• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Member
Joined
Dec 5, 2025
Messages
62
முல்லை – 29.2

'அம்மாடி முல்ல. எப்படியோ மா. என் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல வாக்க பட்டுருக்கீங்க. முன்னாடி போலவே இனியும் கூட மீனாவும் நீயும் ஒண்ணா, ஒற்றுமையா இருந்து இந்தக் குடும்பத்துக்கு கௌரவத்தை சேர்க்கணும்' என்ற ஜெகாவின் சொல்லுக்கு சம்மதமாக தலை அசைத்தாள் முல்லை.
'சரி சரி. கதிரு. உனக்கு எதாவது வேலை இருந்தா நீ போய் பாரு. ரோஜா. நீ முல்லையை உன் ரூமுக்கு அழைச்சிட்டு போமா' என்று பாண்டியன் சொல்ல.
விட்டால் போதும்டா சாமி என்ற மனநிலையில் கதிர்வேலன் பின்னங்கால் பிரடியில் அடித்தப்படி பாண்டியன் வீட்டில் இருந்து நேரே தென்னை தோட்டத்தில் இருந்த நாகராஜனின் இல்லத்திற்குள் நுழைந்தான்.
இதே தருணம்..
சுந்தரேசனின் இல்லத்தில் தன் தம்பியின் கன்னத்தை பதம் பார்த்தது அவன் கரங்கள்.
தன் அண்ணன் அடித்த அடியில் ஸ்ரீனிவாசனின் கண்களில் கண்ணீரே வந்து இருந்தது.
'து. நீ எல்லாம் ஆம்பளயா' என்ற சுந்தரேசனின் வார்த்தையில் அவன் தம்பியின் உடல் கூசியும் போனது.
'கோவில்குள்ள ஒரு பொம்பள உன்னை ஆட்டி வச்சிருக்கா. நீ என்னடானா அவகிட்ட ஒன்பது துவரங்களையும் மூடிக்கிட்டு உக்காந்து இருந்து இருக்க.உனக்கு அசிங்கமா இல்ல' என்ற தன் அண்ணனின் முன்னே.
'நான்.' என்று ஸ்ரீனிவாசன் தன் நிலைமையை சொல்லும் முன்னே மீண்டும் ஒரு அரை வாங்கி இருந்தான்.
'ஒரு வார்த்தை.. ஒரே வார்த்தை என்கிட்ட அந்த கதிர் உன்னை கண்டு பிடிச்சிட்டான்னு சொல்லி இருந்தினா. நான் வேற பிளான் போட்டு எப்படியாவது அந்த ரோஜா கூட உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன்' என்ற சுந்தரேசன் கோவமாக தன் கையை சுவற்றில் குத்தினான்.
'அண்ணா. அவங்க கட்டுப்பாட்டுல நான் மாட்டிகிட்டேன்.என்னால எப்படி.' என்ற ஸ்ரீனிவாசனை கேவலமாக முறைத்த அவன் அண்ணன்..'டேய் கதிர்.இப்போ நீ தப்பிச்சிட்ட. ஆனா நீ என்ன பண்ணாலும் உன் தங்கச்சியை என்கிட்ட இருந்து உன்னால காப்பாத்தவே முடியாது டா' என்ற சுந்தரேசன் புதிதாய் ஒரு திட்டத்தை போட்டவன்.
'டேய். அந்த கேசவனை நான் சந்திக்கணும். அதுக்கு ஏற்பாடு பண்ணு' என்று தன் தம்பியிடம் உத்தரவிட. இனி இவர்களால் என்னவெல்லாம் ரோஜா, கதிர் முல்லை வாழ்வில் பிரச்சனை வர போகிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
*****************************************
இதே தருணம். சரஸ்வதி இல்லத்தில். தன் வலது காலை பூமியில் ஓங்கி உதைத்தாள் தனலட்சுமி.
'ஆனாலும் ஒரு பொம்பள பொண்ணுக்கு இவ்வளவு திமிர் ஆகாது' என்று சரஸ்வதி சொல்ல.
'ஆமா அம்மா.அந்த ரோஜாவுக்கு உடம்பெல்லாம் திமிர்' என்றான் ரவி.
'டேய் பாவி. நான் ரோஜாவை சொல்லல. நான் சொன்னது உன் அக்காவை' என்ற தன் அம்மாவை ஏகத்துக்கும் முறைத்த தனம்,
'நீ இப்போ வாயை மூடலைனா.
உன் மண்டையை உடைச்சிடுவேன்' என்றவளின் கோவத்தை பார்த்து சரஸ்வதி தலையில் அடித்துக்கொண்டு அவர் அறைக்குள் புகுந்துக்கொண்டார்.
தனத்தின் கோவத்தை பார்த்த ரவி.'அக்கா.விடு அக்கா.. அந்த கதிர் இல்லைனா என்ன! உன் அழகுக்கு ஆயிரம் மாப்புள்ள லைன்ல வந்து நிப்பான்' என்ற ரவியின் வார்த்தையில் தனத்தின் இதழ்கள் வெறுமையாக மலர்ந்தது.
'நான் கதிரை கல்யாணம் பண்ணலைன்னு ஒரு துளி கூட கவலை படல. ஆனா அந்த' என்று தனத்தை பார்த்து.'ரோஜாவை பழி வாங்க முடியலைன்னு கவலை படுறியா' என்று ரவி கேட்க.
'அது இருக்க தான் செய்து. ஆனா அந்த ரோஜாவை விட இப்போ என் கடுப்பு எல்லாம் அந்த முல்லை மேல தான் இருக்கு' என்ற தனம்.. அவள் மனதிரையில் முல்லை தனத்தை அடித்த நிகழ்வை நினைத்து பார்த்து கோவத்தில் முகம் சிவந்தாள்.
'ஆமா அக்கா. அந்த முல்லையை நான் அடிக்க போனதால தானே அந்த கதிரும் என் மேல கை வச்சான்' என்ற ரவியின் முகத்திலும் கோவம் அப்பட்டமாக தெரிந்தது.
'இல்லடா தம்பி.அவங்க நமக்கு ஏற்படுத்திய அவமானத்தை நம்ப சாதாரணமா கடந்து போகிட முடியாது. ஏற்கனவே அந்த ரோஜாவால எனக்கு நிறைய அவமானம் ஏற்பட்டு இருக்கு. இப்போ அந்த முல்லைக்கும் எனக்கும் என்னடா சம்பந்தம்!!எவ்வளவு திமிரு இருந்தா அவள் என்னை அடிச்சு இருப்பாள். அவ என்ன அறைஞ்சதுக்கு அந்தக் கதிர் அவளை கண்டிக்காமல், உன்னைய அடிச்சிட்டான் பாரு!! கண்டிப்பா இவங்க இதுக்கு உண்டான தண்டனையை அனுபவித்தே தீரனும்' என்று தனம் சொல்ல
'அக்கா. அதான் அந்த கதிர்.முல்லை கழுத்துல தாலி கட்டிட்டானே! இனி அந்த குடும்பம் எக்கேடு போனால் நமக்கு என்ன' என்றான் ரவி.
'அப்படியெல்லாம் விட முடியாது தம்பி.தாலி தானே கட்டிட்டான். ஆனா மத்ததெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா! அந்த கதிர் மீனாவையும்.அந்த முல்லை ஜீவாவையும் தான காதலிச்சாங்க.இத வச்சு நம்ம ஏதாவது பிளான் பண்ண முடியுமான்னு பார்க்கணும்' என்று தனம் சொல்ல.
'ஏன் அக்கா. அந்த குடும்பத்தோட ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்னு நம்ப தான் கோவில்ல இருந்து வந்துட்டோமே, இனி நமக்கு ஏன் அவங்க கதை' என்று கேட்டான் ரவி.
'நீ என்னடா மடப்பயன் மாதிரி பேசிக்கிட்டு இருக்க..முல்லைக்கும் கதிருக்கும் தானே கல்யாணம் ஆகிடுச்சு. ஆனா ரோஜாவுக்கு எல்லாம் அவ்வளவு சீக்கிரத்துல மாப்பிள்ளை கிடைக்காது. கிட்டத்தட்ட என் நிலைமை தான் அவளுக்கும்.
ஆனால் நான் இருக்கிற அழகுக்கும்.. எனக்கு இருக்கிற திறமைக்கும் நீ சொன்ன மாதிரி எனக்கு மாப்பிள்ளைங்க லைன்ல நிப்பாங்க. ஆனா இந்த ரோஜாவை நம்ம சும்மா விடக்கூடாதுடா' என்று தனம் சொல்ல.
'என்ன.. ஏதாவது ஐடியா வச்சிருக்கியா' என்று கேட்டான் ரவி
'ஆமாடா. ஐடியா இருக்கு, ஆனா இந்த ஐடியாவுல நம்ப அம்மாவை நம்பக் கூடாது' என்று தனம் சொல்ல
'என்ன அக்கா சொல்ற.அம்மாவை நம்ப கூடாதா' என்று ஆச்சரியமாக கேட்டான் ரவி.
'ஆமாடா. நம்ம அம்மாவுக்கு அந்த கதிர் மேல சின்ன வயசுல இருந்தே ஒரு கரிசனம். எப்படியாவது அவனை அவங்களுக்கு மாப்பிள்ளை ஆக்கிக்கணும்னு தான் அம்மாவோட நீண்ட நாள் கனவு. ஆனா அது இப்ப பலிக்காமல் போனதால நம்ம மேல அம்மா கோபத்தில் இருக்கும். ஆனா நம்ம அம்மாவ நம்ம கரெக்ட் பண்ணி, எப்படியாவது உனக்கும் ரோஜாவுக்கும் நான் கல்யாணத்தை பண்ணி வச்சுட்டேனா!! காலத்துக்கும் நீ அந்த ரோஜாவை படுத்தற பாட்டுல!! அந்த கதிர்..அப்புறம் முல்லை. ஏன் பாண்டியன் குடும்பமே ஆட்டம் காணும்' என்று தனம் ஒரு திட்டத்தை போட.. இவர்களின் எண்ணம் ஈடேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..
*****************************************
இடம் பாண்டியனின் இல்லம்.
தன் கைபேசி மூலம் அவர்கள் வீட்டில் பணியாற்றும் இசக்கி என்கிற பெண்மணியை அழைத்து முருகன் நிறைய விஷயங்களை பேசி முடித்தவர்.
'நாங்க வரும் போது அங்க எல்லாமே தயாரா இருக்கனும்' என்று கட்டளையிட்டார்.
'ஐயா. நீங்க இதெல்லாம் சொல்லனுமா என்ன!? நீங்க முல்லை பாப்பாவையும் கதிர் தம்பியையும் உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வரும் போது. இங்கே எல்லாமே தயாரா இருக்கும்ங்க' என்றார் இசக்கி.
தன் கைபேசி இணைப்பை துணிடித்த முருகன்.'பார்வதி. நான் இசக்கிக்கிட்ட எல்லா விவரத்தையும் சொல்லியாச்சு. நீ வா. பாண்டியன் மாமாகிட்ட பேசிட்டு இன்னைக்கு முல்லையையும் கதிர் மாப்பிளையையும் நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்' என்றார் முருகன்.
'ம். ஏங்க. நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க.இவங்க கல்யாணம் திடிர்னு நடந்ததால இந்த மாதிரி சடங்கு சம்பர்தாயம் எல்லாம் கொஞ்ச நாளைக்கு தள்ளி வைக்கலாமே'என்று பார்வதி சொல்ல.. முருகன் சில நொடிகள் யோசித்தவர்..
'இல்ல பார்வதி. சாந்தி முகூர்த்தம் எல்லாம் நம்ம ஏற்பாடு பண்ண வேண்டாம். ஆனா நம்ம பொண்ணும் மாப்பிளையும் நம்ம வீட்டுக்கு வந்து ஒரு நாள் நைட் தங்கட்டும்' என்று முருகன் சொல்ல.
'ம். சரி. பாண்டியன் அண்ணன்கிட்ட பேசி பாருங்க' என்றார் பார்வதி.
பாண்டியன் சோர்வாக அமர்ந்து இருந்த நிலையில்.'மாமா. நாங்க மாப்பிள பொண்ணை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போகட்டுமா' என்று முருகன் கேட்க..
'தாராளமா மச்சான். அவங்களுக்கு பண்ண வேண்டிய சடங்குகளை எல்லாம் நீயே முன்ன நின்னு பண்ணு முருகா' என்றார் பாண்டியன்.
இதே சமயம். முல்லை ரோஜாவின் அறையில் அமர்ந்து இருந்தவளின் கண்களில் கண்ணீர் வந்த வண்ணமாகவே இருந்தது.
'முல்ல.' என்று அவள் பெயரை அழைத்தப்படி மீனா உள்ளே நுழைந்தவள்.
'என்ன முல்ல. கவலையா இருக்கா' என்று உண்மையான அக்கறையில் விசாரித்தவள்.
'இருக்கும் தானே. உனக்கும் கதிர் மாமாவுக்கும் என்னைக்குமே ஒத்து போகாது. உன்னை கண்டாலே அவருக்கு ஆகாது. அவரை கண்டால் உனக்கு ஆகாது' என்று மீனா சொல்ல.
'என்னை தான் அவுகளுக்கு பிடிக்காது. ஆனா எனக்கு அவுகள தானே முதல்ல இருந்தே பிடிக்கும்' என்று சலிப்புடன் நினைத்துக்கொண்டாள்.
'என்ன முல்ல பண்ண சொல்ற. ரோஜாவுக்கு அருள் வந்து சொன்னது போல. நீ தான் இந்த ஜென்மத்துல கதிர் மாமாவோட பொஞ்சாதியா வாழணும்னு விதி இருக்கு' என்று மீனா சொல்ல.
'அந்த விதி தானே எனக்கு சதி பண்ணுது' என்று நொந்து கொண்டாள் முல்லை.
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top