Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 66
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி – 31.2
பகுதி – 31.2
இரவு 1 மணி அளவில். உறக்கத்தில் முல்லை தன் கையை எடுத்து கதிரின் மேல் போட்டதும், தூக்கத்தில் கண் விழித்த கதிரின் அருகாமையில் முல்லை இருக்க, அவளின் சூடான மூச்சு காற்று கதிரின் தேகத்தில் மேலும் உஷனத்தை கூட்டியது.
தன் கைக்கு எட்டாத கனி அவள் என்று இவன் இதுநாள் வரை நினைத்து இருக்க. இப்போது கதிரின் அதரங்களுக்கு அருகே மாதுளை மணி நிறத்தில் சிவந்து இருக்கும் பெண்ணின் இதழ்களை கண்டு ஆடவனின் இதழ்களும் வியர்த்து போனது!! கண்கள் இமைக்காமல் தன் அருகே தோன்றி இருக்கும் வானவில்லின் அழகை கதிர் ரசித்து இருக்க.
சட்டென்று முல்லை அவளின் வலது காலை தூக்கி கதிரின் கால் மீது போட்டதும். கஷ்டப்பட்டு அடக்கி வைத்து இருந்த கதிரின் வீரப்பு எல்லாம் விரல் சுண்டும் நொடியில் காணாமல் போய் இருந்தது.
“ஐயையோ கதிரே. இவ எட்டடி தள்ளி நின்னாலே உனக்கு பத்தடி உள்ளுக்குள் பதறி எழுந்துடும். இப்போ இவ வேற. கையை போட்டு,காலை போட்டு. ஹ்ம் ஹ்ம்.வேண்டாம் டா கதிரு. இவ மனசுல நம்ம மேல விருப்பமே இல்லாம இவளை நம்ம தொட்டுட்டா அப்புறம் காலத்துக்கும் இவ மனசுல நம்மனால இடம் பிடிக்கவே முடியாது. முதல்ல இவ மனசுல நம்ம நிலையான இடத்தை பிடிப்போம். அப்புறம் இவளை ஒரு பிடி பிடிப்போம். அதுவரைக்கும் கை வாய் காலுன்னு எல்லாத்தையும் மூடிக்கிட்டு படுத்துட்டு கதிரு,” என்று எண்ணிய கதிர்.
பொறுமையாக முல்லையின் கையையும் காலையும் தன் மீது இருந்து எடுத்து விட்டவன். கட்டிலில் இருந்து எழுந்து அவளை ஏக்கத்துடன் பார்த்து. போர்வையை சரி வர அவளுக்கு போர்த்திவிட்டு, அறையின் கதவை திறந்துக்கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் சென்று படுத்தவனின் மனதில். முல்லை அவனை உறக்கத்தில் கட்டி அணைத்து படுத்துக்கொண்ட நிகழ்வுதான் வந்து போனது.
விடியல் காலை 5மணி அளவில் முல்லை உறக்கம் கலைந்து எழுந்தவள் அருகே கதிர் இல்லையென்று அறிந்துகொண்டவள்,
“மாமா சார் எங்க போனாரு” என்று எண்ணிக்கொண்டே. அறையின் கதவை பார்க்க. அங்கே தாப்பா திறந்து இருக்க, “காலையில எழுந்து எங்க போய் இருப்பாரு. ஒரு வேள ஜாகிங் போயிட்டாரா”. என்று எண்ணியவள்.
“சரி. அப்பா இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு சொன்னாரே. நம்ம மாமா சார் வரதுக்குள்ள போய் குளிச்சிட்டு வந்துடலாம்” என்று எண்ணிய முல்லை, தன் அறையின் கதவை பூட்டிக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவள், தலைக்கு குளித்து. கூந்தலில் ஈர துணியை சுற்றிக்கொண்டு, மார்பளவு துண்டோடு தன் அலமாரியை திறந்து புது புடவையை தேடிக்கொண்டு இருந்தாள்.
இரண்டு மூன்று புடவையை நிராகரித்தவள் கடைசியாக தங்க நிறத்தில் உள்ள பட்டுப் புடவையையும்,அதற்கு தோதான ரவிக்கையும் எடுத்துக்கொண்டு ஆள் உயர கண்ணாடியின் முன்னே நின்று தன் மார்பளவுக்கு கட்டியிருந்த துண்டை கழட்டி ரவிக்கையை அணியபோகும் போது தன் முன்னே இருந்த கண்ணாடியை பார்த்தாள்.
தூக்க கலகத்தில் கதிர் இவர்கள் கட்டிலின் மேலே அமர்ந்து இருந்தவன், ”குட் மார்னிங்” என்று இரண்டு கைகளை தன் தலைக்கு மேல் தூக்கியபடி காலை வணக்கத்தை சொன்னவனின் கண்கள் முல்லை இருந்த கோலத்தை பார்த்து,
“ஏய். எ..ன்..னடி இது” என்றவனின் குரலை கேட்டு முல்லைக்கு விழிகள் பிதுங்கி.
“மாமா சார். நீங்க எப்படி ரூமுக்குள்ள? நான் கதவை பூட்டிட்டு தானே குளிக்க போனேன்” என்றவள். அவசர அவசரமாக தன் புடவையயை எடுக்க நினைத்தவளின் அரைகுறை தரிசனம் ஆணின் மனதை ஆட்டம் காண வைத்த நிலையில்,
'என்ன நடந்தாலும் பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று நினைத்த கதிர்வேலன். மின்னல் வேகத்தில் முல்லையை நெருங்கி, அவள் சுதாரிக்கும் முன்னே அவளை கட்டி அணைத்துக்கொண்டவனின் செயலில் முல்லையின் சப்த நாடியும் அடங்கிப்போனது. குளித்து முடித்து புது புடவையை தேர்ந்தெடுத்து கண்ணாடி முன்னே நின்றிருந்தவள், கூந்தலில் ஈரத் துணியை சுற்றியிருந்ததால், அவள் முகம் இன்னும் மலர்ந்த மாதிரி பளிச்சென தெரிந்தது.
அந்த நேரத்தில் கட்டிலில் சாய்ந்து இருந்த கதிர் திடீரென “குட் மார்னிங்!” என்று சொல்ல,
அவனின் குரலில் திடுக்கிட்டு அச்சத்தில் திரும்பியவள், “மாமா சார்… நீங்க… நீங்க எப்படி ரூம்ல இருக்கீங்க? நான் கதவை பூட்டிட்டேனே!” என்று அவசரமாக புடவையைக் கட்ட முயன்றவளின் அரைகுறை தோற்றம் கதிரின் கண்களுக்கு மின்னல் போலப்பட்டு அவன் மனம் துடித்தது.
அவளின் அழகில் தன்னிலை மறந்த கதிர், ஒரு நொடிக்கூட யோசிக்காமல், மின்னல் வேகத்தில் முல்லையை நெருங்கி அவளை நெருக்கமாக கட்டி அணைத்துக்கொண்டான்.
கதிரின் இந்த செயலில் துடிதுடித்த முல்லை,”அய்யோ!” என்று திடுக்கிட்டவள், “என்ன பண்ணறீங்க மாமா சார் … என்னை விடுங்க!” என்று கதிரை தள்ள முயன்றாள்.
அவள் குரலைக்கேட்டு தன்னிலை உணர்ந்த கதிர்,”ஐயையோ.கதிர் என்ன பண்ணி வச்சுருக்க.” என்று தனக்குள் நினைத்தவன். “ச்ஷ்… அசையாதே!” என்று பொறுமையாக சொல்ல.
“ஏன்… என்னாச்சு…” என்று முல்லை பயந்தவளாக கேட்டவளின்
குரல் நடுங்கியது.
அவள் குரலை வைத்தே. சுதாரித்து கொண்ட கதிர், ”உ...உன் தோள் மேல கருப்பாம்பூச்சி …” என்று கதிர் சொன்ன தருணத்தில் முல்லை பதறி போனவள்,
“எங்க… எங்க” என்றவள் அவனை மேலும் வலுவாகப் பற்றிக்கொண்டாள். அவள் கை நடுங்கியது. மூச்சு தடுமாறியது.
கதிரோ சிரிப்பை அடக்கிக் கொண்டே,”இதோ உன் முதுகுலடி” என்று சொல்ல,
“மாமா சார். எனக்கு பூச்சின்னா பயம். ஐயோ அதை விரட்டுங்க” என்ற முல்லை. மேலும் இறுக்கமாக அவனை கட்டிக்கொண்டாள்.
அவளின் அணைப்பில் கதிரவனின் தேகமே ஜில்லேன்று இருக்க, ”மாமா சார். அது போச்சா” என்ற முல்லை கண்கள் மூடி இருந்தவளுக்கு உடலில் நடுக்கம் ஏற்பட...
“இரு இரு நான் போக சொல்றேன்” என்ற கதிர்,”உஷ். உஷ்” என்று இல்லாத கருப்பாம்பூச்சியை விரட்டியவன். முல்லை அவள் முகத்தை அவன் மார்பில் சாய்ந்து இருந்த தருணத்தை ரசித்துக்கொண்டு இருந்தான்.
முல்லை இன்னும் தன்னை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிர் சிரித்துக்கொண்டே. ”ஹாங். பூச்சி போச்சு” என்றதும்,
தன் ஒற்றை கண்ணை திறந்து பார்த்த முல்லை.”அது போச்சா” என்று கேட்க.
“ஹாங் போச்சு” என்றவனின் பார்வையை கஷ்ட்டப்பட்டு கட்டுப்படுத்தியவன்,
“சரி… நான் உன்னை கருப்பாம்பூச்சிக்கிட்ட இருந்து காப்பாத்தினேனே… அதுக்கெல்லாம் தேங்க்ஸ் இல்லையா!” என்று கிண்டலாக கேட்க.
முல்லை அதுவரை அவன் அருகே ஒட்டி நின்று இருந்தவள், திடீரென விழித்து கொண்டவள் போல அவனைத் தள்ளி விட்டு,
“சாரி. சாரி மாமா சார்.” என்றவள் பதற்றதுடன் கையில் கிடைத்த துணியை எடுத்துக்கொண்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்தவளை பார்த்து கதிர் பெருமுச்சோடு தனக்குள் சிரித்துக்கொண்டே தனக்கு தேவையான துணியை எடுத்துக்கொண்டு அந்த அறையின் உள் தாப்பாளை திறந்தப்படி வெளியே வந்தான்.
காலை நேரம் என்பதால். மாட்டு தொழுவத்தில் இருந்து ஒரு சொம்பு பாலுடன் இசக்கி வீட்டுக்குள் நுழைந்தவர்.
“மாப்புள்ள தம்பி. உங்களுக்கு டீ வேணுமா காபி வேணுமா” என்று கேட்க.
“எல்லோரும் குடிக்கிறதே எனக்கும் கொடுங்க” என்ற கதிர், முருகன் வீட்டின் தோட்டத்துப்பக்கம் சென்று அங்குள்ள வெப்பமரத்தின் குச்சியை எடுத்து பற்களை துலக்கிக்கொண்டே. வெப்பமரத்தை அண்ணாந்து பார்த்தவன். தூய்மையான காற்றை சுவாசித்தப்படியே. பெருமுச்சுடன் இவர்கள் சிறு வயதில் அங்கே ஊஞ்சல் கட்டி விளையாடியதை எண்ணிக்கொண்டே கிணற்றிடி பக்கமே குளியலையும் முடித்து, வேறு ஆடையில் சூரிய நமஸ்காரம் செய்தவரின் முன்னே வெள்ளை வேஷ்டி சட்டையில் முருகன் தரிசனம் கொடுத்தவரின் கையில் முல்லையின் கைபேசி இருந்தது.
“என்ன மாப்புள்ள. இங்கேயே குளிச்சிட்டிங்களா” என்று முருகன் கேட்க.
“ம்.” என்ற கதிரின் முன்னே முருகன் கைபேசியை நீட்டியவர்,
”மாப்புள்ள. முல்லை போனுக்கு ரோஜா கூப்பிட்டு இருக்கு. இந்தாங்க பேசுங்க” என்றார்.
கதிர் போனை வாங்கிக்கொண்டு. ஒரு இடத்தில் அமர்ந்தவன். ”சொல்லுங்க அம்மா” என்றதும்.
“என்ன வாத்தி. பொஞ்சாதி வீட்டுக்கு போனதும் எங்களை எல்லாம் மறந்துட்டீங்களா” என்று கேட்டதும், ஏனோ கதிரின் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி நிலவியது.
தன் அண்ணனின் அமைதியை மறுமுனையில் அறிந்து இருந்த ரோஜாவோ.”என்ன வாத்தி. என்ன பதிலையே காணோம், என்னமோ சரியில்லாத மாதிரி இருக்கே. நீங்க முதல்ல வீடியோ call வாங்க” என்றதும் கதிர் வீடியோ அழைப்பை on செய்தான்.
தன் அண்ணனின் முகத்தில் கூடுதலான பொலிவை கண்ட ரோஜா. ”வாத்தி, என்னாச்சு.” என்று கேட்க, கதிரின் இதழ் ஓரத்தில் புன்னகை மொட்டு விரிந்தது.
“ஐயோ. என்ன இது வெக்கமா, வாத்திக்கு வெக்கம் எல்லாம் வருமா” என்று ரோஜா கேட்க.
“என்ன நீங்க, ஏன் இப்படி கிண்டல் பண்றிங்க. சரி நீங்க சொல்லுங்க. அப்பா எப்படி இருக்காரு. ஆமா. ஜீவா அண்ணன் வீட்டுக்கு வந்துடுதா, நேத்து நடந்த கல்யாணத்த பற்றி ஜீவா அண்ணன் என்ன சொன்னாரு” என்ற கதிரை கோவமாக முறைத்தாள் ரோஜா.
“என்னம்மா ஏன் முறைக்கிறிங்க”என்று கதிர் கேட்டதும்,
“பின்ன என்ன வாத்தி. இதுல அண்ணன் நினைக்க என்ன இருக்கு, இனியாவது நீங்க உங்க மனசுல இருக்குற காதலை முல்லை அண்ணிக்கு புரிய வைத்து. அவங்ககூட சந்தோசமா வாழ்க்கையை ஆரம்பியுங்க” என்று ரோஜா சொல்ல. மீண்டும் கதிருக்கு. முல்லையின் அருகாமையை எண்ணி உடலில் புதிய ரத்தம் பாய்வதை போல உணர்வு தோன்றியது.
“ம். சரி ம்மா. நான் பார்த்துக்குறேன்.ஆமா ஜீவா அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலையா” என்று கதிர் கேட்க.
“இல்லை” என்ற ரீதியில் தலையசைத்தாள் ரோஜா.
“ம், சரி ம்மா.நீங்க நாகாக்கிட்ட சொல்லி ஜீவா அண்ணன் எங்க போனாருன்னு தேட சொல்லுங்க” என்று கதிர் சொல்ல.
“ம். சரி வாத்தி. நாங்க இங்க பார்த்துப்போம். நீங்க உங்க காதல் மனைவியுடன் ஹாப்பியா இருந்துட்டு வாங்க” என்ற ரோஜா. தன் கைபேசி இணைப்பை துண்டிட்டதும். முல்லையின் கைபேசி திரையில் (wallpaper) அவளின் புகைப்படம் இருந்ததை பார்த்தவன்.
சிறு புன்னகையுடனே கைபேசியோடு வீட்டுக்குள் நுழைந்தான்.