• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
64
பாலைவனத்து முல்லை
பகுதி – 3௦.2

சில நிமிட நடையில். கதிர் சாராயக்கடையை கண்டுகொண்டவன், கடைக்குள் நுழையும் வேளை. 'பார்த்தியா பங்காளி. இப்போ எல்லாம் புருஷன் பொஞ்சாதின்னு ரெண்டு பேருமே குடியும் குடுத்தனுமா சாராயக் கடைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க' என்று ஒருவன் சொல்ல,

'எந்த மானம் கெட்டவன் மதுக்கடைக்கு மனைவியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கான்!?' என்று வாய்விட்டு புலம்பியபடி கதிர் திரும்பிப் பார்க்க. கதிரின் விழிகளுக்கு முன்னே நின்றிருந்தாள் அவனின் மனைவி முல்லை.

அவளை அங்கே சற்றும் எதிர்பாராத கதிர்,'ஏய். நீ. நீ எப்படி இங்க வந்த' என்று பதறியதும்,'நடந்து தான்' என்றாள் முல்லை.
அவளின் பதிலில் கடுப்பானவன். தன் நெற்றியை வருடி பல்லை கடித்தபடி.

'நீ நடந்து வந்தியா இல்ல விமானத்துல வந்தியான்னு நான் கேக்கல.நீ ஏன் இங்க வந்தன்னு கேட்டேன்' என்றார் கதிர்.

அவன் கேள்வி அவளுக்கு புரிந்து இருந்தாலும்.'ஏன் வந்தேனா!!, என்ன சொல்ல சொல்றிங்க??. ஆமா நீங்க ஏன் வந்திங்க??' என்று முல்லை எதிர் கேள்வி கேட்க.

'ம். வேற எதுக்கு. நான் தண்ணி அடிக்க வந்தேன்' என்று கதிர் சொன்னதும்.'ம். நான்.தண்ணி அடிச்சிட்டு மட்டையாக போற உங்கள தூக்கிட்டு போக வந்தேன்' என்றாள் முல்லை.

முல்லையின் பதிலில் மேலும் கோவமடைந்த கதிர். அவள் கையை பிடித்து ஓரம் இழுத்து வந்தவன், 'ஏய். என்னடி லந்து பண்றியா. ஒழுங்கா இங்க இருந்து போயிடு' என்று பல்லை கடிக்க,

'அப்போ நீங்களும் வாங்க போகலாம்' என்றாள் முல்லை.

'இங்க பாரு டி. நீ ரொம்ப பண்ற, கடைசியா சொல்றேன். நீ வீட்டுக்கு போ. நான் குடிச்சிட்டு நேரா உங்க வீட்டுக்கு வரேன்' என்று கதிர் சொல்ல.


'நேரா வந்தா சுவத்துல தான் முட்டிக்கணும் மாமா சார். அதனால நீங்க இப்போ என்கூடவே வாங்க' என்று முல்லை சொல்ல.

'அடியே ரவா லட்டு. குடிக்கலைன்னா எனக்கு தூக்கம் வாரது டி' என்று கதிர் சொல்ல.

'அப்படினு பார்த்தா நான்கூட தான் நல்லா தூங்கி ரொம்ப வருஷமாச்சு, அப்போ நானும் குடிக்கவா' என்ற முல்லையை ஒற்றை புருவம் தூக்கி முறைத்தான் கதிர். 'என்ன முறைக்கிறீக! அப்ப நானும் குடிக்க வா' என்று மீண்டும் முல்லை கேட்க,

'ஓ,இப்பதான் விவரம் புரியுது. அப்போ உனக்கு சரக்கு வாங்கத்தான் இவ்வளவு தூரம் வந்தியா' என்று கதிர் கேட்க

'உலராதீங்க மாமா சார், நான் உங்க மேல ரொம்ப கோவத்துல இருக்கேன். வாங்க வீட்டுக்கு போகலாம்' என்றாள் முல்லை.

'ஏய்,? உனக்கு ஒரு தடவ சொன்னா புரியாதா. தண்ணி அடிக்கலனா எனக்கு தூக்கம் வராது. நான் தூங்கலைன்னா கண்டிப்பா உன் அப்பா கிட்ட நான் சண்டை போடுவேன்' என்று கதிர் சொல்ல

'ஏன் ஏன் ஏன். என் அப்பா என்ன பண்ணாரு, அவர்கிட்ட ஏன் நீங்க சண்டை போடணும்' என்று கேட்டாள் முல்லை.

'அதெல்லாம் எனக்கு தெரியாது.ஒன்னு நான் தண்ணி அடிக்கணும். இல்லனா சண்டை போடனும். இது ரெண்டுல ஏதாவது ஒன்னு தான் பண்ணுவேன். நீயே சொல்லு.நான் தண்ணி அடிக்கவா.இல்ல சண்டை போடவா' என்று கதிர் கேட்க,

சில நொடிகள் யோசித்த முல்லை, 'இங்க பாருங்க மாமா சார், நீங்க வெளிய தண்ணி அடிச்சுட்டு வீட்டுக்கு வரது எனக்கு பிடிக்கல. வேணும்னா சரக்க வாங்கிட்டு வாங்க. நம்ம ரூம்ல வெச்சி யாருக்கும் தெரியாம குடிச்சிட்டு, அப்படியே படுத்துருங்க' என்று முல்லைச் சொல்ல

'இல்லையே. உன்ன பார்த்தா எனக்கு சந்தேகமா இருக்கு' என்றான் கதிர்

'என்ன பார்த்து உங்களுக்கு என்ன சந்தேகம்' என்று முல்லை கேட்க

'ஹய். உண்மைய சொல்லு, உனக்காக சரக்கு வாங்க தானே இவ்வளவு தூரம் வந்த' என்று கதிர் கேட்க.

'நேத்து மூக்க முட்ட குடிச்சிட்டு நீங்க பண்ண வேலையாலத்தான் இன்னிக்கு ரோஜாவுக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னு போச்சு,நானே அந்தக் கவலையில இருக்கேன்,நீங்க அது தெரியாம என்ன கடுப்பேத்தி பார்க்காதீங்க' என்று முல்லைச் சொல்ல

'இங்க பாரு. அம்மாவுக்கு அந்த பாவி, இல்ல இல்ல. ரவி கூட கல்யாணம் ஆகாம இருந்ததே நல்லது தான். என் அம்மா இருக்குற அழகுக்கும் அறிவுக்கும் அவன் எல்லாம் ஒரு ஆளா. அதுவும் இல்லாம எவ்வளவு திமிரு இருந்தா என் அம்மாவை பத்தி அவன் தப்பா பேசி இருப்பான்' என்று கதிர் தன் தங்கையை மனதில் கொண்டு ரோஜாவை இகழ்ந்து பேசிய ரவியை வசைப்பாடி கொண்டு இருந்தான்.

'அது என்னமோ உண்மைதான் மாமா சார். அவங்க குடும்பத்தில் இருக்கிறவங்க நம்ம குடும்பத்தை ரொம்ப கேவலமா பேசினாங்க. அதனால தான் நானும் அந்த தனத்த செவில் மேலே இரண்டு வச்சேன்' என்று முல்லை சொல்ல

'ஆனா.நீ அடிச்ச அடி ரோஜா அம்மாவை தப்பா பேசினதுக்காக மட்டுமுன்னு எனக்கு தோணல. இதுல வேற ஏதோ உள் குத்து இருக்கு' என்று கதிர் சொல்ல.

'என்ன உள் குத்து' என்று கேட்டாள் முல்லை.

'அது எனக்கு சரியா தெரியல. ஆனா உனக்கு அந்த தனத்தை பிடிக்கல தானே' என்று கதிர் கேட்க.

'ஏன். உங்களுக்கு அவங்கள ரொம்ப பிடிச்சி இருக்கோ?'' என்று கேட்ட முல்லையின் முகத்தில் முதல் முறை சின்ன.மிக மிக சின்னதாக கோவம் தெரிந்ததை கதிரும் கண்டுகொண்டான்.

'ஆமா. அவங்கள யாருக்காவது பிடிக்காம இருக்கும்மா' என்று கதிர் சொல்ல,

'அப்டி என்ன அவங்ககிட்ட இருக்குனு இப்படி வழியுறீங்க' என்று கேட்டாள் முல்லை.

'வழியாம!! பின்ன??, தனா பார்க்க எவ்ளோ அழகு' என்ற கதிரை பார்த்து சட்டென்று முல்லை சிரித்ததும்.

'ஏன் டி சிரிக்கிற' என்று கோவமாக கேட்டான்.

'அந்த தனத்தை விட அவங்க அம்மா சரஸ்வதி அழகா இருக்காங்க. நீங்க வேணா அவங்கள ட்ரை பண்ணுங்களேன்' என்ற முல்லையை கடுப்புடன் பார்த்த கதிர். 'அவங்க எனக்கு அக்கா மாதிரி' என்றான்.

'அது என்ன மாதிரி, ஒன்னு அக்கானு சொல்லுங்க. இல்லைனா இல்லைனு சொல்லுங்க. அது என்ன மாதிரின்னு ஒரு மாதிரி சொல்றிக' என்று முல்லை கேட்க.

'ஐயோ. இப்போ உனக்கு என்னதாண்டி பிரச்சனை' என்று கேட்டான் கதிர்.

'எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. வாங்க வீட்டுக்கு போகலாம்' என்ற முல்லையை முறைத்துக்கொண்டே கதிர் மீண்டும் மதுக்கடைக்கு சென்றவனை பின் தொடர்ந்து முல்லையும் செல்ல.

'அடியே. நீ இங்கேயே இரு. நான் உள்ள போய் வாங்கிட்டு வரேன்' என்று கதிர் சொல்ல.

'இல்ல இல்ல. அதெல்லாம் முடியாது. நீங்க உள்ள போனா அதோட மயக்கத்துல அப்படியே கீழே விழுந்துடுவிங்க.நான் உங்கள தனியா அனுப்ப மாட்டேன். வாங்க வேணுமா ரெண்டு பேரும் உள்ள போகலாம்' என்ற முல்லை மது கடையை எட்டி பார்த்தாள்.

ஏற்கனவே கதிரும் முல்லையும் நின்று பேசுவதை சிலர் கேள்வியாக பார்த்து இருக்க.'எல்லாம் என் தலையெழுத்து டி. எனக்கு சரக்கே வேணா. வா வீட்டுக்கு போகலாம்' என்ற கதிர் வேகமாக முருகனின் வீட்டை நோக்கி நடக்க.அவனை சிறு புன்னகையுயும் நிறைய மன நிம்மதியுடனும் பின் தொடர்ந்து சென்றாள் முல்லை.

*******************************************

கதிரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் முல்லை வேகமாக நடந்து செல்ல. சட்டென்று அவள் காலில் கல் குத்தி.'ஆ.' என்ற சத்ததோடு அப்படியே நின்று விட்டாள்.

முல்லையின் குரலை கேட்டு கதிர் திரும்பி பார்த்தவன் ,'ஏய் என்ன நீ. ஏன் செருப்பு போட்டுட்டு வரலையா' என்ற கதிர் வேகமாக அவள் அருகே ஓடி வர.

'நான். நான் உங்கள பிடிக்கணும்னு அவசரத்துல செருப்பு போடாம வேகமா ஓடி வந்துட்டேன் மாமா சார்' என்றாள் முல்லை.

'ஆமா.நான் உங்க வீட்ல, பணத்த தானே கொள்ளை அடிச்சுக்கிட்டு ஓடினேன்.நீ என்னை துரத்தி வந்து பிடிக்க' என்ற கதிர். அவள் காலில் குத்திய கல்லை எடுத்து தூரம் போட்டவன்.

'சரி இந்தா என் செருப்ப போட்டுக்கிட்டு வா' என்று அவன் காலில் இருந்த செருப்பை கழட்டி முல்லையிடம் கொடுத்ததும் அவளோ தயக்கத்துடனே நின்று இருந்தாள்.

'ப்ச். என்னடி. ம். போட்டுக்கிட்டு நடந்து வா,'என்ற கதிரின் கண்டிப்பான குரலில் முல்லை அவன் செருப்பை மாட்டிக்கொண்டு தயக்கத்துடன் நடந்து சென்றாள்.

ஊருக்குள் செல்லும் போது. அங்குள்ள ஒரு மண்டபத்தை சிறு புன்னகையுடன் பார்த்தப்படி கதிரும் முல்லையும் நடந்து செல்ல,

'ஆமா. இப்பெல்லாம் ஏன் இந்த ஊருல திருவிழா நடக்குறது இல்ல?' என்று கதிர் கேட்க.

'ஆமா மாமா சார். ஒரே பங்காளி பிரச்சனை, இந்த முறை நடக்கும்னு அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு' என்ற முல்லை, கதிரை பின் தொடர்ந்தாள்.

சில நிமிடங்கள் நடந்தவள்.'ஐயையோ' என்றதும்.'என்னடி. இப்போ என்ன?' என்று புரியாமல் இவன் கேட்க,

'நீங்க வீட்டை விட்டு வந்ததும் நானும் வேகமா உங்க பின்னாடி வந்துட்டேன். ஆனா இப்போ நம்ம மறுபடியும் வீட்டுக்கு போகும் போது அப்பா நம்ம எங்க போனோம்ன்னு கேட்டா என்ன பதில் சொல்றது' என்ற முல்லையின் மனம் குழப்பத்தில் நிறைந்து இருந்தது.

முல்லையின் மனநிலையை பார்த்து, 'இதெல்லாம் வீட்டில் இருந்து என்னை துரத்திகிட்டு வரும் போது யோசிச்சு இருக்கனும்' என்றவன் தன் நடையில் வேகத்தை கூட்ட, முல்லை தன் புடவை முந்தனையில் சுருக்கு போடுவதும் கழட்டுவதுமாக அவனை பின் தொடர்ந்துக் கொண்டு இருந்தாள்.

இரண்டு மூன்று தெருவை கடந்து.இவர்கள் செல்லும் வழியே இருந்த ஒரு கோவிலுக்குள் கதிர் நுழைந்தவன். உள்ளே நுழைந்த வேகத்தில் கையில் குங்குமத்துடன் வந்து .'இந்தா இத வச்சிக்கோ. உன் அப்பா கேட்டா கோவிலுக்கு போயிட்டு வந்தோமுன்னு சொல்லு' என்ற கதிர். தன் கையில் இருந்த குங்குமத்தை அவளிடம் கொடுத்தான்.
ஒரே நொடியில் தன் குழப்பத்திற்கு விடையை கண்டுக்கொண்ட கதிரை இவள் ஆச்சிரியமாக பார்த்து இருக்க.

'என்னடி. இந்தா எடுத்துக்கோ' என்றவன். அவள் கண் இமைக்கும் நொடிக்குள் அவன் கைக்கலாளேயே முல்லை நெற்றியில் செந்தூரத்தை வைத்தவன், “ம்... வா போகலாம்' என்று அழைக்க, கதிரின் செயலில் முல்லைக்கு தான் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியாக இருந்தது.

முன்னே நடந்தவனை 'தம்பி. என்னப்பா நீ. பொஞ்சாதிக்கு பூ வாங்கி தராம அழைச்சிட்டு போற' என்று பூக்கார பாட்டி கேட்க,

'ம். சரி தாங்க.' என்றவன் நூறு ரூபாய் நோட்டை நீட்டி மல்லி பூ சரத்தை வாங்கி முல்லையின் கையில் கொடுக்க. அவள் காண்பது கனவா இல்லை நினைவா என்ற குழப்பத்தில் மேலும் குழம்பி போனாள் முல்லை.

கதிர் கொடுத்த பூவை தலையில் சூடி கொள்ளாமல், பூவையே முல்லை பார்த்து இருக்க, சில நாட்களுக்கு முன்பாக ஜீவா வாங்கி கொடுக்க சொன்னதாக இவன் கொடுத்த பூவை முல்லை சிரித்த முகத்துடன் வாங்கி சூடிகொண்டது இவன் நினைவுக்கு வந்தது.

ஒரு வேளை அவன் கொடுத்ததால் தான் இவள் சூடிக்கொள்ள தயங்குகிறாளா என்று கதிர் நினைத்து இருக்க,


'இதுவே இந்த இடத்துல மீனா இருந்து இருந்தால் இவுகளே அவள் தலையில பூவை வச்சி விட்டு இருப்பாக' என்று முல்லை தவறாக எண்ணி இருக்க. இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் தப்பாக சரியாய் புரிந்து வைத்து இருந்தார்கள்.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top