• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
66
பாலைவனத்து முல்லை
பகுதி – 31.1

“என்ன பூ வச்சிக்கலையா” என்று கதிர் கேட்க. ”ஏன். நான் முடியாதுனு சொன்னா நீங்க வச்சி விட போறிகளா” என்று முல்லை கேட்க.

“நீ முடியாதுன்னு சொன்னா இப்படி பிடுங்கி உன் தலையில என்னால இந்த பூவை வச்சி விட முடியும்” என்ற கதிர்... முல்லை யூகிக்கும் முன்னே அவள் தலையில் தன் கரங்களால் பூவை சூடி இருந்தான்.

கதிரின் செயலில் முல்லையின் மனதிற்குள் மத்தாப்பு வெடிக்க.
“போகலாமா” என்ற கதிரின் விழிகள் பூக்களை சூடி இருக்கும் முல்லையின் அழகை ரசித்தான்.

மலர் அவளின் கூந்தலை அலங்கரிக்க வந்ததா, அல்லது அவளின் கூந்தலால் மலர் தன் அழகை கண்டதா! இன்று தனக்குள் தன் மனைவியின் பேரழகை ரசித்துக்கொண்டு இருந்தான் கதிர்வேலன்.
இருவரும் ஒருவரை மறந்து ஒருவர் விழிகளால் பார்த்தப்படி நின்று இருக்க. மேகம் இருள் சூழ்ந்து வானம் மழை பொழிய காத்து இருப்பதை அறிந்துக்கொண்ட கதிர்.

“சீக்கிரம் வா. மழை வர மாதிரி இருக்கு” என்றவன்.நடையில் வேகத்தை கூட்டியவனின் பின்னே கன்னுகுட்டியை போல ஓடினாள் முல்லை.

சில நிமிட ஓட்டத்தில் இருவருமே முருகனின் வீட்டுக்குள் நுழைய.
“என்னமா இது. நீங்க ரெண்டு பேரும் எங்க போனீங்க” என்று பதற்றதுடன் கேட்டார் முருகன்.

தன் தந்தையின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் முல்லை தவித்து இருக்க.

“ஏங்க. அதான் போனவுங்க வந்துட்டாங்களே. ஏன் பசங்கள கேள்வி மேல கேள்வி கேக்குறீங்க. முல்ல. மாப்பிளையை அழைச்சிக்கிட்டு சாப்பிட வாங்க” என்றார் பார்வதி.

“மாமா சார். வாங்க சாப்பிடலாம்” என்று முல்லை அழைக்க.முருகனின் வீட்டில் அன்றைய இரவு முல்லை கதிருக்கு திருமண விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


இதே சமயம், பண்டியனின் வீட்டில் அனைவரும் அமர்ந்து இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில்.
“ஏன் மீனா அண்ணி. பெரியவர் போன் பண்ணாரா. நான் பண்ணாலும் அவரோட போன் reach ஆகலையே” என்று ரோஜா கேட்க.

பாண்டியன் இவர்கள் பேச்சை கேட்டும் கேட்காதப்படி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

“ஜீவா மாமா போன் அவரோட ரூம்ல தான் இருக்கு. அது சார்ஜ் இல்லாம சுவிட்ச் off ஆகியிருக்கு” என்று மீனா சொல்ல.

“போனை கூட எடுக்காம இந்த அண்ணன் எங்க போனாரு.” என்று எண்ணிய ரோஜாவிற்கு. கதிர் முல்லை திருமணம் முடிந்ததை ஜீவா கேள்விப்படும் தருணம் அவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று எண்ணிய ரோஜாவிற்கு. ஜீவா எப்போது வீட்டுக்கு திரும்புவான் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

“ரோஜா. எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. நான் நேரத்தோடு போய் படுத்துக்குறேன். நீயும் போய் படு” என்ற பாண்டியன் அவர் அறைக்குள் சென்றதும். மீனா இரவு உணவை சாப்பிட்டுக்கொண்டு இருந்தவளின் சிந்தை முழுதும் வேறு எங்கோ அலை பாய்ந்து கொண்டிருந்தது.

மீனாவின் முகத்தை வைத்து அவள் எண்ண அலைகளை கணித்த ரோஜா, “என்ன அண்ணி. ஜீவா அண்ணன் இன்னும் வீட்டுக்கு வரலைன்னு கவலையாய் இருக்கா?” என்று கேட்க

“அவரு என்ன சின்ன குழந்தையா. அவருக்கு தானா வீட்டுக்கு வரத் தெரியாதா என்ன!! என் நினைவெல்லாம் இப்போ கதிர் மாமாவை பற்றிதான்” என்றாள் மீனா

“என்ன. வாத்திதையை பற்றி நீங்கள் நினைக்கிறீங்களா? ஏன் அவருக்கு என்ன” என்று ரோஜா கேட்க

“இல்ல. கதிர் மாமாவுக்கு விருப்பம் இல்லாமல் தானே முல்லை கழுத்துல அவர் தாலி கட்டியிருக்காரு. அதான் அவர் எப்படி சந்தோஷமாக வாழ போறாருன்னு யோசிக்கிறேன்” என்றாள் மீனா
மீனாவின் வார்த்தையை கேட்டு ரோஜாவிற்கு சங்கடம் இருந்தாலும்,
அவள் குரலை செருமி.

“ஆனா அண்ணி.உங்களுக்கும் ஜீவா அண்ணனுக்கும் கூட தான் விருப்பமே இல்லாமல் கல்யாண நடந்த மாதிரி எனக்கு தோணுது.உங்க கல்யாணத்துக்கு பின்னாடி என்ன மர்மம் இருக்குன்னு இன்ன வரைக்கும் எங்களுக்கும் தெரியல.நாங்களா தெரிஞ்சுக்க விருப்பப்பட்டாலும் ஜீவா அண்ணன் அதைப் பற்றி கேட்காதீங்கன்னு திட்டவட்டமா சொல்லிட்டாரு. ஆக மொத்தம் நீங்களும் ஜீவா அண்ணனும் திருமணம் செஞ்சுக்கிட்ட காரணத்தால தான் இங்கே ஏக்கப்பட்ட குழப்பம் நடந்திருக்கு. எது எப்படியோ.இப்போ உங்களுக்கு ஜீவானந்தம் புருஷன். அதே மாதிரி முல்லை அண்ணிக்கு வாத்தி தான் புருஷன். இதுதான் நிரந்தரம்” என்ற ரோஜா,சாப்பிட்டு முடித்து கையை அலம்பி கொண்டு தன் அறைக்குள் சென்று இருந்தாள்.

இதே தருணம் சிவகங்கையில் முருகனின் இல்லத்தில், கதிர், முல்லை, பார்வதி முருகன் என்று நால்வரும் இரவு உணவை முடிக்க,

“என்ன மாப்ள. சாப்பாடு பிடிச்சிருந்தா” என்று பார்வதி கேட்க.

”ம்” என்ற ஒற்றை எழுத்தை உச்சரித்தார் கதிர்.

“பார்வதி. என்னதான் நீ நல்லா சாப்பாடு செஞ்சி போட்டாலும். பாவம். கதிர் மாப்பிள்ளை இந்த அடிபட்ட கைய வச்சுக்கிட்டு நல்லா அள்ளி எடுத்து சாப்பிட முடியல” என்று முருகன் சொல்ல.

“ஏன் மாமா சார். யாரோ ஒருத்தங்க தேங்காய் உடைச்சு கொடுக்க சொன்னாங்கன்னு! நீங்க பாட்டுக்கு அருவாவை எடுத்து கையில போட்டுக்கிட்டிங்களே!! பார்த்து தேங்காய் உடைக்ககூடாதா” என்று முல்லை கேட்க

“க்கும்.உன்னை பார்த்ததால தானே நான் தேங்காயை தவற விட்டு. என் கையை வெட்டிக்கிட்டேன்” என்று தனக்குள் நினைத்த கதிர்,
தனம் கதிர் நிச்சயம் நடக்க இருந்த தேதியில். யாரோ ஒரு பெண்மணிக்கு தேங்காய் உடைத்துக் கொடுக்க உதவி செய்த கதிரின் கண் முன்னே. தங்க விக்ரகம் போல பட்டு சேலையில் முல்லை நடந்து வந்ததை பார்த்து ரசித்த கதிர். தன் கவனத்தை சிதற விட்டதை இன்று எண்ணி பார்த்தவரின் மனதிற்குள் எப்போதும் முல்லை ஒருவள் தான் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருந்தாள்.

“சரி சரி தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போன மாதிரி கைக்கு சின்ன காயத்தோடு போய்டுதுனு சந்தோஷப்படுங்க” என்று பார்வதி சொல்ல.

“அம்மாடி முல்ல. நீங்க நேரத்தோட போய் படுங்க. நாளைக்கு நம்ம வெள்ளன கோவிலுக்கு கிளம்பனும்” என்று முருகன் சொல்ல,

கதிர் நேரே முதல் ஆளாக முல்லையின் அறைக்கு செல்ல.
தண்ணீர் குவளையுடன் முல்லையும் அவள் அறைக்குள் புகுந்தாள்.

“ஏங்க. என்னதான் இருந்தாலும். சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு பண்ணாமல் இவுங்க ரெண்டு பேரையும் ஒரே ரூம்ல படுக்க வைக்கிறது சரி தானா!?” என்று பார்வதி கேட்க.

“இங்க பாரு பார்வதி. கடமைக்குனு முதல் இரவு கொண்டாடுன காலமெல்லாம் நம்ம காலத்தோடு முடிந்து போச்சு.இப்போ எல்லாம் புருஷன் பொஞ்சாதி அவங்களுக்குள்ள பேசி எப்ப அவங்க வாழ்க்கையை ஆரம்பிக்கலாமுன்னு அவங்களே முடிவை எடுத்துக்குறாங்க.

அதுவும் இல்லாம கதிரும் முல்லையும் இப்போ இருக்கிற மனநலமையில நம்ம இந்த சடங்கு சம்பிரதாயத்தை எல்லாம் விமர்சையாக பண்ண வேண்டாம். அவங்க ரெண்டு பேரும் அவங்க போக்குல அவங்க வாழ்க்கையை வாழட்டும்” என்ற முருகனின் பேச்சில் பார்வதியும் அதுதான் சரி என்று நினைத்தார்.

இதே தருணம் முல்லையின் அறைக்குள் நுழைந்த கதிர்.
“இன்னைக்கு சரக்கு போடாம எனக்கு தூக்கமே வராது” என்றதும்.

“கண்ணை மூடி படுங்க. அதெல்லாம் தூக்கம் தானா வரும்” என்றவள். கட்டிலில் ஒரு பக்கத்தை ஆக்கரமித்து இருந்தாள்.

“இந்தா. நீ என்ன கட்டில்ல படுக்குற” என்று கதிர் கேட்க.

“பின்ன. வேற எங்க படுக்க?” என்று புரியாமல் கேட்டாள் முல்லை.

“நீ இங்கன படுத்தா நான் எங்க படுக்கறது” என்று கதிர் கேட்க.

“என்ன மாமா சார் உளறுறீங்க. நீங்களும் இதே கட்டில்ல தான் படுக்கணும்” என்று முல்லை சொல்ல.

“என்ன. ஐயோ!! நான் உன்கூடவா!?” என்ற கதிர். சட்டென்று கட்டிலில் இருந்து எழுந்ததும்.

“ஏன். என்கூட படுக்க பயமா இருக்கா.” என்று கிண்டலாக கேட்டாள் முல்லை.

“ஆமா.பயமா தான் இருக்கு. நீ தான் தூக்கத்துல கழுத்துல காலை தூக்கி போடுற ஆளாச்சே.” என்று கதிர் சொல்ல. முல்லை கண்கள் மிளிர.

“ஏன் மாமா சார். நான் தூக்கத்துல காலை தூக்கி போடுவேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்க.

“என்னடி, நான் இல்லாததையா சொல்லுறேன். எத்தனை முறை நீ என் கழுத்து மேல காலை போட்டு இருக்க தெரியுமா” என்று கதிர் சொன்னதும்.

சிறு வயதில். திருவிழா சமயங்களில் இவர்கள் அனைவரும் ஒன்றாக உறங்கும் சமயம், முல்லையின் அருகே யாரும் படுக்க தயங்கும் நேரத்தில் கதிர் அவள் அருகே படுத்து இருந்த நிகழ்வை அவன் இன்னும் கருத்தில் வைத்து உள்ளான் என்பதை எண்ணி முல்லை தனக்குள் சிரித்துக்கொண்டாள்.

“என்னடி. இன்னும் நீ அப்படியே தானே இருக்க!?.” என்று கதிர் கேட்க.

“யாருக்கு தெரியும். நான் என்ன என் அம்மா பக்கத்துலயே படுத்து இருக்கேன். நான் காலை தூக்கி போடுறேனா.இல்ல கையை தூக்கி போடுறேனான்னு என்கிட்ட சொல்லி காமிக்க” என்ற முல்லை.போர்வையை உச்சி முதல் பாதம் வரை போர்த்திக்கொண்டு.

“குட் நைட் மாமா சார்” என்றவளின் செயலை முறைத்து பார்த்து இருந்தான் கதிர்வேலன்.

“என்ன இவ. சீரியல் எல்லாம் இவ பார்க்க மாட்டாளா. விருப்பம் இல்லாத கல்யாணம் நடந்தா, பொண்ணும் பையனும் மெத்தை பாய்ன்னு தனி தனியா தானே படுத்து இருப்பாங்க. இவ என்ன நம்மள ஒரே கட்டுல்ல படுக்க சொல்லுறா. ஒரு வேள! நம்ம அதுக்கெல்லாம் ஒர்த் இல்லைனு நினைச்சிட்டாளா” என்ற கதிர். நீண்ட நிமிடங்கள் உறங்காமல் கட்டிலின் ஒரு விளிம்பில் அமர்ந்து இருந்தான்.

நேரம் சில நிமிடங்கள் கடந்த நிலையில். தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த முல்லையின் போர்வை விலகி. அவளது கள்ளம் இல்லாத அழகிய முகம் கதிரின் கண்களுக்கு விருந்தானது.

முல்லையின் அழகை தன்னை மறந்து ரசித்து பார்த்த கதிர், "அம்மா சொன்ன மாதிரி என் காதல் உண்மை தான். அதான்!!இத்தனை பிரச்சனைகள் கடந்தும் முல்லையே எனக்கு பொஞ்சாதியா கிடைச்சு இருக்கா. ஆனா, நான் இவளுக்கு புருஷனா கிடைச்சதுல பாவம் இவளுக்கு தான் சந்தோசம் இருக்காதுன்னு நினைக்கிறேன்” என்று தனக்குள் எண்ணிய கதிர். அவளை ரசித்து பார்த்தப்படி அப்படியே உறங்கியும் போனான்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top