகள் முல்லை. கதிர் உங்களுக்கும் வாழ்த்துகள்”என்று சரண்யா சொல்ல.
“என்ன!! வெறும் வாழ்த்துதானா. அன்பளிப்பு எதுவும் இல்லையா” என்று கேட்டார் கதிர்.
“உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் முடிஞ்சிடுதுன்னு அரசல் புரசலா தான் கேள்விப்பட்டேன். ஆனா உண்மை தெரியாமல் கிப்ட் வாங்க கூடாதுன்னு தான் வாங்கல.சரி. உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க நான் இன்னைக்கு சாயங்காலம் முல்லை வீட்டுக்கு கிப்ட் வாங்கிட்டு வரேன்” என்று சரண்யா சொல்ல
“எனக்கு பிடிச்சது.” என்று கதிர் சொல்லும் முன்னே,”சரக்கு தான் கேக்க போறாரு” என்று தனக்குள் முனங்கினாள் முல்லை
முல்லையின் எண்ணத்தை அறிந்திருந்த கதிர்,அவளை முறைத்த வண்ணம்,”இன்னைக்கு சாயங்காலம் நாங்க குன்னக்குடிக்கு கிளம்பிடுவோம்.நாங்க அடுத்த முறை இங்க வரும்போது நீ ஒரு பத்து பவுன்ல சங்கிலி வாங்கிட்டு வா” என்று கதிர் சொல்ல,சரண்யாவின் முகம் அஷ்ட கோணலாக மாறியது.
எப்போதும் போலவே இந்த முறையும் சரண்யாவிடம் வம்பிழுக்கும் கதிரின் பேச்சைக் கேட்டு, முல்லை சிரிக்க,”ஏனடி.உன் மாமா சார் என்னை ஒரண்டை இழுக்கிறாரு நீ சிரிச்சுக்கிட்டு இருக்கியா” என்று கேட்க.
“சரி சரி. அடுத்த முறை மாமா சார் கேட்ட மாதிரி பத்து பவுன் சங்கிலியோட எங்க வீட்டுக்கு வந்துடு” என்று முல்லை சொன்னதும்,
“யப்பா சாமி, உன்னை நான் கோவில பாத்து பேசியே இருந்திருக்கவே கூடாது,ஆளை விடுமா” என்று தலை தெரிக்க அங்கிருந்து ஓடி இருந்தாள் சரண்யா.
அவள் சென்றதும்,முருகனின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொங்கலை சாப்பிட்டுக்கொண்டே சில பல கதைகள் பேசி முடிக்க, நேரம் மதியம் இரண்டை காட்டியது.
“என்னங்க,நேரம் ஆகுது வீட்டுக்கு கிளம்பலாமா” என்று பார்வதி கேட்க
“இதோ போகலாம்.முல்ல நீ மாப்பிள்ளைய காருக்கு அழைச்சிட்டு போ.நானும் அம்மாவும் ஐயருக்கு தக்ஷனை கொடுத்துட்டு வரோம்” என்று முருகன் சொல்ல.
கதிரும் முல்லையும் காரை நோக்கி நடக்க,”மாமா சார்.உங்களுக்கு இந்த கோவில் நினைவிருக்கா” என்று கேட்டாள் முல்லை
அவள் கேள்வியில் அவளை முறைத்து பார்த்தவன்,”ஏண்டி!! ஏன் நினைவில்லாம.நம்ம சின்ன வயசுல இங்க விளையாடும் போது.அதோ அங்க ஒரு தூண் இருக்கு பாரு,அங்க தானே போய் நீ அடிக்கடி மறஞ்சுப்ப,நான் தானே உன்னை தேடி கண்டுபிடிப்பேன்” என்று கதிர் சொல்ல.”மாமா சார், நீங்க இதெல்லாம் மறக்கலையா. இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களா” என்று ஆச்சரியமாக கேட்டாள் முல்லை
“இவ என்ன பைத்தியம் மாதிரி கேள்வி கேட்கிறா. இவள மறந்துட்டு என்னால வாழ முடியுமா!! அது சாத்தியமா!! இவ பிறந்த கணத்துல இருந்தே இவளை பற்றி நினைக்காத நாளென்று ஒன்னு இருக்கா!!,
ஹ்ம்.இவளுக்கு என்னைக்கு தான் என் மனசு புரிய போகுதோ!” என்று கதிர் இந்த முறையும் தன் மனதிலேயே காதல் கோட்டையை கட்டிக் கொண்டிருக்க,
“ஆமா.இதெல்லாம் ஞாபகம் இருந்து என்ன பிரயோஜனம், எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து என் அத்த மகனான இவரை நான் நேசிச்சதே இவருக்கு தெரியலையே” என்று தனக்குள் அலுத்துக் கொண்டாள் முல்லை.
இப்படியாத இவர்கள் இருவரும் மீண்டும் மாறி மாறி ஒருவரை நினைத்து ஒருவர் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டு இருக்க,முருகன் பார்வதியும் காருக்குத் திரும்பிய நிலையில். சில நிமிடத்திலேயே இவர்கள் நால்வரும் தங்கள் வீட்டையும் சென்று அடைந்தார்கள்
“அம்மாடி முல்ல. நீயும் மாப்பிள்ளையும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று முருகன் சொல்ல,மீண்டும் கதிரும் முல்லையும் ஒன்றாக ஒரே அறையில் தங்க நேரிட்டது
முல்லை குளியலறை சென்று தன் பட்டு புடவையை மாற்றிக்கொண்டு கிளி பச்சை நிற பருத்தி சேலைக்கு காவி நிற ரவிகை அணிந்தப்படி வெளியே வந்தவள்,
“மாமா சார். நீங்க ரெஸ்ட் எடுங்க. ஏதாவது வேணும்னா என்னை எழுப்புங்க” என்ற முல்லை,தரையில் பாயை விரித்து பார்த்துக்கொண்டாள்.
முல்லையின் செயலில் புருவம் உயர்த்திய கதிர்,”இப்போ எதுக்கு இவ கீழ படுக்கறா.அதுக்குள்ள ஏதாவது நாடகம் பார்த்துட்டாளா!” என்று யோசித்தான்.
கதிர் தன்னையே பார்த்து இருக்கிறான் என்பதை அறிந்திடாத முல்லை போர்வையால் தன்னை மூடிக்கொள்ள,”ஏய் ரவா லட்டு. நீ ஏன் கீழ படுக்குற” என்று கேட்டதும்.
கதிரின் கேள்வியில் தன் போர்வையை விலக்கி அவனை உறுத்து முறைத்தவள்.”பரவால்ல மாமா சார்.நீங்க மேல படுத்துக்கோங்க. நான் கீழப் படுத்துகிறேன்” என்று சொன்னதும்.
“ஏய்,அதான் ஏன்னு கேக்குறேன், நேத்து நைட்டு என்னமோ நான் மெத்தையில் தான் படுப்பேன்னு சொன்ன,ஏன் இப்போ என்ன ஆச்சு” என்று கதிர் கேட்க.
“ஒன்னும் ஆகல.”என்று சமாளித்தாள் முல்லை.
“இந்தா கேக்குறேனே.என்ன ஆச்சு” என்று மீண்டும் கதிர் மிரட்ட.
“இன்னும் என்ன ஆகணும். அதான் நீங்க சொன்னீங்களே. என் பக்கத்துல உங்களால படுக்க முடியலன்னு. அதனாலதான் நான் கீழ படுத்துகிறேன், நீங்கபடுங்க” என்ற முல்லை.கண்கள் மூடி போர்வையால் தன்னை போர்த்திக் கொண்டவளை ஏகத்துக்கும் முறைத்தான் கதிர்.
“இவ என்ன பைத்தியமா. நம்ம இவ பக்கத்துல படுத்தா டெம்ப் ஆகிடுவோம்ன்னு கட்டில் கீழே போயி படுத்தா!! இவ என்ன நம்பள வேற மாதிரி புரிஞ்சுகிட்டாளா!! ம். இவ மனசுல என்ன தான் இருக்கு” என்று கதிர்.தரையில் உறங்கும் முல்லையை பார்த்தப்படி அறையில் இருந்து வெளியேறி இருந்தான் கதிர்வேலன்.
**************************************
நேரம் மாலை 4மணியளவில்.
முல்லையின் அறைக்குள் நுழைந்தார் பார்வதி.
முல்லை தன் அலமாரியில் அடுக்கி வைத்து இருந்த துணியை எல்லாம் பார்த்தப்படி நின்று இருர்ந்தவளை.
“முல்ல. 6pm க்குள்ள நம்ம வீட்டுல இருந்து கிளம்புனா தான் நீங்க இருட்டுறதுக்குள்ள குன்னக்குடி போக முடியும்” என்றார் பார்வதி.
“ஹாங். இதோ நான் கிளம்பிட்டேன் சித்தி” என்றவள். சின்ன பையை மட்டும் எடுத்துக்கொண்டு ரூமில் இருந்து வெளியேற.
“என்ன முல்ல.உனக்கு தேவையானதை எல்லாம் எடுத்துகிட்டியா” என்று கேட்டர் முருகன்.
தன் தந்தையின் கேள்வியில் மீண்டும் அவள் அறையை ஏக்கமாக திரும்பி பார்த்து
பெருமூச்சு எடுத்த முல்லை.
“ம். எடுத்துக்கிட்டேன் அப்பா” என்றாள்.
“முல்ல. உனக்கு புடவ நகை பாத்திரம் பண்டம் எல்லாம் முறையா நாளைக்கு பாண்டியன் அண்ணன் வீட்டுக்கு சீர் எடுத்துட்டு வரோம்” என்று பார்வதி சொன்னதும்.
“சித்தி.நான் சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க. இப்போ பாண்டியன் மாமா வீட்டுல மீனாவும் வாழ வந்து இருக்கா. அப்டி இருக்கும் போது நீங்க எனக்கு மட்டும் சீர் கொடுத்தா நல்லா இருக்காது. அதனால எனக்கு பண்ற மாதிரியே மீனாவுக்கும் பண்றிங்களா” என்று முல்லை கேட்டதும்.
தன் மகளை அன்பாக கட்டி அணைத்துக்கொண்ட முருகன்.
“உனக்கு அப்படியே உன் அம்மா குணம். இப்ப என்ன!! உனக்கு நான் பண்ற சீர் மாதிரியே மீனாவுக்கும் நானே எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணிடுறேன் போதுமா” என்று முருகன் சொல்ல. தன் தந்தையின் இத்தகைய மாற்றத்தை எண்ணி முல்லை அகம் மகிழ, இவர்கள் பேசுவதை வாசலின் நின்றப்படி கேட்டுக் கொண்டு இருந்தான் கதிர்வேலன்.
“சரி மா. நேரமாச்சு நீங்க கிளம்புங்க.மீதி விஷயத்தை நாளைக்கு நானும் உன் சித்தியும் மாப்பிள்ள வீட்டுக்கு வரும் போது பேசிப்போம்” என்று முருகன் சொல்ல.முல்லை தன் பிறந்த வீட்டில் இருந்து கதிருடன் சேர்ந்து அவளின் புகுந்த வீட்டுக்கு செல்வதற்காக வாசலில் நின்று இருந்த காரை நோக்கி சென்றாள்.
“மாப்புள்ள. நீங்க முல்லையை அழைச்சிட்டு நம்ம காருல போயிடுங்க. நாளைக்கு நாங்க வீட்டுக்கு வரும் போது காரை எடுத்துக்குறோம்” என்று முருகன் சொல்ல.
“ம். சரி மாமா.நாங்க கிளம்புறோம்” என்ற கதிர். பார்வதியை பார்த்து சிறிய புன்முறுவலுடன் முருகனின் இல்லத்தில் இருந்து விடை பெற.
ஏனோ இந்த சூழ்நிலையில் தன் மனதில் எழும் உணர்வுகளை வார்த்தையால் விவரிக்க முடியாமல் முல்லையின் கண்கள் கலங்கியப்படி காரில் ஏறி அமர்ந்ததும்.
கதிர் வண்டியை குன்னக்குடியை நோக்க விரட்ட,
முருகனும் பார்வதியும் இவர்களுக்கு கையசைத்து வழி அனுப்பி வைத்தார்கள்.
வழியெல்லாம் கதிரும் முல்லையும் அமைதியாகவே பயணிக்க.
இருவர் மனதிலும் பல கேள்விகள் ஓடிக்கொண்டு தான் இருந்தது.
இவர்களுக்குள் திருமணம் நடந்த மகிழ்ச்சியை மீறி இருவரும் இனம்புரியாத
சோகத்தில் தங்களை அடிமைப்படுத்தி வைத்து இருந்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் கதிர் அவன் விரட்டிய காரை பாண்டியன் இல்லத்தின் பார்க்கிங் ஏரியாவில் நிறுத்த.
முல்லை காரில் இருந்து இறங்கியவளை ஓடி வந்து கட்டிக்கொண்டாள் ரோஜா,
“அண்ணி. நீங்க வாத்திக்கூட நாளைக்கு தான் வருவீங்கன்னு நினைச்சேன்” என்று ரோஜா சொல்ல.
“நாளைக்கு அப்பாவும் சித்தியும் வருவாங்க ரோஜா” என்று முல்லை சொல்ல.
“ம்மா.எப்படி இருக்கீங்க” என்று கதிர் தன் தங்கையை நலம் விசாரித்தான்.
“ஒரே நாளுல எனக்கு என்ன ஆகப்போகுது வாத்தி.” என்று ரோஜா சிரித்த முகத்துடன் கேட்க,
“உங்களுக்கு ஒன்னும் ஆகாது” என்ற கதிரை பார்த்து சிரித்த வண்ணமாக முல்லையின் கையை பிடித்து வீட்டுக்குள் அழைத்து சென்ற ரோஜா.”அப்பா. அண்ணியும் வாத்தியும் வந்துட்டாங்க” என்றதும்.சமையலறையில் முதல் ஆளாக ஓடி வந்தாள் மீனா.
“வா மா முல்ல.என்ன கதிரு. இன்னும் ரெண்டு நாள் முருகன் வீட்ல தங்கி இருந்துட்டு வந்து இருக்கலாமே” என்று பாண்டியன் கேட்க.முல்லை கதிரை முறைக்க.
“ஆமா. நேத்து ஒரு நாள் நைட்டு நான் பட்டது போதாதா” என்று முணங்கிக்கொண்டே கதிர் அவன் அறைக்குள் புகுந்தான்.