Member
- Joined
- Dec 5, 2025
- Messages
- 64
- Thread Author
- #1
பாலைவனத்து முல்லை
பகுதி – 30.1
பகுதி – 30.1
'ஆனாலும் முல்ல. என் நினைப்பை கதிர் மாமா அவர் மனசுல இருந்து தூக்கி போடுறது கொஞ்சம் கஷ்டம் தான்' என்று மீனா சொல்ல. முல்லைக்கு மேலும் இதயம் பாரமானது.
இருக்கும் தானே. எப்போதுமே மீனா பாடும் பாட்டு இது தான். அதற்கு ஏற்பது போல. கதிர் மனதில் முல்லை தான் இருக்கிறாள் என்பதை அறிந்திடாத மீனாவின் பேச்சை கேட்டு முல்லையின் கண்கள் மேலும் கலங்கி இருக்க.
'முல்ல அண்ணி.' என்ற அழைப்போடு இவர்கள் அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.
முல்லையின் கலங்கிய விழிகளை பார்த்து. ஒரு வேளை ஜீவாவின் நினைப்பு இன்னும் அவள் மனதில் உள்ளதா என்று எண்ணிய ரோஜா, 'என்னாச்சு அண்ணி. ஏன் இப்போ அழறீங்க' என்று கேட்க.
'உன் கல்யாணத்துக்கு வந்த என் கழுத்துல தாலி ஏறி இருக்கு. அதுவும் மாமா சார் கட்டிய தாலி. எனக்கு. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல' என்று முல்லை கண்கள் கலங்கினாள்.
'இதுல இனியும் சொல்ல என்ன இருக்கு அண்ணி.நீங்க தான் வாத்திக்குன்னு அந்த கடவுளே முடிவு பண்ணிருக்காரு. அதனால முடிந்த கதையை இனி பேசாமல். முதல்ல எழுந்து கிளம்புங்க.' என்ற ரோஜா. தன் அறையில் இருந்த முல்லையின் பையை எடுக்க.அந்த பையில் இருந்த முல்லையின் கைக்குறிப்பு புத்தகம் சட்டென்று ரோஜாவின் காலில் வந்து விழுந்தது.
'என்ன அண்ணி. என்ன டைரி இது.' என்ற ரோஜா. கீழே இருந்து கைக்குறிப்பு புத்தகத்தை எடுத்த வேகத்தில் முல்லை பட்டென்று அவள் வசம் பிடுங்கிக்கொண்டவள்.
'இது. இது என்னோடது தான்' என்று அவசர அவசரமாக அதை தன் பைக்குள் வைத்துக்கொண்டதும்.
அப்போது இருந்த சூழ்நிலையில் ரோஜா அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள வில்லை.
'சரி அண்ணி. நீங்க சீக்கிரமா கிளம்புங்க.நான் போய் வாத்தியை அழைச்சிட்டு வரேன்' என்று ரோஜா சொல்ல.'எ. எங்க கிளம்ப சொல்லுற ரோஜா' என்று கேட்டாள் முல்லை.
'உங்க வீட்டுக்கு தான் கிளம்ப சொல்லுறேன் அண்ணி. முருகன் மாமா அப்பாகிட்ட கேட்டு உங்கள இன்னைக்கு நைட் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போக சம்மதம் வாங்கிட்டாரு' என்ற ரோஜா.தென்னை தோட்டதில் இருக்கும் நாகராஜனின் வீட்டுக்கு சென்றாள்.
*************************************
இடம் நாகராஜனின் குடிசை.
'வேணாடா நாகா. கண்டிப்பா நீ என்கிட்ட அடி வாங்க போற' என்ற கதிர்வேலன் கோவமாக தன் நண்பனை அடிக்க கை ஓங்கியதும்.
'வாத்தி வாத்தி. என்ன பண்றீங்க. ஏன் அவரை அடிக்கிறீங்க' என்று கேட்டுக்கொண்டே வேகமாக நாகராஜனின் வீட்டுக்குள் நுழைந்தாள் ரோஜா.
'சின்னமா சின்னமா என்னை காப்பாத்துங்க' என்ற நாகராஜன் ரோஜாவின் பின்னே வந்து மறைத்துக்கொள்ள.'என்னாச்சு வாத்தி' என்று தன் அண்ணனை பார்த்து கேட்டாள் ரோஜா.
'இன்னும் என்ன ஆகணும் அம்மா. அதான் என் சம்மதம் இல்லாமலேயே இங்க என்ன என்னமோ நடந்தது முடிஞ்சி போச்சே' என்ற கதிரின் பேச்சைக் கேட்டு ரோஜா சிரிக்க.
'இப்போ ஏன் அம்மா சிரிக்கிறீங்க' என்று கேட்டான் கதிர்வேலன்.
'சிரிக்காம வேற என்ன பண்ண சொல்றிங்க. நீங்க விவரம் அறிந்ததில் இருந்து நீங்க விரும்பன பொண்ணே உங்க மனைவியாக அமைந்த பிறகும்!! இன்னும் ஏன் வாத்தி இப்படி கோவமா இருக்கீங்க. ம். நல்லா ஜாலியா உங்க மாமனார் வீட்டுக்கு கிளம்புங்க' என்றாள் ரோஜா.
'என்ன!! மாமனார் வீட்டுக்கா. அந்த வெள்ள வேஷ்டிக்கூட எல்லாம் என்னால போக முடியாது' என்ற கதிரின் முன்னே சிரிப்புடன் ரோஜா நின்று இருக்க.
'என்ன சிரிப்பு!?' என்று வினாவினான் கதிர்.
'வாத்தி. உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. உங்களுக்கு முல்லை கூட கல்யாணம் நடந்தது சந்தோஷம் தானே' என்று ரோஜா கேட்க.
தன் தங்கையிடம் பொய் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான் கதிர்.
'சின்னமா. அதெல்லாம் என் நண்பன் ரொம்ப ஹாப்பியா தான் இருக்கான். என்ன ஒன்னு! இன்னைக்கு உங்களுக்கு நடக்க இருந்த கல்யாணம் நின்னு போனதால தான் கதிர் ரொம்ப கவலைப்படுறான்' என்று நாகராஜன் சொல்ல.
'அட!! ஏன் நீங்க வேற நாகா. எனக்கு கல்யாணம் நடந்து இருந்தா. என் வாத்தி அந்த தனத்தை இல்ல கல்யாணம் பண்ணி இருக்கனும். அப்படி மட்டும் இவரு அந்த தனம் கழுத்துல தாலி கட்டி இருந்தா. நம்ம குடும்பத்தை அந்த தனம் ஆட்டி படைச்சு இருக்கும். அதனால தான் அந்த கடவுளே நம்ம வீட்டுக்கு முல்லையை மருமகளா வர வச்சிருக்காரு' என்று ரோஜா சொல்ல, கதிரோ. முல்லைக்கு விருப்பம் இல்லாமல் இந்த திருமணத்தை நடத்தியது உறுத்தலாகவே இருந்தது.
'என்ன வாத்தி இன்னும் என்ன தான் கவலை உங்களுக்கு' என்று ரோஜா கேட்க.
'இல்ல ம்மா. இந்த கல்யாணத்தை ஜீவா அண்ணன் எப்படி எடுத்துக்கப்போகுதுன்னு வேற தெரியல' என்றான் கதிர்.
'இதுல அவர் எடுத்துக்க என்ன இருக்கு. அவர் இப்ப மீனா அண்ணியோட கணவன். அவருக்கு இனி முல்லை தம்பி பொண்டாட்டி. இனி அவங்களுக்குள்ள அந்த உறவு முறை மட்டும் தான் இருக்கும். சும்மா நீங்களா எதையாவது நினைத்து உங்கள நீங்களே கஷ்டப்படுத்திக்காம. முதல்ல உங்க மாமனார் வீட்டுக்கு கிளம்புற வழியை பாருங்க' என்றாள் ரோஜா.
*******************************************
அன்றைய தினம் மதிய உணவை பாண்டியனின் இல்லத்தில் முடித்துக்கொண்டு.ஒரு வழியாக கதிர் மற்றும் முல்லையை முறைப்படி முருகன் சிவகங்கையில் இருக்கும் தன் இல்லத்திற்கு அழைத்துக்கொண்டு சென்றார்.
இன்றைய தினம் முருகனின் வீட்டில் தங்கி இருந்து மறுநாள் அவர்கள் வீட்டில் விருந்தை முடித்துக்கொண்டு பாண்டியனின் இல்லத்திற்கு திரும்ப வேண்டும் என்ற வரைமுறையில் இவர்கள் முருகன் வீட்டை அடைய.. மாப்பிளை பெண்ணுக்கு பார்வதி ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
'உள்ள வாங்க மாப்புள. முல்ல. கோவில் ரூம்ல போய் விளக்கு ஏத்துமா' என்ற பார்வதி. இங்கேயும் பல சம்பர்த்தாயங்களை செய்ய சொல்ல. சில நிமிடங்கள் கடந்த நிலையில்.
'அம்மாடி முல்ல. மாப்பிளையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போ.அவர் கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டும் ' என்றார் முருகன்.
முருகனின் வார்த்தையைக்கேட்டு முல்லை முதலில் தன் அறைக்குள் செல்ல. அவளை பின் தொடர்ந்து சென்ற கதிர் நேரே சென்று அவள் கட்டிலில் அமர்ந்தவனை முல்லை முறைத்து பார்த்தாள்.
தன்னை தான் தன் மனையாளி இமைகள் மூடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறாள் என்று உணர்ந்தவன். 'கதிரு. இவ முறைப்பே சரியில்ல.நம்மள இவ கேள்வி கேக்குறதுக்கு முன்னாடி.நம்ம இவளை கேள்வி கேக்கணும்' என்று கதிர் எண்ணியவன்.
'என்ன!? பொம்ம மாதிரி நிக்குற. எப்பவும் வாய் கிழிய பேசுவ. இப்போ என்ன வாயில கொழுக்கட்டையா வச்சி இருக்க' என்று கதிர் கேட்டதும்.
முல்லை கோபத்துடன் தன் அறையின் கதவைத் தாழிட்டு, 'உங்களுக்கு எங்காவது அறிவு இருக்கா' என்று கேட்டதும்.. கதிர் அதிர்ந்து போய் கட்டிலில் இருந்து எழுந்தான்.
'ஏய். என்னடி.திமிரா. யார பார்த்து அறிவு இருக்கான்னு கேக்குற' என்ற கதிர் கோவமாக அவளை நெருங்கியதும்.
'சும்மா கத்தாதீங்க.கோவில்ல அவ்வளவு பிரச்சனை நடக்குதே. ஏன். உங்க வாயை திறந்து இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லைனு நீங்க முதல்ல சொல்ல வேண்டியது தானே..அதை விட்டுட்டு என் வாயில என்ன இருக்குனு கேக்குறீங்க. ஏன்!? அப்போ உங்க வாயில என்ன இருந்துச்சு?' என்று கண்கள் உருட்டி கோபத்துடன் கேட்டாள் முல்லை.
'ஏய் இரு இரு. நான் ஏன் சம்மதம் இல்லைனு சொல்லணும். ஏன் நீ சொல்ல வேண்டியது தானே' என்ற கதிரை உறுத்து பார்த்தவள்.
'நான் ஏன் சொல்லணும். அதான் ஏழு ஊருக்கு கேக்குற மாதிரி வேஷ்டியை தூக்கி,தோளை தூக்கி, புருவத்தை தூக்கி இப்படி எல்லாத்தையும் தூக்கிகிட்டு நீங்க தானே பத்து பக்கத்துக்கு வசனம் பேசுவீக. ஏன் ஏன். அன்னைக்கு கூட நீங்க தானே பாண்டியன் மாமாகிட்ட உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ண இஷ்டம் இல்லைனு சொன்னிக.. அதே மாதிரி இப்போவும் சொல்ல வேண்டியது தானே' என்ற முல்லை. அவன் பதிலுக்காக காத்து இருந்தாள்.
'அன்னைக்கு தான் நான் சொல்லிட்டேனே. இன்னைக்கு நீ சொல்ல வேண்டியது தானே. ஏன்? எங்கிட்ட மட்டும் தான் நீ வாய் பேசுவியா. ஆளை பார்த்தியா நல்லா ஜவுளிக்கடை பொம்மைக்கு புடவை சுத்துன மாதிரி' என்று கதிர் பல்லை கடிக்க.
'ஒ. என்னை பார்த்தா உங்களுக்கு பொம்ம மாதிரி இருக்கா.ஆமா ஆமா. என்னை பார்த்தா என்னைக்குமே உங்களுக்கு உயிர் இல்லாத ஜடம் போல தானே இருக்கும். என்னைக்குமே உங்களுக்கு என்னோட உணர்வு, என்னோட மனசு, என்னோட வலி இப்படி எதுவுமே உங்க மரமண்டைக்கு புரியாது தானே' என்றாள் முல்லை
'ஏய் இரு இரு.. யாரை டி மரமண்டைன்னு சொல்லுற'என்று அவன் கேட்க.
'இங்க வேற யாரு இருக்காக. உங்கள தான் சொன்னேன்'என்றாள் அவள்.
'ஏய்! என்னடி ரொம்ப வாய் பேசுற'என்று அவன் அவளை நெருங்க
'என் வாய், நான் பேசுறேன்'என்று பதிலுக்கு அவனை நெருங்கினாள் இவள்.
'ஆனா கேக்குறது என் காது' என்று கதிர் தன் காதை குடைந்துக்கொள்ள
'இப்போ என்ன? உங்க காதை கேக்காதப்படி ஆக்கணுமா'என்று அவன் காதின் அருகே வந்தாள் முல்லை.
'ஒ. நீ அதெல்லாம் பண்ணுவியா. உனக்கு அவ்ளோ தைரியம் இருக்கா' என்று தன் கைகாப்பை கதிர் சுற்றி இருக்க.
'இதுக்கு ஏன் தைரியம் தேவை. இப்போ சொல்லுங்க, உங்க காத கேக்க விடாம ஆக்கவா' என்றவள் தன் முந்தனையை எடுத்து இடுப்பில் சொருகிகொண்டாள்.
'ஆமா பெரிய இவ நீ. என் காதை கேக்க விடாம ஆக்க போற. போ போ. போய் வேலையை பாரு' என்றவன் மீண்டும் அறையின் கதவை திறக்க எத்தணிக்க..
'இப்போ எங்க போறிக' என்று கேட்டாள் முல்லை.
'நான் கடை வரைக்கும் போயிட்டு வரேன். நீ சாப்பிட்டு படுத்து தூங்கு' என்றவன். மீண்டும் கதவை திறக்க போக.
'என்ன. தண்ணி அடிக்க போறிகளா' என்று முல்லை கேட்க.
"ஆமா. ஏன் வரியா' என்று கேட்டான் கதிர்.
கதிரை ஏகதுக்கும் முறைத்த முல்லை. 'ஹ்ம் ஹ்ம். நீங்க போகக்கூடாது' என்றதும்.
'அதெல்லாம் நீ சொல்லக்கூடாது' என்றவன், அவளை முறைத்து பார்த்த வண்ணம், கோவமாக அறைக்கதவை திறந்துக்கொண்டு முருகனின் வீட்டில் இருந்து வெளியேறி இருந்தான்.
கதிர் கால் போன போக்கில் நடந்து செல்ல. வழியெல்லாம் சாராயக்கடை எங்கே என்று சிலரை விசாரிக்க. அவனுக்கு பதில் தந்த அனைவருமே. அவனை பார்த்து பதில் சொல்லாமல், அவன் பின்னே யாரையோ பார்த்து பதில் சொன்னார்கள்.
சில நிமிட நடையில். கதிர் சாராயக்கடையை கண்டுகொண்டவன்.கடைக்குள் நுழையும் வேளை.
'பார்த்தியா பங்காளி. இப்போ எல்லாம் புருஷன் பொஞ்சாதின்னு ரெண்டு பேருமே குடியும் குடுத்தனுமா சாராயக் கடைக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க'.என்று ஒருவன் சொல்ல..
'எந்த மானம் கெட்டவன் மதுக்கடைக்கு மனைவியை அழைச்சுக்கிட்டு வந்திருக்கான்!?'
என்று வாய்விட்டு புலம்பியபடி கதிர் திரும்பிப் பார்க்க. கதிரின் விழிகளுக்கு முன்னே நின்றிருந்தாள் அவள்.