• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
70
பாலைவனத்து முல்லை
பகுதி – 32.1

“மாப்புள்ள. இந்தாங்க டீ எடுத்துக்கோங்க” என்ற பார்வதியின் கையில் இருந்த குவளையை வாங்கிக்கொண்டு கதிர் முல்லையின் அறைக்குள் நுழைய.
அங்கே கட்டிலில் யோசனையோடு நைட்டியில் அமர்ந்து இருந்தாள் முல்லை.
கதிர் வந்ததை கூட பார்க்காமல் ஆழ்ந்த யோசனையில் இருந்தவளை பார்த்து குரலை செருமியப்படி,”ஏய் ரவா லட்டு” என்று
அழைக்க. திடுக்கிட்டு திரும்பியவள். தன் இருக்கரங்கள் கொண்டு அவள் மேல் அழகை மறைத்துக்கொள்ள.
பக்கென்று சிரித்து விட்டான் கதிர்.
அவன் சிரிப்பை பார்த்து முறைத்தவள். பொறுமையாக அவள் கையை அவள் மார்பின் மீது இருந்து விலக்கியவள்.பொய்யான கோவத்துடன் கட்டிலில் இருந்து எழுந்து அவன் அருகே வந்தவளை கண்டுகொள்ளாமல் கதிர் தேநீரை புசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அவன் செய்கையில் பொறுமை இழந்தவளாக,”மாமா சார்.” என்று முல்லை அழைக்க,”என்னடி. டீ வேணுமா” என்றவன்.”போய் உன் சித்திகிட்ட கேளு போ” என்றான்.
“எனக்கு Dயும் வேணாம் Eயும் வேணா. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்” என்றவளை.”என்ன முதல் மரியாதை பார்த்தியா” என்று கதிர் கேட்க.
“ம். இல்ல. காதலுக்கு மரியாதை பார்த்தேன்” என்று சொன்னவளை பார்த்து.
“ஓ. ஆமா ல்ல.நீ விஜய் Fan தானே” என்றவன்.”நான் யார் Fanன்னு உனக்கு தெரியுமா என்று கேட்க.
“நீங்க ஒரு ஓடாத டேபிள் Fan” என்றவளை ஏகத்துக்கும் முறைத்தான் கதிர்.
“என்னடி லந்தா. உன்ன எல்லாம் அந்த கருப்பாம்பூச்சிக்கிட்டையே பிடிச்சி கொடுக்கணும். பாவம் பார்த்து உன்னை காப்பாத்தினேன் பாரு. எல்லாம் என்னை சொல்லணும்” என்ற கதிரை சந்தேகமாக பார்த்த முல்லை.
“நீங்க காப்பாத்தினது எல்லாம் ஓகே தான் மாமா சார். ஆனா நான் இந்த ரூமை பூட்டிட்டு தானே குளிக்க போனேன். நீங்க எப்படி உள்ள வந்திங்க. நான் குளிக்க போகும் போது நீங்க இந்த ரூம்ல இல்லையே” என்று முல்லை கேட்க.
“நான் இங்க தான் இருந்தேன். நீ தான் பார்த்து இருக்க மாட்ட” என்றான் கதிர்.
கதிரின் பேச்சில் மேலும் குழப்பம் அடைந்தவள்.”என்ன சொல்றிங்க. நான் எழும் போது நீங்க இங்க இல்லையே” என்று முல்லை சொன்னதும்.
“நான் கட்டில் கீழ தான் டி இருந்தேன். நீ தான் என்னை பார்க்காம ரூமை பூட்டிட்டு குளிக்க போய் இருக்க” என்று கதிர் சொன்னதும்.”நீங்க ஏன் கட்டில் கீழ போய் படுத்திங்க” என்று முல்லை கேட்டாள்.
“பின்ன. உன் பக்கத்துல படுத்தா என் நிலைமை என்ன ஆகுறது” என்ற கதிரின் வார்த்தையை கேட்டு முல்லையின் விழிகள் சட்டென்று கலங்கி விட,
இந்த இடத்தில் அவனின் காதல் ஏக்கத்தில் வெளியான வார்த்தையும் முல்லையின் காதுக்கு அவன் தன்னை மனைவியாக ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை போல உணர்த்தியது.
ஒரு வேளை முல்லையின் கலங்கிய விழிகளை கதிர் கண்டு இருந்தால் கூட இந்த கணமே இவர்களின் பணிப்போர் முடிந்து காதல் ஆட்சி மலர்ந்து இருக்குமோ என்னவோ. இவர்கள் இருவருமே இந்த நொடி வரை மனதில் உள்ளதை உடைத்து பேசாமல் ஒருவருக்கொருவர் கண்ணாம்பூச்சி ஆடிக்கொண்டு இருந்தார்கள்.
************************************
இதே தருணம். அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த பார்வதியின் தம்பி கேசவனை பார்ப்பதற்காக சுந்தரேசன் மற்றும் அவனின் தம்பி ஸ்ரீனிவாசன் ஆகிய இருவரும் சென்று இருந்தார்கள்.
“என்ன கேசவா. இப்போ எப்படி இருக்க” என்று ஸ்ரீனிவாசன் கேட்க.
“ஏன் இருக்கோமுன்னு தோணுது” என்றான் கேசவன்.
“நீ இருக்கனும் கேசவா. இனிமே தான் நீ தைரியமா இருக்கனும். அந்த கதிர் குடும்பத்தை நான் பழிவாங்க நீ என்கூட இருக்கனும் கேசவா” என்று சுந்தரேசன் சொல்ல.
“கதிரை மட்டும் இல்லை. எனக்கு accident நடந்தது தெரிந்தும் என்னை வந்து பார்க்காத அந்த முருகனையும் என் அக்காவையும் கூட பழி வாங்க வேண்டும்” என்று கேசவன் சொன்னதும்.
“அவங்க எப்படி உன்னை பார்க்க வருவாங்க கேசவா. அவங்க தான் மாப்பிளை வந்த குஷில இருக்காங்களே” என்றான் சுந்தரேசன்.
“என்ன சொல்றிங்க. மாப்பிள வந்த குஷியா” என்று கேசவன் புரியாமல் கேட்டதும், அவனுக்கு புரியும் விதத்தில் பிளாஷ் பேக்கை சொல்லி முடித்தான் சுந்தரசன்.
“என்ன!! கதிருக்கும் முல்லைக்கும் கல்யாணம் முடிஞ்சு போச்சா” என்று அந்த நிலைமையில் நாடி புடைக்க கேசவன் தன் படுக்கையில் இருந்து எழ முயன்றவனை.
“சார் சார் உங்களுக்கு வயத்துல முதுகுலன்னு நிறைய தையல் போட்டு இருக்கு சார் . நீங்க இப்படியெல்லாம் ஸ்ட்ரைன் பண்ணக்கூடாது” என்று செவிலியர் சொன்னதும். தன் ஆத்திரதை கட்டுப்படுத்த முடியாமல் கேசவனின் ரத்தம் எல்லாம் கொதித்துக்கொண்டு இருந்தது.
“என்ன கேசவா! ஆத்திரம் வருதா. எனக்கு இதைவிட அவன் மேல கொலை வெறியே வருது,நான் எவ்வளவு பிளான் போட்டு கச்சிதமா அந்த ரோஜாவை என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு நினைத்தேன்!!! ஆனா என் திட்டமெல்லாம் பாலா போச்சு” என்று சுந்தரேசன் சொல்ல
“இல்ல. முல்லையை நான் வேற யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன். அவ எனக்காக பொறந்தவ.நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு அந்த முல்லை கதிர் காதலை பிரிச்சேன் தெரியுமா? ஆனா நான் ஹாஸ்பிடலுக்கு வந்த நேரம் பார்த்து அவங்க கல்யாணம் முடிஞ்சு இருக்கு,இல்ல! அவங்க கல்யாண வாழ்க்கையை நான் நல்லவிதமா வாழ விட மாட்டேன்” என்ற கேசவனை கேள்வியாக பார்த்தான் சுந்தரேசன்
“ஏய் கேசவா!! இரு இரு.இப்போ நீ என்ன சொன்ன.கதிர் முல்லை காதலை நீ பிரிச்சியா? என்னடா சொல்ற .ஆனா அந்த முல்லை ஜீவாவையும்,கதிர் மீனாவையும் காதலிக்கிறதா தானே எல்லாரும் சொன்னிங்க. இது என்ன நீ புது கதை சொல்ற” என்று சுந்தரேசன் கேட்க, கேசவன் திரு திருவென விழித்தான்.
சுந்தரேசன் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் கேசவனின் திருட்டு விழியை கண்டு கொண்டவன்,”டேய்.இப்போ உண்மைய சொல்ல போறியா இல்லையா. என்ன.அப்போ கதிரும் முல்லையும் தான் காதலிச்சாங்களா?” என்று சுந்தரேசன் கேட்க
“ஆமா. அது பல வருஷத்துக்கு முன்னாடி நடந்த கதை.அவங்க ரெண்டு பேருடைய காதலை பிரிச்சது நான் தான்” என்ற கேசவன் ஒரு சிறு ஃப்ளாஷ் பேக்கையும் சொல்லி முடிக்க,
“அடப்பாவி, சின்னஞ்சிறுசுங்க காதல இப்படி சின்னா பின்னமா ஆக்கி வச்சிருக்கியே, ம். பரவால்ல. நானாவது அந்த கதிருக்கு இப்பதான் வில்லன்.நீ ஆரம்பத்துல இருந்தே அவனுக்கு வில்லனாக இருந்து இருக்கியே!”என்று சுந்தரேசன் சொல்ல,
“ஆமா.எனக்கு அந்த கதிரை பழி வாங்கணும் தான்.ஆனால் அதைவிட தீவரமா முல்லையை நான் கல்யாணம் பண்ணனும்னு தான் காத்துகிட்டு இருந்தேன். ஒன்னு இல்ல ரெண்டு இல்ல,கோடிக்கணக்காண சொத்துக்கு ஒரே வாரிசு அந்த முல்ல தான். அழகுலையும் அவளுக்கு குறை இல்ல.அவ ஒரு பயந்த சுபாவமான ஆளு.அவளை நான் கல்யாணம் பண்ணா என் வாழ்க்கை செட்டில் ஆகணும்னு நினைச்சு எவ்வளவோ பிளான் போட்டு இருந்தேன். ஆனா நான் ஹாஸ்பிடலுக்கு வந்த நேரம் பார்த்து அந்த கதிர் என் முல்லை கழுத்துல தாலி கட்டி இருக்கான்,இல்ல.இந்த கல்யாணம் நடந்திருக்கலாம். மத்தபடி அவங்க வாழ்க்கையை நான் வாழவே விடமாட்டேன்” என்று கேசவன் சபதம் எடுக்க,
கேசவன் சுந்தரேசன் தனலட்சுமி என்று இவர்கள் மூவரின் திட்டத்தில் இருந்து கதிர் முல்லை எப்படி தப்பிக்கப் போகிறார்கள் என்பதை பார்ப்போம்.
***************************************
சிவகங்கையில் உள்ள அம்மன் கோவிலில் முருகனின் குடும்பத்தினர் தலைமை ஏற்று நடத்தும் சிறப்பு பூஜை நடந்து கொண்டிருந்தது.
முல்லை அவள் கைகளால் பொங்கல் வைத்து கடவுளை வணங்கிக் கொண்டிருந்த சமயம்,கதிர் தூரத்தில் நின்றபடி முல்லையின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தான்.
“மாப்ள,வாங்க நீங்களும் வந்து தீபாரனை காட்டுங்க” என்று முருகன் அழைக்க.
“நீங்களே முன்ன நின்னு பண்ணுங்க மாமா” என்ற கதிர் ஓரமாக நின்றபடி முல்லையை பார்த்திருக்க,முல்லையோ அவனை கண்டுகொள்ளாமல் பொங்கல் வைத்துக்கொண்டு இருந்தாள்.
சில நிமிடங்களில் கோவிலில் பூஜை புனஸ்காரம் எல்லாம் முடிந்த நிலையில், அனைவரும் குடும்பமாக அமர்ந்து இருக்க “மாப்ள இந்தாங்க மா விளக்கு” என்று முருகன் கதிரிடம் கொடுக்க,
“அப்பா. மாமா சாருக்கு அது கூட ஒரு பத்த தேங்காய் வைத்து கொடுங்க. அப்பதான் அவருக்கு பிடிக்கும்” என்றாள் முல்லை
“என்னமா முல்ல நீ,அதான் கதிர் மாப்பிள்ளை உன் கழுத்துல தாலி கட்டிட்டாரே!! இன்னும் ஏன் அவரை மாமா சார்ன்னு கூப்பிடுற.ஒன்னு மாமான்னு கூப்பிடு.இல்ல வாங்க போங்கன்னு கூப்பிடு.இப்பவும் பழைய மாதிரி மாமா சார்ன்னு கூப்பிட்டால் ஒரு மாதிரி இல்லையா” என்று பார்வதி கேட்க.
“அது, சின்னதுல இருந்தே பழகிடுச்சு சித்தி” என்றாள் முல்லை.
“பழக்கத்தை மாத்திக்கோமா. இனி மாப்பிளையை மாமான்னு கூப்பிடு” என்று முருகனும் சொல்ல.முல்லையில் முகமோ சட்டென்று வாடி போனது.
தன்னவளின் வாட்டத்தை பார்த்த கதிர் “அவளுக்கு எப்படி கூப்பிடனும்னு தோணுதோ அப்படியே கூப்பிடட்டும்” என்றவன் மாவிளக்கை சாப்பிட்டுக்கொண்டு இருந்த சமயம் தூரத்திலிருந்து,
“ஏய் எப்படி டி இருக்க” என்றபடி சரண்யா இவர்களை நோக்கி வந்தாள்.
முல்லையின் தோழி சரண்யாவை பார்த்த முல்லை, தன் தோழியை கட்டி அணைத்து நலம் விசாரிக்க,”என்னடி.உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சின்னு கேள்விப்பட்டேன். ஏன் எங்க கிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லல” என்று உரிமையோடு சரண்யா கோபித்துக் கொள்ள,
“ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தாண்டி எனக்கு கல்யாணம் நடக்க போற விஷயமே எனக்கு தெரியும்” என்றாள் முல்லை
முல்லை விளையாட்டாக சொன்னாலும் அதுதான் உண்மை என்று அறிந்திருந்த கதிரோ. “அதானே!! முன்னாடியே சொல்லி இருந்தா இவ இந்த கல்யாணத்துக்கே வந்து இருக்க மாட்டாளே” என்று தனக்குள் நினைத்திருக்க,அதே சமயம் சரண்யாவின் ஓரப்பார்வை கதிர் மீது பாடிந்தது.
“ஏண்டி!! அப்போ ஜீவா.” என்று இழுத்த சரண்யாவின் வார்த்தையைக் கேட்டு முல்லையின் முகம் மாறி போக.
கதிரோ சரண்யா கேட்ட கேள்விக்கு முல்லையின் பதில் என்னவாக இருக்கும் என்று கேட்க காத்து இருந்தான்.
-தொடரும்
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top